Categories
உலக செய்திகள்

குவைத்திலும் கொரோனா… ஈரானுக்கு போனதால் 43 பேர் பாதிப்பு – சுகாதாரத்துறை அமைச்சகம்!

குவைத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 40 நாடுகளில் பரவி உலகையே மிரட்டியுள்ளது.  சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை  2, 715 பேர் இறந்துள்ளனர். மேலும் 78, 497 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் ஒட்டு மொத்தமாக 2,800 பேர் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதலால் ஈரானில் 22 பேர் பலி!

ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 40 நாடுகளில் பரவி உலகையே மிரட்டியுள்ளது.  சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை  2, 715 பேர் இறந்துள்ளனர். மேலும் 78, 497 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரான், இத்தாலி தென் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி… ஓராண்டுக்கு மேல் ஆகலாம்… விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்.!!

கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைக்க ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 37 நாடுகளில் கொரோனா பரவி உயிர் பலி வாங்கி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றது. ஆனாலும் கட்டுப்படுத்துவதற்கு திணறி வருகின்றது. இந்த நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள டெக்ஸாஸ் மற்றும் நியூயார்க்கில் இயங்கி வருகின்ற தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர்கள், தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் ஒலிம்பிக் ரத்து செய்யப்படும் அபாயம்

2020 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி அன்று 2020 ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் வைத்து நடைபெறும் என தகவல் வெளியானது. ஆனால் தற்போது கொரோன வைரஸ் பரவுவது காரணமாக ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யவும் வாய்ப்புகள் வரலாம் என தகவல் அளித்துள்ளனர். வருகிற மே மாதத்திற்குள் கொரோன வைரசை கட்டுப்படுத்தாவிட்டால் நிச்சயம் ஒலிம்பிக் போட்டியை […]

Categories
உலக செய்திகள்

எப்படி திருடனும் தெரியுமா?… காரை மறித்து… மகனுக்கு கற்று கொடுத்த யானை… வைரல் வீடியோ!

தாய்லாந்து நாட்டில் சாலையை மறித்து வயதான யானை தனது மகனுக்கு வாகனத்தில் இருந்த உணவுப் பொருட்களை எப்படி சாப்பிட வேண்டும் என பறித்துச் சாப்பிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாய்லாந்து நாட்டின் சச்சோயங்சாவோ (Chachoengsao) என்ற இடத்தில் இரண்டு காட்டு யானைகள் சாலையின் நடுவே வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அப்படியே நிறுத்தினர். அப்போது ஒரு சிறிய டிரக் வண்டியில் உணவுப் பொருள் இருப்பதை ஒரு யானை பார்த்து விட்டது. உடனே வண்டியில் […]

Categories
உலக செய்திகள்

அரசு குடும்ப அடைமொழி வேண்டாம்.. இளவரசர் ராயல் ஹாரி வேண்டுகோள்..!

பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஹாரி தன்னை எந்த வித அடைமொழியும் இன்றி ஹாரி  என்று அனைவரும் அழைக்கலாம் என தெரிவித்துள்ளார். பிரிட்டன் அரசு குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக கடந்த மாதம் அறிவித்த இளவரசர் ஹாரியும், அவருடைய மனைவி மேஹனும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அரசு குடும்பத்தில் இருந்து வெளியேறியதால் ராயல் எனும் பட்டத்தை அவர்கள் பயன்படுத்தக்கூடாது என பிரிட்டன் ராணி எலிசபெத் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் ஸ்காட்லாந்தின் எடின்பரோராவின் நகரில் நடைபெற்ற சுற்றுலா மாநாட்டில் பங்கேற்று பேசிய […]

Categories
உலக செய்திகள்

4 கொமோடோக்கள்… யார் பலசாலி… 8 அடி உயரம் எழுந்து நின்று… மனிதர்களை போல சண்டை போடும் மிரட்டல் வீடியோ!

இந்தோனேஷிய வனப்பகுதியில் யார் பலசாலி என்ற என்பதை நிரூபிக்க 4 கொமோடோ டிராகன்கள் கட்டிப்புரண்டு சண்டை போடும் வீடியோ வைரலாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய பல்லி இனம் என்றால் அது கொமோடோ டிராகன்கள் தான். ஆம் பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கும் இந்த கொமோடோ பல்லி இனங்கள் இந்தோனேஷிய தீவுகளில் மட்டுமே காணப்படும் அரிய வகையான ஓன்று. இது சுமார் 10 அடி நீளமும், 80 கிலோ வரை எடையும் கொண்டது. அதேசமயம் இந்த டிராகன்களின் எச்சில், கடுமையான விஷத்தன்மை கொண்டவை. […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் மதுபான ஆலையில் துப்பாக்கி சூடு… 6 பேர் பலி!

