Categories
உலக செய்திகள்

குர்து இனத்தவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – அமெரிக்கா நம்பிக்கை.!!

சிரியாவின் எல்லைப்பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதோடு, குர்து இனத்தவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.     சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி, அமெரிக்க படைக்கு ஆதரவாக நின்ற குர்து படைகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இதுவரை 637 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரை நிறுத்த அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்துவந்த நிலையில், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் […]

Categories
உலக செய்திகள்

”பதற்றத்தில் எல்லை” இந்தியர்களை வெளியேற்றிய மெக்சிகோ…..!!

 சட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்களை மெக்சிகோ அரசு தாய்நாட்டுக்கு மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளது. மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமான முறையில் மக்கள் நுழைவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். இதனைத் தடுக்க மெக்சிகோ முயற்சி எடுக்கவில்லை எனில் அந்நாட்டு பொருட்களின் மீது வரி சுமத்தப்படும் எனவும் அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.இதனைத் தொடர்ந்து, மெக்சிகோவின் எல்லைகளில் அந்நாட்டு அரசு பாதுகாப்பினை பலப்படுத்தியது. இந்நிலையில், தோலுசா நகர சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்களை தாய்நாட்டுக்கு மெக்சிகோ […]

Categories
உலக செய்திகள்

“மீன்கள் தட்டுப்பாடு”… நிலப்பரப்பிற்கு வந்த 6 கடல் சிங்கங்கள் மீட்பு..!!

பெரு நாட்டில் உயிர்வாழ உணவுத்தேடி நிலப்பரப்பிற்கு வந்த 6 கடல் சிங்கங்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக விடப்பட்டுள்ளன. பெருநாட்டின் தலைநகர் லிமா பகுதியின் நிலப்பரப்பில் 6 கடல் சிங்கங்கள் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருப்பதை வனவிலங்கு  வனவிலங்கு ஆர்வலர்கள் பார்த்தனர். பின்னர் அவற்றை அப்பகுதியில் இருந்து மீட்டு பராமரித்து பசுபிக் கடற்கரையில் பத்திரமாக விட்டனர். கடல் சிங்கங்கள் நிலப்பரப்பிற்கு வந்த காரணம் என்னவென்றால், வெப்பநிலை மாற்றம் காரணமாக பெரு பகுதியில் உள்ள கடலில் மீன்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆகவே கடற்சிங்கங்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. இதனால் […]

Categories
உலக செய்திகள்

”பிரெக்ஸிட் உடன்பாடு எட்டப்பட்டது” பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் …!!

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தம் உடன்பாடு ஏற்பட்டதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்து இருக்க வேண்டுமா , நீடித்து இருக்க கூடாதா , தனித்து விளங்க வேண்டுமா என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட அந்த வாக்கெடுப்பில் பிரிட்டன் மக்கள் விலகுவது என தீர்ப்பளித்தார்கள். பின்னர் அதிலிருந்து எப்போது , எப்படி , எந்த உடன்பாட்டின் அடிப்படையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் தருகின்றோம் ”75,000,000 K.G ” ஆப்கானுக்கு இந்தியா தாராளம்….!!

ஆப்கானிஸ்தானுக்கு உதவும் வகையில் 75 ஆயிரம் டன் கோதுமை வழங்கவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் நீண்ட நாள்களாக தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிடியிலிருந்து பாதிப்புக்குள்ளானது. அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கை காரணமாகத் தலிபான் பயங்கரவாத இயக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற ஆட்சி அங்கு கொண்டுவரப்பட்டு ஜனநாயக ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதன் விளைவாகப் பல நாடுகளும் ஆப்கானின் முன்னேற்றத்திற்கு உதவிகளை மேற்கொண்டுவருகிறன.கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானுக்கு […]

Categories
உலக செய்திகள்

”வறுமையில் இருந்து மீண்டெழும் இந்தியா” உலக வங்கி தகவல் …..!!

1990-களிலிருந்து இந்தியாவின் வறுமை நிலையின் குறியீடு, ஏழு விழுக்காடு வரை வளர்ச்சி கண்டுள்ளதாக உலக வங்கி நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 1990ஆம் ஆண்டிலிருந்து கணக்கீடு செய்து பார்க்கையில், இந்தியா வறுமை நிலையில் ஏழு விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் இது 15 ஆண்டின் சராசரி அளவை பொறுத்தமட்டில் பாதியாகக் குறைந்துள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இந்த வளர்ச்சியானது மனித மேம்பாட்டில் இந்தியா வலுவான முன்னேற்றங்களைக் கண்டதினால் நிகழ்ந்துள்ளது என உலக வங்கி விளக்கியுள்ளது. அதேநேரத்தில் இந்தியாவின் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

இனி சைகை மூலம் போனை இயக்கலாம்…… கூகிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன்….!!

