Categories
உலக செய்திகள்

இது தான் கடைசி……. இனி ஜம்மு காஷ்மீர் பற்றி விவாதிக்க மாட்டோம்……. ஐ.நா சபை அதிரடி…..!!

ஐநா பாதுகாப்பு கவுன்சில் மாதாந்திரக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க பட மாட்டாது என்று தற்காலிக  பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான கிரியாஸ் தெரிவித்துள்ளார். பிரிட்டன் தூதரான கிரியாஸ் நவம்பர் மாதத்திற்கான தற்காலிக பாதுகாப்பு கவுன்சிலிங் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பற்றி விவாதம் ஏதும் நடைபெறாது என்று தெரிவித்த  அவர், ஜம்மு விவகாரத்தை ஏற்கனவே விவாதித்து விட்டதாகவும், அது தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீண்டும் கவலைக்கிடம்…!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு ரத்த தட்டணுக்கள் குறைபாடு உள்ளது. இதனால் அவர் கடந்த மாதம் (அக்டோபர்) 22ஆம் தேதி, லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவரது குடும்ப மருத்துவர்களும் இத்தகவலை தெரிவித்திருந்தனர். […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய பாகிஸ்தானியர்கள்….!!

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானியர்கள் அந்நாட்டு முக்கிய நகரங்களில் பேரணி நடத்தினர். காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்ததன் மூலம் நீக்கியது. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றன. போக்குவரத்து, வர்த்தகம் ஆகியவற்றை பாகிஸ்தான் முடக்கிக்கொண்டது. இந்நிலையில் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் போன்ற […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்தியா வருகிறார் இளவரசர் சார்லஸ்.!!

இளவரசர் சார்லஸ் இரண்டே ஆண்டுகளில் 2-ஆவது முறையாக அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.  பிரிட்டிஷ் அரியணையின் வாரிசான இளவரசர் சார்லஸ் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும், இந்த பயணம் நிலையான சந்தைகள், காலநிலை மாற்றம் மற்றும் சமூக நிதி ஆகியவற்றை மையமாகக் கொண்டது எனவும் அவரது அலுவலகம் தற்போது தெரிவித்துள்ளது. 70 வயதான இளவரசர் சார்லஸ் நவம்பர் 13ஆம் தேதி புதன்கிழமை இரண்டு நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார். இது சார்லஸின் 10ஆவது […]

Categories
உலக செய்திகள்

அணு ஆயுத ஒழிப்புப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குக!’ – அமெரிக்காவுக்கு வட கொரியா அழுத்தம்

தடைபட்டிருக்கும் அணு ஆயுத ஒழிப்புப் பேச்சுவார்த்தையை அமெரிக்கா மீண்டும் தொடங்க வேண்டும் என்று வட கொரியா அழுத்தம் கொடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் – வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோரிடையே ஏற்பட்ட நல்லுறவை அடுத்து, அணு ஆயுத ஒழிப்புப் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளும் ஈடுபட்டனர். இரு நாடுகளுக்கும் பொதுவான ஒரு இடமாகத் தேர்வு செய்யப்பட்ட ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. தொடக்கத்தில் சுமுகமாக நடைபெற்றுவந்த […]

Categories
உலக செய்திகள்

ஐஎஸ் தலைவர் அபு பக்கர் கொலை? ட்ரம்ப் ட்வீட்டால் சர்ச்சை …!!

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்கரை அமெரிக்க சிறப்புப் படை கொலை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் வசிக்கும் பூர்வக்குடி குர்து மக்களை ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்கிவருகின்றனர். இதையடுத்து, அந்நாட்டு அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவர்களை அழிக்கும் நோக்கில் குர்து கிளர்ச்சியாளர்களோடு கைகோர்த்து அமெரிக்கப் படை களமிறங்கியது. சிரியாவில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பல லட்சம் மக்கள் அந்நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் அந்த இயக்கத்தின் தலைவரான அபு […]

Categories
உலக செய்திகள்

”நாயைப் போல் சுட்டுக் கொன்றோம்” – ட்ரம்ப் ஆவேசம் …!!

 ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்கரை நாயைப் போன்று சுட்டுக் கொன்றோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளர். சிரியாவில் வசிக்கும் பூர்வக்குடி குர்து மக்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்கிவருகின்றனர். இதையடுத்து, அந்நாட்டு அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவர்களை அழிக்கும் நோக்கில் குர்து கிளர்ச்சியாளர்களோடு கைகோர்த்து அமெரிக்கப் படை களமிறங்கியது. சிரியாவில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பல லட்சம் மக்கள் அந்நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் அந்த இயக்கத்தின் தலைவரான […]

Categories
உலக செய்திகள்

ஐபோன்ல பட்டன் எங்கய்யா? – ட்ரம்ப் புலம்பல் …..!!

