Categories
உலக செய்திகள்

சிங்கப்பூர் விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்த துணை விமானி: பயணிகள் மகிழ்ச்சி!

சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு செல்லும் விமானத்தில் பணிபுரியும் துணை விமானி தமிழில் அறிவிப்பு செய்ததால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். சிங்கப்பூரின் ஸ்கூட் விமானத்தில் துணை விமானியாக பணிபுரிபவர் சரவணன் அய்யாவு. இவர் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு செல்லும் விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்தார். இதனால், பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். தமிழில் அறிவிப்பு செய்யும் காணொலியை தனது சமூக வலைதள பக்கங்களில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், ‘தமிழில் அறிவிப்பு செய்ய வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு, அதனை நனவாக்குவதற்கு அனுமதியளித்த […]

Categories
உலக செய்திகள்

தொடரும் குற்றச்சாட்டு… சீனாவில், 99,000 பேர் கைது…!!

சீனாவில் தொலைதொடர்பு குற்றங்களில் ஈடுபட்ட குற்றஞ்சாட்டின் பேரில் 99 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் தொலைதொடர்பு குற்றங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் 99 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அந்நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சீனாவில் தொலைதொடர்பு குற்றங்கள் பெருமளவு அதிகரித்திருப்பதாக புகார்கள் வந்ததன் அடிப்படையில், மேக வாள் (கிளவுட் ஸ்வாடு) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 18 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டன. அந்த […]

Categories
உலக செய்திகள்

35 மக்களைக் கொன்ற 80 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

புர்கினா ஃபாசோ நாட்டில் பயங்கரவாதிகளால் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள புர்கினா ஃபாசோ நாட்டில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் செய்தி அந்நாட்டுத் தலைவரான ரோச் மார்க் காபூரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அர்பிந்தா நகரத்தில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தியதில் 35 மக்கள் கொல்லப்பட்டனர். இதனை எதிர்த்து நாட்டின் பாதுகாப்புப் […]

Categories
உலக செய்திகள்

1 DAY ஆக்க்ஷன்- ”100 தீவிரவாதிகள் காலி” அதிரடி காட்டிய ஆப்கான்…!!!

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடந்த  24 மணி நேரம்  தாக்குதலில் 100க்கும் மேற்பட்டவர்கள்  உயிரிழந்தனர்.45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் . உலகில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் பெரிதும் உள்ள நாடு ஆப்கானிஸ்தான். இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒவ்வொரு நொடியும் பயத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.மக்களின் பயத்தை போக்கும் வகையில் அந்நாட்டின் அரசு தீவிரவாதிகள் மீது பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது . இந்நிலையில் அங்குள்ள 15 மாகணங்களில் , 20க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

“ஹோண்டுராஸ் சிறையில் 18 கைதிகள் கொலை”… 16க்கும் மேற்பட்டோர் காயம்..!!

ஹோண்டுராஸ் சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் 18 கைதிகள் கொல்லப்பட்டனர். மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் சிறைக் கலவரங்கள் அடிக்கடி நடக்கும். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த கலவரத்தில் 18 கைதிகள் கொல்லப்பட்டனர். 16க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ஹோண்டுராஸ் தீவில் சமீபத்தில் சிறை திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.இதற்கிடையில் மீண்டும் கலவரம் நடந்தது. அந்த கலவரத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர். ஹோண்டுராஸ் நாட்டில் மொத்தம் 27 சிறைச்சாலைகள் உள்ளன. இந்த சிறைச்சாலைகளில் மொத்தம் 22 ஆயிரம் பேர் […]

Categories
உலக செய்திகள்

நியூசிலாந்து எரிமலை வெடிப்பு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19ஆக உயர்வு!

நியூசிலாந்து வெள்ளைத் தீவில் உள்ள எரிமலை வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. நியூசிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான ஒயிட் தீவில் உள்ள எரிமலை டிசம்பர் 9ஆம் தேதி வெடித்தது. இதில், சுற்றுலாப் பயணிகள் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து நிகழ்விடம் சென்ற அந்நாட்டு மீட்புப் படையினர், படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் கடந்த இரண்டு வாரங்களாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் சிரியாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்..!!

ஈரான் படைகளை குறிவைத்து இஸ்ரேல், சிரியாவில் வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது. சிரியாவில் உள்ள ஈரான் படைகளைக் குறிவைத்து ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் பயங்கரமான வெடி சத்தம் கேட்டு அச்சமடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறினர். நாட்டில் இருந்தபடியே ஏவுகணைகளை அனுப்பி மூன்று தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளதாக சிரியா நாட்டு மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈரான் படைகளை குறிவைத்து நூற்றுக்கணக்கான வான்வழி […]

Categories
உலக செய்திகள்

2020-ஆம் ஆண்டு உலகில் என்ன நடக்கும்? நாஸ்ட்ராடமஸின் கணிப்பு!!!

