செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் ஏற்கனவே நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இது தொண்டர்களுடைய நலன்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் 50 ஆண்டுகாலம் அதனுடைய பரிணாம வளர்ச்சி இருந்திருக்கிறது. ஆகவே தொண்டர்களை எந்த நேரத்தில் பிளவு படுத்தி பார்க்க முடியாத இயக்கமாக தான் அண்ணா திமுக இன்றைக்கு நிலைத்து நிற்கின்றது.
எந்தவித சிறு சேதமும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். பொறுத்திருந்து பாருங்கள் சில சில பிரச்சனைகள் இடையில் வரும். அது சரியாக போய்விடும். இன்றைக்கு அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக நிற்கின்றார்கள். இந்த நிலையில் பிரச்சனை தலைமையில் இருக்கின்ற ஒரு மாயத் தோற்றம் உருவாகி இருக்கிறது. இது போக போக சரியாகிவிடும்.
பாரத பிரதமர் அவர்கள் தமிழகம் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் உரிய வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தால் சந்திப்போம். அதிமுக கூட்டணி அமைத்தால் நானும் இணைய தயாராக இருக்கின்றேன் என்று டிடிவி சொன்னது நல்ல கருத்து, வரவேற்கின்றோம். டிடிவியை சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டால் சந்திப்பேன் என்று தெரிவித்தார்.