தான் பயன்படுத்தும் ஐபோனில் ஹோம் பட்டன் இல்லாதது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது அதிருப்பதியை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “டிம் (ஆப்பிள் சிஇஓ), தற்போதுள்ள ஸ்வைப்பை-விட ஐபோனின் பழைய பட்டன் முறை எவ்வளவோ மேல்” என்று ட்வீட் செய்துள்ளது. தற்போது வெளியாகும் ஸ்மார்ட்ஃபோன்கள் அனைத்தும் Full Screen மாடலாக வெளியாவதால் முன்பிருந்த பட்டன்கள் அனைத்தும் நீக்கப்பட்டன. பழைய ஐபோன் மாடல்களில் Home என்ற ஒரு பட்டன் இருக்கும், இந்த பட்டன் […]

Categories
உலக செய்திகள்

”தீபாளிக்கு முற்றுகை போராட்டம்” இந்தியத் தூதரகத்துக்கு பாதுகாப்பு …!!

இந்தியத் தூதரகத்தைப் பாதுகாக்க அனைத்துவித நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என இங்கிலாந்து காவல் துறை உறுதியளித்துள்ளது. காஷ்மீர் பிரச்னையை எழுப்பி பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகள் தீபாவளி நாளில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.இது குறித்து தகவலறிந்த ’ஸ்காட்லாந்து யார்டு’ காவல் துறையினர் இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். போராட்டக்காரர்கள் பேரணியாக வரும் பாதைகளில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன என்றும் பத்திரிகையாளர்களுக்கும் இந்தப் பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் லண்டன் காவல் துறை […]

Categories
உலக செய்திகள்

ஈராக் அரசைக் கண்டித்து போராட்டம் : வன்முறையால் 21பேர் பலி ….!!

ஈராக்கில் அரசைக் கவிழ்க்க நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தடியடி நடத்தி கண்ணீர் குண்டுகளை வீசி காவல்துறையினர் போராட்டத்தைக் கலைத்தனர். ஈராக்கில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது பெரும் வன்முறை வெடித்தது. இதில் 21 பேர் உயிரிழந்தனர். 1700க்கும் அதிகமனோர் படுகாயம் அடைந்தனர்.ஈராக்கில் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து கடந்த மூன்று வார காலமாக அரசுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் பாக்தாத் தெருக்களில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். வேலைவாய்ப்பின்மை, ஊழலுக்கு உள்ளிட்டவற்றுக்கு எதிராக […]

Categories
உலக செய்திகள்

கடும் வறட்சியால் யானைகளை விற்கும் ‘ஜிம்பாப்வே’

கடும் வறட்சியால் 55 யானைகள் உயிரிழந்ததையடுத்து ஜிம்பாப்வே அரசு, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 30க்கும் மேற்பட்ட யானைகளை விற்பனை செய்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கடுமையாக பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் அந்த நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி தலைவிரித்தாடுகிறது. அந்த நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் உணவின்றி தவித்து வருகின்றனர்.அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பஞ்சம், விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. கடந்த இரண்டு மாதங்களில் அங்கு 55 யானைகள் பட்டினியால் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் […]

Categories
உலக செய்திகள்

வெள்ளை மாளிகையில் தீபம் ஏற்றிய ட்ரம்ப்…. இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து.!!

தீபாவளி பண்டிகையையொட்டி அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும்விதமாக வெள்ளை மாளிகையில் தீபத்தை ஏற்றிவைத்த அதிபர் ட்ரம்ப், தீபாவளி திருநாளை அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துக் கூறியுள்ளார். இதையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “அமெரிக்கா முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது நமது நாட்டின் மிக முக்கியக் கொள்கையான மத சுதந்திரத்தை பேணும்வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் தீபாவளி கொண்டாடும் காலம் மிகவும் […]

Categories
உலக செய்திகள்

ரூ 7,00,00,000-க்கு கார் பார்க்கிங் விற்பனை…. அதிர்ச்சியில் ஆழ்த்திய தொழிலதிபர்..!!

பிரபல தொழிலதிபர் தனக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடத்தினை ரூ. 7 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். உலகளவில் மக்கள் மத்தியில் வீடு, நிலம் வாங்குவதில் பெரும் போட்டி நிலவுகிறது. அதன் விளைவுதான் ஹாங்காங்கில் யாரும் நினைத்துக்கூடப் பார்க்காத சம்பவம் அரங்கேறியுள்ளது. தொழிலதிபர் ஜானி சியுங் ஷுன் யீ (Johnny Cheung Shun-yee) தனக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடம் இடத்தினை ரூ.7 கோடிக்கு விற்பனை செய்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஹாங்காங்கில் மிக விலை உயர்ந்த 79 அடுக்குமாடிக் கட்டடமான […]

Categories
உலக செய்திகள்

இது என்னப்பா புதுசா இருக்கு… “உடம்பில் தானாக சுரக்கும் ‘பீர்’… அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!!

விசித்திர நோயால் ஒருவருக்குத் தானாக உடம்பில் பீர் சுரப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவின் வடக்கு கோரலினா பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த வழியே வந்த நபரைச் சோதனை செய்யும்போது குடித்துவிட்டு வண்டி ஓட்டிய காரணத்துக்காகக் கைது செய்துள்ளனர். ஆனால் அவர் நான் குடிக்கவில்லை எனத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் கூறுகையில்,”அந்த நபரின் ரத்தத்தில் மதுவின் அளவு […]

Categories
உலக செய்திகள்

என்ன இது புதுசா இருக்கு… வாடிக்கையாளரை கவர இப்படியா… நாயை பாண்டாவாக மாற்றிய உரிமையாளர்..!!

வாடிக்கையாளர்களைக் கவருவதற்கு நாய்க்கு டை அடித்து பாண்டாவாக மாற்றியுள்ள உணவு விடுதி உரிமையாளர். சீனாவில் உள்ள ஷிங்ட் (chengdu) பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது தீ க்யூட் பெட் கேம்ஸ் கபே (The Cute Pet Games café) உணவு விடுதி. இதன் உரிமையாளர், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு சொந்தமான ஆறு செள செள நாய்களுக்கு (Chow chow dogs) டை அடித்து சீனாவின் தேசிய விலங்கான பாண்டா கரடிகள் போல் மாற்றி […]

Categories
உலக செய்திகள்

கண்டெய்னரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 39 பேரும் சீனர்கள்..!!

பிரிட்டனில் லாரி கண்டெய்னரிலிருந்து புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்ட 39 பேரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டின் எஸ்ஸெக்ஸ் பகுதியில், குளிரூட்டப்பட்ட லாரி கண்டெய்னரில் இருந்து கடந்த 23ஆம் தேதி (புதன் கிழமை) சடலமாக  39 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் இங்கிலாந்தையே அதிர வைத்தது. சடலமாக மீட்கப்பட்ட 39 பேரும்  சீனாவிலிருந்து வந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களில் 8 பேர் பெண்கள் ஆவர். அந்த கண்டெய்னருக்குள் உறைநிலைக்கும் 25 டிகிரி […]

Categories
உலக செய்திகள் வைரல்

இப்படி ஒரு பயணமா ? ”அசத்தலான பூசணி சவாரி” வைரலாகும் வீடியோ ….!!

அமெரிக்காவில் பூசணிக்காய்யை பயன்படுத்தி படகு சவாரி செய்தது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் எதாவது ஒரு சம்பவம் வினோதமாக மாறி சமூக வலைத்தளம் மூலம் வைரலாகி வருவதை நாம் பார்த்துள்ளோம். அந்தவகையில் தற்போது சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளது ஒரு வீடியோ. அமெரிக்க நாட்டின் கிளெவ்லேண்ட் (Cleveland) பகுதியை சார்ந்தவர் ஜஸ்டின். இவர் கடந்த 4 ஆண்டுகளாக பெரிய அளவிலான பூசணிக்காய் ஒன்றை வளர்க்க வேண்டும் தொடர்ந்து முயற்சி செய்து , இறுதியில் அதில் வெற்றியும் பெற்றார். அவரின் நீண்டகால […]

Categories
உலக செய்திகள்

ஏமன் உள்நாட்டுப் போர்…. 5,000 சிறுவர்கள் உடல் சிதறி பலி… ஆய்வில் அதிர்ச்சி..!!

ஏமன் உள்நாட்டுப் போரின் காரணமாக தற்போதுவரை 5,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக யூனிசெஃப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏமன் அரசிற்கும் அந்நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015-ஆம் ஆண்டில் இருந்து உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. அதன் விளைவாக இதுவரை 5000-த்திக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல்  5,00,000 – த்திற்கும் அதிகமான சிறுவர்கள் பள்ளிகளில் இருந்து இடைநிற்றல் செய்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) தனது ஆய்வறிக்கையில் […]

Categories
உலக செய்திகள்

412 கிலோ எடை கொண்ட பூசணிக்காய்….. படகு சவாரி செய்து அசத்திய விவசாயி.!!

தோட்டத்தில் வளர்ந்த பெரிய பூசணிக்காயை படகாக மாற்றி சவாரி செய்து அசத்தியுள்ளார் விவசாயி ஒருவர். அமெரிக்காவின் கிளெவ்லேண்ட் (Cleveland) பகுதியில் வசித்துவருகிறார் ஜஸ்டின். இவர் கடந்த நான்காண்டாகப் பெரிய அளவில் பூசணிக்காய் வளர்க்க வேண்டும் என முயற்சி செய்துவந்துள்ளார். அவரது ஆசை போலவே இந்தாண்டு தோட்டத்தில் வளர்ந்துள்ள பெரிய பூசணிக்காயின் எடை 412 கிலோ இருந்துள்ளதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். பூசணிக்காயை வைத்து வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என யோசித்த ஜஸ்டினுக்கு புதிய சிந்தனை உதித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

முதலில் பாம்பு… இப்போ உடல் முழுக்க வெடிகுண்டுகள்… மோடியை மீண்டும் மிரட்டும் பாக் பாடகி..!!

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான்  சேர்ந்த பாடகி ஒருவர் உடலில் மனித வெடிகுண்டை கட்டிக் கொண்டு மிரட்டல் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் பாடகியான ரபி பிர்ஜடா ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உடலில் டைமர் எனப்படும் கடிகாரத்துடன் கூடிய மனித வெடிகுண்டை கட்டிக்கொண்டு இடுப்பில் கை வைத்தபடி உள்ளார். அந்த பதிவில் ‘மோடி ஹிட்லர், காஷ்மீரின் மகளாக நான் […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மன் அதிபர் வரும் 31 ஆம் தேதி இந்தியா வருகிறார்..!!

