பெண்ணிடமிருந்து நகையை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை பகுதியில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கி தனது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது அந்த வாலிபர்கள் திடீரென விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து விஜயலட்சுமி அளித்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காரமடை காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் விஜயலட்சுமியிடம் இருந்து நகை பறித்த அம்மன் குளம் பகுதியில் வசித்து வரும் சுபாஷ் மற்றும் அவரது நண்பரை கைது செய்து நகையை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.