கொரோனா தொடர்பான அரசு சான்றிதழுக்கு பதிலாக போலியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு சுவிட்சர்லாந்து குற்றவியல் சட்டப் பிரிவின்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதற்கு வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
சுவிட்சர்லாந்து நாட்டில் விமானத்தில் பயணம் செய்ய வேண்டுமென்றால் கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கும், தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கும், தொற்று பாதிப்பில்லை என்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் அந்நாட்டு அரசாங்கம் கொரோனா குறித்த சான்றிதழ் ஒன்றை வழங்குகிறது.
ஆனால் பொதுமக்கள் கொரோனா குறித்த சோதனை செய்வதற்கும், தடுப்பூசியை செலுத்தி கொள்வதற்கும் தயக்கம் காட்டி வரும் நிலையில் சிலர் அரசாங்கத்தில் வழங்கப்படும் கொரோனா சான்றிதழ் போன்றே போலியாக வாங்குவதற்கு முயன்றுள்ளார்கள்.
இவ்வாறான சூழலில் போலி சான்றிதழ்களை பயன்படுத்துபவர்களுக்கு சுவிட்சர்லாந்தின் குற்றவியல் சட்டப் பிரிவின் படி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதற்கு வாய்ப்புள்ளதாக சுவிட்சர்லாந்து வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.