உலகில் இது எல்லாம் நடக்கும் என்று முன்பே கணித்த பிரான்சை சேர்ந்த கணிப்பாளர் நாஸ்ட்ராடமஸ் வரவிருக்கும் 2020-ஆம் ஆண்டில் உலகில் என்னெவெல்லாம் நடக்கும் என்பதை கணித்துள்ளார். பிரான்ஸை சேர்ந்தவர் நாஸ்ட்ராடமஸ், இவர் ஜோதிடரோ, சாமியாரோ கிடையாது, சாதரண மனிதன் போன்றவர் தான், இருப்பினும் ஒரு சிலருக்கு முன்பு நடப்பதை இப்போதே அறியமுடியும், அது போன்று தான் நாஸ்ட்ராடமஸ் தன்னுடைய காலத்தில் உயிரோடு(1503-1566) இருக்கும் உலகில் இதுவெல்லாம் நடக்கும் என்று கணித்துள்ளார். அப்படி அவர் கணித்த பிரித்தானியா ராணி […]

Categories
உலக செய்திகள்

“ஜான்சன் அண்ட் ஜான்சன்” புற்றுநோய் புகார்….. நிராகரித்து தீர்ப்பளித்த அமெரிக்கா நீதிமன்றம்….!!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தை பவுடரை பயன்படுத்தியதால் புற்றுநோயை ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் முகப்பூச்சு பவுடரை பயன்படுத்தியதால் புற்று நோய் ஏற்பட்டதாக விக்கி பாரஸ்ட் என்பவர் லூயிஸ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விடுத்திருந்த அறிக்கையில், விக்கி பாரஸ்ட் தொடர்ந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஏற்பட்ட புற்று நோய்க்கு நிறுவனத்தின் […]

Categories
உலக செய்திகள்

ரூ.1700 கோடி…தலை சுற்ற வைக்கும் சம்பளம்!!!

நியூயார்க்: கூகுள் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. 2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த இவர் , கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் டூல்பார் ஆகியவற்றை உருவாக்கிய குழுவுக்கு தலைமை தாங்கினார். தொடர்ந்து அந்நிறுவனத்தை வெற்றி பாதையில் வழிநடத்தி கொண்டிருக்கிறார். இதனால் இவருக்கு நிறுவனத்தில் மதிப்பு தானாக உயர்ந்தது. இதையடுத்து அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை கூகுள் வழங்கியது. அதன்படி […]

Categories
உலக செய்திகள்

ஆண்டுக்கு இவ்வளவா… கேட்டாலே தலை சுற்ற வைக்கும் சுந்தர் பிச்சையின் சம்பளம்..!!

கூகுள் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. 2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் டூல்பார் ஆகியவற்றை உருவாக்கிய குழுவுக்கு தலைமை தாங்கினார். தொடர்ந்து அந்நிறுவனத்தை வெற்றிக்கரமாக வழிநடத்தினார். இதனால் இவருக்கு நிறுவனத்தில் மதிப்பு தானாக உயர்ந்தது. இதையடுத்து அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை கூகுள் வழங்கியது. அதன்படி 2015-ஆம் ஆண்டில் கூகுள் […]

Categories
உலக செய்திகள்

கோத்தபய ராஜபக்சேயின் அறிவிப்பு -ஈழ தமிழர்கள் அதிர்ச்சி  !!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஈழ தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க மாட்டோம் என்று  அறிவித்துள்ளார். இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்த போது கடந்த 2009-ம் ஆண்டு இறுதி கட்ட போர் நடைபெற்றது. அப்போது மகிந்த ராஜபக்சேவின் தம்பியும், தற்போதைய அதிபருமான கோத்தபய ராஜபக்சே ராணுவ மந்திரியாக இருந்தார். இவர்தான் இறுதி கட்ட போரை முன்னின்று நடத்தினார். அந்த போரில் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டில் முன்னாள் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் விமானத்தை வாடகைக்கு எடுத்த பெண்…ரூ.50 லட்சம் பரிசு தொகை வழங்கவும் தயார்!!! 

அமெரிக்காவில் காணாமல் போன தனது செல்ல நாயை கண்டுபிடிக்க பெண் ஒருவர் விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளார். மேலும், தனது நாயை கண்டு பிடித்து தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு தொகை வழங்க தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்தவர் எமிலி தளர்மோ. இவர் ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு இன நாயை ஜாக்சன் என பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தார். கடந்த வாரம் அந்த நாயுடன் ஒரு மார்க்கெட்  சென்றார். அப்போது அந்த நாய் திடீரென காணாமல் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

26,00,00,000 பேரின் தகவல் திருட்டு… பயனாளர்களே உஷார்… எச்சரிக்கும் ஃபேஸ்புக்..!!

பேஸ்புக் நிறுவனம் 26கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது நேரத்தை அதிக அளவில் செலவிடுகின்றனர். இதில் முக்கியமாக ஓன்று பேஸ்புக்.  உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சான்றாக கடந்த 10 ஆண்டுகளில் இந்த செயலி உலக அளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. இதில் பயனர்கள் வீடியோ, புகைப்படம், சாட்டிங்செய்வது என பன்முகத் -தன்மையுடன் முழுமையான ஈடுபாட்டுடன் […]

Categories
உலக செய்திகள்

” 3 லட்சம் லிட்டர் தண்ணீர் திருட்டு” தீவிர கட்டுப்பாடு… வறட்சியில் – ஆஸி 

ஆஸ்திரேலியாவில் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடும் வறட்சி நிலவுவதால்  3 லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாகவும், போதிய மழை இல்லாததாலும் அங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. அதிக வெப்பம் காரணமாக எப்போதும் இல்லாத அளவுக்கு அங்குள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம்  குறைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு தண்ணீரை பயன்படுத்த அந்த நாட்டு […]

Categories
உலக செய்திகள்

புகையிலை பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை குறைந்தது – உலக சுகாதார நிறுவனம்!!!

