Categories
உலக செய்திகள்

செல்போனை தூக்கி செல்லும் பறவை…. துரத்திய இளம்பெண்…. வைரல் வீடியோ….!!!

உண்ணும் உணவு என்று நினைத்து செல்போனை கவ்விக் கொண்டு சென்ற பறவை துரத்தி சென்ற இளம்பெண் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது வீட்டு மாடியில் இளம்பெண் இருவார்கள் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த சுவர் மீது அவர்களின் செல்போனை வைத்துள்ளார்கள். மேலும் அதன் பக்கத்தில் தான் சாப்பிட கொண்டு வந்த உணவையும் வைத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது திடீரென எங்கிருந்தோ  வந்த பறவை ஒன்று உணவு என்று நினைத்து செல்போனை கவ்விக்கொண்டு பறந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் பறவையின் பின்னால் துரத்தி செல்லவே பறவை சிறிது தூரம் சென்று செல்போனை கீழே விட்டு விட்டது. இச்சம்பவம் அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து பறவை செல்போனை தூக்கி செல்லும் காட்சியை அருகிலிருந்த மற்றொரு பெண் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் . இது கர்ணன் படத்தில்  கோழிக்குஞ்சை பருந்து கவ்வி செல்வதுபோல இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |