Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்க்கு முடிவுரை எழுதும் இந்தியா..!!

சீனாவில் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் வைரஸை குணப்படுத்த மருந்து தயாரிக்கும் பணியில் உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்தமருத்துவ  கண்டுபிடிப்புக்கு ஆராய்ச்சியாளர்களின் குழுவை இந்தியாவை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் வழிநடத்தி வருகிறார். கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை சீனாவில் மட்டும் சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். மேலும் 31 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சீனாவிலிருந்து மெல்ல, மெல்ல இந்தியா உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் கொஞ்சம், கொஞ்சமாக கொரோனா வைரஸ் தன் பயணத்தை தொடங்கியது. நோய் […]

Categories
உலக செய்திகள்

தீவில் தவித்தவருக்கு உதவிக்கரம் நீட்டிய மனித குரங்கு – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இந்தோனேசியாவில் சகதியில் சிக்கிய ஒருவருக்கு  மனித குரங்கு ஒன்று உதவும் மனதுடன் தனது கரங்களை நீட்டிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் அழிந்து வரும் மனித குரங்குகளை பாதுகாப்பதற்காக தனியார் அமைப்பு ஒன்று அந்த காட்டில்  உலவும் பாம்புகளை பிடித்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த அமைப்பை சேர்ந்த ஊழியர் ஒருவர் எதிர்பாராதவிதமாக குட்டையில்  தவறி விழுந்து விட்டார். இடுப்பளவு சகதி நிரம்பி இருந்த அந்த குட்டையில் அவர்  சிக்கிக்கொண்டார். அப்போது […]

Categories
உலக செய்திகள்

தாய்லாந்தில் ராணுவ வீரர் திடீர் துப்பாக்கி சூடு; அப்பாவி மக்கள் 25 பேர் பலி ..!

தாய்லாந்து நாட்டில் வணிக வளாகம் ஒன்றில் ராணுவ வீரர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர்.  தாய்லாந்து நாட்டின் வடகிழக்கே பாங்காக் நகரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் நாகோன் ராட்சசிமா பகுதியில் வணிக வளாகம் ஒன்றுஅமைந்துள்ளது. அந்த வணிக வளாகம் முன் கார் நிறுத்தி அதிலிருந்து இறங்கிய  வந்த ராணுவ வீரர் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த மக்களை நோக்கி கண்முடித்தனமாக சுட தொடங்கினார்.  இந்த துப்பாக்கி சூட்டில் […]

Categories
உலக செய்திகள்

811 பேர் பலி…. 37,198 பேர் பாதிப்பு…… சார்ஸை மிஞ்சிய கொரோனா…..!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சார்ஸ் தொற்று வைரஸ் பலி எண்ணிக்கையை தாண்டியது என்று சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  உயிரிழப்புகளால் உலக நாடுகள் அச்சத்தில் இருந்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.வைரஸ் பாதிப்பால் அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இந்த வைரஸுக்கு  தடுப்பு மருந்துகளை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்: சீனாவில் தொடரும் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இதுவரை சீனாவில் 722 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபே, வூகான் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில், சீனாவில் தற்போது வரை 722 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். மேலும் 34,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹூபே மாகாணத்தில் மட்டும் மூவாயிரத்து 399 […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம்!

ஆப்கானிஸ்தானில் அதிபருக்கான தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், முடிவுகளை அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், இதனை கண்டிக்கும் விதமாக மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், நாட்டின் பாதுகாப்பும் அரசியல் ஸ்திரதன்மையும் கேள்விக்குறியாகி உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போராட்டக்காரர் ஒருவர் கூறுகையில், “முடிவுகளை […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரோனா பரப்பும் எறும்புதின்னி? ஆய்வில் அதிர்ச்சி ..!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாங்கோலின் (ஆசிய- ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் ஒருவகை எறும்புதின்னி) என்ற விலங்கிடமிருந்து பரவ வாய்ப்பிருப்பதாக சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உலகிலேயே அதிகம் கடத்தப்பட்ட பாலூட்டிகளில் ஒன்றாக பாங்கோலின்கள் (ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் ஒருவகை எறும்புதின்னி) கருதப்படுகிறது. இந்த விலங்குகள் சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் மருத்துவ குணத்துக்காகவும், உணவு உற்பத்திக்காகவும் அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன. தென் சீன வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையிலான ஒரு ஆய்வின்படி, பாங்கோலின்களிலிருந்து பிரிக்கப்பட்ட திரிபு மரபணு வரிசையானது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்: சீனாவில் தொடரும் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இதுவரை சீனாவில் 722 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபே, வூகான் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில், சீனாவில் தற்போது வரை 722 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். மேலும் 34,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹூபே மாகாணத்தில் மட்டும் 3,399 பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

இந்துக்களுக்கு எதிராக பதாகை – பாக். ஆளுங்கட்சி பிரமுகர் மன்னிப்பு

 ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில் இந்துக்களுக்கு எதிராக பதாகை வைக்கப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் ஆளுங்கட்சி பிரமுகர் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். பாகிஸ்தானில் ஆளுங்கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்லாப் கட்சியைச் சேர்ந்தவர் அக்ரம் உஸ்மான். இவர் கட்சியில் லாகூர் பொதுச்செயலாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு விளம்பர பதாகை ஒன்றை நிறுவியிருந்தார். அந்த பதாகை இந்துக்களின் மனதை புண்படுத்தும்படி அமைந்திருந்ததாக சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

அல்கொய்தா இயக்க தலைவர் கொலை – உறுதிப்படுத்திய ட்ரம்ப்

ஏமனில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உறுதி செய்துள்ளார். ஏமனில் அமெரிக்க வீரர்கள் நடத்திய தாக்குதலில் காஸிம் அல் ரிமி மற்றும் அய்மன் அல் ஹவகரி ஆகியோர் கொல்லப்பட்டனர். இவர்கள் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஏமன் பகுதி தலைவராகவும், துணை தலைவராகவும் இருந்தவர்கள். இதுமட்டுமின்றி அரேபியன் பெனிசுலா என்ற இயக்கத்தையும் நடத்திவந்தனர். இந்த இயக்கத்தின் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் இருவரும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இதனை […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானில் மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

ஜப்பானில் மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கட்சுனோபு கேதோ கூறினார். சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆகையால் இங்குள்ள வெளிநாட்டினர் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பிவருகின்றனர். ஜப்பான் அரசும் சுகாதார அவசரநிலையை அறிவித்து சீனாவில் சிக்கியுள்ள ஜப்பானியர்களை மீட்டுவருகிறது. அந்த வகையில் ஹாங்காங்கிலிருந்து 273 ஜப்பானியர்கள் விமானத்தில் அழைத்துவரப்பட்டனர். அவர்களில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளது. தற்போது […]

Categories
உலக செய்திகள்

கொரோனோ குறித்து முதன்முறையாக எச்சரிக்கை விடுத்த மருத்துவர் மரணம்

கொரோனோ வைரஸ் குறித்து முதன்முறையாக எச்சரிக்கை விடுத்த மருத்துவர் அதே வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனோ வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தும் உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ளது. இந்த கொரோனோ வைரஸ் தாக்குதல் காரணமாக இதுவரை 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் உலக அளவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனோ வைரஸ் காரணமாக அனைத்து நாடுகளும் சீனாவுடனான போக்குவரத்து […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்தினர் 5 பேரை…. இரக்கமின்றி கொன்ற கொடூரன்… 17 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை நிறைவேற்றம்..!!

அமெரிக்காவில் குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை கொன்றவழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஆபேல் ஓச்சோவா (Abel Ochoa) என்ற நபர் ஒருவர் கொகைன் போதை மருந்துக்கு அடிமையானதால் தனது மனைவி மற்றும் 2 மகள்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்று விட்டான். மேலும் மாமனார், மைத்துனி ஆகியோரையும் கொலை செய்தான். இதையடுத்து அவன் மனைவியின் காரில் தப்பிச் சென்று கொண்டிருந்தான். அப்போது வழிமறித்த […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க தாக்குதலில் அல்கொய்தா தலைவன் பலி..!!

