Categories
உலக செய்திகள்

இனி இத வாங்காதீங்க… பிரபல சாம்பார் மசாலாவில் விஷம்…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் MDH  சாம்பார் மசாலாவில் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் சல்மோனல்ல பாக்டீரியா இருப்பதாக  கண்டுபிடிக்கபட்டுள்ளது. ஐக்கிய அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் R-PURE என்ற நிறுவனம் MDH என்ற பெயரில் மசாலா பொருட்களை பல நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவுக்கு அந்நிறுவனம் உள்நாட்டு வர்த்தகம் மூலம் சாம்பார் மசாலா சப்ளை செய்து வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்தது. கடந்த வாரம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில்… “பணியின்போது தகராறு”… 5 பேரை கத்தியால் குத்திய நபர் கைது..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பணியின்போது தகராறு ஏற்பட்டதில் சக ஊழியர்கள் 5 பேரை கத்தியால் குத்திய நபரை போலீசார்  கைது செய்தனர்.  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டல்லாஹஸ்ஸி (Tallahassee) நகரத்தில் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் அன்ட்வான் பிரவுன் (Antwann Brown) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் பணியின்போது சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சக ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர். அதன்படி வெளியே சென்ற பிரவுன் சிறிது நேரத்தில் திரும்பி வந்து […]

Categories
உலக செய்திகள்

“ஆற்றில் பதுங்கிய முதலை”…. சீறிப்பாய்ந்து பிடித்த ஜாகுவார்.!!

பிரேசிலில் ஆற்றுக்குள் பதுங்கி கிடந்த முதலையை ஜாகுவார் ரக சிறுத்தை ஓன்று  மரத்திலிருந்து பாய்ந்து  வேட்டையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.  பிரேசிலில் உள்ள பாண்டனால் என்ற ஆற்றில் கரையிலிருந்து மரத்திற்குச் சென்ற ஜாகுவார் ரக சிறுத்தை ஒன்று நீரில் அசைவு ஏற்பட்டதை  உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தது. அப்போது  நீருக்குள் ஒரு முதலை சென்று கொண்டிருந்ததை ஜாகுவார் கண்டது. அவ்வளவுதான் அந்த ஜாகுவார் கண் இமைக்கும் நேரத்தில் சுமார் 10 அடி உயரத்திலிருந்து சீறிப்பாய்ந்து குதித்து, மறு நொடியே  முதலையின் கழுத்தைப் பிடித்து இறுக்கியது. […]

Categories
உலக செய்திகள்

வினோத நிகழ்வு…. “சுவரில் இருந்து கீழே விழுந்த பல்லி”… பார்த்த உடனே காப்பாற்றிய மற்றொரு பல்லி.. வைரல் வீடியோ..!!

வியட்நாமில் சுவற்றில் ஒரு பல்லி பிடிதவறி கீழே விழும்போது மற்றொரு பல்லி அதனை தாங்கிப் பிடித்து காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. இவ்வுலகில் தினமும் ஏதாவது ஒரு நாட்டில் எங்கேயாவது ஒரு வினோத நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை காணும் போது நமக்கு வியப்பை ஏற்படுத்தும். அந்த வகையில்  வியட்நாமில் டே நின்ஹ் (Tay Ninh) என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் ஜேக்கோ (Gecko) வகைப் பல்லிகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் ஒரு பல்லி திடீரென தன் […]

Categories
உலக செய்திகள்

பெட்ரோல் 113…. பால் 140 ”தனக்குத்தானே சூனியம் வைத்த பாக்” பரிதவிக்கும் மக்கள்…!!

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடனான உறவை முறித்துக் கொண்ட அதன் எதிரொலியாக பாகிஸ்தானில் பெட்ரோல் டீசலை விட அதிக விலையில் பால் விற்பனை ஆகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள பாகிஸ்தான் கோபத்தில் இந்தியாவுடனான வணிக உறவை முறித்துக் கொண்டது.  இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஏறக்குறைய 100 தயாரிப்புகளுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலையும் இரட்டிப்பாகி உள்ளது. மொஹரம் நாட்களில் பாகிஸ்தானில் பாலின் தேவை அதிகமாக […]

Categories
உலக செய்திகள்

“கருத்து வேறுபாடு” நீ என்ன பதவிய விட்டு போறது, நான் தான் தூக்குவேன்… அதிரடி காட்டிய டிரம்ப்…!!

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை திடீரென பதவியை விட்டு நீக்கியுள்ளார்.  அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்ற மூன்றாவது நபர் போல்டன். அவர் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் டிரம்புக்கு போல்டன் ஆலோசனைகளை வழங்கி வந்தார். ஈரான் விவகாரத்தில் எடுத்த பல்வேறு அதிரடி முடிவுகளுக்கு போல்டனே காரணம். இந்த தீவிர நிலைப்பாட்டை வடகொரிய, ஆப்கானிஸ்தான், ரஷ்யா தொடர்பான விவகாரங்களில் அமெரிக்கா கடைபிடிக்க வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

மனைவிக்காக… “6 மணிநேரம் நின்ற கணவன்”… வைரலாகும் புகைப்படம்…!!