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மோர்கல் வரும் 31 ஆம் தேதி இந்தியா வருகிறார். ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மோர்கல் வரும் 31-ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 2-ஆம் தேதி வரை அவர் இந்தியாவில் தங்கயிருக்கிறார். இந்த தகவலை இருநாட்டு தலைவர்களும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நியூயார்கில் ஐநா பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மோர்கலை சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில் இரு […]

Categories
உலக செய்திகள்

குழந்தையை உற்சாகப்படுத்திய போராட்டக்காரர்கள்….!!

லெபனான் நாட்டில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் குழந்தையை உற்சாகப்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டில் அரசியல் தலைவர்கள் ஊழலில் மிகுந்து விட்டதாக அவர்களை எதிர்த்து பொதுமக்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தனது 15 மாதக் குழந்தையுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த எலியானே ஜாபுவாரின் காரை போராட்டாகர்கள் சூழ்ந்விட்டார்கள். தனது காரில் உள்ள குழந்தை பயந்துவிட்டதாக எலியானே கூறிய மறுகணமே அவர்கள் குழந்தைகளுக்குப் பிடித்த பாடலான ‘பேபி ஷார்க்’ பாடலை […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…. கண்டெய்னரில் பிண குவியல்…. லண்டனை அதிர வைத்த சம்பவம்..!!

தென்கிழக்கு இங்கிலாந்தில் எஸ்ஸெக்ஸ் பகுதியில் கண்டெய்னர் லாரியில் இருந்து 39 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள போலீசார், பல்கேரியாவிலிருந்து வந்த கண்டெய்னர் லாரியில் இருந்து 39 சடலங்களை மீட்டுள்ளனர். இதுகுறித்து தலைமை கண்காணிப்பாளர் ஆண்ட்ரூ மரைனர் கூறும்போது, 38 பெரியவர்களையும், ஒரு இளைஞனையும் அடையாளம் காண அதிகாரிகள் முயற்சித்து வருவதாக  இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். மேலும் அக்டோபர் 19 -ஆம் தேதி லாரி நாட்டிற்குள் நுழைந்தது என்றும், “விசாரணைக்கு எங்கள் கூட்டாளர்களுடன் போலீசார் நெருக்கமாக பணியாற்றி வருகிறார்கள்” […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான் நாட்டின் புதிய மன்னராக கோடாய்ஷி நருஹிதோ..!!

ஜப்பான் நாட்டின் புதிய மன்னராக கோடாய்ஷி நருஹிதோ சினோ (Kotaishi Naruhito Shinno) முடி சூடிக் கொண்டார். ஜப்பான் நாட்டின் மன்னராக இருந்தவர் அகிஹிதோ (Akihito). 85 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக தன் மன்னர் பதவியை துறந்தார். இதனைத் தொடர்ந்து இவரின் இளைய மகனான கோடாய்ஷி நருஹிதோ சினோ புதிய மன்னராக முடி சூடி கொண்டார். ஜப்பானில் மன்னர்கள் இறக்கும் வரை அந்த பதவியில் இருப்பது வழக்கம். ஆனால், அகிஹிதோவின் வயது மூப்பை காரணம் காட்டி […]

Categories
உலக செய்திகள் குழந்தை வளர்ப்பு மருத்துவம் மாநில செய்திகள் லைப் ஸ்டைல்

அதிர்ச்சி ”பிஞ்சு குழந்தை”! …உயிரை குடிக்கும் நெஸ்லே….!! ஆய்வில் உறுதி ……

நான் எக்சல்லோ ப்ரோ பால் பவுடர் சட்ட விதிப்படி முற்றிலும் பாதுகாப்பானது என்கிறது நெஸ்லே நிறுவனம். பாதிக்கப்பட்ட நபரின் 6 மாத குழந்தைக்கு தாய் பாலுக்கு பதிலாக மருத்துவர் பரிந்துரை செய்த நெஸ்லே நிறுவனத்தின் நெஸ்லே நான்  ப்ரோ பால் பவுடர் குழந்தைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொடுக்க துவக்கத்திலிருந்தே குழந்தைக்கு தொடர்ந்து வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. பால் பவுடரின் தரத்தில் சந்தேகமடைந்த தந்தை சம்பந்தப்பட்ட பால்பவுடர் நிறுவனத்தை அணுகி உள்ளார்.அவர்களும் வீட்டிற்கே வந்து ஆய்வு நடத்திவிட்டு உங்களுக்கு அறிக்கை தருகின்றோம் என்று […]

Categories
உலக செய்திகள்

கிலோ ஒன்றுக்கு சுமார் ரூ. 4,30,000…. கின்னஸ் சாதனையில் புதிய வகை சாக்லேட்..!!