ரேடார் சென்சார் கருவியுடன் கூடிய பிக்சல்புக் ஸ்மார்ட்போன்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள பிக்சல் போர் மற்றும் பிக்சல் ஸ்மார்ட்போன் நியூ அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் எளிதான வடிவமைப்புடன் சைகை மூலம் இயங்கும் வசதி கொண்ட இந்த செல்போன்களில் ரேடார் சென்சார் கருவிகள் கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் உயர்தர கேமரா வசதிகள் இடம் பெற்றுள்ளன. அறிமுக நிகழ்ச்சியில் புதிதாக நடுத்தர வழியில் […]

Categories
உலக செய்திகள்

”சீக்கிரம் எந்திரிப்பவன் நானல்ல” சிரிப்பலையை ஏற்படுத்திய அபிஜித் பானர்ஜி..!

நோபல் பரிசு அறிவித்த உடன் தூக்கத்தைத் தொடர திரும்ப படுக்கறைக்குச் சென்று விட்டதாக நகைச்சுவையுடன் அபிஜித் பானர்ஜி, நேர்காணலில் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை இந்தியாவின் பூர்வக்கூடியான அமெரிக்காவில் வசித்துவரும் அபிஜித் பானர்ஜிக்கும் அவரது மனைவியான எஸ்தர் டஃப்லோவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அபிஜித் பானர்ஜி நோபல் பரிசு நிறுவனத்தில் அளித்த பேட்டியில், ‘நேற்று காலை 6 மணியளவில் அவருக்கும் அவர் மனைவிக்கும் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு அறிவித்ததை அறிந்த பிறகு, உடனே அவர் தூக்கத்தைத் […]

Categories
உலக செய்திகள்

ரூ 1,42,00,00,000 விலை… ”தங்க செருப்பு”…… உலகமே வியப்பு…!!

ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் உலகிலேயே அதிக மதிப்புடைய தங்க செருப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. துபாய் நாட்டில் மெரினா பகுதியில் நடைபெற்ற பிரபல ஃபேஷன் ஷோ (Fashion Show) நிகழ்ச்சியில் 142 கோடி மதிப்புள்ள தங்க செருப்பினை உருவாக்கி மக்கள் பார்வைக்காக வைத்து அசத்தியுள்ளனர்.மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்க செருப்பினை வடிவமைத்தவர் இத்தாலி நாட்டை சேர்ந்த அன்டோனியோ வியட்ரி(Antonio Vietri) என்பவர்தான். இவர் கடந்த 1579ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் கண்டுபிடிக்கப்பட்ட சிறிய விண்கல், 30 கேரட் வைரங்கள் ஆகிய […]

Categories
உலக செய்திகள்

நடப்பாண்டுக்கான புக்கர் பரிசு அறிவிப்பு….!!

2019ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு மார்கரெட் அட்வுட், பெர்னர்டைன் எவரிஸ்டோ ஆகிய இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது. சர்வதேச அளவில் இலக்கியத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புத்தகம் எழுதுபவருக்காக அயர்லாந்தால் வழங்கப்படுவது தான் புக்கர் பரிசு. இதில் ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்படும் புத்தகத்தையே தேர்வு செய்வர். ஒரு புத்தகத்தினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அதனை புக்கர் பரிசுக்குத் தேர்வு செய்வர். புத்தகத்தை எழுதிய எழுத்தாளருக்கும், அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தவருக்கும் பரிசு சரிசமமாகப் பிரித்து […]

Categories
உலக செய்திகள்

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ? நோபல் வென்ற இந்தியர் – அபிஜித் பானர்ஜி…!!

பொருளாதாரத்துக்கான 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை இந்தியாவில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் அபிஜித் பானர்ஜிக்கு கிடைத்துள்ளது. என்னதான் இப்போது அமெரிக்காவில் பணியாற்றினாலும் அபிஜித் பானர்ஜிக்குப் பூர்வீகம் மேற்கு வங்கம்தான். 1961ஆம் ஆண்டு தீபக் – நிர்மலா இணைய தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்தான் இந்த அபிஜித் பானர்ஜி. இவரது தந்தை கொல்கத்தா மாநில கல்லூரியில் பொருளாதார துறையின் தலைவராக பணிபுரிந்தார். இவரது தாய் கொல்கத்தா சமூக அறிவியல் ஆய்வு மையத்தில் பேராசிரியாகப் பணிபுரிந்தார். புலிக்குப் பிறந்தது பூனையாகாது […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்தியர் உட்பட 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிப்பு…!!

2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது ஆண்டுதோறும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடு குறித்தும் பரிசீலித்த பின் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து இந்த பரிசை அறிவித்து […]

Categories
உலக செய்திகள்

புதிதாக 20 நிலவு ….. ”சனி கிரகத்தின் அதிசயம்”….. புதிய கண்டுபிடிப்பு ….!!

சனி கிரகத்தை சுற்றி புதிதாக இருபது நிலவுகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Karnikie institution of science நிறுவனத்தை  சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அவரது குழுவினர் சனி கிரகத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்று வட்டப்பாதையில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில்  புதியதாக நிலவுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் சனி கிரகத்தில் உள்ள நிலவுகளில் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. Jupiter எனப்படும் வியாழன் கிரகத்தில் 79 நிலவுகள் இருக்கின்றன. இதனால் தற்போது சனி கிரககம் அதிக  […]

Categories
உலக செய்திகள்

இனி ஊசி தேவையில்லை…. சக்கரை நோயாளிகளுக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு…!!

