இந்தியாவில் புதிய வகையான வைரஸ் நோய் ஒன்று பரவுவதாக ICMR பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்ட காலகட்டத்திலேயே, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு நோய் பரவ ஆரம்பித்து மக்களை துன்புறுத்தி வந்தது.
இதற்கிடையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனாவை சமாளிக்க போராடிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், கேட்க்யூ (CatQue) என்ற புதிய வைரஸ் ஒன்று இந்தியாவில் பரவி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இருந்து பெறப்பட்ட 833 ரத்த மாதிரிகளில் கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது உறுதியாகியுள்ளது. மூன்று வகையான கொசுக்களின் மூலம் இந்த வைரஸ் மக்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.