அல்கொய்தா அமைப்பின் துணை தலைவன் குவாஸிம் அல் ராய்மி கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குவாஸிம் அல் ராய்மி (Qasim al-Raymi0) தலைமையின் கீழ் இருக்கும் அல்கொய்தாவின் அராபிய வளைகுடா பிரிவு பயங்கரவாதிகள் யேமனில் உள்ள அப்பாவி மக்களுக்கு எதிராக தீவிர வன்முறையில் ஈடுபட்டதாகவும், அமெரிக்கா மற்றும் அமெரிக்க படையினருக்கு எதிரான தாக்குதல்களை தூண்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலில் துணை தலைவன் ராய்மி கொல்லப்பட்டிருப்பது, […]

Categories
உலக செய்திகள்

தைரியமாக பாம்பை தோளில் வைத்து செய்தி வழங்கிய பெண்..!!

ஆஸ்திரேலியாவில் பெண் செய்தியாளர் ஒருவர் தனது தோளில் மலைப்பாம்பை வைத்து கொண்டு செய்தி அளித்து கொண்டிருந்தபோது சீரியதால் அவர் பயந்துவிட்டார்.   ஆஸ்திரேலியாவில் சாரா கேட் ( Sarah Cawte) என்ற பெண் ஒருவர் நைன் நெட்வொர்க் சேனலில் செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பாம்புகளின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து சிறப்பு செய்தியை வழங்குவதற்காக வாகா வாகா (Wagga Wagga) என்ற பகுதியில் உள்ள ஒரு பாம்பு பண்ணைக்கு சென்றுள்ளார். அங்கு சென்றதும் தனது […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

வாரணாசி செல்லும் இலங்கை அதிபர்..!!

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தனது 4 நாள் அரசு பயணத்தின்போது வாரணாசிக்கு செல்லவுள்ளார். இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல்முறையாக அந்நாட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு அரசு பயணம் மேற்கொள்ளவுள்ளார். நான்கு நாள் அரசு முறை பயணம் இன்று தொடங்கவுள்ளது. இந்த பயணத்தின்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை ராஜபக்ச சந்திக்கவுள்ளார். இரு நாட்டு உறவுகளை இந்த பயணம் மேலும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த டாக்ஸி ஓட்டுநர் …!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த டாக்ஸி ஓட்டுநர் மருத்துமனையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர் அனுதின் சார்ன்விராகுல் தெரிவித்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் 550க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், சீனாவில் மட்டும் இதுவரை 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

மோடியின் மாபெரும் தவறு, சுட்டிக்காட்டும் இம்ரான்

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் மாபெரும் வரலாற்றுப்பிழையை பிரதமர் மோடி நிகழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள முசாபராபாத் மாகாணத்தில் உள்ள சட்டப்பேரவையில் அந்நாட்டின் முதலமைச்சர் இம்ரான் கான் இன்று உரையாற்றினார். அந்த உரையின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் இம்ரான். குறிப்பாக காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்து பேசிய அவர், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் […]

Categories
உலக செய்திகள்

கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழப்பு

கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பனிச்சரிவில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 33 பேர் உயிரிழந்திருப்பதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். கிழக்கு துருக்கியில் குளிர்காலம் என்பதால் அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே பனிச்சரிவுகள் ஏற்பட்டு, விபத்துகள் தொடர்ந்து நடக்கிறது. நேற்று வேனில் பயணம் செய்த ஒன்பது பேர் இந்தப் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து ஆளுநர் மெஹத்ன் எமின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இதுவரை பனிச்சரிவில் சிக்கிய 14 மீட்புப் படை வீரர்களின் உடல்களும் ஒன்பது பொதுமக்களின் உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. […]

Categories
உலக செய்திகள்

103 வயதில் ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகர் மறைவு.!