முதன்முறையாக புகையிலை பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை உலகளவில் குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. புகையிலையை எந்த வகையில் பயன்படுத்தினாலும், ஆரோக்கிய பாதிப்பை ஏற்படுத்தும் என உலகம் முழுவதும் விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், மக்கள் மத்தியில் புகையிலை பொருட்களின் பயன்பாடு தொடர்கிறது. இந்நிலையில் புகைபிடிக்கும் மற்றும் புகையிலை பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. 2000 ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை புகையிலை பயன்படுத்தும் […]

Categories
உலக செய்திகள்

உயிரிழந்துவிட்டால் முஷாரப்பின் சடலம் தூக்கில் தொங்கவிடப்படும் – பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம்..!!

முஷாரப் உயிருடன் பிடிபடாவிட்டால் அவரின் சடலம் தூக்கில் தொங்கவிடப்படும் என பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதியாக 1998ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் பர்வேஸ் முஷாரப். 2001-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்து அந்நாட்டின் அதிபராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, 2007ஆம் ஆண்டு அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதனால், அங்கு போராட்டங்கள் வெடித்தன. பதவி பறிக்கப்படுவதற்கு முன்பே 2008ஆம் ஆண்டு […]

Categories
உலக செய்திகள்

“காலம் தான் சிறந்த பரிசு” சான்டா க்ளாஸ் சொந்த ஊரில் வாழ்த்துடன் தொடங்கிய திருவிழா….!!

காலம்தான் மிகச் சிறந்த பரிசு என்று கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு விடுத்த  வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.  பின்லாந்து நாடு லாவாந்து பகுதியில் சாண்டா கிளாஸ் குழந்தைகளுக்கு அனுப்பியுள்ள கடிதங்களில் குடும்பத்தினருடன் பெற்றோருடன் சக குழந்தைகளுடன் நண்பர்களுடன் உங்கள் நேரத்தை செலவழியுங்கள் என்றும் அதுதான் நீங்கள் அவர்களுக்கு அளிக்கும் மிகச்சிறந்த பரிசு என்றும் கூறப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒருவர் பேசும் பொழுது பணிவான அன்பு நிறைந்த வார்த்தைகளை பேசுங்கள் என்றும் அடுத்தவரின் சிந்தனைகளை படிப்பதும் அடுத்தவரின் உணர்வுகளை உணர்வதும் மிகச் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் மேயர்பதவியில் 7மாத குழந்தை….. ஆச்சரியத்தில் பொதுமக்கள் ….. ஆதரவு எந்த கட்சிக்கு …..?

அமெரிக்காவில் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் என்ற 7 மாதமே ஆகும் ஆண் குழந்தை ஏலத்தில் வெற்றி பெற்று கவுரவ மேயர் பதவிக்கு தேர்வானது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஒயிட்ஹால் என்ற நகரில் உள்ள தீயணைப்பு துறையில் வேலைபார்க்கும் தன்னார்வலர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு வருடமும்  அந்நகரின் கவுரவ மேயர் பதவியை ஏலம் விடுவது வழக்கம். அந்த வகையில் 2019-ம்  ஆண்டிற்கான ஏலம் அக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்த ஏலத்தில்   வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் என்ற 7 மாதமே […]

Categories
உலக செய்திகள்

வரலாற்றில் முதன்முறை… அமெரிக்காவின் மேயரான ஏழு மாதக் குழந்தை!

 அமெரிக்காவில் மிகவும் இளம்வயதில் மேயரான சார்லி என்ற குழந்தைக்கு மக்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகணத்தில் உள்ள வைட்ஹால் பகுதியின் தீயணைப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வர்களுக்கு நிதி திரட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மேயர் பதவி ஏலம் விடப்படுவது வழக்கம். அந்தவகையில், கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவின் மிகவும் கவுரமான மேயர் பதிவியை சார்லி என்ற ஏழு மாத குழந்தை அதிக விலைக்கு ஏலம் எடுத்து வெற்றிபெற்றது. இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை வைட்ஹால் பகுதியில் மேயர் […]

Categories
உலக செய்திகள்

நிலக்கரி சுரங்கத்தில் புகுந்த தண்ணீர்… 80 மணி நேர போராட்டம்..!! 13 பேர் உயிருடன் மீட்பு…!!

சீனாவில் உள்ள சுரங்கத்தில் சிக்கியவர்களில் 13 பேர் 80 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்புப்படையினரால் உயிருடன் மீட்கப்பட்டனர்.  சீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் யிபின் என்ற நகரம் உள்ளது. இந்த நகரில் இருக்கும் சான்மசு என்ற நிலக்கரி சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை அன்று வெள்ளநீர் புகுந்தது . இதன் காரணமாக 5 சுரங்க ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில், மேலும் 30 ஊழியர்கள் காணாமல் போனார்கள்.   ஊழியர்களை மீட்கும் பணியில் 251 […]

Categories
உலக செய்திகள்

10 ஆண்டுகள்…. கணவன் உடலை பிரீசரில் வைத்த மனைவி… போட்டு தள்ளினாரா?

அமெரிக்காவில் கணவனின் உடலை 10 வருடமாக பிரீசரில் வைத்திருந்தது அங்கு அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் உடா மாநிலத்தின் டூயெலி நகரைச் சேர்ந்தவர் ஜீன் சவுரோன்-மாதர்ஸ் இவரது  வயது (75).கணவர் பால் எட்வர்ட்ஸ்  ஓய்வு பெற்ற படைவீரர் ஆவார்.சென்ற மாதம் ஜீன் 22ம் தேதி  சவுரோன்-மாதர்ஸ் வீட்டிற்கு வந்த முன்னாள் ராணுவ அதிகாரிகள், வழக்கமான பொதுநல சோதனையை செய்த போது ஜீன் மாதர்ஸ் அங்கே இறந்து கிடந்தார். அவரது மரணம் இயற்கையானது என போலீசார் தெரிவித்தனர். வீட்டை மேலும் […]

Categories
உலக செய்திகள் விளையாட்டு

பிரம்மிப்பை ஏற்படுத்திய சீன மாணவர்கள்… வைரலாகும் வீடியோ காட்சிகள்…!!

சீனாவில் கயிறு தாண்டும் போட்டியில் மாணவர்களின் முயற்சி நாட்டையே  பிரம்மிக்க வைத்துள்ளது.  சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் ஓன்று சேர்ந்து சீன கூடைப்பந்து மைதானம் ஒன்றில் 2 குழுக்களாக பிரிந்து எதிரெதிர் பக்கங்களில் வளைவாக நின்றனர். எதிரெதிரே உள்ளவர்கள் கையில் உள்ள கயிறுகளை ஒரே நேரத்தில்  சுழற்றினர். அதே நேரத்தில், நடுவில் இருக்கும் அந்த கயிற்றில் மாணவர் ஒருவர் கூட  சிக்காமல் சுலபமாக மேலே உயரமாய் குதித்து தப்பிக்கின்றார். மாணவர் ஒரே சமயத்தில் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு தூக்கு தண்டனை..!!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தூக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில் ராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தானில் ஆட்சியை பிடித்தவர் முஷாரப்.  2007 ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்காக முஷரப் மீது 2013ல் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை நடந்து வந்தநிலையில் தற்போது பாகிஸ்தான் பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்துள்ளது. தற்போது உடல்நலக்குறைவால் துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் முன்னாள் அதிபர் முஷராப். […]

Categories
உலக செய்திகள்

பிறந்தநாளை கொண்டாடி இறந்துபோன இளம் பெண்….!!இப்படியும் கூட நடக்குமா…!!

பிறந்தநாளை கொண்டாட சென்ற மருத்துவ மாணவி, இறந்துபோன பரிதாபம்…!! ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் பெண் கிரிஸ்டல்  தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக  ஒயிட் தீவுக்கு  சென்றபோது எரிமலை வெடித்து சிக்கி அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. நியூசிலாந்தின் ஒயிட் தீவு புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலமாக  உள்ளது இந்த நிலையில் எரிமலையில் கடந்த திங்கட்கிழமை வெடிப்பு ஏற்பட்டது. இதில்அமெரிக்கா, ஆஸ்திரேலியா நியூசிலாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, சீனா, மற்றும் மலேசியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 47 பேர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக மீட்பு […]

Categories
உலக செய்திகள்

திடீரென திரண்ட 1,00,000 மக்கள்……. சீனாவுக்கு ஆதரவாக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்…….!!

ஹாங்காங்கில் சீனாவுக்கு ஆதரவாகவும், வன்முறைகளை கண்டித்தும்  பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹாங்காங்கில் கிரிமினல் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்தும்  கூடுதலான ஜனநாயக உரிமைகள் கோரியும் பல மாதங்களாக நடைபெறும் போராட்டம் பெரும்பாலான நேரங்களில் வன்முறைகளில் முடிந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் இந்த வன்முறை போராட்டங்களை கண்டித்து ஹாங்காங்கில் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. தாமார் பூங்காவில் கூடிய  மக்கள் காவல்துறைக்கு ஆதரவாக […]

Categories
உலக செய்திகள்

பிரேசில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்… அந்தரத்தில் பறக்கும் கிறிஸ்துமஸ் மரம்…!!

