எக்ஸிட் டெஸ்ட் மத்திய அரசின் வழிகாட்டல் மாற்றப்பட்டதால் செய்யப்படுவதில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொரோனா நோயாளிகளை ஐந்து நாட்களுக்குள் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். எக்ஸிட் டெஸ்ட் எடுப்பதில்லை என்ற குற்றசாட்டு குறித்த கேள்வி எழுப்பிய போது,எக்ஸிட் டெஸ்ட் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டல் படி தான் நாம் பண்ணிக்கிட்டு இருக்கின்றோம். 14 நாட்கள் ஒரு நோயாளியை வைத்துள்ளோம். 14 நாளில் ஒரு டெஸ்ட் எடுப்போம். அது நெகட்டிவ் வரணும், திரும்ப 24 மணி நேர இடைவெளியில் இன்னொரு டெஸ்ட் எடுப்போம். அதுவும் நெகட்டிவ் வந்தால் தான் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.
இதையடுத்து மத்திய அரசின் வழிகாட்டல் மாற்றப்பட்டது. எக்ஸிட் டெஸ்ட் தேவையில்லை என்று மத்திய அரசு சொன்னாங்க. எக்ஸிட் டெஸ்ட் வேண்டாம் என்று சொன்னாலும் கூட முதலில் 14 நாட்கள் நாம் சிகிச்சை அளிக்கும் போது கூட சில நோயாளிகள் 21 நாள் 30 நாள் வரைக்கும் பாசிட்டிவாக இருந்துள்ளார்கள். அவர்களை நாங்க நெகட்டிவ் பண்ணி தான் அனுப்பி வைத்தோம்.
ஒவ்வொருவரின் உடல்நிலையை பொறுத்து மாறும். உடலில் இருக்கக்கூடிய ஆன்டிபாடி டெவலப்மெண்ட் பொறுத்து மாறும். இப்போ எக்ஸிட் டெஸ்ட் தேவையில்லை என்று சொல்லிட்டாங்க. தேவை இல்லைன்னு சொன்னாலும் கூட அதில் 3 நாட்கள் காய்ச்சல் இருக்க கூடாது அப்படின்னு சில வழிகாட்டுதல்கள் இருக்கின்றது. எக்ஸிட் டெஸ்ட்இல்லை என்றாலும் கூட ஒரு சில நோயாளிகளை ஒரு டெஸ்ட் எடுத்து நெகட்டிவ் என்று வந்த பிறகு தான் அனுப்புறோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார்.