ஐ.டி.சியின் ஃபேபெல் எக்ஸ்கிசைட் சாக்லேட் வகை ( Fabelle Exquisite Chocolate brand) தற்போது ‘டிரினிட்டி – ட்ரஃபிள்ஸ் எக்ஸ்ட்ராஆர்டினெய்னர்’ (‘Trinity – Truffles Extraordinaire’) என்ற புதிய வகை சாக்லேட்டை தயாரித்து கின்னஸ் சாதனைக்கு வித்திட்டுள்ளது. மிச்செலின் ஸ்டார் செஃப் பிலிப் கான்டிசினி, ஃபேபெல்லின் மாஸ்டர் சாக்லேட்டியர் இணைந்து ‘டிரினிட்டி – ட்ரஃபிள்ஸ் எக்ஸ்ட்ராஆர்டைனெய்ர்’ என்ற புது வகையான சாக்லெட்டை தயாரித்துள்ளது. அந்த சாக்லேட்டின் விலை கிலோ ஒன்றுக்கு சுமார் ரூ. 4.3 லட்சம் என்று […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் டெக்னாலஜி விளையாட்டு

தோனி, சச்சின் மிகவும் ஆபத்தான பிரபலங்கள்….!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஆகியோரது பெயர்கள் மிகவும் ஆபத்தான பிரபலங்களின் பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளன. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன் உபயோகித்துவருகின்றனர். இதனால் அவர்கள் அதிகமான நேரங்களில் இணையத்திலேயே தங்கள் பொழுதையும் கழிக்கின்றனர். அதிலும் சில வலைதளங்களில் தங்களுக்குப் பிடித்த பிரபலங்களின் நிகழ்ச்சிகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் பார்க்கவும் செய்கின்றனர்.இப்படியான நிகழ்ச்சிகளை காண்பதற்கு ஒரு சில நிறுவனங்கள் கட்டணங்கள் விதிக்கின்றன. ஆனால் கட்டணம் செலுத்தாமல் இந்த நிகழ்வுகளை இலவசமாக பார்க்க […]

Categories
உலக செய்திகள்

உலகுக்கே எச்சரிக்கை …. பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக மாறும் ட்ரோன்கள்…..!!

ட்ரோன்களை பயன்படுத்துவதில் உலக நாடுகள் முனைப்புக் காட்டிவரும் நிலையில், பல நாடுகளின் பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால், அதனை பயன்படுத்த கடும் விதிகள் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ட்ரோன்கள் என்னும் ஆளில்லா விமானத்தின் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், பல நாடுகளின் பாதுகாப்புக்கும் அது அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய்க் கிணறுகளில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதேபோல், பாகிஸ்தானுக்குச் சொந்தமான ட்ரோன்கள் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் மைனாரிட்டி ஆட்சியை அமைத்த ஜஸ்டின் ட்ரூடோ….!!

கனடாவில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. 338 இடங்களைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்துக்கு நேற்று (அக்டோபர் 21) பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்தப் பொதுத்தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றிபெறுவது கடினம் என்றே கருத்துக்கணிப்புகள் கூறின. வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து மாலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அந்நாட்டின் தேர்தல் ஆணைய தளத்தில் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து குறைவான வாக்கு […]

Categories
உலக செய்திகள்

”பாலத்திற்கு கீழ் சொருகிய விமானம்” வைரலாகும் வீடியோ ….!!

சீனா_வில் உள்ள பாலத்தின் கீழ் விமான சிக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. சீனாவில் விமானத்தின் பாகத்தை பெரிய அளவிலான, நீளமான ட்ரக்கில் வைத்து எடுத்துச் செல்லும் பொது அந்த சாலையில் இருந்த பாலத்தின் கீழ் பகுதி வழியாக சென்றுவிடலாம் என நினைத்த ட்ரக் ஓட்டுநர் பாலத்திற்கு கீழே செல்லும் வகையில் ட்ரக்கை இயக்கியுள்ளார். ஆனால் அந்த பாலம் எவ்வளவு பெரிய விமான பாகத்தை கொண்டு செல்ல முடியாத நிலையில் பாலத்திற்கு நடுவே ட்ரக்  […]

Categories
உலக செய்திகள்

முதல்ல 2…. போக போக வாரத்திற்கு 4…. பயம் காட்டிய 300 எலிகள்…. அரண்டு போன பெண்..!!

 300 எலிகளுடன் ஒரே வேனில் பல மாதங்களாகத் தங்கியிருந்த பெண்ணுக்குப் பயத்தைக் காட்டிய எலிகள்.  சான் டியாகோ பகுதியில் வசித்து வருபவர் கர்லா. இவர் தனக்குச் சொந்தமான வேனில் 300-க்கும் மேற்பட்ட எலிகளை வளர்த்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக். 8-ஆம் தேதி சான் டியாகோ ஹ்யுமேன் சங்கத்திற்கு (San Diego Humane Society) கர்லாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் கர்லா தன்னிடமுள்ள எலிகளை அடக்கமுடியவில்லை.. என்னைக் காப்பாற்றுங்கள் எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

”இந்தியாவுடன் தபால் சேவை கிடையாது” பாக் முடிவு ….. இந்தியா கண்டனம் …!!

