Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. மீண்டும் இணையும் ஹிட் கூட்டணி…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் நான்காவது படம் உருவாக உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் மற்றும் இயக்குனர் அட்லீயின் கூட்டணியில் உருவான தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.இதை தொடர்ந்து இவர்களது கூட்டணி நான்காவது முறையாக இயக்குகிறது என்று சமீபத்தில் செய்தி வெளியானது.

இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று விஜய்யை வைத்து படம் தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறது. அப்படத்திற்கு இயக்குனராக அட்லீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என் டி ஆர் நடிக்க உள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

இரண்டு ஹீரோக்களை கொண்டு உருவாக்கப்படும் இப்படத்தின் ஐடியாவை அட்லீ தான் கொடுத்துள்ளதாகவும், இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கிக் கொள்ளலாம் என்றும் அட்லீ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |