Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கடல் தாண்டி ஜொலிக்கும் நம் தமிழ்..!!

துபாயில் நடந்த உலக கலாசார திருவிழாவில் தமிழ் சிறந்த கலாச்சாரமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. துபாயில் இஸ்லாமிய சமய அறநிலையத்துறையின் சார்பாக பன்முக கலாச்சார திருவிழா அங்குள்ள வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில் அரபு, ஸ்பானிஷ், ஜெர்மனி, ருமேனியா, தமிழ், மலையாளம் உட்பட உலகம் முழுவதும் உள்ள நாற்பதுக்கு மேற்பட்ட கலாச்சார அரங்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் தமிழ் அரங்கத்தில் இடம்பெற்ற திருக்குறள், தமிழ் வரலாறு, தமிழ் வளர்ச்சி, தமிழரின் நாகரிகம், தமிழ் கவிஞர்கள், தமிழர்களின் பண்பாட்டு பொருட்கள் ஆகியவற்றை நடுவர்கள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விமான விபத்து : தெளிவான விசாரணை வேண்டும் – கனட பிரதமர்!!

உக்ரைன் விமான விபத்து குறித்து தெளிவான விசாரணை வேண்டும் என்று கனடபிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்துள்ளார். ஜனவரி 8ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 180 பயணிகளுடன் ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து புறப்பட்டது. ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தெளிவான தகவல்கள் வெளிவராமல் மர்மமாகவே இருந்து வருகிறது. இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், எங்கள் […]

Categories
உலக செய்திகள்

ஈரான் விமான விபத்தில் எனக்கு ‘சந்தேகம்’ – அதிபர் ட்ரம்ப்!

உக்ரைன் விமான விபத்து அதிகப்படியான சந்தேகங்களை எழுப்புகிறது, யாராவது தவறு செய்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜனவரி 8ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 180 பயணிகளுடன் ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து புறப்பட்டது. ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தெளிவான தகவல்கள் வெளிவராமல் மர்மமாகவே இருந்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப்பின் அறிவிப்பு எதிரொலி – உயர்வைச் சந்தித்த பங்குச்சந்தை

மும்பை: ஈரானுடன் அமைதியான தீர்வை விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததையடுத்து, இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று கணிசமான உயர்வைச் சந்தித்தன. இந்திய பங்குச்சந்தைகள் இன்று சிறப்பான உயர்வைச் சந்தித்துள்ளன. கடந்த சனிக்கிழமை அமெரிக்கா ஈரானுக்கிடையே ஏற்பட்ட மோதல் போர் பதற்றச் சூழலாக உருவெடுக்க தொடங்கியது. அமெரிக்கா – ஈரான் மாறி மாறி ஏவுகணைத் தாக்குதலை நடத்திவரும் நிலையில், நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் சுமுக பேச்சுவார்த்தையை விரும்புவதாகத் தெரிவித்தார். இதையடுத்து இன்று சர்வதேச […]

Categories
உலக செய்திகள்

போர்: டிரம்புக்கு ஸ்பீடு பிரேக்!

ஈரானுக்கு எதிரான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் போர் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற அவையான ஹவுஸ் நேற்று (ஜனவரி 9) நிறைவேற்றியிருக்கிறது. இதன்படி அவையின் ஒப்புதல் கிடைக்காவிட்டால், 30 நாட்களுக்குள் ஈரானுடனான மோதலில் இருந்து யு.எஸ். படைகளை டிரம்ப் திரும்பப் பெற வேண்டும் என்ற நிர்பந்தம் டிரம்ப்புக்கு ஏற்பட்டிருக்கிறது. ஈரான் ராணுவ தலைவர் சுலைமானியை ட்ரோன் தாக்குதல் மூலம் அமெரிக்க ராணுவம் கொலை செய்ததற்கு பதிலடியாக, ஈராக்கில் இருக்கும் இரு அமெரிக்க ராணுவ தளங்களின் […]

Categories
உலக செய்திகள் செய்திகள் வானிலை

‘ஓநாய் சந்திர கிரகணம்’அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அறிவித்தது…!!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இந்த ஆண்டில் நிகழவிருக்கும் முதல் சந்திர கிரகணத்திற்கு ‘ஓநாய் சந்திர கிரகணம்’ எனபெயரிட்டுள்ளது…!! பூமி  நிலவுக்கும், சூரியனுக்கும் இடையே கடக்கும்போது நடக்கும் ஒரு நிகழ்வு சந்திர கிரகணம் ஆகும்.சந்திர கிரகணத்தால் பூமியில் விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்திற்கு மங்கிய நிலையில் காணப்படும். கிரகணம் உச்சியில் வரும்போது நிலவின் வெளிப்புற அடுக்கு பூமியின் நிழலில் மீது விழும். மேலும் 90 சதவிகித நிலவு பூமியால் மறைக்கப்படும்போது  கிரகணம் உச்சத்தில் இருக்கும். […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா – ஈரான் மோதல்: உலகளவில் பங்குச்சந்தை சரிவு!!

அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் மோதலால் உலகளவில் பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவிற்குமிடையில் அதிகரித்துவரும் போர் பதற்றங்களால் உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலை எதிர்பாராத வகையில் உயர்ந்துள்ளது. மேலும் டோக்கியோ பங்குச்சந்தை கிட்டத்தட்ட இரண்டு விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. ஹாங்காங்கின் பங்குச்சந்தை ஏறக்குறைய ஒரு விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. அதேபோல் ஷாங்காய், சிட்னி, தென்கிழக்கு ஆசிய சந்தைகளும் சரிவை சந்தித்தன. ஈராக்கில் உள்ள இரண்டு விமானத் தளங்களுக்கு எதிரான ஏவுகணைத் தாக்குதல் பற்றிய செய்தி வெளியான நிலையில், டோக்கியோ […]

Categories
உலக செய்திகள்

நாங்க ஏற்கனவே அவதிப்பட்டுட்டோம்… அதனால இவங்க பிரச்சனையில தலையிடமாட்டோம் – இம்ரான் கான் திட்டவட்டம்!

அமெரிக்கா – ஈரான் மோதலில் பாகிஸ்தான் தலையிடாது என அந்நாடு பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உட்சக்கட்ட பதற்றம் நிலவிவருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான், “மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவிவரும் சூழல் கவலை அளிப்பதாக […]

Categories
உலக செய்திகள்

ஈரானை தனிமைப்படுத்த வேண்டும்…. நான் இருக்கும் வரை நடக்காது… எச்சரித்த டிரம்ப்!

உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வாரம் அமெரிக்க ராணுவம் நடத்திய ஆளில்லா விமானம் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரான் பாதுகாப்புப் படை தளபதியும், அந்நாட்டு போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடி தரும் விதமாக, ஈராக்கில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டிருக்கும் அல் ஆசாத் மற்றும் இர்பில் ஆகிய இரண்டு விமானத் தளங்கள் மீது ஈரான் இன்று அதிகாலை ஏவுகணைத் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை வெளியேற்றுவதே உண்மையான பழிவாங்கல் – ஈரான் அதிபர் உறுதி

தெஹ்ரான்: மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதே உண்மையான வெற்றி என்று ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து, அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தளங்களின் மீது புதன்கிழமை (ஜனவரி 8) அதிகாலை ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி கூறுகையில், ”  மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து அமெரிக்காவை முழுவதும்  வெளியேற்றுவதே எங்கள் உண்மையான வெற்றி” என்றார். […]

Categories
உலக செய்திகள்

‘தண்ணீர்.. தண்ணீர்..!’ ஐந்தே நாட்களில் பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டு வீழ்த்த ஆஸி., இலக்கு!

ஆஸ்திரேலியாவில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சுமார் பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் அனங்கு பிட்ஜந்த்ஜட்ஜாரா யான்குனிட்ஜட்ஜாரா (Anangu Pitjantjatjara Yankunytjatjara) பகுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள வனப்பகுதிகளிலிருந்து ஒட்டகங்கள் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மக்களின் சிரமத்துக்கு ஒட்டகங்கள் அருந்தும் தண்ணீர் பிரதான காரணம். இதனால், ஆஸ்திரேலியா அரசாங்கம் பத்தாயிரம் ஒட்டகங்களை ஹெலிகாப்டர் மூலமாக சுட்டுக்கொல்ல முடிவு […]

Categories
உலக செய்திகள்

BREAKING : உச்ச கட்ட பதற்றம்… 80 ராணுவ வீரர்கள் பலி… ஈரானின் அதிகாலை அதிரடி!!

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 80 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வாரம் அமெரிக்க நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் பாதுகாப்புப் படையின் முக்கியத் தளபதியும் அந்நாட்டின் போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதலை உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. சுலைமானி கொலைக்கு அமெரிக்காவைப் பழிவாங்கியே தீருவோம் என சூளுரைத்திருந்த நிலையில், […]

Categories
உலக செய்திகள்

BREAKING : ஈரான் விமான விபத்தில் 170 பேரும் உயிரிழப்பு …!!

ஈரான் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் கீழே விழுந்து நொறுங்கி 170 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தலைநகர் டெக்ரானில் உள்ள  இமாம் கோமானி விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த போயிங் 737 விமானம் விபத்துள்ளாகியுள்ளது. ஊழியர் பயணிகள் என 170 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. போயிங் 737 ரக இந்த விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கம் என்பதால் இது தொழில்நுட்ப கோளாறா […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

BREAKING : போர் பதற்றம்…. ஈரான், ஈராக், செல்ல வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்.!!

ஈரான், ஈராக், வளைகுடா வான் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என இந்திய அரசு அறிவித்துள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வாரம் அமெரிக்க மேற்கொண்டு வான்வழித் தாக்குதலில் ஈரான் பாதுகாப்புப் படையின் முக்கியத் தளபதியும் அந்நாட்டின் போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதலை உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. சுலைமானி கொலைக்கு அமெரிக்காவைப் பழிவாங்கியே தீருவோம் என சூளுரைத்திருந்த நிலையில், ஈராக்கில் அமைந்துள்ள […]

Categories
உலக செய்திகள்

ஈரான் ஏவுகணைத் தாக்குதல் : “எல்லாம் நலம்தான்” – ட்ரம்ப் ட்வீட்..!!

அமெரிக்க விமானத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது குறித்து ட்வீட் செய்திருந்த ட்ரம்ப், எல்லாம் நலமாக இருப்பதாகவும் இதுகுறித்து நாளை அறிக்கைவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டிருந்த ட்வீட்டில், “ஈராக்கில் அமைந்துள்ள இரண்டு ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் எத்தனைப் பேர் உயிரிழந்துள்ளனர், எவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது என்பன குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரையில் எல்லாம் நலமாகவே உள்ளது. எந்தப் பிரச்னையும் இல்லை. உலகம் […]

Categories
உலக செய்திகள்

BREAKING : 180 பேர் பலி….. விமான விபத்தால் ஈரானில் சோகம் ….!!

ஈரான் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துள்ளாகியுள்ளது. ஈரான் தலைநகர் டெக்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த போயிங் 737 விமானம் விபத்துள்ளாகியுள்ளது. 180 பேருடன் டெக்ரான் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. போயிங் 737 ரக இந்த விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கம் என்பதால் இது தொழில்நுட்ப கோளாறா ? அல்லது போர் சூழல் காரணமாக விமானம் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளதா […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க விமான தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! – உச்சகட்ட பதற்றம்

ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க விமான தளம் மீது ஈரான் இன்று அதிகாலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வாரம் அமெரிக்க மேற்கொண்டு வான்வழித் தாக்குதலில் ஈரான் பாதுகாப்புப் படையின் முக்கியத் தளபதியும் அந்நாட்டின் போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதலை உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. சுலைமானி கொலைக்கு அமெரிக்காவைப் பழிவாங்கியே தீருவோம் என சூளுரைத்திருந்த நிலையில், […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பதற்றம்: கச்சா எண்ணையின் விலை உயர்வு!

அமெரிக்கா – ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால் கச்சா எண்ணையின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி அண்மையில் அமெரிக்காவால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து ஈராக், அமெரிக்க படைகளை வெளியேற்றினால் ஈராக் மீது பொருளாதார தடை விதிப்போம் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதன் எதிரொலியாக கச்சா எண்ணையின் விலை அதிகரித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

காசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலம் – பெருந்திரளான மக்கள் பங்கேற்பு

அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளான மக்கள் மரியாதை செலுத்தினர். ஈரான் தலைநகர் தெங்ரேனில் கடல் போல திரண்டிருந்த பொதுமக்கள், ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கண்ணீருடன் சுலைமானிக்கு இறுதி மரியாதை செலுத்தினார். இறுதி ஊர்வலம் நடைபெற்ற தெஹ்ரேன் பல்கலைக்கழகத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை முதலே, பெருந்திரளான மக்கள் ஈரானிய கொடிகளுடனும் […]

Categories
உலக செய்திகள்

‘பக்’ நாயின் இன்னொரு முகத்தை பாத்தீங்களா… இதோ வைரலாகும் புகைப்படம்!

பிரபலமான பக் நாயின் எம்ஆர்ஐ ஸ்கேன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ‘பக்’ வகை நாய்கள் பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கும். தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்த பக் நாயுடன் புகைப்படங்கள் எடுப்பதிலும் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். சமீபத்தில், பிரபலமான திரைப்பட காமெடியன் ஆண்டி ரிக்டர் ( Andy Richter ) தனது ட்விட்டர் பக்கத்தில், நண்பரின் பக் நாயின் முகத்தை எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து அதன் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் ஆச்சரியத்தில் […]

Categories
உலக செய்திகள்

பழிவாங்குவோம்; ஈரானின் புதிய தளபதி சபதம்

ஈரானின் புதிதாக பொறுப்பேற்ற தளபதி மேஜர் ஜெனரல் இஸ்மாயில் காணி ,சுலைமானின் கொலைக்கு பழிவாங்க போவதாக  சபதம் ஏற்றார்.   அமெரிக்க தாக்குதலில் ஈரானின் தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். பின்னர் அவரது இடத்திற்கு புதிதாக பொறுப்பேற்ற தளபதி மேஜர் ஜெனரல் இஸ்மாயில் காணி,  கொல்லப்பட்ட சுலைமானின் இறுதி  சடங்கில் கலந்துகொண்டார். அப்பொழுது காணி அவரது பிரேதப் பெட்டியின் மேல் விழுந்து கதறி அழுதார். மேலும் சுலைமானின் கொலைக்கு பழிவாங்க போவதாக சபதம் ஏற்றார். மேலும் சுலைமானியின் பாதையில் […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் தலைய கொண்டு வந்தீங்கன்னா… உங்களுக்கு இத்தனை கோடி?…. விலை நிர்ணயம் செய்த ஈரான்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலையைக் கொண்டுவருபவருக்கு 80 மில்லியன் டாலராக ஈரான் பரிசுத்தொகை நிர்ணயம் செய்துள்ளது. ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியைக் கொலைசெய்ய உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலைக்கு 80 மில்லியன் டாலர் விலை நிர்ணயம் செய்து ஈரான் அறிவித்துள்ளது. சுலைமானியின் இறுதி ஊர்வலத்தை ஒளிபரப்பிய ஈரான் அரசு ஊடகத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக ஈரானிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய ரூபாயின் மதிப்பில் 80 மில்லியன் டாலர் என்பது 576 […]

Categories
உலக செய்திகள்

ஈரானின் 52 இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் – டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன்: ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கைவிடுத்துள்ளார். ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் செல்வாக்குமிகுந்த ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவத் தளபதி அபு மஹதி அல் முகந்திஸி உள்பட ஏழு பேரும் உயிரிழந்தனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பழித் தீர்ப்போம் என்று ஈரான் வெளிப்படையாக அறிவித்தது. மேலும், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம், […]

Categories
உலக செய்திகள்

பொருளாதாரத் தடை – ஈராக்கை மிரட்டும் ட்ரம்ப்

வாஷிங்டன் : ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டால் அந்நாட்டு மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிப்போம் என அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அரங்கேற்றிய வான்வழித் தாக்குதலால், ஈரான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிமுக்கிய தளபதிகளுள் ஒருவரான இது அமெரிக்கா-ஈரான் மோதலை உச்சத்துக்கு எடுத்துச்சென்றுள்ளது. ஈரானை தவிர, ஈராக், சவுதி அரேபியா, இஸ்ரேல், சிரியா என மத்தியக் கிழக்கு பிராந்தியமே பதற்றநிலையில் உள்ளது. அமெரிக்காவின் செயலால் […]

Categories
உலக செய்திகள்

போருக்கு தயார்… கிளம்பியது 3,500 அமெரிக்கப்படை… குவைத்தில் பதற்றம்!

ஈரான் புரட்சி படையின் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதை தொடர்ந்து, குவைத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஈராக் தலைநகரம் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில், அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் அந்நாடு நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின், குத்ஸ் படைப்பிரிவு (Quds Force) தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இவருடன் மேலும் ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகமெங்கும் பேசும் பொருளாக மாறியது. இதைத் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

‘அமெரிக்காவுக்கு சாவு இருக்கு’ – கூட்டாக முழங்கிய ஈரான் எம்.பி.கள்..!!

ஈரான் ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதைக் கண்டித்து ஈரான் எம்.பி.கள் அமெரிக்காவுக்கு எதிராக தங்கள் நாடாளுமன்றத்தில் கோஷங்களை எழுப்பினர். ஈராக்கில் உள்ள பாக்தாதில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி கசோம் சுலைமானி உள்ளிட்ட ஏழு பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க மக்களின் நலன் கருதியே கசோம் சுலைமானி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் சுலைமானியின் மரணத்துக்கு கண்டிப்பாக பழி தீர்ப்போம் என்று ஈரான் வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. இந்நிலையில், ஈரான் நாடாளுமன்றம் 290 […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

பாகிஸ்தானில் 25 வயதான சீக்கியர் கொலை…!!

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க சீக்கியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள நன்கான சாஹிப் குருத்வாரப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சீக்கியர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் சிறுபான்மைப் பிரிவினரான சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் அரசு சீக்கியர்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை மட்டுமல்லாது, பாஞ்சாப் மாநிலத்தலைவர்களும் வலியுறுத்தினர். இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பெஷவார் […]

Categories
உலக செய்திகள்

“ஈரான் தளபதி மரணம்” ATTROCITY செய்யும் அமெரிக்கா…. பாகிஸ்தானிடம் பதுங்குவது ஏன்….. வல்லுநர்கள் கேள்வி…!!

ஈரான் தளபதியை கொன்று பெருமை பேசும் அமெரிக்கா பாகிஸ்தானிடம் மவுனம் காப்பது ஏன் என்று பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் விவகார நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஈரான் இராணுவத்தளபதி சோலிமானி  கொல்லப்பட்டது குறித்து விளக்கம் அளித்த அமெரிக்கா டெல்லி முதல் லண்டன் வரையிலான பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு அவர் மூளையாக செயல்பட்டார் என்றும் அதனாலேயே அவர் கொல்லப்பட்டார் என்றும் விளக்கம்  அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பயங்கரவாதி சோலிமானியை ஆளில்லா விமானம் மூலம் கொன்ற அமெரிக்கா அதே காரணத்திற்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதிகளை […]

Categories
உலக செய்திகள்

ஈரானின் 52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் – டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கைவிடுத்துள்ளார். ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் செல்வாக்குமிகுந்த ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவத் தளபதி அபு மஹதி அல் முகந்திஸி உள்பட ஏழு பேரும் உயிரிழந்தனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பழித் தீர்ப்போம் என்று ஈரான் வெளிப்படையாக அறிவித்தது. மேலும், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

விசா வேணாம்…… ரிட்டன் டிக்கெட் போதும்….. 15 நாள் சுத்தி பாக்கலாம்….. மலேசியா அரசு அதிரடி OFFER…!!

மலேசியாவிற்கு சுற்றுலா வர விரும்பும் இந்தியர்கள் விசா இல்லாமல் வரலாம் என்ற புதிய அறிவிப்பை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவை தவிர்த்து பிற உலக நாடுகளில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக விசா என்பது தேவைப்படும். அதை பெறுவதற்கு பல்வேறு முறைகள் தேவைப்படும் பட்சத்தில் இந்தியர்களை ஈர்க்கும் விதமாக மலேசிய அரசு புதிய அறிவிப்பை அந்நாட்டு அரசு இதழில் வெளியிட்டு உள்ளது.  அதில் குறிப்பிட்டிருப்பதாவது, மலேசியாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள விரும்பும் இந்தியர்கள் விசா […]

Categories
உலக செய்திகள்

NEWYEARSPECIAL……”10,000 தகவல்கள் பரிமாற்றம்” புதிய உலக சாதனை படைத்த வாட்ஸ்அப்…!!

புத்தாண்டு தினத்தையொட்டி வாட்ஸப்பில் 10,000 தகவல்கள் பரிமாற்றப்பட்டு புதிய சாதனையை அந்நிறுவனம் எட்டியுள்ளது. முன்பெல்லாம் புதிய ஆண்டு பிறக்கப் போகிறது என்றால் கடிதங்கள் மூலம் வாழ்த்து செய்திகள் உறவினர்களுக்கு தெரிவிக்கப்படும். முகநூல் அறிமுகம் ஆனதையடுத்து இண்டர்நெட்டை பயன்படுத்தி அதில் வாழ்த்து செய்திகளை தெரிவித்து வந்தனர் மக்கள். தற்போது 10 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய வாட்ஸ்அப் மூலமே அதிகமான தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. புத்தாண்டு தினத்தன்றும் அதேபோல் அதிகமான வாழ்த்துக்கள் வாட்ஸ்அப் மூலம் பரிமாறப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி […]

Categories
உலக செய்திகள்

“சுற்றுசூழலை பாதுகாக்க” 10 ஆண்டுகள் மீன் பிடிக்க தடை…… பரிதாபத்தில் 2,00,000 மீனவர்கள்….!!

சீன அரசு அடுத்த 10 ஆண்டுகளுக்கு யாங்ட்சீ  ஆற்றில் மீன்பிடிக்க தடை விதித்து உள்ளது. சீன நாட்டின் பெரிய ஆறாக கருதப்படும் யாங்ட்சீ  ஆற்றில் 1950களில் 4 லட்சத்து 20 ஆயிரம் டன் மீன்கள் அந்நாட்டு மீனவர்களால் பிடிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது ஒரு லட்சம் டன் மீன்கள் கூட ஓராண்டில் பிடிக்கப்படுவதில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மிக அதிகமான மீன் பிடித்ததால் சுற்றுச்சூழல் சீர்கேடு  ஏற்பட்டு யாங்ட்சீ ஆற்றின் தன்மை காலப்போக்கில் மாறியதால் மீன்களின் வரத்து […]

Categories
உலக செய்திகள்

“புதர் தீ” சர்ச்சையில் சிக்க தயாராக இல்லை…. இந்திய பயணம் ரத்து….. ஆஸ்திரேலிய பிரதமர் அதிரடி முடிவு…!!

ஆஸ்திரேலியா புதர் தீக்கு  எதிரொலியாக தமது இந்திய பயணத்தை ரத்து செய்ய இருப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின்  பல்வேறு மாநிலங்களில் புதர்  பற்றி எரிந்து வரும் சூழலில் நாட்டை விட்டு செல்வது பொருத்தமானதாக இருக்காது  என்ற விமர்சனம் எழுந்த நிலையில், இம்மாதம் 13-ம் தேதி இந்தியா வரும் திட்டத்தை ரத்து செய்துள்ளார் ஆஸ்திரேலியா பிரதமர்.  ஏற்கனவே இம்மாதிரியான ஒரு பிரச்சினை ஆஸ்திரேலியாவில் நிலவிய பொழுது அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் குடும்பத்தினருடன் விடுமுறைக்காக ஹவாய் தீவுக்கு […]

Categories
உலக செய்திகள்

எங்க கொடி பறக்குதா…!… ”யாரு கிட்ட மோதுற” அமெரிக்கா டா… டிரம்ப் ட்வீட்

ஈராக் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலை வெளிப்படுத்தும் வகையில் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்  ஈராக் நாட்டின் பாக்தாத் விமான நிலைய தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை ராணுவ தளபதி காசிம் சோலிமானி பலியாகியுள்ள சம்பவம் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின்  துணை தலைவர் அபு மஹாதியும் இறந்தார். ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் அபு மஹாதி ஈரான் ஆதரவுடன் இயங்கியதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே போல அமெரிக்கா அதிபர் டொனால்ட் […]

Categories
உலக செய்திகள்

BREAKING : அமெரிக்கா தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி உயிரிழப்பு ….!!

ஈராக் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டார். ஈராக் நாட்டின் பாக்தாத் விமான நிலைய தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை ராணுவ தளபதி காசிம் சோலிமானி பலியாகியுள்ள சம்பவம் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின்  துணை தலைவர் அபு மஹாதியும் இறந்தார். ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் அபு மஹாதி ஈரான் ஆதரவுடன் இயங்கியதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே போல அமெரிக்கா அதிபர் டொனால்ட் […]

Categories
உலக செய்திகள்

சிறைக்குள் மோதல் – 16 கைதிகள் பலி

மெக்சிகோவில் சிறைக்குள் ஏற்பட்ட மோதலில், 16 கைதிகள் கொல்லப்பட்டனர். மெக்சிகோவின் ஜகாடிகாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையில் இன்று கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதலில், 16 கைதிகள் கொல்லப்பட்டதாவும், ஆறு பேர் காயமடைந்ததாவுகம் சிறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்நாட்டின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் பதிவிட்டிருந்த ட்வீட்டில், “இன்று மாலை 5 மணியளவில் (உள்ளூர் நேரம்) கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தன. இந்தச் சம்பவத்தில் 16 கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும், ஆறு […]

Categories
உலக செய்திகள்

“NEW YEAR SPECIAL” சுறா மீனுடன் டூயட் ஆடிய ரஷ்ய இளைஞர்…… வைரலாகும் வீடியோ…!!

ரஷ்யாவில் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது நீச்சல் வீரர் ஒருவர் சுறா மீனை கட்டிப்பிடித்தபடி நடனமாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரஷ்ய நாட்டின்  செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள நெப்டியூன் வணிக வளாகத்தில் பிரமாண்டமான மீன் கண்காட்சி அமைக்கப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பம்சங்கள் மீன்கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அப்பொழுது பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட கண்ணாடி தொட்டிக்குள் நீச்சல் வீரர் ஒருவர் உள்ளே இறங்கி சுறாமீன் ஒன்றை கட்டி பிடித்து நடனமாடி பார்வையாளர்களை உற்சாகமூட்டினார். பின் […]

Categories
உலக செய்திகள்

“செல்பி மோகம்” தூக்கி வீசிய ஆழிபேரலை….. கடலுக்குள் சென்ற வாலிபர் மாயம்….!!

அமெரிக்காவில் கடல் சீற்றத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின்  கலிபோர்னியா மாகாணத்தில்  சாண்டா குரூஸ் கடலின் உள்பகுதி பாறையின் மீது  ஒருவர் ஏறி நின்று கடல் அலையை படம்பிடித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென எழுந்து வந்த பேரலை ஒன்று அந்த வாலிபரை தூக்கி வீசி எறிந்தது. பின் மீண்டும் வந்த மற்றொரு பெரிய அலை அவரை  பின்னால் தள்ள அலையின் தாக்கத்தில் வாலிபரும் இழுத்து செல்லப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து விளையாட்டில் திடீர் மோதல்……. 16 பேர் மரணம்…… மெக்ஸிகோ போலீஸ் தீவிர விசாரணை….!!

மெக்ஸிக்கோவில் கால்பந்து விளையாடும் பொழுது ஏற்பட்ட மோதலில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ, ஸகாடகாஸ் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே கால்பந்து விளையாட்டு தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக சிறை நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் கைதிகள் குழுவாக இணைந்து கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது சில கைதிகள் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. பின்  மோதலை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் ஆயுதங்களுடன் சிறைக்குள் நுழைந்தனர். அதற்குள் கைதிகளுக்கு இடையே […]

Categories
உலக செய்திகள்

கடலை நோக்கி ஓடும் மக்கள்…நான்கு பேர் மாயம்!! 