பிரேசிலில் அமைக்கப்பட்டுள்ள 230 அடி கிறிஸ்துமஸ் மரம் அந்தரத்தில் மிதக்கும் வகையில் அமைக்கப்பட்டு, வான வேடிக்கைகளுடன் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது.  பிரேசில் நாட்டில் அமைந்துள்ள ரியொடி ஜெனிரோ பகுதியில் உள்ள ரோட்ரிகொ டி ப்ரெய்டாஸ் லகூன் என்ற சுற்றுலா பகுதியில் உலோகங்களை பயன்படுத்தி 230 உயரத்தில் மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மரம் நீருக்கயடியிலிருந்து 11 தளங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 230 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தில் 9 லட்ச எல்.இ.டி விளக்குகள் பொறுத்தப்பட்டு 8 […]

Categories
உலக செய்திகள்

டுவிட்டரில் கலக்கிய டிரம்ப்…… படைத்தார் புதிய சாதனை….!!!!

2 மணி நேரத்திற்குள் 123 பதிவுகளை வெளியிட்டு அதிபர் டிரம்ப், டுவிட்டரில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார்.   முக்கிய சமூக வலைத்தளமாக இருக்கும் டுவிட்டரை அதிகம் உபயோகபடுத்தும் உலக தலைவர்களில் அமெரிகாவின் குடியரசுத்தலைவர் டிரம்ப் முக்கியமானவர். தன்னுடைய ஆட்சியில் அரசு எடுக்கும் புதிய திட்டங்கள், தினசரி அரசியல் நிகழ்வுகள் பற்றிய பார்வை மற்றும் சில முக்கியமான முடிவுகளை டிரம்ப் டுவிட்டரில்தான் வெளியிடுவார்.   இந்த நிலையில் 2 மணி நேரத்திற்குள் நூற்று இருபத்து மூன்று பதிவுகளை வெளியிட்டு அதிபர் […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் அரக்கர்கள் நடமாட்டம்… அதிர்ச்சியில் மக்கள்…!!

ஜெர்மனியில் சிலர் அரக்கர்களை போல வேடமிட்டு வீதியில் நடனமாடி மக்களை உற்சாகபடுத்தினர்.  ஜெர்மனி நாட்டில் குளிர்காலத்தில் ஏற்படும் அதிகமான இருளை போக்குவதற்காக எரியும் தீப்பந்தங்கள் ஏற்றப்படுகிறது. இதற்காக பேர்ச்டென் என கூறப்படும் பாரம்பரிய அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தீப்பந்தத்தின் காரணமாக இருள் குறைந்து காணப்படுகிறது. அதன் காரணமாக, ஜெர்மனி நாட்டில் அமைந்துள்ள கிர்ச்சீயோன் பகுதியில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணி வகுப்பில் விசித்திரமான தோற்றத்துடனும், அசுரர்கள் போலவும் வேடமணிந்து அங்கு வாசிக்கப்படும் இசைக்கேற்றமாறு தெருக்களில் […]

Categories
உலக செய்திகள்

படம் பார்த்தால் பால் தரும் மாடுகள் …என்ன ஒரு அதிசயம் …!!

படம் பார்த்தால் மாடுகள் அதிகம் பால் கொடுப்பதாக  ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த தகவல் ஆச்சிரியத்தை  ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டின் ,மாஸ்கோவில் இருக்கும்  கால்நடை ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டனர் . இதில் மாடுகாளுக்கு பிடித்த விஷயங்களை பார்க்கும் போது அதன் உடலில் மாற்றம் உண்டாவத்தைக் கண்டுபிடித்துள்ளனர் . மேலும் இயற்கைரீதியாக  மாடுகள் பால் தருவதற்கும்  சம்மந்தம் இருப்பதாகவும்  அதன் மூலம்  அவற்றின் பால் உற்பத்தி திறன் அதிகமாகிறது என்றும் தெரிவித்துள்ளனர். இதற்காக மாடுகளுக்கு விர்சுவல் ரியாலிட்டி பெட்டிகளை முகத்தில் […]

Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்ததில்… 14 பயணிகள் பரிதாப பலி…!!!

நேபாள நாட்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 14 பயணிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.  நேபாள நாட்டில் அமைந்துள்ள காலின்சவுக் பகுதியில் இருக்கும் புனித தலத்தில் இருந்து பக்தாபூர் என்ற நகருக்கு 40 நபர்களுடன் பேருந்து ஓன்று சென்றது. அந்த பேருந்து இன்று காலை சிந்துபால்சவுக் மாவட்டத்தில் அமைந்துள்ள சுன்கோஷி வழியில் செல்லும் போது பயங்கரமான வளைவில் திரும்பியது. அப்பொழுது, பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அருகில் இருந்த பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் 12 பேர் […]

Categories
உலக செய்திகள்

என்னடா இது ஒரே நேரத்தில் மூன்று சூரியனா…!!ஆச்சர்யத்தில் வாயைப்பிளந்த சீன மக்கள்…!!

சீனாவின் கோர்காஸ் நகரில் 3 சூரியன்கள்களை ஒரே நேரத்தில் பார்த்து ஆச்சர்யத்துடன் கூடிய சீன மக்கள். சீனாவின் மேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் உள்ள கோர்காஸ் நகரில் ஒரே நேரத்தில் 3 சூரியன்களை பார்த்தனர் . முதலில் இரண்டு சூரியன்கள் இருப்பதைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டனர். அடுத்த சில மணி நேரத்தில் 3-வது சூரியன் தெரிந்ததால் ஆச்சரியத்தில் உறைந்தனர். சூரிய ஒளி ஈரப்பகுதியை ஊடுருவிச் செல்லும்போது வானில் இருக்கும் பனித்துகள்களின் மீது பட்டு பிரதிபலிப்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும் […]

Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் வெடிகுண்டு வெடித்ததில்-மூவர் பரிதாப பலி…!!