ஊசியாக போடப்பட்டு வந்த இன்சுலின் மருந்தை மாத்திரையாக உட்கொள்ள அமெரிக்க ஆய்வாளர்கள் மேம்படுத்தப்பட்ட ஒரு நுட்பத்தை கண்டறிந்து உள்ளனர். அமெரிக்காவில் மசாஜ் ஸ்டர்ட்ச் என்ற தொழில் கல்வி நிறுவன ஆய்வாளர்கள் பன்றி ஒன்றை வைத்து மேற்கொண்ட பரிசோதனையின் முடிவுகள் நேச்சர் மெடிசன் என்ற இதழில் இந்த வாரம் தகவல்  ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இன்சுலின் மருந்து ஊசி மூலமே செலுத்தப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பெரிய அளவிலான மாத்திரையை கண்டறிந்து அதன் மூலம் இன்சுலின் […]

Categories
உலக செய்திகள்

இனி இறைச்சி விலை தாறுமாறாக குறையும்…. மக்களை வியப்பில் ஆழ்த்தும் புதிய தொழில்நுட்பம்…..!!

இஸ்ரேலை சேர்ந்த அல்போன்ஸ் என்ற உணவு நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வைத்து மாட்டிறைச்சியை வெற்றிகரமாக வளர்த்து காட்டி உள்ளதாக தெரிவித்துள்ளது. மாட்டு இறைச்சியை  வளர்த்து காட்டும் முயற்சியில் இறங்கிய இஸ்ரேலைச் சேர்ந்த என்ற அல்போன்ஸ் என்ற உணவு நிறுவனம் ரஷ்யாவைச் சேர்ந்த3d  பிரின்டிங் நிறுவனத்துடன் இணைந்து இப்பணியை மேற்கொண்டது. அந்த வகையில் பசுவிலிருந்து செல்கள் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றுக்கு சிறந்த ஊட்டச்சத்துக்கள் வழங்கப்பட்டு வளர்ச்சி பெற ஏதுவான சூழல்களில் செல்கள் வைக்கப்பட்டு பெருக்கம் அடைய வைக்கப்பட்டன. இறுதியில் […]

Categories
உலக செய்திகள்

”பெட்ரோல் விலையை குறையுங்க” போராட்டம் வெடித்தது…. !!

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் நடைபெற்ற எக்விட்டர் நாட்டில் நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தென்னமெரிக்க நாடான எக்டர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தலைநகர் ஈக்வடாரில் அதிபர் லெனின் மோரைரோ அரசுக்கு எதிராக சிக்கன நடவடிக்கையை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். அப்போது தடுப்புகளை அகற்றுவதோடு போலீசார் மீது கற்களை வீசி எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர்.இதேபோல் மசாஜீ […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

”சந்தன, குங்குமம், பூ, பழம் வைத்து பூஜை” ரஃபேல் விமானத்தை பெற்ற ராஜ்நாத் சிங்….!!

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து முதல் ரக விமானத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார். பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தப்படி தயாரிக்கப்பட்ட முதல் விமானத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போர்டோக்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் ரஃபேல்விமானத்தை பெற்றுக் கொண்ட அமைச்சர் ராஜ்நாத்சிங் ரஃபேல் விமானங்கள் மூலம் இந்திய விமானப் படையின் வலிமை […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் அதிர்ச்சி… “துனிசியாவில் கடல் அலையில் சிக்கிய படகு… 13 பெண்கள் பரிதாப பலி.!!

துனிசியா நாட்டில் படகு ஓன்று  கடல் அலையில் சிக்கி கவிழ்ந்ததில் 13 பெண்கள்  உயிரிழந்தனர்.  துனிசியா நாட்டிலிருந்து 50 பேரை ஏற்றிக்கொண்டு ஒரு படகு மத்திய தரைக்கடல் வழியாக புறப்பட்டு சென்றது. இந்த படகு அங்குள்ள லாம்பெதூசா (Lampedusa) தீவின் அருகே வந்த போது மோசமான வானிலையின் காரணமாக திடீரென ஏற்பட்ட  கடல் அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து நள்ளிரவில் கிடைத்த தகவலின் படி இரண்டு  மீட்பு கப்பல்களுடன் சம்பவ இடத்திற்கு  சென்ற  இத்தாலி கடற்படையினர், அங்கு நீரில் உயிருக்கு போராடி  தத்தளித்துக் கொண்டிருந்த […]

Categories
உலக செய்திகள்

எளிதில் நோயை குணப்படுத்தும்… “344 வயது பெண் ஆமை இறந்தது… ஆனால் சந்தேகம்.!!