மனைவி நன்கு தூங்குவதற்காக கணவன் 6 மணி நேரமாக நின்று கொண்டு பயணம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  கடந்த சில நாட்களுக்கு முன்பாக கர்ட்னி லீ ஜான்சன் என்பவர் தனது டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஒரு நபர் விமானத்தில் படுத்து நின்று கொண்டிருக்கிறார். அருகே இருக்கையில் ஒரு பெண் நன்கு தூங்கிக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பதிவிட்டதுடன் மேலே ஒரு தலைப்பு கொடுத்து இருந்தார். அதில் இந்த நபர் 6 மணி நேரமாக நின்று […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட்

பாக்.தீவிரவாத அச்சுறுத்தல்…. அணியில் இருந்து விலகிய 10 பிரபல கிரிக்கெட் வீரர்கள்… ரசிகர்கள் அதிருப்தி..!!

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள முன்னணி வீரர்கள் 10 பேர் விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி வருகின்ற 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட்க்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என்று கூறி இலங்கை […]

Categories
உலக செய்திகள்

ரூ85,00,000…. அதிஷ்டமாக வந்த CASH…. செலவுக்கு பின் திருட்டு CASE..!!

அமெரிக்காவில் வங்கி கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட 85 லட்சம் ரூபாயை செலவு செய்த தம்பதிகள் வழக்கை சந்தித்து வருகின்றனர். அமெரிக்காவின் பெனிசிலியா மாகாணத்திலுள்ள மாண்டீஸ்ட்டர் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் ராபர்ட் வில்லியம்ஸ் மற்றும் ரிப்பனில் வில்லியம்ஸ். இவர்களது  வங்கி கணக்கில் தவறுதலாக இந்திய மதிப்பில் சுமார் 85 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. சட்டப்படி இதனை வங்கிக்கு தெரிவிக்காத அந்த தம்பதி கேம்பர், ஷோபி ரேஸ் கார்கள் வாங்கியது, நண்பர்களுக்கு உதவியது என்று பணத்தை தாறுமாறாக […]

Categories
உலக செய்திகள்

சிக்கலில் இந்தியா ”ஜம்முவில் தேர்தல் நடத்துங்க” அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா….!!

இந்தியா ஜம்மு-காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் காஷ்மீர் பகுதி அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் இருப்பதும், அங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு மற்றும் இணைய சேவை துண்டிப்பு தற்போது வரை இருப்பதை கேள்விப்பட்டு  நாங்கள் கவலை அடைகின்றோம்.மனித உரிமைகளை மதித்து , அங்கு துண்டிக்கப்பட்ட இணையம் மற்றும் மொபைல் சேவைகளை முழுமையாக வழங்க இந்திய […]

Categories
உலக செய்திகள்

ரூ 1_க்கு துணி….5 நிமிடத்தில் காலியான கடை…. மீண்டும் அதே ஆப்பர் அறிவிப்பு…!!

ரஷியாவில் 1 ரூபாய்க்கு துணிகள் விற்பனை என்ற அறிவிக்கப்பட்டதை அடுத்து 5 நிமிடத்தில் பெண்கள் கடையையே காலி செய்துள்ளனர். ரஷியா நாட்டின் உள்ள விளாடிகவ்கஸ் என்ற நகரில் அமைந்துள்ள ஷாப்பிங் சென்டரில் ஸ்டோலிஸ்டா என்ற துணிக்கடை இயங்கி வருகின்றது. இந்த கடை ஏராளமான வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக அதிரடி சலுகை ஒன்றை அறிவித்தது.  அதில் இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் என்ற விலையில் கடையில் துணிகள் விற்கப்படும் என்று கடைக்கு வெளியே விளம்பரம் செய்தது. இந்த அறிவிப்பைக் கண்டதும் […]

Categories
உலக செய்திகள்

அமேசானுக்காக கைகோர்த்த 7 நாடுகள் …!!

அமேசான் மழை காட்டு தீயை அணைக்க 7 நாடுகள் முன்வந்து ஒப்பந்தம் செய்துள்ளது. உலகத்தின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் மழை காட்டு தீ சமூக ஆர்வலர்களை வேதனை கொள்ள வைத்துள்ளது. கடந்த சில மாதங்களாக பற்றி எரிந்து வரும் காட்டு தீயால்  அங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிர்கள் மரணித்துள்ளது. பல்வேறு உலக நாடுகள் அமேசானை பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் உலகம் முழுவதும் எழுந்து வருகின்றது. இந்நிலையில் தென்னமெரிக்காவில் அமேசான் காடுகளில் பரவியுள்ள  பிரேசில் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானை விட்டு வெளியேறும் அமெரிக்கா படைகள்…!!

ஆப்கானில் இருக்கும் அமெரிக்க படைகளை விலகிக்கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆப்கானிஸ்தானில் அங்குள்ள அரசுக்கு எதிராக தலிபான்கள் உள்நாட்டு போரை நடத்தி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த அமெரிக்காவும் தனது படைகளை அனுப்பி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்த சூழலில் தற்போது அமெரிக்கா படைகளை விலகிக்கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நிலைகொண்டுள்ள தமது படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்காக தலிபான்களுடன் மேற்கொண்டுள்ள அரசியல் தீர்வுகாண பேச்சுவார்த்தையில் […]

Categories
உலக செய்திகள்

அன்னிய வர்த்தகத்தில் அசத்திய சீனா … அமெரிக்காவுக்கு மோசமான பதிலடி ..!!