நேபாள நாட்டில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் காவலர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேபாள நாட்டில் அமைந்துள்ள தனுஷாதாம் மாவட்டத்தில் உள்ள மகேந்திரநகர் பஜார் என்னும் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் ஷா தனது வீட்டிற்கு முன்பு சந்தேகப்படும் வகையில் ஏதோ ஒரு பொருள் கிடந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.இந்த தகவலை கேட்டதும் காவல் ஆய்வாளர் அமிர் குமார் அந்த இடத்திற்கு சென்றார். அவர் கீழே கிடந்த அந்த பொருளை கையில் எடுத்தார். அப்பொழுது, சந்தேகப்படும் வகையில் […]

Categories
உலக செய்திகள் வைரல்

பேனர் வைத்த அம்மா …அழாத குழந்தை…வைரலாகும் புகைப்படம் …!!

அம்மா எங்கே? என்று கைக்குழந்தை ஏங்கி அழுகாமல் இருக்க வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளார் பெண் ஒருவர் . ஜப்பானில் இருக்கும் பெண் ஒருவர் வீட்டில் தான் இல்லாத போது , தனது 1 வயது மகன் தன்னைத் தேடி அழாமல் இருப்பதற்காக  தன்னைப்போலவே உருவம் கொண்ட  பேனர் ஒன்றை உருவாக்கி வைத்துள்ளார். வீட்டின் மையப்பகுதியில் தரையில் அமர்ந்தபடி ஒரு  பேனரையும் அதேபோல், சமையலறையில் நின்று கொண்டிருப்பதைப் போன்று ஒரு பேனரையும் வைத்துள்ளார். இந்தப் பேனரை பார்க்கும் அந்த […]

Categories
உலக செய்திகள்

சுறாக்களுக்கு உணவளித்த சாண்டா கிளாஸ்..!! ஆச்சரியத்தில் பார்வையாளர்கள்…!!

சுறாக்களுக்கு சாண்டா கிளாஸ் உடையணிந்து ஊழியர் உணவளித்ததை பார்வையாளர்கள் ஆச்சிரியோத்தோடு கண்டு மகிழ்ந்தனர்.  பிரேசில் நாட்டில் உள்ள மீன் கண்காட்சியகத்தின் ஊழியர் ஒருவர் சுறாக்களுக்கு இடையே சாண்டா கிளாஸ் போல் உடையணிந்து நீந்தினார்.இந்த மீன் கண்காட்சியகம் ரியோ டி ஜெனிரோவில் உள்ளது. இது தென்அமெரிக்காவின் மிகப்பெரிய மீன் கண்காட்சியகம் ஆகும். அந்த  கண்காட்சியகத்தில் பணிபுரியும் வால்மர் டி அகுவார் சால்வடோர் என்ற ஊழியர் சாண்டா கிளாஸ் போல் உடையணிந்து,கண்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நீர்த் தொட்டிக்குள் நீந்தி அங்குக் காட்சிப்படுத்துவதற்காக வைக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

பேருந்து மீது வேன் மோதியதில் 15பேர் பலி …!!

பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து புறப்பட்டு சென்ற பேருந்து ஒன்று பலூசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும்  கன்மேக்தரசி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த வேன்  கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது .இதனால் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து  எரிய ஆரம்பித்தது  . இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு வருவதற்குள்  இரண்டு வாகனங்களும் முழுவதும்  தீயில் […]

Categories
உலக செய்திகள்

“அதிகார துஷ்பரயோகம்” அதிபர் பதவிக்கு ஆபத்து……. பரபரப்பில் உலகநாடுகள்….!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியை பறிப்பதற்கு கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அடங்கிய சபையின் சட்டக்குழு அங்கீகரித்துள்ளது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளான ட்ரம்ப் அவர்களின் பதவியைப் பறிப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் ஹவுஸ் புரோபர்டி குழுவினர் தீர்மானத்திற்கு ஆதரவாக 23 பேரும் எதிராக 17 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து 435 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு இந்த தீர்மானம் வாக்கெடுப்பிற்கு செல்கிறது. ஜனநாயக கட்சியில்  233 […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் தேர்தலில் அபார வெற்றி… பிரதமராகும் போரிஸ் ஜான்சன்..!!

பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 362 இடங்களில் வென்றதால், பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் தக்கவைத்துள்ளார். பிரெக்ஸிட் விவகாரத்தால் துவண்டுகிடந்த பிரிட்டனில் டிசம்பர் 12ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. முன்னதாக, கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர்கள் கட்சி, லிபரல் டெமாக்ரேட்ஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டன. தேர்தல் முடிவுகள் இன்று வெளியானதிலிருந்தே, வலதுசாரி கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து வந்தன. 650 இடங்களில் 362 இடங்களை கன்சர்வேட்டிவ் […]

Categories
உலக செய்திகள்

அவென்ஜர்ஸ் திரைப்பட வில்லன் போல உருவெடுத்த டிரம்ப் வீடியோ வெளியீடு …!!

