சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை வரையறைப்படுத்துவதற்கான முதலீட்டு உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில் தொழில் நிறுவனங்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. முக்கியமாக, முதலீட்டு உச்ச வரம்பு மாற்றியமைக்கப்படுவதால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயனடையும் என கூறியுள்ளார்.
* சிறு தொழில்களுக்கான முதலீட்டு உச்ச வரம்பு ரூ.25 லட்சத்திலிருந்து, ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.1 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்த உற்பத்தி நிறுவனம் சிறு தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும்.
* அதேபோல நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.20 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால் அந்நிறுவனம் நடுத்தர ஹோலில் நிறுவனமாக வரையறுக்கப்படும்.
* குறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.10 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறுவனம் குறு தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும்.