சீனாவின் அன்னிய செலாவணி மதிப்பு அதிகரித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுக்கு அமெரிக்காவுடன் வர்த்தக போர் நீடித்து வருகிறது. இதனால் சீனாவின் அன்னிய செலவாணி கையிருப்பு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு  மாறாக ஆகஸ்ட் மாதத்தில் 350 கோடி டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து சீனாவின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி அன்னிய செலவாணி கையிருப்பு ஆகஸ்ட் மாதத்தில் 3.1072 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் நிலவிய ஏற்ற இறக்கத்தால்  சீனாவின் அன்னிய செலவாணி […]

Categories
உலக செய்திகள்

 ஆத்தாடி ஒரு பீர் ”ரூ 49,01,567” அரண்டு போய் பில் கட்டிய எழுத்தாளர்….!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் எழுத்தாளர்  பீர் குடித்ததற்கு 1 லட்சம் டாலர் செலுத்தியது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக பெரிய பெரிய ஆளுமைகள் மது அருந்துவதற்காக பெரிய பெரிய நட்சத்திர விடுதியை நாடுவது உண்டு. அந்த வகையில் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள விடுதிக்கு சென்ற  ஆஸ்திரேலிய கிரிக்கெட் எழுத்தாளர் பீர் ஆர்டர் செய்து அருந்தியுள்ளார். அப்போது அவருக்கு லட்சக்கணக்கில் பில் போட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீட்டர் லாலா என்பவர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்டு இருக்கும் ஆஷஸ் தொடரில் இருந்து வருகின்றார். […]

Categories
உலக செய்திகள்

”ஜப்பானில் ரயில் மீது லாரி மோதி விபத்து”…. ஓட்டுநர் பரிதாப பலி… 34-க்கும் மேற்பட்டோர் காயம்.!!

ஜப்பானில் ரயில் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.  ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் உள்ள யோகோஹாமா நகரம் அருகே, ரயில்வே கடவு பாதை அமைந்துள்ளது. இந்த பாதை வழியாக இன்று காலை 11:40 மணியளவில் பயணிகள் ரயில் ஓன்று டோக்கியோ நோக்கி செல்ல முயன்றபோது, திடீரென கடவுப்பாதை வழியாக பழங்களை ஏற்றி வந்த லாரி ஒன்று வேகமாக ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி சின்னாபின்னமானதோடு மட்டுமில்லாமல் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு கரும்புகை […]

Categories
உலக செய்திகள்

“இன்ப அதிர்ச்சியால் விபரீதம்” மகளை துப்பாக்கியால் சுட்ட தாய்… அமெரிக்காவில் பரபரப்பு..!!

அமெரிக்காவில் சொல்லாமல் வீட்டுக்கு வந்து இன்ப அதிர்ச்சி தர முயன்ற இளம்பெண் தாயாலே துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மகள் தாய்க்கு  இன்ப அதிர்ச்சி கொடுக்க மெதுவாக வீட்டுக்குள் சென்றுள்ளார். இந்நிலையில் திருடன் ஒருவன் வீட்டிற்குள் வருவதாக கருதிய பெண் துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு தனது படுக்கை அறையின் கதவை திறந்து வைத்து காத்திருந்தார். அப்பொழுது உள்ளே ஒருவர் நுழைந்ததும் தாய் ஸ்பெஷல் ரிவால்வர் துப்பாக்கியால் சுட்டார். பின் சுடப்பட்டது தான் பெற்ற […]

Categories
உலக செய்திகள்

ஒருவழியாக முடிவை மாற்றிய ஹாங்காங்…. கைதிகளை நாடு கடத்தும் திட்ட மசோதா வாபஸ்.!!

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக கைதிகளை நாடு கடத்தும் திட்ட மசோதா வாபஸ் பெறப்படும் என ஹாங்காங்  அறிவித்தது.     கடந்த 3 மாதங்களாக  சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் அரசை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு அரசு அழைத்து செல்லும் திட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தான். ஆகவே அரசின் முடிவை எதிர்த்து மக்களின் போராட்டம் தொடங்கியது. மேலும்  ஹாங்காங் நிர்வாக ஆட்சியாளர் கேரிலாம் பதவி விலககோரியும் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் […]

Categories
உலக செய்திகள்

”கலிபோர்னியாவில் 34 பேர் உயிரிழந்த படகு தீ விபத்து ”…. 2 இந்தியர்களும் பலி.!!

கலிபோர்னியாவில் சுற்றுலா பயணிகளின் படகு தீ பிடித்து  34 பேர் பலியானதில் 2 இந்தியர்களும் உயிரிழந்திருப்பது  தற்போது தெரியவந்துள்ளது.   அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டாகுரூஸ் தீவில் கடலுக்கு அடியில் இருக்கும் பவளப்பாறை  மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பார்த்து மகிழ்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். அங்கே ஸ்கூபா டைவிங் கிலும் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி 38 பேர் கொண்ட குழு ஒன்று […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் இந்து பெண் முதல்முறையாக காவல் அதிகாரியாக தேர்வு..!!