அமெரிக்காவின் மில்வாக்கி நகரில் உள்ள மதுபான ஆலையில் புகுந்து ஒருவன் சரமாரியாக சுட்டதில் 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவம் அடிக்கடி நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை. அங்கு அவ்வப்போது துப்பாக்கியால் உயிர்பலி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், அந்நாட்டின் மில்வாக்கி நகரில் இருக்கும் மதுபான ஆலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர்உயிரிழந்தனர். […]

Categories
உலக செய்திகள்

ஒரு கண்டத்தை விட்டு வைத்து… 6 கண்டத்தை ஆக்கிரமித்த கொரோனா..!!

உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் அண்டார்க்டிகாவைத் தவிர்த்து  பூமியின் 6 கண்டங்களிலும் பரவியிருக்கிறது. சீனாவில் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக  குறைந்து வரும் நிலையில் மற்ற நாடுகளில் அதன் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. சீன அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா வைரசின் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்ற நிலையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சீனாவின் அண்டை நாடான தென்கொரியாவில் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை அரசுக்கு அதிரடி உத்தரவிட்ட ராஜபக்க்ஷ

அரசு ஊழியர் ஓய்வு பெற்றால் அவரது அடுத்த மாதமே அவரது ஓய்வூதியம் கையில் கிடைக்க அதிரடி உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ  இலங்கை நடைமுறைப்படி அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெற்றால் ஓய்வு பெற்றவருக்கு ஓய்வூதியம் வழங்க இரண்டு வருடங்கள் ஆகின்றது. இதற்கு ஒரு மாதத்திற்குள்ளாக ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கையை எடுக்க ஜனாதிபதி ஆலோசனை கொடுத்துள்ளார். ஒருவர் ஓய்வு பெற்றால் அடுத்த மாதம் ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்றால் அவர் எப்படி வாழ்வார் எனும் கேள்வியை எழுப்பி இந்த […]

Categories
உலக செய்திகள்

இட்லிப் பகுதியில் சிரிய அரசுப் படைகள் தாக்குதல்… 20 பேர் பலி!

சிரியாவின் இட்லிப் நகரில் அரசுப் படைகள் நடத்திய கோர தாக்குதலில் பொதுமக்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  சிரிய நாட்டில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்  இட்லிப் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் குழந்தைகள் உட்பட 20 பேர் பலியாகியுள்ளதாகவும் பிரிட்டனை  மையமாகக் கொண்டு செயல்படும் சிரியாவின் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

180,00,00,000 கோடி ரூபாய் மதிப்பு… தரமில்லாத மருத்துவ உபகரணங்கள்… 4260 பேர் அதிரடிகைது!

சீனாவில் தரமில்லாத முகமூடிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரித்ததாக 4,260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனா அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கும் அதே நேரத்தில், கிரிமினல் குற்றவாளிகள் நோய்தொற்றை பயன்படுத்தி ஏதாவது குற்ற செயலில் ஈடுபட்டால் அவர்களை கண்டறிந்து, தண்டிக்கும் பணிகளையும், முடுக்கிவிட்டிருக்கிறது. அந்த வகையில் சீன அரசு, தரமில்லாத முகமூடிகளை தயாரித்து பெரும் லாபம் பார்த்த சிறு, குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அவற்றை விற்பனை செய்தவர்கள் உட்பட நோய் தடுப்பு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

உலக பணக்கார நாடுகளின் பட்டியல்… இந்தியாவுக்கு எந்த இடம் ?

உலகளவில் 10 பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகிலேயே பணக்கார நாடுகளான 10 நாடுகளின் பெயர்கள் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலை  கிரிடிட் சூசெஸ் (Credit Suisse’s) எனும் முன்னணி நிதி சேவை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், 1. அமெரிக்கா – 360 ட்ரில்லியன் டாலரில் 30 சதவீதம் செல்வம் வைத்து கொண்டு  முதலிடம் வகிக்கிறது. 2. சீனா – 63. 8 ட்ரில்லியன் டாலர் வைத்து கொண்டு  இரண்டாவது  இடம் வகிக்கிறது. 3. ஜப்பான் – 25 […]

Categories
உலக செய்திகள்

ஆக்ஸ்போர்டு பல்கலையில் மலாலாவும், கிரேட்டாவும் சந்திப்பு.!

