விஷால் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கியவர் எஸ். ஜே. சூர்யா. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றார்.
இந்நிலையில், மாநாடு திரைப்படத்தைத் தொடர்ந்து இவர் நடிக்கும் புதிய திரைப்படத்தில் மீண்டும் வில்லனாக களமிறங்குகிறார். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.