பாகிஸ்தானை சேர்ந்த இந்து பெண் ஒருவர் முதல்முறையாக காவல் துணை உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் இந்துக்கள் சுமார் 70,00,000 பேர் வசித்து வருகின்றனர். அங்கு குறிப்பாக சிந்து மாகாணத்தில் இந்துக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாகாணத்தை சேர்ந்த இந்து பெண்ணான புஷ்பா கோலி என்ற இந்து பெண் மாகாண அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் எழுதி வெற்றி பெற்று காவல் துணைஉதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை மனித உரிமைகள் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

பிரதமர் காஷ்மீர் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டாம்…. பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள்… பாக்., இளைஞரின் பேச்சு வைரல்.!!

பாக்.பிரதமர் காஷ்மீர் பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அந்நாட்டு  வாலிபர் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதிலிருந்து பாகிஸ்தான் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு பதிலளித்த இந்தியா காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவதாரம் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் இந்த விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரைக்கும் எடுத்து சென்றது. ஆனால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் முயற்சி தோல்வி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிர்ச்சி…. குடும்பத்தினர் 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்.!!

அமெரிக்காவில் 14 வயது சிறுவன் தனது குடும்பத்தினர் 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் அலபாமா அருகே இருக்கும் எலெக்ட்ரான் என்ற இடத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் தனது வீட்டில் இருந்த குடும்பத்தினர் 5 பேரை திடீரென சுட்டு கொன்றுவிட்டான். சுடப்பட்ட ஐந்து பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த செயலை செய்து முடித்தபின் சிறுவன் தானாக […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தில் “115 அடி உயரம்”… பிரம்மாண்ட கண்ணாடி நீச்சல் குளம்… எதிர்பார்ப்பில் மக்கள்.!!

இங்கிலாந்தில் தலைநகர் லண்டனில்  115 அடி உயரத்தில் பிரம்மாண்ட   நீச்சல் குளம் ஓன்று அமைக்கப்பட்டு வருகிறது.  இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் அமெரிக்க  தூதரகத்தின் அருகில் இருக்கும் இரண்டு கட்டடங்களின் உச்சத்தில் நடுவே  சுமார் 115 அடி உயரத்தில்  நீச்சல் குளம் ஓன்று அமைக்கப்பட உள்ளது. இந்த நீச்சல் குளத்தினை கடின அழுத்தம் மற்றும் பாரம் தாங்கும் அதிக தடிமனான கண்ணாடியின்  மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது நீச்சல் குளம்  கட்டப்பட்டு வருவதால் அடுத்த ஆண்டு கோடை காலத்தின் போது திறக்கப்படும் என […]

Categories
உலக செய்திகள் விளையாட்டு

“பார்முலா 2 கார் பந்தயம்”… விபத்தில் சிக்கி இளம் வீரர் உயிரிழப்பு… வீரர்களிடையே சோகம்..!!

பெல்ஜியத்தில் நடந்த பார்முலா 2 கார் பந்தயத்தில் விபத்தில் சிக்கி இளம் வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பெல்ஜியத்தில் உள்ள ஸ்பா – ஸ்டாவோல்டில் பிரபல பார்முலா 2 கார் பந்தயம் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர்.  இதில் பிரான்ஸை சேர்ந்த அந்தோன் ஹூபர்ட்  (anthonie hubert) என்ற 22 வயதான இளம் வீரரும் கலந்து கொண்டார். இவர் பல்வேறு கார் பந்தய போட்டிகளில் கலந்து கொண்டு வென்றுள்ளார். இந்நிலையில் போட்டியின் போது எதிர்பாராத […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு… 5 பேர் பலி… 21 பேர் படுகாயம்…!!

அமெரிக்காவின் டெக்சாஸில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.  அமெரிக்காவில் உள்ள மேற்கு டெக்சாஸில் இருக்கும் மிட்லேண்ட் பகுதியில் ஒரு மர்ம நபர் தனது வாகனத்திலிருந்து கொண்டு அங்கிருந்த மக்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்தனர். அதன்பின் அந்த  அந்த நபர் அங்கிருந்த தபால் கொண்டு செல்லும் லாரியை கடத்திச் சென்றார்.  இதையடுத்து விரைந்த போலீசார் அவரை வழியில் […]

Categories
உலக செய்திகள்

“பாக்.கில் கட்டாய மதமாற்றம்” சீக்கிய பெண் மீட்பு…. 8 பேர் அதிரடியாக கைது.!!

பாகிஸ்தானில்  வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய பெண் மீட்கப்பட்டதுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள நங்கனா சாகிப் பகுதியை சேர்ந்த சீக்கிய குருத்வாரா தலைவரின் 19 வயது மகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் வலுக்கட்டாயமாக  கடத்திச் சென்றுள்ளனர். இதையடுத்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே  கடத்தப்பட்ட அப்பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி வற்புறுத்தி இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாகவும், பின்னர் இஸ்லாமிய இளைஞர் ஒருவருக்கு  […]

Categories
உலக செய்திகள்

ஆற்றங்கரையோரம் மீனை துரத்திய முதலை… பயந்து ஓடிய ஜோடி..!!