ஆப்பிரிக்காவிலேயே மிகவும் அதிக வயதான அலக்பா எனும் ஆமை உடல்நலக் குறைவால் இறந்தது . ஆப்பிரிக்காவிலேயே மிக அதிக வயதான ஆமையான அலக்பா (Alagba) எனும் 344  வயதுடைய பெண் ஆமை ஓன்று தென்மேற்கு நைஜீரியாவின் ஒக்போமோசோ அரண்மனையில் வைத்து, மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வந்தது. இந்த ஆமையை சரியாக  பார்த்து பராமரிப்பதற்கு  மட்டும்  2 வேலையாட்கள் நியமிக்கப்பட்டு பத்திரமாக பாதுகாத்துவந்தனர். இந்த ஆமை மற்ற ஆமை போல சாதாரண ஆமை கிடையாது. இது எளிதில் நோய்களை குணப்படுத்தும் விசேஷ ஆற்றல் இருப்பதாக கருதப்பட்டதால், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து […]

Categories
உலக செய்திகள்

பிச்சைக்கார மூதாட்டி”ரூ 6,32,00,000” பிரபலமான கோடீஸ்வரி…!!

லெபனான் நாட்டில் பிச்சை எடுக்கும் மூதாட்டி ஒருவர் 6 கோடியே 37 லட்சம் ரூபாய் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. லெபனான் நாட்டின் சீதோன் என்ற நகரில் ஒரு மருத்துவமனை வாசலில் பிச்சை எடுத்து வரும் மூதாட்டி தான் ஹஜ் வாபா முகமது அவத். இவரை அந்த பகுதியில் உள்ள எல்லாருக்கும் ஒரு பிச்சைகார மூதாட்டியாக தான் தெரியும். ஆனால் அவர் ஒரு கோடீஸ்வரி என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அதிர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

எப்படி வந்தது?… விமான நிலையத்தில் நுழைந்து சுற்றி திரிந்த “சிவப்பு நரி”… போட்டோ எடுத்த பயணிகள்.!!

ரஷ்யாவில் ஒரு விமான நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் நுழைந்த சிவப்பு நரி ஒன்று அங்கும் இங்கும்  சுற்றித்திரிந்தது.  ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவின் தெற்குப் பகுதியில் டொமோடிடோவோ விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் பயணிகள் புறப்படும் பகுதிக்குள் திடீரென புகுந்த சிவப்பு  நரி ஒன்று அங்கே அங்குமிங்கும் சுற்றி திரிந்து ஓடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த  விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்து வெளியேறினர். ஆனால் பயணிகள்  சிலர் ஆச்சரியத்துடன் ஆர்வமிகுதியால் நரி எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம்  பின்தொடர்ந்து தங்கள் மொபைல் […]

Categories
உலக செய்திகள்

விலை தாங்க முடியல ”வெங்காயமே வேண்டாம்” உத்தரவு போட்ட பிரதமர் …..!!

வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததால் தனிப்பட்ட முறையில் தானும் பாதிக்கப்பட்டதாக வங்கதேச பிரதமர் சேக் அசீனா தெரிவித்துள்ளார். நான்கு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் சேக் அசீனா முதல் நாளான நேற்று டெல்லியில் நடைபெற்ற தொழில்துறை கூட்டமைப்புக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததால் தானும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாக பகிர்ந்து கொண்டார். மேலும் வெங்காய ஏற்றுமதியை திடீரென இந்தியா எதற்காக நிறுத்தியது என எனக்கு தெரியவில்லை […]

Categories
உலக செய்திகள்

“அச்சத்தில் உறைந்த பயணிகள்”… நடுவானில் கழன்ற விமானத்தின் எஞ்சின் மேற்கூரை..!!

அமெரிக்காவில் விமானத்தின் என்ஜினின் மேற்கூரை கழன்றதால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்திலுள்ள டென்வர் நகரில் இருந்து, யுனைடட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புளோரிடாவின் ஆர்லண்டோ நகருக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது  பாதி வழியில்  விமானத்தின் வலதுபக்க என்ஜினின் மேற்கூரை மெல்ல மெல்ல கழன்று ஆட்டம் கண்டுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக எஞ்சி மேற்கூரை கழன்றதை பார்த்த பயணி ஒருவர் பதறிப்போய் பணிப்பெண்ணிடம் சொல்ல, பணிப்பெண்  விமானிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானி  சற்றும் யோசிக்காமல் மீண்டும் புறப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

“இந்திய குடியரசு தலைவர் மோடி”… ஐ.நாவில் தவறாக பேசிய இம்ரான் கான்.!!

பாக்.,பிரதமர் இம்ரான் கான் ஐ.நா.வில்  உரையாற்றியபோது , பிரதமர் மோடியை இந்திய குடியரசுத் தலைவர் என தவறாக பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கான் நேற்று ஐக்கிய நாடுகள் சபையில்  தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது, அவர் பேசியதில் பெரும்பங்காக இந்தியாவுக்கு எதிராகவே பேசினார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்து மையமாக வைத்து தாக்கியே பேசினார். ஒவ்வொருவருக்கும் 15 முதல் 20 நிமிடம் ஐநாவில் பேச ஒதுக்கப்படும். ஆனால் பாக் பிரதமரோ, அவருக்கென ஒதுக்கப்பட்ட நிமிடங்களை விட அதிகமாக […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேஷியாவில்….. சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… “23 பேர் பலி”… 100-க்கும் மேற்பட்டோர் காயம்..!!

