Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான சேப்பங்கிழங்கு மோர் குழம்பு செய்ய தயாரா …!!

                                                                   சேப்பங்கிழங்கு மோர் குழம்பு

தேவையான பொருட்கள் :

கெட்டியான புளித்த தயிர்-1 கப்

பூசணிக்காய்-1 கப்

சேப்பங்கிழங்கு-கால் கிலோ

வெண்டைக்காய்-100 கிராம்

தேங்காய் துருவல்-கால் கப்

சீரகம்-அரை டீஸ்பு ன்

காய்ந்த மிளகாய்-1

மஞ்சள் தூள்-அரை டீஸ்பு ன்

கடுகு-அரை டீஸ்பு ன்

உப்பு-தேவைக்கேற்ப

வெந்தயம்-அரை டீஸ்பு ன்

கறிவேப்பிலை -1 கொத்து

கொத்தமல்லி தழை-1 கைப்பிடி அளவு

எண்ணெய்-தேவைக்கேற்ப

 

Image result for சேப்பங்கிழங்கு மோர் குழம்பு

செய்முறை :

தயிருடன் மஞ்சள், உப்பு சேர்த்து வைக்கவும். தேங்காய், சீரகம், மிளகாயை பச்சையாக அரைத்து தயிhpல் கரைக்கவும். பூசணிக்காய், சேப்பங்கிழங்கை வேக வைத்து தயிர் கலவையில் சேர்க்கவும். வெண்டைக்காயை எண்ணெய் ஊற்றி வதக்கி கலவையில் கலக்கவும்.

இந்த கலவையை 2, 3 நிமிடம் சூடாக்கி உடனே இறக்கிவிடவும்.இதில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும். இப்போது சூடான சேப்பங்கிழங்கு மோர் குழம்பு ரெடி.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதம், பொறியலுக்கு வைத்து சாப்பிடலாம்.

                       இப்பொது சேப்பங்கிழங்கு மோர் குழம்பு ரெடி 

Categories

Tech |