இந்தியாவுடனான தபால் சேவையை எந்தவித முன்னறிவிப்புமின்றி பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட எந்த தபால்களையும் அந்நாடு ஏற்கவில்லை. இந்தியாவிலிருந்து வரும் தபால்களையும், இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய தபால்களையும் அந்நாடு நிறுத்தி வைத்ததையடுத்து, இந்திய தபால் துறை அலுவலர்களும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டிய தபால்களை நிறுத்தி வைத்துள்ளனர். இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

பொய் சொல்லாதீங்க…. ”நிரூபித்துக் காட்டுங்கள்” …. சவால் விடும் பாகிஸ்தான் …!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இருந்த பயங்கரவாத முகாம்களை அழித்ததை, இந்தியா நிரூபிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், இந்திய ராணுவத்தினரைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினர் அக்டோபர் 10ஆம் தேதி மாலை தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் இந்திய வீரர்கள் இருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர்.இதையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி அருகில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகளைக் குறிவைத்தும், தங்கதார் செக்டாருக்கு எதிர்ப்புறமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு […]

Categories
உலக செய்திகள்

நடுராத்திரி ”3 வயது குழந்தையுடன் உறங்கிய பேய்” கேமரா பதிவால் அதிர்ச்சி …!!

இரவு தூங்கிக்கொண்டிருந்த மகன் அருகில் குழந்தை உருவம் இருந்ததைக் கண்டு தாய் அதிர்ச்சியடைந்தார். உலகில் தொழில்நுட்பத்தால் பல்வேறு குறும்புத்தனமான நிகழ்வுகள் நடைபெறுகிறது. அதே போலவே, மரிட்சா (Maritza) என்ற பெண்ணுக்குத் தொழில்நுட்பத்தால் இரவு துக்கமே பறிபோகியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.மரிட்சா என்பவர் தனது மூன்று வயது மகனை இரவு நேரத்தில் கண்காணிக்க தனியாக கேமரா பொறுத்தியிருந்தார். தினமும் கேமராவை கண்காணிக்கும் மரிட்சாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கேமரா திரையில் தனது மகன் அருகில் குழந்தை […]

Categories
உலக செய்திகள்

கேட்டலோன் மக்கள் போலீசார் மீது குப்பை வீசி போராட்டம்..!!

கேட்டலோனிய மக்கள் தங்கள் கைகளில் கிடைக்கும் குப்பைகளைக் காவல் துறையினர் அமைத்து வைத்திருந்த தடுப்புகளுக்கு வெளியே வீசி, அரசாங்கத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். ஸ்பெயின் நாட்டில் உள்ள கேட்டலோனியா மாகாணத்தை தனிநாடாக அறிவிக்கக் கோரி அங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் கேட்டலான்களின் இந்தக் கோரிக்கைக்கு ஸ்பெயின் அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில், 2017ஆம் ஆண்டு கேட்டலோனியாவை தனிநாடாக அறிவிப்பது தொடர்பாக அம்மாகாண அரசு பொது வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் 90 சதவிகித கேட்டலோன் […]

Categories
உலக செய்திகள்

முறியடிக்க வாய்ப்பு… இடைநிறுத்தம் இல்லாமல் பயணம்…. ஆஸி.,விமான நிறுவனம் புதிய முயற்சி..!!

உலகிலேயே மிக நீண்ட விமான பயண சேவையை ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் நிறுவனம் சோதனை செய்துள்ளது. விமானச் சேவையைப் பயன்படுத்தும் பலரும் இடைநிறுத்தம் இல்லாத பயணத்தையே விரும்புவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. இதனால் சக்திவாய்ந்த சிறிய விமானங்களை கொண்டு நீண்ட தூர விமானச் சேவையை வழங்க பல்வேறு நிறுவனங்களும் முன்வந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் நிறுவனம் அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்திலிருந்து இடைநிறுத்தம் இல்லாமல் சிட்னி வரை தனது சேவையைத் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அதற்கான சோதனை கடந்த வாரம் வெற்றிகரமாக […]

Categories
உலக செய்திகள்

“ஜி7 மாநாடு சொந்த விடுதியில் நடக்காது”…. அதிபர் ட்ரம்ப் உறுதி..!!

ஜி7 மாநாடு தனக்கு சொந்தமான விடுதியில் நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு ஜூன் 10 – 12ஆம் தேதி வரை ஜி7 உச்சி மாநாடு அமெரிக்காவில் நடக்கவுள்ளது. புகழ்பெற்ற இந்த மாநாடு நடத்தப்படும் இடங்களைத் தேர்வுசெய்யும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த மாநாடு அமெரிக்க ட்ரம்புக்கு சொந்தமான ‘ட்ரம்ப் தேசிய டோரல் மியாமி’ விடுதியில் நடைபெறும் என்று கடந்த வியாழக்கிழமை அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. […]

Categories
உலக செய்திகள்

லெபனானில் அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம்… 4 எம்.பி.க்கள் பதவி விலகல்..!!