75 படங்கள், 92 நடிப்புக்கான அங்கீகாரம் என சூப்பர்ஸ்டார் என்ற பெயர் வருவதற்கு முன் சிறந்த நட்சத்திரமாக ஜொலித்தவர் கிர்க் டக்ளஸ், தனது இறுதி மூச்சை விடுத்து இவ்வுலகை விட்டு பிரிந்தார்.  ஹாலிவுட் பழம்பெரும் நடிகர் கிர்க் டக்ளஸ் உடல்நலக்குறைவால் மறைந்தார். அவருக்கு வயது 103. சூப்பர்ஸ்டார் என்ற பெயர் வழக்கில் வருவதற்கு முன்பே நட்சத்திர நடிகராக ஜொலித்த கிர்க் டக்ளஸ் உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானார். இவரது மறைவை நடிகரும், கிர்க் டக்ளஸின் மகனுமான மைக்கேல் டக்ளஸ் […]

Categories
உலக செய்திகள் சினிமா ஹாலிவுட் சினிமா

பிரிட்டிஷ் ஆசியன் ட்ரஸ்ட் தூதர் – இளவரசர் சார்லஸுடன் கைக்கோக்கும் கேட்டி பெர்ரி

இளவரசர் சார்லஸின் தொண்டு நிறுவனமான பிரிட்டிஷ் ஆசிய தொண்டு நிறுவனத்தின், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தத் திட்டத்தின் தூதராக கேட்டி பெர்ரி நியமிக்கப்பட்டுள்ளார். ரோர் (Roar), ஃபயர் வொர்க் (Fire work), ஐ கிஸ்ட் ஏ கேர்ள் (I kissed a girl) உள்ளிட்ட பிரபல பாப் பாடல்கள் மூலம் உலகமெங்குமுள்ள பாப் இசை உலக ரசிகர்களைத் தன்னுடைய தனித்துவக் குரலால் வசீகரித்து வருபவர் கேட்டி பெர்ரி. இவரைச் சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தன் தொண்டு நிறுவனங்களில் […]

Categories
உலக செய்திகள்

கோர தாண்டவமாடும் கொரோனா : “560 பேர் பலி , 28000 பேர் பாதிப்பு..!

சீனாவில் வேகமாக பரவிவரும் கொரானா வைரஸ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 560 உயர்ந்துள்ளது. சினாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  உயிரிழப்புகளால் உலக நாடுகள் அச்சத்தில் இருந்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. எனவே அங்கு  2 புதிய தற்காலிக மருத்துவமனைகள்  கட்டுவதற்கு அரசு நடவடிக்கை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைராஸால் ஜப்பானில் ஒலிம்பிக் ரத்தாகுமா?

சீனாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைராஸால் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி ரத்தாகுமா அல்லது தொடருமா என்பது குறித்து சர்வதேச டோக்கியோ ஒலிம்பிக்கின் முதன்மை அலுவலர் தோஷிரோ முடோ கூறியுள்ளார். சீனாவின் ஹூபே உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 492 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 24,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்வோரை முழுமையான பரிசோதனை செய்த பிறகே, அனுமதித்து வருகின்றனர். கொரோனா வைரஸின் தாக்கத்தால் சீனாவில் […]

Categories
உலக செய்திகள்

துருக்கியில் விமானம் விபத்து: 3 பேர் பலி, 179 பேர் காயம்

துருக்கியில் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது  இதில்  3 பேர் பலியாயினர் மேலும் 179 பேர் காயம்அடைந்தனர். துருக்கியின் ஏஜியன் நகரில் இருந்து  189 பயணிளை  ஏற்றிக்கொண்டு பெகாசஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இஸ்தான்புலில் உள்ள சபிஹா ஹோக்கன்  விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது  விமானம் ஓடுதளத்தில் இருந்து சறுக்கி 60 மீட்டர் விலகிச்சென்று மோதி நின்றது. மோதிய வேகத்தில்  விமானம் இரண்டாக உடைந்தது. மேலும் தீ பிடிக்க ஆரம்பித்தது . இதனால் பயணிகள் […]

Categories
உலக செய்திகள்

கை கொடுங்க… கண்டுகொள்ளாத டிரம்ப்… கிழித்தெறிந்த சபாநாயகர்..!!

அமெரிக்க அதிபர்  டிரம்ப்பின் பிரதியை (நகலை) எடுத்து நான்சி பெலோசி கிழித்து விட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின்  வாஷிங்டனில் இருக்கும் கேபிட்டல் கட்டிடத்தில், செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அடங்கிய பாராளுமன்ற கூட்டுக் கூட்டம்  (ஸ்டேட் ஆப் தி யூனியன்) நடைபெற்றது. இதில் அதிபர் டொனால்டு டிரம்ப் 3-ஆவது முறையாக உரையாற்றினார். சுமார் ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் ட்ரம்ப் உரையாற்றினார். இந்த உரையின் போது,  பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவை” வென்ற 4 வயது சிறுமி… சொந்த நாட்டுக்கு கிளம்ப தயாரான குடும்பம்..!!

மலேசியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவைச் சேர்ந்த சிறுமி முற்றிலும் குணமடைந்துவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் தெரியும். இந்த வைரஸ் சீனாவின் வுகான் நகரில் இருந்து தான் முதலில் பரவ தொடங்கியது. இதையடுத்து அமெரிக்கா, இந்தியா, மலேசியா உள்பட 23 நாடுகளுக்கு சரசரவென  வேகமாக பரவி விட்டது. எப்படியாவது கொரோனா பரவுவதை தடுத்துவிட வேண்டும் என உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு விதமாக மருத்துவ […]

Categories
உலக செய்திகள்

கடும் தலைவலி…. ”சோதித்ததில் காத்திருந்த அதிர்ச்சி”… மிரண்ட மருத்துவர்கள் ..!!

ஆண் ஒருவரின் தலைக்குள் இருந்த நாடா புழுவை சிக்கலான அறுவைச் சிகிச்சை மூலம் மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த சில மாதங்களாகவே கடும் தலைவலி இருந்துவந்துள்ளது. கடந்த ஆண்டு, கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த அவர், திடீரென்று மயங்கி விழுந்தார். அப்போது மருத்துவமனையில் அவருக்கு எம்.ஐ.ஆர். ஸ்கேன் எடுக்கப்பட்டது. ஸ்கேனில் அவரது தலைக்குள் நாடா புழு இருந்ததைக் கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தலைக்குள் இருந்த நாடா புழுவை அகற்ற, மிகவும் சிக்கலான […]

Categories
உலக செய்திகள்

BIG BREAKING : 492 பேர் பலி…. ”24,000 பேர் பாதிப்பு”… மரண ஓலத்தில் சீனா …..!!

கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  492 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,000 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வூஹான் நகரம், கொரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. கனடா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.   அமெரிக்காவில் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கலிஃபோர்னியா […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பீதியில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம்: கவனிக்க ஆளின்றி பரிதாபமாக உயிரிழந்த மாற்றுத்திறனாளி சிறுவன்

சீனாவில் பரவிவரும் கொரோனா பீதியால் குடும்பம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டதால், கவனிக்க ஆளின்றி மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை நொறுக்குவதாக இருந்தது. சீனாவில் கொரோனா வைரஸ் நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 492 ஐ எட்டியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்து வரும் நிலையில். இந்த உயிர்க்கொல்லி நோயால் சீனாவில் மேலும் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொரோனா வைரஸ் நோய் பரவலின் மையமாக உள்ள ஹூபெய் மாகாணத்தில் இருக்கும் ஹூவாஜியாஹே நகரை சேர்ந்த யாங் […]

Categories
அரசியல் ஆன்மிகம் உலக செய்திகள்

“கொரோனாவை துல்லியமாக கணித்த சித்தர்” … ஆச்சரியத்தில் ஆராச்சியாளர்கள் ..!!

உலகையே அச்சுறுத்தி உலா வந்துகொண்டிருக்கும்  கொடிய கொரானா வைரஸ். அப்படினா என்ன ? எப்படி வந்தது ? ஏன் ? இப்படியெல்லாம் உலகமே யோசித்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது அது குறித்து பல்வேறு போராட்டங்களுக்கு பின் காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த நோய் குறித்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓலை சுவடிகளில் சித்தர்களால்  கூறப்பட்டுள்ளது . என்ன ஆச்சரியமாக  இருக்கிறதா ? ஆம் …உண்மை..! இப்போது வேகமாக  பரவி வரும் கொரோனா வைரஸ் பற்றி சித்தர் […]

Categories
உலக செய்திகள்

டெக்சாஸ் பல்கலைகழக விடுதியில் துப்பாக்கி சூடு…. 2 பெண்கள் பலி…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவம் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. நாளுக்கு நாள் இந்த கலாச்சாரம் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. அந்த வகையில், டெக்ஸாஸ் மாகாணத்தின் காலேஜ் ஸ்டேஷன் பகுதியில் உள்ள ஏ அண்ட் எம் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பல்கலைக் கழக விடுதிகளில் ஏராளமான மாணவர்கள் தங்கியுள்ள நிலையில், திடீரென பயங்கரமாக துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கென்யாவில் 14 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு… தொடரும் துயர சம்பவம்..!!

கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்தனர். கென்யாவின் மேற்கு பகுதியில் இருக்கும் ககமிகா நகரில் தொடக்கப் பள்ளி ஓன்று உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் குறுகலான படிக்கட்டுகள் வழியாக வெளியே வந்தபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் பலர் ஒருவர் மீது மற்றவர் விழுந்ததில் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு 14 குழந்தைகள்  […]

Categories
உலக செய்திகள்

425 பேர் பலி…. 20,400 பேர் பாதிப்பு…. கதறி துடிக்கும் சீனா …..!!

கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  425 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,400 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வூஹான் நகரம், கொரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. கனடா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அமெரிக்காவில் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் […]

Categories
உலக செய்திகள்

536 பேர் பலி…. 23,54 படுகாயம்….. 2,713 கைது…. ஈராக்கில் இரத்த வெள்ளம் …!!

நான்கு மாதமாக நடைபெற்றுவரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 536 பேர் உயிரிழந்ததாக ஈராக்கில் சுதந்திரமாக செயல்பட்டுவரும் மனித உரிமைகள் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. பாக்தாத், மத்திய மற்றும் தெற்கு ஈராக் உள்ளிட்ட பகுதிகளில் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. சீர்திருத்தங்களை மேற்கொண்டு ஊழலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும் எனவும் போராட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் இந்த […]

Categories
உலக செய்திகள்

ஆ..!.. இங்க அடி… ஆ…!.. அங்க அடி….!! கொரோனா_வால் வைரலாகும் வீடியோ …!!

கொரோனா கொடூர வைரஸ் தொற்றால் உலக நாடுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன. கொரோனா என்கிற அரிய வகை வைரஸ் காய்ச்சல், சீனா முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் காய்ச்சலினால் சீனாவில் மட்டும் தற்போதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனர்கள் மட்டுமின்றி, அந்நாட்டில் தங்கியிருக்கும் பிற நாட்டவருக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. இதனால் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனோவை விரட்டும் ரங்கூன் மல்லி?… படையெடுத்த சீன மக்கள்… எச்சரித்த பீப்பிள்ஸ்..!!

சீனாவில் ரங்கூன் மல்லி கொரோனாவை கட்டுப்படுத்தும் என அந்நாட்டு மக்கள் வேகமாக படையெடுத்து அந்த மருந்தை வாங்க படையெடுத்தனர். கொரோனா என்கிற அரிய வகை வைரஸ் காய்ச்சல், சீனா முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் காய்ச்சலினால் சீனாவில் மட்டும் தற்போதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனர்கள் மட்டுமின்றி, அந்நாட்டில் தங்கியிருக்கும் பிற நாட்டவருக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. இதனால் சீனா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவோடு…. ”மிரட்டிய நிலநடுக்கம்”… பதறும் சீனா …!!

சீனாவின் ஹுகயான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது . இன்று ஹுகயான் மாகாணத்தில் உள்ள குயிங்பாஜியாங் பகுதியில் தீடிரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1ஆக பதிவாகியுள்ளது. சுமார் 10 வினாடிகளுக்கு அதிகமாக நில அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததாக சொல்லப்படுகின்றது.நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த நொடியே மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வீதியில் தஞ்சம் புகுந்தனர். அந்த பகுதியில் பயணம்   செய்தவர்கள் உடனடியாக தங்களின் வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கினார்கள். இந்த […]

Categories
உலக செய்திகள்

கொடிய கொரோனாக்கு மருந்து ரெடி …! மாஸ் காட்டும் தாய்லாந்து

கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. டாக்டர் கிரிங்கஸ்க் தலைமையிலான டாக்டர்கள் குழு இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சீனாவுக்கு அடுத்தப் படியாக தாய்லாந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் அந்த நாட்டில் 19 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு , தொடர் சிகிச்சை பெற்று கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸ் தொற்றுக்கு உலக சுகாதார நிறுவனம் உட்பட பல்வேறு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்க […]

Categories
உலக செய்திகள்

புனித எண்ணெய்… யார் தொடுகிறீர்களோ அவங்களுக்கு நோய் வராது… ஏமாந்து போன 20 பேர் பரிதாப மரணம்..!!