காட்டுத் தீயை அணைக்க நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களின் கடற்கரையோரப் பகுதிகளுக்கு ராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அந்த நாட்டின் அரசு தெரிவித்துள்ளது. காட்டுத் தீயினால் மலக்கூட்டாவில் உள்ள மக்கள் கப்பலில் ஏறி கடலுக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வானம் ரத்தம் போல் சிவந்து காணப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பியது ஒரு பயங்கரமான அனுபவம் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். அங்குள்ள மக்களை மீட்பதற்கு ராணுவ விமானம் பயன்படுத்தப்படவுள்ளது. இதுவரை […]

Categories
உலக செய்திகள்

2019 உலக நிகழ்வுகள் ஒரு அலசல்.!!

உலக வல்லரசு நாடு எதிர்கொள்ளவிருக்கும் பொதுத்தேர்தல், பின்லாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் மரின், உலகை காக்க வந்த கிரெட்டா தன்பெர்க், குர்துகளை நட்டாற்றில் விட்டுச்சென்ற அமெரிக்க பாதுகாப்புப் படை, தீக்கிரையான பழம்பெரும் தேவாலயம், பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன், முடிதுறந்த மன்னர், வெளிச்சத்துக்கு வந்த இருள், ஈஸ்டர் தாக்குதல், தயங்கி நிற்கும் சீனா என 2019ஆம் ஆண்டு நடந்த சில முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக இங்கு காணலாம். 1) சர்ச்சைப் பேரரசனுக்கு செக்! அடாவாடி பேச்சாலும் ட்வீட்டுகளாலும் அடிக்கடி […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

2020 புத்தாண்டே வருக… வருக…! – வானை வண்ணமயமாக்கிய வாணவேடிக்கைகள்..!!

2020 புத்தாண்டை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வாணவேடிக்கைகள், கொண்டாட்டங்களுடன் வரவேற்றன. பசிபிக் நாடுகள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் உள்ள பெருநகரங்கள் வழக்கம்போல வாணவேடிக்கைகளால் வளிமண்டலத்தை அலங்கரித்தனர். இதனைக்காண குடும்பத்துடன் திரளாக வந்த மக்கள் அன்னாந்து பார்த்து புத்தாண்டை வருக வருக என வரவேற்றனர். கொரியாக்கள் வடகொரியர்கள் தங்களுக்கே உரிய பாணியில் பாரம்பரிய கொரிய பாடலைப் பாடியும், வாணவேடிக்கைகள் நடத்தியும் புத்தாண்டை வரவேற்றனர். தலைநகர் பியாங்யாங்கில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் […]

Categories
உலக செய்திகள்

ஃபான்ஃபோன் புயலுக்கு 47 பேர் பலி… மேலும் அதிகரிக்க வாய்ப்பு..!!

பிலிப்பைன்ஸில் வீசிய ‘ஃபான்ஃபோன்’ புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸில் வீசிய ‘ஃபான்ஃபோன்’ புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வீசிய இந்தப் புயலில், நாட்டின் பல்வேறு பகுதிகளை பாதிப்புக்குள்ளாகின. இந்த புயலானது மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதில் வீடுகளின் கூரைகள் பிய்த்து எறியப்பட்டன. மின் கம்பங்கள் சரிந்தன. இந்தச் சம்பவங்களில் 28 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அலுவலர்கள் இருதினங்களுக்கு முன் கூறியிருந்த நிலையில், தற்போது […]

Categories
உலக செய்திகள்

ஏமனில் ஏவுகணைத் தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு..!!

ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் ராணுவ அணிவகுப்பை குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். ஏமனில் கடந்த 5 வருடங்களாக உள்நாட்டுப் போர் நிலவிவருகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரக ஆதரவோடு செயல்பட்டு வரும் செக்யூரிட்டி பெல்ட் ஃபேஸ் என்ற கிளர்ச்சியாளர் அமைப்பு சார்பாக இன்று ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. நாட்டில் தெற்கு மாகாணமான தலைநகர் தெலேவில் நடந்த இந்த அணிவகுப்பு நிறைவடையும் தற்யுவாயில், திடீரென அங்கு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஏவுகணைத் தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

9 மாதம்…55 மில்லியன் ஜிபி டேட்டா காலி செய்த-நாடு..! 