லெபனானில் அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கூட்டணி அரசைச் சேர்ந்த 4எம்.பி.க்கள் பதவி விலகியுள்ளனர். மத்திய கிழக்கு நாடான லெபனானில் பெருகி வரும் விலைவாசி உயர்வு, ஊழல் உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி அரசாங்கத்துக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அந்நாட்டில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்சியமைத்து ஒரு வருடம் கூட ஆகாத பிரதமர் சாத் ஹரிரி தலைமையிலான கூட்டணி, அரசைக் கலைக்க வேண்டும் என்பதே போராட்டக்கார்களின் கோரிக்கையாகவுள்ளது. இதனிடையே, இந்த பிரச்னைக்கு […]

Categories
உலக செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு… பச்சை நிறத்தில் நாய்குட்டி… வைரலாகும் புகைப்படங்கள்.!!

நாய் ஒன்று பச்சை நிறத்தில் குட்டி போட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. கொலராடோ நாட்டில் வசித்துவருபவர் கேடி வில்லியம்ஸ். இவர் அமி என்று அழைக்கப்படும் மூன்று வயது நாய் ஒன்றை வளர்த்துவந்தார். அமி நாய் கிரேட் டேன் வகையைச் சேர்ந்தது. சில நாள்களுக்கு முன்பு எமி நாய் ஒன்பது குட்டிகளைப் போட்டுள்ளது. அதில் ஒரு நாய்க்குட்டி மட்டும் பச்சை நிறத்தில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் வில்லியம்ஸ். இது குறித்து அவர் கூறுகையில், “முதலில் அந்த […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா… இவ்வளவு நீளமா?… கின்னஸ் சாதனையில் பக்கில்ஹெட் மாடு..!!

உலகளவில் நீளமான கொம்புள்ள மாட்டின் பட்டியலில் பக்கில்ஹெட் (Bucklehead) முதலிடத்தைப் பிடித்துள்ளது. டெக்சாஸ் பகுதியில்  14 வயதுள்ள மார்செலா கோன்சலஸ் (Marceala Gonzalez) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாகப் பக்கில்ஹெட் மாடு ஒன்று இருக்கிறது. இந்த  மாட்டினுடைய கொம்பின் நீளம் 11 – அடியும், அகலம் 1.8 அங்குலம் இருக்கும் என அளவிடப்பட்டுள்ளது. கடந்த அக். 4-ஆம் தேதி ஒக்லஹோமாவில் நடைபெற்ற ஹார்ன் ஷோகேஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பக்கில்ஹெட் மாடு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும் ஆபத்து …. ”புற்றுநோய் உறுதி”….. ஒத்துக்கொண்ட நிறுவனம் …!!

ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதை அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு மையம் கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட 103 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மருந்து பொருட்கள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகளை வழங்கி வருகிறது. ஆனால் குழந்தைகளுக்கான சோப்பு , ஷாம்பு , பவுடர் , லோசன் உள்ளிட்ட தயாரிப்புகள் தான் உலக அளவில் இந்நிறுவனத்திற்கு பெயர் பெற்றுத் தந்தது. அதேநேரம் இந்த […]

Categories
உலக செய்திகள்

5,00,000 கேட்டலோன் மக்கள் போராட்டம்…. ஸ்தம்பித்துப் போன பார்சிலோனா..!!

கேட்லோனியா தலைவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக நேற்று கேட்டலோனியா மக்கள் நடத்திய போராட்டத்தால் பார்சிலோனா நகரமே ஸ்தம்பித்துப் போனது. ஸ்பெயின் நாட்டில் உள்ள கேட்டலோனியா மாகாணத்தை தனிநாடாக அறிவிக்கக் கோரி அங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் கேட்டலான்களின் இந்தக் கோரிக்கைக்கு ஸ்பெயின் அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில், 2017ஆம் ஆண்டு கேட்டலோனியாவை தனிநாடாக அறிவிப்பது தொடர்பாக அம்மாகாண அரசு பொது வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் 90 சதவிகித கேட்டலோன் மக்கள், தனிநாட்டுக்கு ஆதரவாக […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

27 ஆண்டுகள் இல்லாத வீழ்ச்சியில் சீனா…!!

சீன மொத்த உள்நாட்டு உற்பத்தி Q2 காலாண்டு முடிவில் 6.2 விழுக்காடாக இருந்ததில் இருந்து Q3 காலாண்டில் 6 விழுக்காடாக சரிந்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனா கடந்த 27 ஆண்டுகள் கண்டிராத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்கா-சீனா இடையே நீண்ட நாட்களாக நடந்த வர்த்தகப் போர் காரணமாக சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சரிந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்க அரசு வரி உயர்வு செய்ததால் ஒப்பந்தம் செய்த […]

Categories
உலக செய்திகள்

“துளசி கபார்ட் ஒரு ரஷ்ய கைக்கூலி”… ஹிலாரி கிளின்டன் குற்றச்சாட்டு..!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் துளசி கபார்ட் ஒரு ரஷ்ய கைக்கூலி என முன்னாள் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் மறைமுகமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆலோசகரான டேவிட் பிளப்ஃபியுடன் சேர்ந்து பாட்காஸ்ட் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஹிலாரி கிளின்டன், “ஜனநாயகக் கட்சியின் முன்னணி பெண் வேட்பாளர் ஒருவரை ரஷ்யா தன் கைக்குள் போட்டுக்கொண்டு அவருக்கு ஆதரவு அளித்து வருகிறது. ரஷ்யர்களின் விருப்பத்திற்குரியவராக அவர் விளங்குகிறார். அந்த நபரின் தேர்தல் […]

Categories
உலக செய்திகள்

நா எதுக்கு பணம் கொடுக்கணும்… விமான நிலையத்தில் பெண் செய்த செயலால் சிரிப்பலை..!!