ஆஸ்திரேலியாவில் மீன் பிடிக்க வந்த தம்பதியினர் இருவரையும் பசியோடிருந்த முதலை ஒன்று  அச்சுறுத்தி மீனை விழுங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது.  ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் இருக்கும் கஹில்ஸ் கிராசிங் என்ற இடத்தில் உள்ள கக்காடு  (Kakadu) தேசியப் பூங்காவில் கணவன் மனைவி இருவரும்  ஆற்றங்கரையில் மீன் பிடிக்கச் சென்றனர். இருவரும்  நீண்ட நேரமாக தூண்டிலை போட்டு மீனுக்கு காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் மீன் மாட்டவே இல்லை. இறுதியாக ஒரு வழியாக அவர்களில் மனைவிக்கு மீன் ஒன்று தூண்டிலில்  சிக்கியது. இதனை மெதுவாக அவர் வெளியே இழுத்தார். […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

Playstore யில் தொடரும் ஆப் நீக்கம் … ஆண்ட்ராய்டு போனில் மால்வேர் தாக்குதல் ..!!

கூகிள் நிறுவனம் playstore யில் இருந்து  கேம் ஸ்கேனர் செயலியை நீக்கியுள்ளது . லட்சக்கணக்கான மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் செயலி கேம் ஸ்கேனர். இந்த செயலியில்  ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்களை எளிதில் பிடிஎப் ஆக மாற்றலாம்.இந்நிலையில் , இந்தச் செயலி மீது மால்வேர் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். எனவே, கேம் ஸ்கேனர் செயலியை கூகுள் நிறுவனம் “playstore” இல் இருந்து நீக்கியுள்ளது. மேலும்,  மால்வேர் தாக்குதல் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே இருப்பதாகவும்,  ஐஓஎஸ் வெர்ஷனில் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பரவி வரும் ‘எய்ட்ஸ்’…. ஒரே ஆண்டில் 140 பேர் பாதிப்பு..!!

பாகிஸ்தானின் ஷாகாட்  நகரில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக  பரவி வருகிறது.  பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசிடம் சட்ட அமலாக்க நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த ஆண்டில் மட்டும் ஷாகாட் (Shahkot) நகரில் 140 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் 85 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு வசதிகள் மாவட்ட நிர்வாகங்களிடம் இல்லாததே எச்.ஐ.வி நோய் பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

திடீரென “நெருப்பு பிளம்பை தெறிக்க விடும் ஸ்ட்ராம்போலி எரிமலை”…. பீதியில் உறைந்த மக்கள்..!!

இத்தாலியில் புகையை மட்டும் வெளியேற்றி வந்த ஸ்ட்ராம்போலி எரிமலை திடீரென நெருப்பு பிளம்பை தெறிக்க விடுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.  இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமாகும். இங்கு சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர். இந்த  கடலை ஒட்டி அமைந்திருக்கும் ஸ்ட்ரோம்போலி என்ற  எரிமலையானது உலகிலேயே அதிக செயல்பாட்டில் இருக்கும் எரிமலைகளில் ஒன்று என  ஜியாலஜி டாட் காம் (geology.com) என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஸ்ட்ரோம்போலி எரிமலை  1932-ம் ஆண்டு முதலே அடிக்கடி சீறி வருகின்றது.  கடந்த 2 நாட்களாக இது புகையையும் […]

Categories
உலக செய்திகள்

”ரூ 41,00,000 மின்கட்டணம்” கட்ட முடியாமல் திணறும் பிரதமர் அலுவலகம்…!!

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் மின்சார கட்டணத்தை கட்டவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படுமென்று அந்நாட்டு மின்சாரவாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் அலுவலகத்தின் மின்சார பாக்கி பணத்தை செலுத்தாமல் இருந்ததாக சர்சை எழுந்தது. மேலும் மின்சார பாக்கி வைத்துள்ளது தொடர்பாக இஸ்லாமாபாத் மின்விநியோக வாரியம் பிரதமர் அலுவலகத்துக்கு நோட்டீஸ்ஸை அனுப்பியுள்ளது. அதில் பிரதமர் அலுவலகம் மின்கட்டண பாக்கியாக ரூ.41 லட்சம் வைத்துள்ளது. கடந்த மாதமே கட்ட வேண்டிய மின்சாரக் கட்டணம் ரூ.35 லட்சம் கட்டவில்லை. இது தொடர்பாக மின்சார வாரியம் சார்பில் […]

Categories
உலக செய்திகள்

“கையில் குழந்தையுடன் மனைவி”…. ஈவு இரக்கமின்றி அடித்து துன்புறுத்தும் கணவன்… வைரலாகும் காட்சிகள்..!!

வியட்நாமில்  கையில் குழந்தையுடன் இருக்கும் மனைவியை கணவன் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளது.   வியட்நாமில் வூ தி தூ லி (Vu Thi Thu Ly) எனும் 27 வயது பெண், பிரபல வானொலியில் செய்தி வாசிப்பாளராகப் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வூஷு ங்குயென் ஸ்வான் (Nguyen Xuan Vinh)  என்ற கணவரும் ஒரு மகளும் இருக்கின்றனர். தற்காப்புக் கலை பயிற்றுனராக இருக்கும் கணவர் மனைவி வூ தி தூ லியை தொடர்ந்து  அடித்து துன்புறுத்தி வந்ததால் அவர் விவகாரத்து பெற்றார். […]

Categories
இராணுவம் உலக செய்திகள் தேசிய செய்திகள்

பாக். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை … ஒரு பொருட்டாக மதிக்காத இந்தியா ..!!