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேஷியாவில் உள்ள  கிழக்கு மாகாணம்  மலுகுவில் இருக்கும் அம்பான் நகரில், நேற்று அதிகாலை திடீரென பெரும் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் உருவான நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 6. 5 ஆக பதிவானது. இதில் அப்பகுதி முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது. அங்குள்ள பல வீடுகள், கடைகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததோடு மட்டுமில்லாமல் சில இடங்களில் பெரிய நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் மக்களின் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!”…. ஐ.நாவில் தமிழை புகழ்ந்து பேசிய மோடி.!!

”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்று  பூங்குன்றனார் கூறிய புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி ஐ.நா சபையில் பிரதமர் மோடி பேசினார். அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி வாஷிங்டனில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றினார்.  அப்போது அவர் பேசுகையில், ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றுவதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.இந்தியாவில் மிகப்பெரிய அளவில் சுகாதார திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை உலகம் முழுவதும் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தில் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“பூடானில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து”…. 2 வீரர்கள் பலி.!!

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பூடானில் பயிற்சியில் ஈடுபடும் போது விபத்துக்குள்ளானதில் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.  ராயல் பூட்டான் ஆர்மியும்  இந்திய ராணுவமும் இணைந்து  பல முறை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் கூட்டாக பூடான் சென்று இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி இந்திய ராணுவதுக்கு சொந்தமான சீட்டா  ஹெலிகாப்டர் ஒன்று இன்று மதியம் பூடான் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது  அங்கே ஒரு மலை அருகில் தரையிறங்கும் போது மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிகாப்டர் […]

Categories
உலக செய்திகள்

சென்னைக்கு ஆபத்து….. ”உயரும் கடல்மட்டம்”… 45 நகரத்துக்கு எச்சரிக்கை…!!

கடல்மட்டம் உயர்ந்து வருவதால் சென்னை உள்பட 45 இந்திய கடலோர துறைமுக நகரங்களுக்கு ஆபத்து என்று அறிக்கை வெளியாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடல் வெப்பமடைந்து அதன் மூலமாக புவி வெப்பமடைகின்றது என்று சர்வதேச நிபுணர்கள் குழு ஐ.நா.விடம் அறிக்கை அளித்தது.இதில் இன்னும் அதிர்ச்சியான விஷயம் பல சொல்லப்பட்டுள்ளது. அதில் இமயமலை உருகி கடல் மட்டம் உயரும் காரணத்தால் சென்னை, மும்பை உள்ளிட்ட 4 முக்கிய நகரங்களுக்கு ஆபத்து இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.பூமியின் குளிர், வெப்ப நிலையை சமன் செய்வதில் 33, 25, 19,000 கன மைல் அளவு […]

Categories
உலக செய்திகள்

காட்டுவியா? காட்டமாட்டியா? பெண் செய்த சேட்டை…. வைரலாகும் வீடியோ ….!!

வெளிநாட்டில் இளைஞரை துரத்தி , துரத்தி டார்ச்சர் செய்யும் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. நவீன உலகில் ஸ்மார்ட் போன் தேவை என்பது அத்யாவசியமாக மாறியுள்ளது. அனைவரும் பயன்படும் தவிர்க்கமுடியாத சாதனமாக இருந்து வருகின்றது.மேலும் நாளுக்கு நாள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.உலகளவில் ஸ்மார்ட் போனின் தேவை அதிகரித்து வரும் நிலையில் அந்நிறுவனமும் புதிய புதிய தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்து வருகின்றது.பாதுகாப்பு வசதிக்காக ஸ்மார்ட் போன்கள் கொண்டு வந்துள்ள unlock  வசதி finger lock […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் 65 அடி நீளமுள்ள அனகோண்டா?… பதில் கிடைத்து விட்டது..!!

சீனாவில் ஆற்றில் இருந்தது அனகோண்டா என்று நினைத்த அனைவருக்கும் பதில் கிடைத்துள்ளது.   சீனாவில் உள்ள கார்ஜஸ் அணையில் 65 அடி நீளத்தில் மர்மமான ஒரு உயிரினம் ஊறிச் செல்வதாக ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவை  60,00,000 – த்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதனை கண்ட பலரும் இது என்ன உயிரினம் என்று வியப்பில் ஆழ்ந்தனர். சிலர் இது ஒரு மிகப்பெரிய அனகோண்டாவாகவோ அல்லது ராட்சத மீனாகவோ இருக்கலாம் என சந்தேகத்தின் படி தெரிவித்தனர். அதிலும் இந்த வீடியோ என்றைக்கு எடுக்கப்பட்டது என்றே […]

Categories
உலக செய்திகள்

அய்யோ பாவம்… “கார் டயரில் சிக்கியது நாயின் தலை”…. பத்திரமாக மீட்ட அவசர சேவை பிரிவு..!!

சிலி நாட்டில் வண்டி சக்கரத்தின் நடுவே மாட்டிக்கொண்டு போராடிய  நாயை அவசர சேவை பிரிவினர் பத்திரமாக மீட்ட சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.      சிலி நாட்டில் உள்ள அண்டோபகாஸ்டா நகரில் உள்ள குப்பை தொட்டியில் ஒரு காரின் டயர் ஓன்று கிடந்தது. இதனை  அங்கு விளையாடிக் கொண்டிருந்த 8 மாத பெண் நாய் ஒன்று  கண்டதும் கார் டயரை தலையால் முட்டி உருட்டி பெறட்டி ஜாலியாக  விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அதன் தலை அந்த சக்கரத்தின் நடு வட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானில் அதிர்ச்சி”…. தலிபான் குறி தப்பியது…. மருத்துவமனை அருகே வெடி குண்டு வெடித்து 20 பேர் உடல் சிதறி பலி..!!