பெண் கல்விக்காக போராடி வரும் மலாலாவும், பருவநிலை மாறுபாடு பிரச்சனைக்காக குரல் கொடுத்து வரும் சிறுமி கிரேட்டாவும் லண்டனில் சந்தித்து பேசினர். பருவநிலை மாறுபாடு பிரச்சனைக்காக குரல் கொடுத்து வருபவர் கிரேட்டா தன்பெர்க் (வயது 17). அதேபோல பெண் கல்விக்காக போராடி வருபவர் மலாலா யூசப்சாய் (வயது 22). இவர்கள் இருவரும் சர்வதேச அளவில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரிஸ்டல் நகரில் பருவநிலை மாறுபாடு தொடர்பாக மாணவர்களுடன் இணைந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் […]

Categories
உலக செய்திகள்

தீயாக பரவும் கொரோனா… தென் கொரியாவில் புதிதாக 169 பேர் பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் தென்கொரியாவில் புதிதாக 169 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரசால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுவரையில் 2,700க்கும் மேற்பட்டோர் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா 37 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. அதில் தென்கொரியாவும் அடங்கும். கொரோனா வைரஸ் தொற்றினால் தென் கொரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1,146 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் குவைத்தில் […]

Categories
உலக செய்திகள்

பலியானவர்கள் எத்தனை பேர்?… உண்மையை மறைக்கும் ஈரான்… குற்றஞ்சாட்டும் அமெரிக்கா..!!

கொரோனா வைரஸினால் பலியானவர்களின்  உண்மையான விபரங்களை ஈரான் மறைப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.  கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது ஈரானில் 95 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, ஈரான் நாட்டில் பாதிக்கப்பட்டோர் என அந்நாட்டு அரசாங்கத்தினால் அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட, உண்மையாக அந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று பிரபல செய்தி தொலைக்காட்சியான பி.பி.சி. தெரிவித்துள்ளது. ஈரானின் துணை சுகாதார அமைச்சர் ஈராஜ் ஹரிர்ச்சி (Iraj […]

Categories
உலக செய்திகள்

37 நாடுகளில் குடியேறிய கொரோனா… “80,000 பேர் பாதிப்பு”… வெளியான அதிர்ச்சி..!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மொத்தம் 37 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய ‘கோவிட் 19’ எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் உலகையே மிரட்டி வருகின்றது. நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி கொண்டே போவதன் காரணமாக, உலக அளவில் சீனா தனிமைப்பட்டுள்ளது. இந்தநிலையில், தற்போது 37 நாடுகளில், கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். ஆம், சீனாவின் எல்லைகளை தாண்டி, தென்கொரியா, […]

Categories
உலக செய்திகள்

கொடிய கொரோனா: சீனாவுக்குள் நடந்த அதிசயம்! பச்சிளம் குழந்தையால் ஆச்சரியப்பட்ட மருத்துவர்கள்

கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளான  பிறந்த பச்சிளம்  குழந்தை 17 நாட்களில் எந்த ஒரு சிகிச்சையும் இன்றி முழுவதும் குணமாகி உள்ளது. மருத்துவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வுகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த 5 ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. தாய்க்கு  கொரானா வைரஸ் தொற்று இருந்த நிலையில் குழந்தைக்கும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவர்கள் குழந்தைக்கு   பரிசோதனை செய்ததில் தாயின்  மூலமாக குழந்தைக்கும் கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

டேய்.. டேய் பாவம்டா…. ‘கடல் பசுவை’ தர தரவென இழுத்து… துன்புறுத்திய கும்பல் கைது… வைரல் வீடியோ!

நைஜீரிய நாட்டில் கடல் பசுவை கயிறு கட்டி தர தரவென இழுத்துச் சென்று துன்புறுத்திய  வீடியோ வெளியானதையடுத்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நைஜீரிய நாட்டின் கடல் பகுதியில் கடல் பசுக்கள் எனப்படும் உயிரினம் அரிதாகக் காணப்படுகிறது. இந்த அரிதான கடல் பசு உயிரினத்தை பிடிக்கவும் கூடாது, வேட்டையாடவும் கூடாது என தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி தடையை மீறினால் சட்டப்படி தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சில இளைஞர்கள் இது போன்ற கொடூரமான செயலை செய்து மாட்டி […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே அதிக வயதுடைய மனிதராக அறியப்பட்டவர் காலமானார்..!!

