Categories
அரசியல்

புற்றுநோயை எதிர்த்துப் போராடி குணமடைந்த பிரபலங்கள்…. யார் யார் தெரியுமா….????

உலகம் முழுவதும் புற்றுநோய் குறித்த ஆய்வுகள் மற்றும் புற்றுநோய்க்கான தீர்வுகளாக புதுப்புது கண்டுபிடிப்புகள் தினம் தோறும் நடந்து கொண்டிருக்கின்றன.முன்பை விட தற்போது அதிக அளவு விழிப்புணர்வு புற்றுநோயை குறித்து உருவாகியுள்ளது.இவை அனைத்தும் புற்று நோய்க்கு எதிராக போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு மேலும் வலிமை அளிக்கும் என்றாலும் புற்றுநோயை போராடி வென்றவர்களின் மனவலிமை இன்னும் பலமானது. அப்படி இந்தியாவில் புற்று நோய்க்கு எதிராக போராடிக் கொண்டிருந்த மற்றும் போராடிக் கொண்டிருக்கும் பிரபலங்கள் பற்றி இதில் பார்க்கலாம்.

முதலில் பிரபல நடிகையான கௌதமி 15 வருடங்களுக்கு முன்பு மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதனை எதிர்த்துப் போராடி சிகிச்சை பெற்று வந்த இவ்வாறு தற்போது முழுமையாக குணம் அடைந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் லைஃப் வின்னர் என்ற தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்.

அடுத்ததாக நடிகை லிசா ரேவுக்கு ரத்த வெள்ளை அணுக்களில் புற்றுநோய் இருப்பதாக கடந்த 2009 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.இருந்தாலும் நம்பிக்கை இழக்காதே அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டு 2010 ஆம் ஆண்டு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சைக்கு பின்னர் புற்றுநோயை முழுவதும் வென்று விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தன்னுடைய புற்றுநோய் அனுபவங்கள் அனைத்தையும் அவர் இன்றும் பதிவு செய்து வருகிறார்.

அடுத்ததாக ரஜினிகாந்த் மற்றும் பல திரைப்படங்களில் நடித்து அசத்திய நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு புற்றுநோய் இருப்பதாக செய்தி வெளியானது.அது பெரும் துயரச் செய்தியாக இருந்த போதிலும் 2012 ஆம் ஆண்டு அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் அமெரிக்காவில் ஆறு மாதங்கள் சிகிச்சை பெற்றார். பின்னர் 2015 ஆம் ஆண்டு தான் முழுமையாக குணமடைந்து விட்டதாக அவர் தெரிவித்தார்.அப்போதிலிருந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் அவசியம் குறித்து அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

அடுத்ததாக பர்ஃபி பட இயக்குனர் அனுராக் பாசு ரத்த புற்றுநோயால்பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 2004 ஆம் ஆண்டு ரத்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் அவருக்கு 50 சதவீதம் மட்டுமே உயிர் வாழும் வாய்ப்பு இருப்பதாக கூறினர். அதுவும் அவர் இரண்டு மாதங்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என தெரிவித்த நிலையில் அவர் புற்றுநோயை சாதாரண இருமல் மற்றும் சளியைப் போலத்தான் எடுத்துக் கொண்டார். புற்றுநோய் சிகிச்சை எடுத்துக்கொண்ட சமயத்தில் லைஃப் இன் அமெட்ரோ மற்றும் கான்ஸ்ட்டர் ஆகிய சினிமாக்களுக்கு கதை எழுதியதாக கூறுகிறார்.அதுமட்டுமல்லாமல் தன்னுடைய புற்றுநோய் அனுபவத்தை ஒரு திரைக்கதையாக்க போவதாக அவர் கூறியுள்ளார்.

அடுத்ததாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் இர்ஃபான் கான் நியூரோ எண்டோக்ரேன் புற்றுநோய் எனும் அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். எதற்காக லண்டனில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் , நான்கு முறை கீமோதெரபி செய்யப்பட்டுள்ளது. ஆறு முறை செய்த பிறகு தான் எதுவுமே உறுதியாகும்.. திடீரென நான் எப்போது வேண்டுமானாலும் உயிர் போக வாய்ப்புள்ளது என யோசிக்கலாம். ஆனால் அந்த யோசனையை எப்படி தவிர்ப்பது என எனக்கு தான் தெரியும் என அவர் கூறியிருந்தார்.

இறுதியாக பாலிவுட் நடிகையான சோனாலி பிந்த்ரே கடந்த 2020 ஆம் ஆண்டு தனக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். தன்னுடைய இந்த போராட்டத்தின் முடிவில் ஒரு நல்ல எதிர்காலம் காத்திருப்பதாக நினைத்து அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

எனவே புற்று நோய்க்கு பயந்து நடுங்கும் இந்த காலத்தில் புற்றுநோயை எவ்வித பயமும் இல்லாமல் வென்ற பல பிரபலங்களும் உள்ளனர் என்பதை இந்த பதிவில் பலரும் அறிந்திருப்போம்.

Categories

Tech |