Categories
மாநில செய்திகள்

உதித் சூர்யாவை CBCID போலீசார் தேனி அழைத்துச் சென்றனர்…..!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா_வை BCID போலீசார் தேனி அழைத்துச் சென்றனர்.

உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக தேனி கல்லூரி முதல்வர் ராஜேந்திரனின் புகார் அளித்திருந்தார். இந்த புகாரையடுத்து  தேனி போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வந்தார்கள். தண்டையார்பேட்டையில் இருந்து வந்த உதித் சூர்யா , அவரின் தந்தை வெங்கடேசன் , தாய் என குடும்பத்தோடு தலைமறைவானார்கள். இதன் தொடர்ச்சியாக தேனி போலீசார் தனிப்படை அமைத்து பல்வேறு கட்ட விசாரணை நடத்தினார்கள்.

சென்னையில் முகாமிட்டு தேடினார்கள்.இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார்.சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதையடுத்து இதன் விசாரணையை CBCID போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில்  திருப்பதி பகுதியில் உதித் சூர்யா தலைமறைவாகி இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை குடும்பத்தோடு கைது செய்து CBCID போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னை எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் உதித் சூர்யா மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது உதித் சூர்யா தேனி அழைத்துச் செல்லப்படுகின்றார். அங்கு அவர் முறைகேட்டில் ஈடுபட்டு படித்த கல்லூரியில் விசாரணை நடைபெறுமென்று தெரிகின்றது.

Categories

Tech |