தான்சானியாவில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தான்சானியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் கிளிமாஞ்சாரோ பிராந்தியம் உள்ளது. இந்த பிராந்தியத்தில் தான் இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆம், வாம்போசா என்ற நபர் கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தியபின், கையில் இருக்கும்  குடுவையில் புனித எண்ணெய் இருப்பதாக கூறிவிட்டு, அதனை தரையில் ஊற்றினார். பின்னர் அந்த எண்ணெய்யை யாரெல்லாம் தொடுகிறார்களோ அவர்களுக்கு இருக்கும் நோய்கள் அனைத்தும் குணமாகும் என்று கூறியுள்ளார். அவர் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானை மிரட்டி விட்டு… கிழக்கு ஆப்பிரிக்காவில் முகாம்…. வெட்டுக்கிளிகளால் வேதனையடையும் மக்கள்..!!

70 ஆண்டுகளில் இல்லாத வகையில், வெட்டுக்கிளிகள் கூட்டம் பாகிஸ்தானைத் தொடர்ந்து  கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் படையெடுத்து சென்று வேளாண் பயிர்களை நாசம் செய்யத் தொடங்கியுள்ளது. இந்த வெட்டுக்கிளிகளையெல்லாம்  சிறிய ரக விமானங்கள் மூலம், பூச்சிமருந்து தெளித்து விரட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை பார்க்கும் போது நமக்கு கண்டிப்பாக நியாபகம் வருவது சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “காப்பான்” படம் தான். அந்த படத்தில் வில்லன் தரப்பில் இருந்து, வெட்டுக்கிளிகளை வளர்த்து ஏவி, வேளாண் […]

Categories
உலக செய்திகள்

”மாணவர்களை கைவிட்ட பாகிஸ்தான்”…. சீனாவில் கதறும் அவலம் …!!

சீனாவில் தவிக்கும் பாகிஸ்தான் மாணவர்களை பாகிஸ்தான் அரசு மீட்டு வர மறுத்துவிட்டது. சீனாவில் கொரோனா வைரஸ் :  சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் சுமார் 361 பேரை காவு கொண்டுள்ளது. அங்குள்ள உகான் மாகாணத்தில்தான் இந்த நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. அங்கு இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதில் பலர் மருத்துவ படிப்பு படிக்கிறார்கள். கொரோனா தாக்குதல் காரணமாக அந்த உகான் நகரம் ஒரு தீவுபோல் ஆகி விட்டது. அங்கு வெளியாட்கள் […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் பொதுமக்களை கத்தியால் தாக்கிய நபர் சுட்டுக்கொலை..!!

இங்கிலாந்தின் லண்டன் ஸ்ட்ரீதம் (Streatham) பகுதியின் வீதியில் செல்லும் பொதுமக்களை சரமாரியாகக் கத்தியால் தாக்கிய நபரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்ட்ரீதம் பகுதியில் மதியம் 2 மணிளவில் ஒருவர் கையில் வைத்திருந்த கத்தியால் பொதுமக்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஸ்காட்லாந்து காவல் துறையினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா : 361 பேர் பலி…. 16,600 பேர் பாதிப்பு…. கண்ணீரில் சீனா …..!!

 கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக வூஹான் நகரம், கொரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. கனடா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அதேபோல கேரளாவிலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதால், […]

Categories
உலக செய்திகள்

ஈராக்கில் புதிய பிரதமர் நியமனம் ….!!

