Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அனைவரும் விரும்பிடும் “காலிஃப்ளவர் மிளகு பொரியல்” – செய்முறை

காலிஃப்ளவர் மிளகுப் பொரியல்

தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர்                               –     ஒன்று

பல்லாரி                                         –      நான்கு

எலுமிச்சை பழச்சாறு             –      2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் பொடி                             –      அரை டீஸ்பூன்

மிளகு                                              –      2 டேபிள் ஸ்பூன்

சோம்பு                                            –     ஒரு டீஸ்பூன்

சீரகம்                                              –      4 டீஸ்பூன்

உப்பு                                                –      தேவையான அளவு

எண்ணெய்                                   –      6 டேபிள் ஸ்பூன்

பூண்டு                                            –      10 பல்

இஞ்சி ஒரு                                   –      சிறிய துண்டு

செய்முறை

  • காலிஃபிளவரை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

 

  • மிளகு சோம்பு சீரகம் பூண்டு இஞ்சி இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும்.

 

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் வெங்காயம் உப்பு மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.

 

  • பின்னர் வதக்கி வைத்துள்ள வெங்காயத்துடன் காலிஃளார் உப்பு சேர்த்து தண்ணீர் சிறிது தெளித்து மூடி வைத்து விடவும்.

 

  • அரைப்பதம் வெந்த பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து கிளறிவிடவும்.

 

  • நன்றாக வெந்தவுடன் இறக்கிவிடலாம்.

 

  • சுவையான காலிஃப்ளவர் மிளகுப் பொரியல் தயார்.

 

காலிஃளாரின் நன்மைகள் 

  • காலிபிளவரின் நன்மைகள்
  • உடல் பருமனை குறைக்க உதவுகிறது
  • குடல் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கின்றது
  • புற்று நோய் நெருங்காமல் பாதுகாக்கின்றது
  • இதயநோய்களை வராமல் தடுக்கின்றது
  • நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்திற்கு உதவி புரிகிறது
  • ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது
  • வயிற்றில் இருக்கும் சிசு ஆரோக்கியமாக பிறக்க உதவி புரிகிறது

Categories

Tech |