பாகிஸ்தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் கஷ்ணவி ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது .  பாகிஸ்தான் 300 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் கஷ்ணவி  ஏவுகணையை பலுசிஸ்தானில் உள்ள சான்மியானி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது . இந்த கஷ்ணவி ஏவுகணை சோதனையை முன்னிட்டு கராச்சி விமான நிலையத்தில் இருந்து மூன்று சர்வதேச மார்கங்களுக்கான  வான்வழி சேவை  வரும் 31-ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது . மேலும் , காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்கி  உலகநாடுகளின் ஆதரவை பெற பாகிஸ்தான் செய்த முயற்சிகள் […]

Categories
உலக செய்திகள்

6,00,000 மக்கள் காலி…. ஜப்பானை புரட்டி போட்ட கனமழை…!!

ஜப்பானியில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள 6 லட்சம் மக்களை காலி செய்து மாற்று இடத்துக்கு செல்லுங்கள் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான் நாட்டில் உள்ள  தென்மேற்கு பகுதியில் அமைந்து இருக்கும் தீவு மாகாணத்தின் குயூஷுவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள தாழ்வான மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. சகா, நாகசாகி உள்பட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளநீர் தேங்கி கிடைப்பதால் முற்றிலும் மக்களின் […]

Categories
உலக செய்திகள்

“மெக்சிகோ பெட்ரோல் குண்டு தீ விபத்து” பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு..!!

மெக்சிகோவில் இரவு விடுதிக்குள் நடந்த பெட்ரோல் குண்டு தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.  மெக்ஸிகோவின் வெராக்ரூஸ் மாகாணத்தில் உள்ள  வளைகுடா கடற்கரை நகரமான கோட்ஸாகோல்கோஸில் (Coatzacoalcos) ஒரு இரவு விடுதியில் அந்நாட்டு நேரப்படி கடந்த ஆகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை  அன்று இரவு திடீரென ஒரு கும்பல் விடுதிக்குள் நுழைந்து பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த  தீ விபத்தில்  23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் தீக்காயங்களுடன்  13 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

”ஜப்பானில் நிலநடுக்கம்” ரிக்டர் அளவில் 6.1_ஆக பதிவு…!!

ஜப்பானில் ஏற்பட்ட  நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. ஜப்பானின் நாட்டின் ஹோகைடோ பகுதியில் அந்நாட்டின் நேரத்திற்கு அதிகாலை 5.16 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. எவ்வித சேதாரமும்  தெரிவிக்கப்படாத நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் சொல்லப்படுகின்றது.

Categories
உலக செய்திகள்

“மெக்சிகோவில் அதிர்ச்சி” இரவு விடுதியில் பெட்ரோல் குண்டு தாக்குதல்… 23 பேர் உடல் கருகி பலி..!!

மெக்சிகோவில் இரவு விடுதிக்குள் நடந்த பெட்ரோல் குண்டு தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மெக்ஸிகோவின் வளைகுடா கடற்கரை நகரமான கோட்ஸாகோல்கோஸில் ஒரு இரவு விடுதி வழக்கம் போல செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அந்நாட்டு நேரப்படி கடந்த ஆகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை  அன்று இரவு திடீரென ஒரு கும்பல் விடுதிக்குள் நுழைந்து பெட்ரோல் குண்டுகளை வீசியது.  பெட்ரோல் குண்டு வெடித்து தீ பிடித்ததில் 15 ஆண்கள், 8 பெண்கள்  சேர்த்து மொத்தம் 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். […]

Categories
உலக செய்திகள்

கடுமையான கோபம்…. 3 முறை காரை புரட்டிய காண்டாமிருகம்… அதிர்ந்த பராமரிப்பாளர்..!!

ஜெர்மனியில் சஃபாரி பூங்காவில்  விலங்கு பராமரிப்பாளர் வந்த காரின் மீது காண்டாமிருகம் ஓன்று  கோபத்துடன் தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது  ஜெர்மனிய மாநிலமான லோயர் சாக்சனியில் (Lower Saxony ) உள்ள நகராட்சியான ஹோடன்ஹேகனில் உள்ள செரெங்கேட்டி (Serengeti ) சஃபாரி பூங்காவில் விலங்கு பராமரிப்பாளர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்  வந்த காரின் மீது கோபத்துடன் 30 வயதான குசினி (kusini) என்ற காண்டாமிருக காளை, தனது கொம்புகளை வைத்து மூன்று முறை புரட்டி போட்டது. மிருகத்தனமான தாக்குதலில் வாகனம் கடுமையாக சேதமடைந்தது. இந்த […]

Categories
உலக செய்திகள்

“சவப்பெட்டியில் 300 கிலோ கஞ்சா” கார் ஓட்டுநர் கைது..!!

