ஐடி மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் 50% ஊழியர்களை வைத்து அலுவலத்தை இயக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐடி மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் தங்களது கம்பெனி அலுவலகங்களை 50% ஊழியர்களுடன் இயக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 50 சதவிகிதம் ஊழியர்களை மட்டும் வேலைக்கு வர சொன்னாலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையான அலுவலங்களில் கிருமிநாசினி பயன்படுத்துதல்,
சமூக இடைவெளியை ஊழியர்களை கடைபிடிக்க செய்தல் உள்ளிட்டவற்றில் நிர்வாகம் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் வீட்டிலிருந்தபடியே வேலை செய்த ஐடி ஊழியர்கள் கம்பெனிக்கு சென்று வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.