உலகிலேயே அதிக வயதுடைய மனிதராக அறியப்பட்ட  ஜப்பானை சேர்ந்தவர் 112 வயதில் காலமானார். உலகில் தற்போது வாழ்ந்து வருபவர்களில் அதிக வயதுடைய நபராக வாழ்ந்து வந்தவர் தான் ஜப்பானைச் சேர்ந்த  சிட்டெட்ஸூ வடனாபே (Chitetsu Watanabe). இவர் கடந்த 1907 ஆம் ஆண்டு நீயிகதா நகரில் பிறந்தார். உலகின் அதிக வயதான நபர் என்ற அவரது சாதனைக்காக, அந்த நகரில் இருக்கும் பராமரிப்பு மையத்தில் அவருக்கு கின்னஸ் சார்பாக கடந்த 12-ஆம் தேதி சான்றிதழ் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் அதிரடி வான்வழி தாக்குதல்… அல் ஷபாப் அமைப்பின் தலைவன் பலி..!!

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குதலில் அல் ஷபாப் அமைப்பின் முக்கியத் தீவிரவாதி கொல்லப்பட்டான். அல் ஷபாப் (Al-Shabaab) என்ற தீவிரவாத இயக்கம் சோமாலியாவைத் தலைமயிடமாக கொண்டு இயங்கி வருகின்றது. இந்த அமைப்பு மிகவும் பயங்கரமான தாக்குதலை நடத்தும். ஆம், கொடூரத் தாக்குதல் மற்றும் கோரமான கொலைகளுக்கும் பெயர்போனது தான் இந்த அமைப்பு. இது அல் கொய்தா (Al-Qaeda) அமைப்பின் கிளை அமைப்பாகச் செயல்பட்டு வருகின்றது. சோமாலிய ராணுவத்துக்கும், அல் ஷபாப் அமைப்புக்கும் இடையே […]

Categories
உலக செய்திகள்

அழிந்து வரும் தேன் சிட்டுக்கள்… மீட்டெடுக்கும் முயற்சியில் வெற்றி கண்ட பெண்..!!

மெக்ஸிகோவில் அழிந்து வரும் தேன்சிட்டுக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இளம்பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளது பாராட்டுக்களை பெற்றுள்ளது. மனிதர்களாகிய நாம் கண்களை இமைப்பதை விடவும் இறக்கையை வேகமாக அடித்துக் கொள்ளும் பறவை தேன்சிட்டுக்கள். இந்த தேன் சிட்டுக்கள் தற்போது மெக்ஸிகோ நகரத்தில் அரிதினும் அரிதாகிப் போய்விட்டது. ஆம் இந்த பறவை அழியப்போகும் நிலையில் இருக்கின்றது. இதையடுத்து அந்தப் பறவைகளை மீட்டெடுப்பதற்கு, உயிரியலாளரான கிளவ்டியா என்ற பெண் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதாவது மகரந்தச் சேர்க்கைக்கு பெரும் பங்குவகிக்கும் தேன்சிட்டுக்களை […]

Categories
உலக செய்திகள்

9 வயது மகனை 3 நாள் வீட்டில் அடைத்து வைத்து தாய் செய்த காரியம்..! போலீஸ் விசாரணை

இலங்கையில்  தாய் தனது 9 வயது மகனுக்கு அயன்பாக்ஸ்சால் (iron box) சூடு வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று தாய் தனது 9 வயது மகனிடம் குர்ஆன் கற்பதற்கு மதரசாவுக்கு செல்லுமாறு கூறிஉள்ளார். சிறுவன் தூக்கத்தில் இருந்ததால் மறுப்பு தெரிவித்து இருக்கிறான். இருந்த போதும்  சிறுவனின் தாய் சிறுவனை குர்ஆன் ஓத  மதராசாவுக்கு செல்லுமாறு வற்புறுத்திய நிலையில் சிறுவன் அங்கு இருந்த அயன்பாக்ஸ்  எடுத்து தூக்கி எறிந்துள்ளான். இதையடுத்து ஆத்திரமடைந்த தாய் அயன்பாக்ஸ்சை  சூடாக்கி சிறுவனின் […]

Categories
உலக செய்திகள்

உலக நாடுகளே உஷார்… வேகமெடுக்கும் கொரோனா… மீண்டும் எச்சரிக்கை..!!

கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் உலக நாடுகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உலகத்தையே பயமுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 2,698 பேர் உயிரிழந்தனர். மேலும்  80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் சீன பெருஞ்சுவரை தாண்டி 28 நாடுகளில் பரவி இருக்கின்றது.  தற்போது கொரோனா வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. ஆம், […]

Categories
உலக செய்திகள்

சிறுநீரில் ஆல்கஹாலை வெளியேற்றிய அதிசய பெண்..! கண்டித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு முறை  சிறுநீர் பரிசோதனை செய்யும்போது அதில் ஆல்கஹால் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  61 வயது பெண் ஒருவர் கல்லீரல் பாதிப்பால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு  சென்று இருந்தார். அவருக்கு சிறுநீர் பரிசோதனை செய்யும் போதெல்லாம் சிறுநீரில் ஆல்கஹாலின் அளவு அதிகமாக இருந்தது. ஆகவே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் மதுவிற்கு அடிமை என்று எண்ணி, சிகிச்சை முடியும் வரை மது அருந்த வேண்டாம் என்று […]

Categories
உலக செய்திகள்

உலகில் முதல்முறை… 2 முறை தோல்வி… 3ஆவது முறை வெற்றி…. வாடகை தாய் மூலம் பிறந்த 3 சிறுத்தை குட்டிகள்..!!

அமெரிக்காவில் வாடகை தாய் மூலம் மூன்று அழகிய சிறுத்தைக்குட்டிகள் பிறந்துள்ளன. உலகில் குழந்தை பாக்கியம் இல்லாமல் எத்தனையோ தம்பதியினர் இருக்கின்றனர். ஆனால் அந்த தம்பதிகள் சோதனைகுழாய் மற்றும் வாடகை தாய் மூலமும் குழந்தை கிடைக்க பெறுகின்றனர். அந்த அளவிற்கு இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் அவர்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருந்து வருகின்றது. அந்தவகையில் அமெரிக்காவில் இது போன்று ஒரு மகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஆம் வாடகை தாய் மூலம் 3 சிறுத்தை குட்டிகள் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

வீட்டின் முன் டெலிவரி பார்சல்… “திருடிச்சென்ற பெண்”… நொடியில் மடக்கி பிடித்த போலீஸ்..!!

கனடாவில் ஆன்லைனில் புக் செய்து டெலிவரி செய்யப்பட்ட பார்சல் ஒன்றை திருடி சென்ற பெண்ணை சில நிமிடங்களிலேயே போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கனடாவில் எட்மன்டன் (Edmonton) பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியில் கதவு மூடப்பட்டிருந்த ஒரு வீட்டின் முன்பகுதிக்கு பேக் மாட்டிக்கொண்டு தலையில் தொப்பி அணிந்தவாறு மெதுவாக  நடந்து வரும் பெண், தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டம் செய்து விட்டு பின் அங்கிருந்த பார்சலை நைசாக எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், அவர் […]

Categories
உலக செய்திகள்

திணறும் சீனா வேறு வழியின்றி பின் வாங்கியது … அடுத்த அவசர நடவடிக்கை … முழு மாற்றைத்தை நோக்கி சீன மக்கள்

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பெரிதளவில் பாதிக்கப்பட்ட  சீன அரசாங்கம் வனவிலங்குள்  விற்பனையை முழுமையாக தடை செய்யும்   நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதுவரை வரை 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,698-ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உலகத்தையே பயமுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி…. நாடாளுமன்றத்தை இழுத்து மூடிய தென்கொரியா..!!

கொரோனா வைரஸ் அச்சத்தால் தென்கொரிய நாடாளுமன்ற கட்டிடம் முழுவதும் ஊழியர்களால் மருந்து தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உலகத்தையே பயமுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 2698 பேர் உயிரிழந்தனர். மேலும்  80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கின்றது. அதன் ஒருபகுதியாக சீனாவிலிருந்து அதன் அண்டை நாடான தென்கொரியாவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அந்தநாட்டிலும் சில […]

Categories
உலக செய்திகள்

வெளுத்து வாங்கும் கனமழை… வெள்ளக்காடாக காட்சியளிக்கும் இந்தோனேசியா..!!