கொலம்பியாவில் சவப்பெட்டியில் வைத்து 300 கிலோ கஞ்சா கடத்திய கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.  கொலம்பிய நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிக அளவில்  விளைவிக்கப்படுகிறது. அதே சமயம் இங்கு சட்டத்திற்கு விரோதமாகவும் சிலர் கஞ்சாவினை பயிரிட்டு அமெரிக்கா  உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்தி செல்கின்றனர். அதன்படி சமீபத்தில் போலீசார் பாம்லோனா – குக்கூட்டா (ucuta) சாலையில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவ்வழியாக ஒரு கார் வந்தது. அதனை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். இதற்கு […]

Categories
உலக செய்திகள்

“ஆசையாக கொஞ்ச முயன்ற போது விபரீதம்” காதை கடித்த ராட்வீலர் நாய்…. வேதனை தெரிவிக்கும் பெண்..!!

இங்கிலாந்தில் ஆசையாக கொஞ்சும் போது ராட்வீலர் (Rottweiler) நாய் தனது காதை கடித்து துண்டாக்கியதாக  வேதனையுடன் அப்பெண் தெரிவித்துள்ளார்.  இங்கிலாந்தின் சவுத்வேல்ஸைச் சேர்ந்த ஸ்டெஃப் ஜான் (Steff John) என்ற  28 வயதுடைய  இளம்பெண் ஒருவர், சோமர்செட்டில் உள்ள காரவன் பார்க்கில் வாக்கிங் சென்ற ராட்வீலர் (Rottweiler) என்ற நாயை ஆசையுடன் கொஞ்சுவதற்கு உரிமையாளரிடம் அனுமதி கேட்ட்டார். அதன்படி உரிமையாளரும் அனுமதி கொடுக்க, ஸ்டெஃப் ஜானும் ராட்வீலர் நாயைத் தொட்டவுடனேயே அவ்வளவுதான் அடுத்த வினாடி, தன் மீது பாய்ந்து காதைக் கடித்துக் குதறியதாக […]

Categories
உலக செய்திகள்

“227 குழந்தைகளின் சடலம்” உலகிலேயே இங்கு தான் அதிக நரபலி..!!

பெரு நாட்டின் தலைநகரான லிமாவை ஒட்டியுள்ள பகுதியில் நரபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் தலைநகரான லிமாவை ஒட்டியிருக்கும்  ஹூவான்சாகோ பகுதியில் கடந்த ஒரு ஆண்டுகளாக தொல்லியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வில் அன்றைய காலம் சிமு நாகரீகத்தில் நரபலி கொடுக்கப்பட்டதாக அனைவரும் நம்பப்படும் 227 குழந்தைகளின் உடல்கள் எலும்பு கூடுகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நரபலி  உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொடுக்கப்பட்டது  என தலைமை தொல்லியலாளர் கேஸ்டிலோ தெரிவித்துள்ளார். கண்டறிந்த உடல்களை ஆராய்ந்து […]

Categories
உலக செய்திகள்

மரபணு மாற்றம் “வெள்ளை நிறமிப் பல்லி” விஞ்ஞானிகள் சாதனை..!!

உலகிலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்ட “வெள்ளை நிறமிப் பல்லியை (White pigment lizard)  உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.  ஜார்ஜியா நாட்டின்  பல்கலைக்கழகத்தைச் நேர்ந்த மரபணுவியல் துறை விஞ்ஞானிகள் CRISPR என்று அழைக்கப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கரீபியன் தீவுகளில் அதிகமாக காணப்படும் குறிப்பிட்ட வகை பல்லியின் முட்டையின் மேல் படிந்திருக்கும் சவ்வுகளைத் தனியாக பிரித்தனர். பின்னர் அதிலுள்ள டிஎன்ஏ (DNA) மூலமாக  புதிய உயிரினத்தை உருவாக்க சோதனைகளை நடத்தி வந்தனர். இந்தச் சோதனைகளின் விளைவாக “அல்பினோ எனப்படும் வெள்ளை நிறமி” கொண்ட புதிய […]

Categories
உலக செய்திகள்

இந்திய விமானம் வான்வழியில் பறக்க தடை “மோடி தொடங்க… நாங்கள் முடிக்க” பாகிஸ்தான் அதிரடி..!!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியாக முற்றிலும் பறக்க தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.   கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி  ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370- ஐ மத்திய அரசு  நீக்கியது. இதற்கு பாகிஸ்தான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இந்த பிரச்சனையை ஐநா சபைக்கு கொண்டு செல்ல பல முயற்சிகளை மேற்கொண்டது. பாகிஸ்தானுக்கு சீனா மட்டுமே ஆதரவு அளித்த நிலையில் மற்ற நாடுகள் கைவிட்டன. இந்நிலையில் இந்தியா […]

Categories
உலக செய்திகள்

“நடுக்கடலில் திடீர் விபத்து” 2 பேர் மரணம்… 40 பேர் மாயம்… தேடுதல் பணியில் கடற்படை..!!

மத்திய தரைக்கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 40 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. லிபியாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்கு மத்திய தரைக்கடல் வழியாக சென்றனர். அப்போது அவர்களை  ஏற்றி சென்ற கப்பலில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு நடுவழியில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த லிபியா கடற்படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 65 பேர் உயிருடனும்  2 பேர் […]

Categories
உலக செய்திகள்

பால்கனியில் “தலை கீழாக யோகா” செய்த மாணவி… 80 அடி கீழே விழுந்த சோகம்..!!