2019ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை மட்டும் சுமார் 55 மில்லியன் ஜிபி டேட்டாவை இந்தியா பயன்படுத்தியுள்ளதாக டிராய் அறிவித்துள்ளது. இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இது தொர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் 2014ஆம் ஆண்டு 281.58 மில்லியனாக இருந்த டேட்டா பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, நான்கு ஆண்டுகளில் இரட்டிப்பாகி 664.80 மில்லியனாகியுள்ளது. இதுமட்டுமின்றி, 2014ஆம் ஆண்டு 828 மில்லியன் ஜிபி-ஆக இருந்த டேட்டா பயன்பாடு, வெறும் நான்கு ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்து 2018-19 ஆண்டில் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

கண் பார்வையை திரும்பப் பெற முடியுமாம்…!!அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்…!!

செயற்கை விழித்திரை மூலம் கண் பார்வை பெற முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்…!! கண்களின் விழித்திரையில் ஒளி அடுக்குகள் பாதிக்கப்பட்டு பாதி நிலையில்தான்   கண் இழப்புகள் ஏற்படுகின்றன. இது ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்களை பாதிக்கின்றது.மேலும் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இதை சரி செய்யும் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். தற்போது அவர்கள் செயற்கை விழித்திரையை உருவாக்கி அதன் மூலம் இழந்த கண்பார்வையை பெற முடியும் என கண்டுபிடித்துள்ளனர். செயற்கை விழித்திரையில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுடன் நெருக்கமாகும் உஸ்பெகிஸ்தான்?

ஆப்கானிஸ்தான், சபாஹர் துறைமுகம் ஆகிய விவகாரங்களில் உஸ்பெகிஸ்தான் இந்தியாவுடன் நெருக்கமான ஒத்துழைப்பை மேற்கொண்டுவருகிறது. உஸ்பெகிஸ்தானில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் அந்நாட்டின் ஜனநாயக சீர்திருத்தங்களை வலுப்படுத்தும். டிசம்பர் 22ஆம் தேதி, 150 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. ஐந்து முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. உஸ்பெகிஸ்தானின சுதந்திர ஜனநாயக கட்சி 43 தொகுதிகளை கைப்பற்றியது. தேசிய மறுமலர்ச்சி கட்சி 35 இடங்களில் வெற்றிபெற்றன. புதிய தேர்தலின் மூலம் புதிய உஸ்பெகிஸ்தான் உருவாக்கப்படும் என […]

Categories
உலக செய்திகள்

குளியலறையில் வழுக்கி விழுந்த அதிபருக்கு ஏற்பட்ட நிலை?

குளியலறையில் வழுக்கி விழுந்து காயமடைந்த பிரேசில் அதிபா் ஜெயிர் பொல்சொனாரோவுக்கு தற்காலிகமாக நினைவுத் திறன் இழப்பு ஏற்பட்டுள்ளது. பிரேசில் அதிபா் ஜெயிர் பொல்சொனாரோ, தனது இல்லத்திலுள்ள குளியலறையில் டிசம்பர் 24ஆம் தேதி வழுக்கி விழுந்தார். அதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். அதனைத் தொடா்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம் இப்போது நலமாக இருப்பதாக நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளார். எனினும், குளியலறையில் வழுக்கி விழுந்ததைத் தொடர்ந்து, தனது பழைய நினைவுகள் மறந்து […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் ஆயுத ரகசியம் சீனாவுக்கு விற்பனை?

இந்திய வம்சாவளி அமெரிக்க குடிமகனான நோஷிர் கோவாடியா, அமெரிக்காவின் திருட்டு தனமான குண்டுவீச்சு ரகசியங்களை சீனாவுக்கு விற்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது உலகின் சக்தி வாய்ந்த பிற நாடுகளையும் கவலைக் கொள்ள செய்துள்ளது. இதுதொடர்பாக சஞ்சிப் கே.ஆர். பருவா எழுதியுள்ள தலையங்கத்தை காணலாம். உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் அச்சத்தில் உள்ளன. பிறப்பால் ஒரு இந்தியரும், அமெரிக்க குடிமகனுமான நோஷிர் கோவாடியா, அமெரிக்காவின் திருட்டுத்தனமான குண்டுவீச்சு ரகசியங்களை சீனாவுக்கு விற்றதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அமெரிக்கா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இவர் தான் மைக்கேல் ஜாக்சன்..இவருக்கு டி.என்.ஏ. சோதனை செய்ய வேண்டும்…ரசிகர்கள் வற்புறுத்தல்

பார்சிலோனா : மறைந்த மைக்கேல் ஜாக்சன் போல் அச்சு அசலாக உள்ள செர்ஜியோ கோர்டெஸ் தான் மைக்கேல் ஜாக்சன் இல்லை என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாப் உலக மன்னன் மைக்கேல் ஜாக்சன். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் இறந்தார். இந்த நிலையில் அர்ஜென்டினாவின் பார்சிலோனாவில் பிறந்தவரும், தற்போது பாப் உலகில் வளர்ந்து […]

Categories

Tech |