ஆப்கானிஸ்தானில், தலிபான் தீவிரவாதிகள் குறி தவறி மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த வெடி குண்டு நிரம்பிய லாரி வெடித்து சிதறியதில் 20 பேர் பரிதாபமாக பலியாகினர்.  அமெரிக்கா தனது ராணுவ படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து  திரும்ப பெறுவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அவ்வளவுதான் தோல்வியடைந்தது முதல், தலிபான் பயங்கரவாத அமைப்பு தங்களது வேலையே காட்ட தொடங்கி விட்டனர். அதாவது  தொடர்ந்து  தாக்குதலை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த தாக்குதலுக்கு இடையே  வருகிற 28ம் தேதி அதிபர் தேர்தலும் நடைபெற இருக்கின்றது. இத்தேர்தலில் அந்நாட்டு மக்கள் அனைவரும் வாக்களிக்க […]

Categories
உலக செய்திகள்

“நான் அப்படி செய்திருக்க கூடாது”… 18 ஆண்டுகளுக்கு பின் வருந்தும் கனட பிரதமர்..!!

கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 18 ஆண்டுகளுக்கு முன் கறுப்பினத்தவரை கேலி செய்யும் வகையில் வேடமணிந்ததற்கு தற்போது  வருத்தத்தை தெரிவித்துள்ளார். கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  தனது 29-வது வயதில் வெஸ்ட் பாய்ன்ட் கிரே அகாடமி என்ற தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தபோது, அரேபியன் நைட்ஸ் என்ற இரவு விருந்து நிகழ்ச்சியின் போது ட்ரூடோ கறுப்பினத்தவரை கேலி செய்வது போல வேடமிட்டிருந்தார். இந்த  தோற்றமானது அந்த பள்ளியின் ஆண்டு புத்தகத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தை  அமெரிக்காவின்  டைம்ஸ்  நாளிதழ் வெளியிட்டது. ட்ருடோ 2-வது […]

Categories
உலக செய்திகள்

இந்திய தேசிய கீதத்திற்கு இசையமைத்த அமெரிக்க ராணுவத்தினர்.!!

இந்திய தேசிய கீதத்திற்கு அமெரிக்க ராணுவத்தினர் சிறப்பாக இசையமைத்தது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.   ஒவ்வொரு ஆண்டும் கட்டாயமாக இந்தியா மற்றும் அமெரிக்கா ராணுவ வீரர்களுக்கு இடையே “யுத்த அப்யாஸ்” என்ற போர் ஒத்துகை பயிற்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான (2019) போர் ஒத்திகை பயிற்சி வாஷிங்டனில்  உள்ள லூயிஸ் தளத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சியில்  இந்திய மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஒன்றாக இணைந்து, துப்பாக்கிச் சூடு, பீரங்கி மற்றும் போர் விமானங்களை எப்படி கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

100 நாளை எட்டிய “ஹாங்காங் போராட்டம்”… அக்-1க்குள் முடக்கனும்…. சீனா திட்டவட்டம்…!!

ஹாங்காங்கில் நடக்கும் போராட்டங்களை தேசிய நாளான அக்டோபர் 1-ம் தேதிக்குள் முடிவுக்கு கொண்டுவர சீனா தீவிரமாக திட்டமிட்டுள்ளது.  ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டவரை சீனாவிற்கு நாடு கடத்தி விசாரிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக ஹாங்காங்கில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் சுமுகமாக சென்ற போராட்டம் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. போராட்டம் தொடங்கி 100 நாட்கள் கடந்த நிலையில் போராட்டத்தின் கவலையினால் அதனை முடிவுக்கு கொண்டு வர சீனா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

தொடரும் கனமழை…. பயணங்களை தவிர்க்கவும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

நேபாளத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலை ஏற்றம் நடைப்பயிற்சி செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் கனமழை விடாமல் பெய்து வருகிறது. இது தொடர்பாக நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மலை ஏற்றம் மற்றும் சாகச பயணங்களை மேற்கொள்பவர்கள் தங்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் மற்ற பகுதிகளைவிட மலைப்பகுதிகளில் மழையின் அளவு அதிகமாவதால் ஏற்கனவே சென்றவர்கள் பாதுகாப்பாக […]

Categories
உலக செய்திகள்

போரை சந்திப்போம்…. இனி அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை இல்லை…. ஈரான் அதிபர் அதிரடி பேச்சு…!!

இனி எந்த நிலையிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் எண்ணெய் நிலையத்தின் மீது ஈரான் தான்  தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாகவும்  தெரிவித்துள்ளது. இந்நிலையில் தங்கள் மீது அமெரிக்கா சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என ஈரான் தலைவர் கூறியுள்ளார். இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால் போரை சந்திக்க வேண்டிய தேவை ஏற்படும் என்று […]

Categories
உலக செய்திகள்

“உருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன்”…. பசிபிக் பெருங்கடலில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு ..!!