விமான நிலையத்தில் லக்கேஜ் குறிப்பிட்ட அளவைவிட எடை அதிகமாக இருந்ததால் அதிகப் பணம் கேட்ட அலுவலர்கள் வாயைப் பிளக்கும்படி பெண் ஒருவர் செய்த செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ரோட்ரிக்ஸ் என்ற இளம்பெண் விடுமுறையைக் கொண்டாடுவதற்கு ஊருக்குக் கிளம்பியுள்ளார். விமான நிலையத்தில் ரோட்ரிக்ஸின் லக்கேஜை பரிசோதித்ததில் அனுமதிக்கப்பட்ட எடையளவான ஏழு கிலோவை விட இரண்டரை கிலோ அதிகமாக அதாவது 9.6 கிலோ இருந்துள்ளது. இதனால் ரோட்ரிக்ஸ் அதிகப்பணம் கட்ட வேண்டும் என்னும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். அதிகப் […]

Categories
உலக செய்திகள்

நீச்சல் குளத்தில் 9 அடி முதலை…. அசால்டாக குழந்தை போல தோளில் சுமந்து சென்ற வனத்துறை அலுவலர்.!!

வீட்டு நீச்சல்குளத்திலிருந்து வெளியே செல்ல முடியாத 9 அடி முதலையை வனத்துறை அலுவலர் தோளில் சுமந்து நடந்து சென்று அசத்தியுள்ளார். புளோரிடா மாகாணத்தில் வீட்டின் ஒன்றில் 9 அடி நீளமுள்ள முதலை ஒன்று புகுந்துள்ளது. வீட்டில் உள்ள நீச்சல்குளத்தில் இறங்கிய முதலை வெளியே வரமுடியாமல் நீண்ட நேரமாகத் தவித்து சுற்றிவந்துள்ளது. இதனைப் பார்த்த வீட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தகவலறிந்து வனத் துறை அலுவலர் பால் பெடார்ட் (Paul Bedard) உடனடியாக வீட்டிற்கு விரைந்து வந்துள்ளார். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கான் மசூதியில் குண்டு வெடிப்பு… “62 பேர் உடல் சிதறி பலி”… 100க்கும் மேற்பட்டோர் காயம்..!!

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 62 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மாகாணம் நங்கர்ஹார். இப்பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று மதியம் பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டது. நேற்று  வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட அதிகமானவர்கள் மசூதியில் பிரார்த்தனை செய்யக் கூடியிருந்தனர். இந்த குண்டுவெடிப்பில் குறைந்தபட்சம் 60 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பில் மசூதியின் கூரையும் இடிந்து விழுந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்தக் குண்டுவெடிப்புக்கு […]

Categories
உலக செய்திகள்

”கருப்பு பட்டியலில் சேத்துடுவோம்” பாகிஸ்தானுக்கு ஆப்பு ….. FATF எச்சரிக்கை ….!!

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுவதை 2020 பிப்ரவரி மாதத்துக்குள் தடுக்காவிட்டால், கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படும் என, சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) எச்சரித்துள்ளது. சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு எனப்படும் எஃப்ஏடிஎஃப் (FATF) அமைப்பின் வருடாந்திர கூட்டம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எஃப்ஏடிஎஃப் அமைப்பு நிர்வாகிகள் காலக்கெடு கொடுத்து எச்சரித்தனர். பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படும் என […]

Categories
உலக செய்திகள்

பொலிவை இழந்து வரும் கோல்ப்… “அடுத்த ஆண்டு ஜி7 மாநாடு”… அதிபர் டிரம்ப் அறிவிப்பு..!!

ஜி7 மாநாடு புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் சுற்றுலா மையத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜி7 மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாடு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ரிசார்ட்டில் நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ட்ரம்புக்கு அதிக வருவாய் ஈட்டித் தருவதில் கோல்ப் கிளப் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இந்த மாநாடு அங்கு நடைபெறவுள்ளது. புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் கிளப்பில் ஜி7 […]

Categories
உலக செய்திகள்

மனைவியுடன் ஜாலியாக…. பாட்ஷாஹி மசூதியை சுற்றி பார்த்த பிரிட்டன் இளவரசர்..!!

இளவரசர் வில்லியம், இளவரசி கேட் மிடில்டன் ஆகியோரின் பாகிஸ்தான் பயணத்தின் நான்காவது நாளில் லாகூரில் உள்ள பாட்ஷாஹி மசூதியை பார்த்து ரசித்தனர். பிரிட்டன் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோர் முதல் முறையாக, 5 நாள் சுற்றுப்பயணமாகப் பாகிஸ்தானுக்குச் சென்றனர். இதனால், பாகிஸ்தான் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ராவல்பிண்டி நூர்கான் விமான நிலையத்துக்கு வந்தவர்களை வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரோஷி […]

Categories

Tech |