ஈராக்கின் புதிய பிரதமராக முகமது தவுபிக் அலாவி என்பவரை அதிபர் பர்ஹாம் சாலி நியமித்துள்ளார். தொடர் போர்கள், நாட்டின் பொருளாதார சீர்குலைவு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் என அரசாங்கத்துக்கு எதிராக ஈராக்கில் கடந்த நான்கு மாதங்களாகப் போரட்டங்கள் அரங்கேறிவருகின்றன. இந்நிலையில், முன்னாள் பிரதமர் அடில் அப்துல் மஹ்தி நவம்பர் மாதம் பதவி விலகினார். இதனையடுத்து சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை, ஈராக் அதிபர் பர்ஹாம் சாலி, முன்னாள் தகவல் […]

Categories
உலக செய்திகள்

தாயானார் கிரிம்ஸ் – மகிழ்ச்சியில் எலான் மசுக்..!!

பிரபல தொழிலதிபரான எலான் மசுக்கின் காதலி கிரிம்ஸ் தான் கர்ப்பம் தரித்திருப்பதாக தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரபல தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான எலான் மசுக்கின் காதலி கிரிம்ஸ்( 31 ). கனடா பாடகியான இவர், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தான் கர்ப்பம் தரித்ததை போல புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இந்த பதிவுகள் அவருடைய ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வெளியிட்ட இன்ஸ்ட்கிராம் பதிவில் தான் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸின் உச்சம்! கண்ணாடி பெட்டிக்குள் குழந்தை… நெஞ்சை உருக்கும் அதிர்ச்சி வீடியோ..!!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட குழந்தை ஓன்று கண்ணாடி பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்ட காட்சி கண்கலங்க வைக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது இந்தியா, அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள், மற்றும் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் […]

Categories
உலக செய்திகள்

மர்மக் கதைகளில் புகழ்பெற்ற நாவலர் மேரி ஹிக்கின்ஸ் மரணம்..!!

ஆங்கில மர்மக்கதைகளில் புகழ்பெற்ற நாவலாசிரியரான மேரி ஹிக்கின்ஸ்  புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். ஆங்கில மர்மக் கதைகளில் புகழ்பெற்ற நாவலாசிரியர் மேரி ஹிக்கின்ஸ் கிளார்க். 92 வயதான இவர் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். மேரியின்  மரணச்செய்தியை   அவருடைய பதிப்பாளர்கள், அதிகாரப்பூர்வமாக சைமன் & ஸ்கஸ்டர் டிவிட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டனர்.   It is with deep sadness we say goodbye to the "Queen of […]

Categories
உலக செய்திகள்

விடாமல் காவு வாங்கும் ‘கொரோனா’… சீனாவில் 304 பேர் மரணம்… பிலிப்பைன்ஸில் ஆட்டம் தொடக்கம்..!!

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 304 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது இந்தியா, அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள், மற்றும் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. […]

Categories
உலக செய்திகள்

இதயம் மாற்ற சென்ற போது ஏற்பட்ட துயரம்… ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் காயம்..!!

ஜப்பானில் இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு இதயத்தை எடுத்துச்சென்ற ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்தனர். ஜப்பான் நாட்டின் புகுஷிமாவில் ஒருவர் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரின் இதயத்தை எடுத்து வேறொருவருக்கு பொருத்திக்கொள்வதற்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். அதன்பின் அந்த நபரின் இதயத்தை அகற்றப்பட்டு, டோக்கியோ பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒருவருக்கு பொருத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து இதயத்தை உடனடியாக கொண்டு சென்று அவருக்கு பொருத்தவேண்டும் என்று கூறிய டாக்டர்கள் விரைவாக கொண்டு சேர்ப்பதற்காக காவல்துறையின் ஹெலிகாப்டரில் எடுத்துச்சென்றனர். அப்போது  […]

Categories
உலக செய்திகள்

நியாபகம் வரும் ‘காப்பான்’… வெட்டுக்கிளியால் அரண்டு போன பாகிஸ்தான்… எமர்ஜென்சி அறிவிப்பு!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அதிகமாக வெட்டுக்கிளிகள் படையெடுத்து சென்று பயிர்களை நாசம் செய்து வருவதால், அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சிந்து, தெற்கு பஞ்சாப், கைபர் பக்துன்க்வா உள்ளிட்ட பல பகுதிகளில், இதுவரை இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த பகுதிகளில் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 9 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு வெட்டுக்கிளிகள் பரவி பயிர்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த பல முயற்சிகள் […]

Categories

Tech |