அமெரிக்க அதிபர் டிரம்பை ஹாலிவுட் பட வில்லனைப் போன்று சித்தரித்து அவரது பிரச்சார குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது .   டிரம்பை ஹாலிவூட்திரைப்படமான  அவென்ஜர்ஸ் படத்தின் வில்லன் தானோஸ் போல சித்தரித்து டிரம்பின் பிரச்சார குழு வீடியோ ஒன்றை டுவிட்டரில்  வெளியிட்டுள்ளது.அந்த வீடியோவில் தானோஸ் உருவில் இருக்கும் டிரம்ப், நான் தவிர்க்க முடியாதவன் என்று சொடக்கு போடுகிறார் . அவென்ஜர்ஸ்  படத்தில் வில்லன் தானோஸ் ஒரு சொடக்கில் உலகத்தின் மக்கள் தொகையில் பாதிப்பேரை அளித்து விடுவார் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் கோயிலுக்கு 100 இந்தியர்கள் பயணம்..!!

பாகிஸ்தானில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கட்டாஸ் ராஜ் கோயிலுக்கு இந்த வாரம் 100 இந்திய பக்தர்கள் செல்லவுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கட்டாஸ் ராஜ் என்னும் இந்து கோயில் அமைந்துள்ளது. இந்துக்களின் புனித்தத் தலமாகக் கருதப்படும் இந்த கோயிலுக்கு, வருடந்தோறும் நவம்பர்-பிப்ரவரி மாதங்களில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபடுகின்றனர். அந்த வகையில், வரும் சனிக்கிழமை அன்று 100 இந்திய பக்தர்கள் கட்டாஸ் ராஜ் கோயிலுக்கு செல்லவுள்ளனர். “வரும் வெள்ளிக்கிழமை அன்று வாகா எல்லையைக் […]

Categories
உலக செய்திகள் வைரல்

“தாயை இடித்து கீழே தள்ளிய கார்”… கோபத்தில் காரை உதைத்து சண்டைக்கு சென்ற சிறுவன்… வைரலாகும் வீடியோ.!!

சாலையில் சென்ற தாயை கார் இடித்து கீழே தள்ளியதை பார்த்த சிறுவன் கோபத்துடன் காரை உதைக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சீனாவில் சாலையில் சென்ற தனது தாயை கார் இடித்து கீழே தள்ளியதை பார்த்த சிறுவன் ஆக்ரோஷமாக காரை தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. காணொலியில், சாலையில் தாய், மகன் இருவரும் நடந்த சென்றுகொண்டிருந்தனர். அப்போது சிக்னலை மதிக்காமல் வேகமாக சென்ற கார், இருவரையும் இடித்து கீழே தள்ளியது. விபத்தில் தனது தாய் வலியில் […]

Categories
உலக செய்திகள்

கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நபர்கள் இவர்கள்தான் …!!

பாகிஸ்தானில் கூகுளில் அதிகமாக தேடப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது .   பாகிஸ்தானில் f16 விமானத்தைச் சுட்டு விழ்த்திய இந்திய விமானப் படையின் கமாண்டரான தமிழக வீரர் அபிநந்தன் மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலிகான் ஆகியோர் பாகிஸ்தானில் அதிகமானோரால்  கூகுளில் தேடப்படும் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்கூகுளில்  அதிகமாக தேடப்படும் நபர்கள் குறித்த விவரம் வெளியானது. இதில்  அதிகமாக தேடப்பட்ட பிரபலங்கள்  வரிசையில் வீரர் அபிநந்தன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். பெண்கள் வரிசையில் […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

கூண்டை சுத்தம் செய்ய வந்தவரின் கையை கடித்து குதறிய சிங்கம் …!!

பாகிஸ்தானில் விலங்கியல் பூங்காவில் சிங்கம் ஒன்று தனது கூண்டை சுத்தம் செய்ய வந்தவரை கடித்து குதறியவீடியோ வெளியாகி உள்ளது .   கராச்சி விலங்கியல் பூங்காவில் கன்னுதிரட்டா என்பவர் சிங்கங்களுக்கு உணவளிக்கும் பணியை மேற்கொண்டு இருந்தார் .இந்நிலையில் சிங்கத்தின் கூன்டிற்கருகில் சுத்தம் செய்து கொண்டிருந்தார் .அப்போது கூண்டில் அடைக்கப்பட்டிருந்த வெள்ளைச் சிங்கம் ஒன்று திரட்டாவின்இடது கையை கடித்து குதறியது .இதில் வலிதாங்கமுடியாமல் அவர் சுதாரித்துக்கொண்டு சிங்கத்தின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கீழே விழுந்தார் .சிங்கம் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் நியூஜெர்சியில் 2  இடங்களில் துப்பாக்கிசூடு… 6 பேர் பலி… பயங்கரவாதிகள் சதியா?

