‘அரபிக் குத்து’ பாடலுக்கு குக் வித் கோமாளி பிரபலங்கள் அசத்தலாக நடனம் ஆடியுள்ளனர்.
விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக வலம் வருகிறது. இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களில் வெற்றியை தொடர்ந்து தற்போது 3வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அம்மு அபிராமி, ரோஷினி ஹரிப்ரியன், கிராஸ் கருணாஸ் மற்றும் பலர் போட்டியாளராக கலந்து கொண்டு வருகின்றனர்.
https://www.instagram.com/p/Cbh4lolofYU/
இதனையடுத்து, பீஸ்ட் படத்தின் ”அரபிக் குத்து” பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், குக் வித் கோமாளி பிரபலங்கள் பலர் இந்த பாடலுக்கு அசத்தலாக நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.