மெக்ஸிகனை சேர்ந்த  கல்லூரி மாணவி பால் கனியில் யோகா செய்யும் போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.  மெக்ஸிகன் கல்லூரியில் பயின்று வரும் மாணவி அலெக்ஸா டெர்ரஷாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றின் 6- வது மாடியில் வசித்து வருகிறார். தினமும்   தனது வீட்டின் பால்கனியில் இருந்து யோகா பயிற்சி மேற்கொண்டு வருவார். அதன்படி தன்னுடைய பால்கனியின்  வெளிப்புற கம்பியில் தலைகீழாக நின்றபடி யோகா பயிற்சி செய்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி  சுமார் 80 அடி கீழே சென்று தரையில் […]

Categories
உலக செய்திகள்

கடலுக்குள் மூழ்கும் இந்தோனேஷியா… ரூ2,30,000கோடி செலவில் புதிய தலைநகர்…!!

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் ஜாவா கடலின் நீர்மட்டம் உயர்ந்து இருப்பதால் போர்னியோ தீவில் புதிய தலைநகரை கட்டமைக்க அந்நாட்டு அரசு தயாராகி வருகிறது. மூன்று கோடிக்கும் அதிகமானோர் வசிக்கும் ஜகார்தாவில் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் கடல் மட்டம் உயர்வு ஆகிய காரணங்களால் புதிய தலைநகரை உருவாக்க அந்நாட்டு அரசால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி உலகின் மிகப்பெரிய மூன்றாவது தீவான போர்னியாவில் புதிய தலைநகரை கட்டமைக்க உள்ளதாக  இந்தோனேசிய அதிபர் […]

Categories
உலக செய்திகள்

“25 அதிகமாம்” பிரான்ஸ் அதிபர் மனைவியை கிண்டலடித்த பிரேசில் அதிபர்… உதவிகரம் நீட்டியதால் வந்த வினை..!!

அமேசான் தீ  விபத்து குறித்து G7 மாநாட்டில் பேசிய  பிரான்ஸ் அதிபரின் மனைவியை கிண்டலடிக்கும் விதமாக பிரேசில்  அதிபர் சமூகவலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். பிரேசிலில் அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்ததால் ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடி குறித்து ஜி-7 உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வலியுறுத்தி இருந்தார். ஆனால் இந்த யோசனைக்கு கண்டனம் தெரிவித்த பிரேசில் அதிபர் போல்சோனரோ காடுகளில் ஏற்பட்டுள்ள தீ விபத்து குறித்து 7 நாடுகள் விவாதிக்க வேண்டும் என்று கூறுவது […]

Categories
உலக செய்திகள்

“இரண்டே அடியில்” பெரிய கண்ணாடியை கல்லால் உடைத்த குரங்கு… ஆச்சர்யத்தில் மக்கள்..!!

சீனாவில்  வன உயிர் பூங்காவில் ஒரு குரங்கு கூறிய கல்லால் கண்ணாடியை உடைத்து விட்டு ஓடிய காட்சி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.  சீனாவின் ஹெனான் மாகாணத்தில்  இருக்கும் ஸெங்க்சவ் (Zhengzhou) வன உயிர் பூங்காவில் கடந்த 20-ம் தேதி கொலம்பியாவைச் சேர்ந்த கபுச்சின் குரங்குகளைப்  ஒருவர் பார்வையிட்டார். அப்போது ஒரு குரங்கு மட்டும் கல்லை கொண்டு  மற்றொரு கல்லை மோதச் செய்து கூரான கல் ஆயுதத்தைத் தயாரித்து கொண்டிருந்தது. பின் அதனைப் படம் பிடிக்க முயன்றபோது, அந்தக் குரங்கு ஓடிச் சென்று கண்ணாடி கூண்டு அருகில் நின்று கூரான […]

Categories
உலக செய்திகள்

தமிழனை கொன்று குவித்தவனுக்கு பதவி உயர்வா..?? கொந்தளிக்கும் தமிழ் அமைப்புகள்..!!

விடுதலைப் புலிகளுடனான சண்டையின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கை ராணுவ வீரர் ரவீந்திர செல்வா ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு உலக அளவில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக செல்வா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது நியமனத்திற்கு இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருக்கக்கூடிய பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையின்போது ரவீந்திர செல்வா போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐநா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்தில் குறிப்பிடப்படபட்டிருப்பதை எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில் கொழும்புவில் […]

Categories
உலக செய்திகள்

பற்றி எரியும் நுரையீரல் “35,00,00,000 ரூபாயை தூக்கி கொடுத்த” பிரபல ஹாலிவுட் நடிகர்..!!

 அமேசான் காடுகளை பாதுகாப்பதற்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ 35,00,00,000 ரூபாயை நிதியுதவியாக  வழங்கி உள்ளார். கடந்த சில நாட்களாகவே அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது உலகத்தின் நுரையீரல் என்றுஅழைக்கப்படும் அமேசான்  காட்டு தீ குறித்து தான். உலகத்துக்கே 20 சதவீத ஆக்சிஜன் இந்த அமேசான் காடுகளால் மட்டுமே கிடைக்கின்றது. இந்த அமேசான் காடு பிரேசில், கொலம்பியா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா       உள்ளிட்ட நாடுகளில் பரவி கிடக்கிறது. ஆனால் பிரேசிலில் தான் 60 % காடுகள் உள்ளன. […]

Categories

Tech |