பெண்களிடமிருந்து மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏர்போர்ட் வள்ளுவர் நகர் பகுதியில் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த கண்ணம்மா மற்றும் பரமேஸ்வரி ஆகிய பெண்களிடம் இருந்து மர்ம நபர்கள் 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து தாங்கள் அணிந்திருந்த நகை காணாமல் போனதை அறிந்து பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அந்த பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.