ஜெயலலிதாவுடன் நடிகை ஸ்ரீதேவி இருக்கும் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழில் 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், ஜானி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரின் இறப்பு ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இவர் சிறு வயதில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம க்யூட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.