செல்போன் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயன் என்ற மகன் உள்ளார். இவர் அவிநாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் மீண்டும் மறுநாள் காலையில் வந்து கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு விஜயன் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் கடையிலிருந்து 2 செல்போன்களையும் காணவில்லை. இது குறித்து விஜயன் அவினாசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு நபர் செல்போனை விற்க முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மருதகுலம் பகுதியில் வசிக்கும் ஆவுடையப்பன் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஆவுடையப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.