Categories
சினிமா தமிழ் சினிமா

முடிவுக்கு வரும் பிரபல சீரியல்…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் முடிவுக்கு வர உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். 

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஓடிக்கொண்டிருக்கிறது. காதல், குடும்பம், அதிரடி என பல திருப்பங்கள் கலந்து சுவாரசியமாக ஓடிவருகிறது.

தற்போது இந்த சீரியலின் கதாநாயகி மற்றும் கதாநாயகனின் திருமணம் குறித்த கதைக்களம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இச்சீரியல் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி காற்றின் மொழி சீரியல் வரும் ஏப்ரல் 9ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாம். திடீரென வெளியான இந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

Categories

Tech |