அமெரிக்காவின் நியூஜெர்சியில் 2  இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக துப்பாக்கி சூடு சம்பவம் சர்வசாதாரணமாக அரங்கேறி கொண்டு இருக்கிறது. அங்குள்ள மக்கள் அனைவரும் தனக்கென்று துப்பாக்கி வைத்துள்ளனர். இதனால் இந்த சம்பவம் சாதாரணமாக நடக்கிறது. இதனை கட்டுப்படுத்த ஏதாவது சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அதுபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவின் நியூஜெர்சியில்நடந்துள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் சூப்பர் மார்க்கெட் உள்பட 2 இடங்களில்  மர்ம […]

Categories
உலக செய்திகள்

தீடிரென்று காணாமல்போன சிலி நாட்டின் ராணுவ விமானம்…!!

சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்த  அண்டார்டிகா விமானப்படை தளத்துக்கு 38 பேருடன் சென்ற ராணுவ விமானம் மாயமானது.   தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான  சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகா விமானப்படை தளத்துக்கு 38 பேருடன் சென்ற ஒரு ராணுவ விமானம் ஓன்று மாயமானது.  நேற்று மாலை  சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்தில் ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் (38)  பேர் பயணம் […]

Categories
உலக செய்திகள்

ஐஸ் பக்கெட் சவாலை அறிமுகப்படுத்திய நபர் உயிரிழப்பு..!!

விநோத சவாலான ஐஸ் பக்கெட் சவாலுக்கு அறிமுகப்படுத்திய   34 வயதான பீட் ப்ராடிஸ் என்ற அமெரிக்கர் உயிரிழந்தார். அமெரிக்காவிலுள்ள  போஸ்டன் எனும்  பகுதியை சேர்ந்த பீட் ப்ராடிஸ் , அங்குள்ள கல்லூரி பேஸ்பால் அணியின் முன்னாள் வீரர் ஆவார். நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட அவர், அதுதொடர்பான மருத்துவ ஆய்வுக்கு நிதி திரட்ட 2014ம் ஆண்டு குளிர்ந்த நீரை மேலே ஊற்றிக் கொள்ளும் வீடியோவை பதிவிட்டு வெளியிட்டார். அது வைரலானது .   அதனை தொடர்ந்து  பிரபலங்களான […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

‘இந்தாண்டின் சூரிய கிரகணத்தில் ஒரு புதுமையைக் காணலாம்!’ – விஞ்ஞானிகள்

இந்த ஆண்டுக்கான சூரிய கிரகணம் டிசம்பர் 26ஆம் தேதி நடக்கிறது. இந்த சூரிய கிரகணத்தில் சூரியனை சுற்றி நெருப்பு வளையம் தோன்றும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரியனை பூமி சுற்றிவரும் பாதையின் தளமும் நிலவு பூமியைச் சுற்றிவரும் தளமும் ஒன்றுக்கொன்று 5 டிகிரி கோணம் சாய்ந்துள்ளன. நிலவு புவியைச் சுற்றிவரும் பாதை புவி – சூரியன் உள்ள தளத்தை இரண்டு இடங்களில் வெட்டும். இந்தப் புள்ளிகளில் நிலவு அமைந்திருக்கும்போது அமாவாசையோ முழுநிலவு நாளோ ஏற்பட்டால் முறையே சூரிய […]

Categories
உலக செய்திகள்

“நவாஸ் ஷெரிஃப்பை சுட்டுக் கொல்லுங்கள்” பிரதமருக்கு வந்த சோதனை …!!

சிகிச்சைக்காக லண்டன் வந்துள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில், அவரை சுட்டுக் கொல்லுமாறு வலியுறுத்தப்பட்டது. பானாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவாஸ் ஷெரிஃப், சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார்.இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள், நவாஸ் ஷெரிஃப்புக்கு எதிராக அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிரே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் பேட்ரியாட்டிக் ஃப்ராண்ட் ( Pakistan Patriotic […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

பிரபஞ்ச அழகியாக தென் ஆப்ரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார் …!!

பிரபஞ்ச அழகியாக தென் ஆப்ரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார் .   அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் 68- வது மிஸ் யூனிவர்ஸ் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில்  பல நாடுகலில் இருந்து வந்த 90 அழகிகள் போட்டியிட்டனர். இதில்  தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி அவர்களை பின்னுக்கு தள்ளி பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்டார்.  துன்சி மிஸ் தென்னாப்பிரிக்காவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . இவருக்கு 2018ம் ஆண்டில் பிரபஞ்ச அழகியாக தேர்வுசெய்யப்பட்ட  பிலிப்பைன்ஸ் அழகியான காட்ரியோனா கிரே,  […]

Categories
உலக செய்திகள்

எரிமலை வெடித்து ஐந்து பேர் பலி …..!!

நியூசிலாந்திலுள்ள  வெள்ளைத் தீவில் எரிமலை ஒன்று வெடித்து சிதறிய விபத்தில் ஐந்து நபர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது . எரிமலைகள்  நிரம்பிய வெள்ளைத் தீவை சுற்றிப்பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகளை படகுகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்  . இந்த நிலையில்  , அங்கு திடீரென்று  எரிமலை ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது அதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20  சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் .தற்போது அங்கு புகை மூட்டம் அதிகமாக இருப்பதால் அசாதாரண நிலை  நிலவுகிறது […]

Categories

Tech |