உலகின் மிகப்பெரிய பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் ஒரு புதிய வகை ஜெல்லி மீனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் நீர்மூழ்கி வாகனம் மூலம் பசிபிக் பெருங்கடலில் வாழும் ஆழ்கடல் உயிரினங்களைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியின் போது, ஒரு புதியவகை ஜெல்லிமீனை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். அது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது. மற்ற ஜெல்லி மீன்களை போல குடைபோன்று தோற்றம் இல்லாமல், பூச்சாடி போன்று தோற்றத்தை கொண்டிருந்தது. அந்த ஜெல்லி மீன் தோற்றம் கூம்பு […]

Categories
உலக செய்திகள்

ஆற்றில் மூழ்கியவரை காப்பாற்றும் குட்டி யானை… 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வைரல்..!!

தாய்லாந்தில் ஒரு சிறிய  யானைக்குட்டி ஒன்று ஆற்றில் மூழ்கியவரை ஓடிச் சென்று காப்பாற்றும் வீடியோ 3 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. தாய்லாந்து நாட்டில்  காம் லா என்ற இடத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு உயிரியல் பூங்காவில் யானைகள் சில கூட்டாக ஆற்றின் கரையோரம் நின்று கொண்டிருந்தன.   அப்போது ஒருநபர்  தண்ணீருக்குள் அடித்துச் செல்லப்படுவது போல விளையாட்டாக செல்கிறார். இதனை  கண்ட அங்கிருந்த ஒரு குட்டி யானை ஒன்று விரைந்து சென்று தண்ணீருக்குள் இறங்கி அந்த நபரை தனது துதிக்கையால் […]

Categories
உலக செய்திகள்

”அதிபரை குறிவைத்து தாக்குதல்” 24 பேர் உடல் சிதறி பலி…!!

ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப்கானியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் உடல் சிதறி பலியாகினர் ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு வருகின்ற 28_ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பர்வான் மாகாணத்தில் உள்ள சரிகார் நகரத்தில் அதிபர் அஷ்ரப் கனி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கு ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசத் தொடங்கியபோது பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றில் இருந்து சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“ஓமனில் கோர கார் விபத்து”… 8 மாத குழந்தையுடன் இந்திய தம்பதி மரணம்… உயிருக்கு போராடும் மற்றொரு குழந்தை..!!

ஓமனில் நடந்த கார் விபத்தில்  ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர், மனைவி மற்றும் அவரது 8 மாத குழந்தை உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தை உயிருக்கு போராடி வருகிறது.   ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயதான கவுசல்லா அஸ்மத்துல்லா கான் என்பவர் துபாயில் வசித்து வருகிறார். இவருக்கு ஆயிஷா என்ற 29 வயது மனைவி இருக்கிறார். இந்த ஜோடிக்கு 3  வயதில் ஹனியா என்ற மகளும், 8 மாதமான ஹம்சா கான்  என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் காரில் ஓமன் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“சவுதியில் கச்சா உற்பத்தி ஆலையில் தாக்குதல்”…. இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல், டீசல்..!!

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் இந்தியாவியில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்புள்ளது.  சவுதி அரேபியாவில் இருந்து தான் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இங்கிருந்து ஒவ்வொரு நாளும் உலகின் பிற நாடுகளுக்கு 98 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. உலகின் மொத்த எண்ணெய் வள நாடுகளில் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு அளவு சவூதி அரபியாவில் தான் நடைபெறுகிறது.  பல நாடுகள் கச்சா எண்ணெயை […]

Categories
உலக செய்திகள்

“நரகத்தில் இறக்க தயாராகுங்கள்”… பாம்பு, முதலைகளை வைத்து மோடியை மிரட்டிய பாக் பாடகி..!!

பிரதமர்  மோடியை பாம்பு மற்றும் முதலைகளை வைத்து மிரட்டிய வீடியோவை தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவேற்றிய பாகிஸ்தான் பாப் நட்சத்திரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகி  ரபி பிர்சாடா (Rabi Pirzada) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை மிரட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். , முதலை, நான்கு மலைப்பாம்புகள் மற்றும் பாம்புகள் இந்திய பிரதமருக்கு “சிறப்பு பரிசுகள்” என்று கூறி, அவருக்கு விருந்து அளிப்பதாக அவர் கூறினார். அதில் அவற்றை […]

Categories
உலக செய்திகள்

”ரூ17,60,00,000” பங்களா ஜப்தி….. சிக்கிய பாப் பாடகி….!!

