துபாய் நாட்டிற்கு செல்லும் பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 5 நாட்டு பயணிகள் கொரோனா குறித்த தடுப்பூசியை செலுத்தி கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தேவையில்லை என்ற தகவலை எமிரேட்ஸ் விமான நிறுவன நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
துபாய் அரசாங்கம் வெளிநாட்டு பயணிகள் குறித்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, இந்தியா போன்ற 5 நாடுகளிலிருந்து துபாய் நாட்டிற்கு செல்லும் பயணிகள் இனி கொரோனா தடுப்பூசியை சான்றிதழை வைத்திருக்கத் தேவையில்லை என்று அறிவித்துள்ளது. இந்த முக்கிய தகவலை எமிரேட்ஸ் விமான நிறுவன நிர்வாகம் உறுதிசெய்துள்ளது.
இருப்பினும் மேலே குறிப்பிட்ட 5 நாடுகளிலிருந்து வரும் பயணிகளில் விசா வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள GDRFA என்னும் நிர்வாகத்திடமிருந்து தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்கூட்டியே அனுமதியைப் பெற வேண்டும் என்றும் துபாய் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட PCR சான்றிதழை விமானம் புறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது.