உதயநிதி ஸ்டாலினுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்கார் விருது சர்வதேச மற்றும் சமூகம் சார்ந்த பிரபலங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, 11வது ஆண்டு இந்த விருது வழங்கும் விழா அமெரிக்காவில் நடக்க இருக்கிறது.
இந்த விருதிற்கு சூர்யா, ஜோதிகா, மற்றும் உதயநிதி ஸ்டாலின் போன்றோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ”ஜெய்பீம்” திரைப்படத்தில் சூர்யா வக்கீல் வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. இதற்காக ‘ஜெய்பீம்’ படக்குழுவினரை நேரடியாக விருதை பெற்று கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, இளம் அரசியல் தலைவர்களை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இந்த விருது வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.