வரி ஏய்ப்பில் சிக்கிய பாப் பாடகியின் ரூ.17½ கோடி மதிப்பிலான பங்களாவை ஜப்தி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி கேட்டி பிரைஸ். இவர் பாடகியாக மட்டுமின்றி  மாடல் அழகி, எழுத்தாளர் , தொழில் அதிபர் என்று பன்முக திறமைகளை கொண்டு வலம் வந்தார். கேட்டி பிரைஸ் பல்வேறு வகைகளில் வருமான சம்பாதித்த நிலையில் அதற்கான வரியை முறையாக செலுத்தவில்லை என்ற குற்றசாட்டு எழுந்தது.இது தொடர்பாக கேட்டி_யிடம் அதிகாரிகள் பலமுறை முறையிட்டும் கேட்டி பிரைஸ் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.  இதையடுத்து பூதாகரமாக […]

Categories
உலக செய்திகள்

9.11… 9.11…. 9.11… ”நாள் , நேரம் , எடை” அமெரிக்காவில் பிறந்த அபூர்வ குழந்தை….!!

அமெரிக்காவில் 9.11_ஆம் தேதி 9.11 மணிக்கு 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையுடன் குழந்தை பிறந்தது அனைவரையும் வியப்படையவைத்துள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு 11_ஆம் தேதி செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான வாஷிங்டன் பென்டகன்  , நியூயார்க் உலக வர்த்தக மைய  இரட்டை கோபுர கட்டிடத்தின் மீது பயங்கரவாதி பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோத செய்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 3,000க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அதிபயங்கர கொடூர தாக்குதலாக பார்க்கப்பட்ட இந்த துயரம் உலக நாடுகளையே உலுக்கியது. […]

Categories
உலக செய்திகள்

ரூ8,88,00,000 ”தங்க டாய்லெட்” தூக்கிய திருடர்கள்…..!!

பிரிட்டனில் தங்க டாய்லெட்_டை திருடர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் பத்தும் செய்யும் , பணம் என்றால் பிணம் கூட வையை திறக்கும் என்பார்கள். அதே போல பணத்துக்காக டாய்லெட்-டை திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் திருடு போனது சாதாரண  டாய்லெட் அல்ல. தங்கத்தால் செய்த  டாய்லெட். இதோட மதிப்பு ரூபாய் 8 கோடியே 88 லட்சமாகும். பிரிட்டன் நாட்டின் முன்னாள் வின்ஸ்டன் பிறந்த பிளென் ஹெய்ம் மாளிகையில் வைப்பதற்காக இத்தாலிய கலைஞரால் வடிவமைக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

BREAKING : ”பின்லேடன் மகனை முடித்து விட்டோம்” ட்ரம்ப் உறுதி….!!

ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதிபட தெரிவித்துள்ளனர்.  ஒசாமா பின்லேடனை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் பின்லேடன் பிரபல பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் தலைவனாவான். பின்லேடன் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாத செயலில் ஈடுபட்டு அட்டூழியம் செய்து வந்துள்ளான். இதையடுத்து அமெரிக்க கடற்படை கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானின் அபோடாபாத்தில் வைத்து அவரை சுட்டுக் கொன்றது. இதையடுத்து அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு முடிந்துவிட்டது என்று நினைக்க அவரது மகன் […]

Categories
உலக செய்திகள்

சுட்டுராதீங்க….. ”வெள்ளைக்கொடி காட்டிட்டோம்”….. கதறிய பாகிஸ்தான்….!!

இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட பாகிஸ்தான் இராணுவ வீரர்களின் உடலை அந்நாட்டு இராணுவம் வெள்ளைக்கொடி காட்டி மீட்டுச் சென்றனர். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட பிறகு இந்தியா மீது பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்து , இந்திய நாட்டுக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவை பெற முயற்சித்த பாகிஸ்தானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் இந்திய நாட்டின் அமைதியை சீர்குலைக்க பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்து வருகின்றது. இதை தொடர்ந்து இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை […]

Categories
உலக செய்திகள்

நார்வேயில் பயங்கர விபத்து…. சோதனையில் 400 ஹெலிகாப்டர்கள்…. ஏர்பஸ் நிறுவனம் அதிரடி…!!

ஏர்பஸ் நிறுவனம் விபத்தை  தவிர்க்க 400 ஹெலிகாப்டர்களை தரவரிசை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது. நார்வேயில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஏர்பஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து உடனடியாக 400 ஹெலிகாப்டர்களை தர பரிசோதனை செய்ய ஏர்பஸ் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எஞ்சினிற்கும் மின் உற்பத்திக்கும் இடையேயான பகுதிகளை ஆராயுமாறு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஏர்பஸ் நிறுவனம் உத்தரவிட்டு இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் டெலிவரி செய்யப்பட்ட 125 s29 உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

40டன் வெடிகுண்டு…. விமான படை தாக்குதல்… ஈராக்கில் பரபரப்பு…!!

ஈராக்கை ஒட்டியுள்ள பகுதியில் பதுங்கியிருந்த ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க விமானங்கள் 40 டன் அளவிற்கு குண்டுகளை வீசி தாக்கியுள்ளது. மத்திய ஈராக்கில் உள்ள டைகிரிஸ் நதியின்  நடுப்பகுதியில் கானஸ் என்ற தீவு பகுதி உள்ளது. அப்பகுதியில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் பதுங்கியிருப்பதாக அமெரிக்காவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த நவீன ரக அமெரிக்க போர் விமானங்கள் டைக்ரீஸ் நதியின் குறிப்பிட்ட பகுதியில் 40 டன் அளவிற்கு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். […]

Categories

Tech |