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறி காட்சியளிப்பதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது  இந்தோனேசியாவின் சமீப நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்ட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவின் கிழக்கு பகுதிகளில் தாழ்வான குடியிருப்புகள் அனைத்தும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், மீட்புப்படையினர் பொதுமக்களை பத்திரமாக ரப்பர் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர். மேலும் வெளுத்து வாங்கும் வெள்ளத்தால் ஜாவா, பாலி, நுசா […]

Categories
உலக செய்திகள்

நீண்ட நேர போராட்டம்… வலையில் சிக்கித்தவித்த அரிய வகை திமிங்கலம் மீட்பு..!!

கலிபோர்னியா வளைகுடாவில் சட்டவிரோத மீன்பிடி வலையில் சிக்கிய அரிய வகை திமிங்கலத்தை விலங்கு நல ஆர்வலர்கள் பாத்திரமாக மீட்டனர். மெக்சிகோ அருகே கலிபோர்னியா வளைகுடாவில் விலங்கு நல ஆர்வலர்கள் கடலில் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அப்போது கடலில் ஹம்ப்பேக் (Humpback) வகை திமிங்கலம் ஓன்று சட்ட விரோதமாக விரிக்கப்பட்ட வலையில் சிக்கி தவித்து வருவதை பார்த்த ஆர்வலர்கள் அதனை காப்பாற்றுவதற்கு போராடினர். அவர்கள் நீண்ட முயற்சிக்கு பின்  அதை பத்திரமாக விடுவித்தனர். தற்போது அழியும் நிலையில் இருக்கும் ‘டோட்டோபா’ […]

Categories
உலக செய்திகள்

மலேசிய மன்னருக்கு அனுப்பிய பிரதமர் மகாதீர் முகமதுவின் ராஜினாமா ஏற்பு!

பலத்த அரசியல் எதிர்ப்புகளுக்கு இடையே மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தமது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்நாட்டு மன்னர் அவரது ராஜினாமா ஏற்றுக்கொண்டுள்ளார். 2003ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற்றவர் மகாதீர் மொஹமத். உலகின் மிகவும் வயதான பிரதமர் என்று சிறப்பை பெற்றவர்தான் 94 வயது நிரம்பிய மகாதீர் மொஹமத். கடந்த 2018ல் இவர் மீண்டும் மலேசியாவின் பிரதமர் ஆன போது உலகமே இவரை கொண்டாடியது. அந்நாட்டு ஆளும் கட்சியின் ஊழல்களுக்கு இடையில் தான் தேர்தலை […]

Categories
உலக செய்திகள்

சடலமாக இருந்து திடீரென உயிர் பெற்ற பெண்..! கூறிய பகீர் தகவல் …அதிர்ந்த மருத்துவர்கள்

உக்ரேனில் இறந்த  பெண் திடீரென உயிர் பெற்ற நிலையில் தான் சொர்க்கத்தில் உள்ள இறந்து போன தந்தையை பார்த்ததாக கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  Stryzhavka‎ நகரைச் சேர்ந்த க்சேனியா திதுக் என்ற 83 வயது மூதாட்டியின் உடல் நல குறைவு ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் மருத்துவர்களை வீடிற்கு அழைத்து சிகிச்சை கொடுத்தனர். தொடர் சிகிச்சையில் அவரது நாடித்துடிப்பு நின்றதால் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறினர். பின்னர் 10 மணி நேர  சடலமாக க்சேனியா படுக்கவைக்க பட்டிருந்த […]

Categories
உலக செய்திகள்

பாலியல் வழக்கில் ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வே குற்றவாளி..!!

பாலியல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்ட பின் ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வே கைது செய்யப்பட்டு ரைக்கர்ஸ் தீவு சிறையில் அடைக்கப்பட்டார். பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வே வெய்ன்ஸ்டீன் என்பவரை  மன்ஹாட்டன் நீதிமன்றம் குற்றவாளி என  நேற்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு வரும் வரையிலும் அவர் நீதிமன்றம் அருகில் இருக்கும் பிரபலமான போர் சீசன்ஸ் (Four seasons) ஹோட்டலில் வழக்கறிஞர்களுடன் சேர்ந்து விலையுயர்ந்த காபி உள்ளிட்டவற்றை அருந்திக் கொண்டிருந்தார். பின்னர் தீர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

கடைக்குள் புகுந்த முகமூடி கொள்ளையன்… தைரியமாக அடித்து விரட்டிய மூதாட்டி… வைரல் வீடியோ!

போலந்தில் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்த கொள்ளையனை மூதாட்டி ஒருவர் தைரியமாக துடைப்பத்தால் அடித்து விரட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.   போலந்து நாட்டில் பிங்க்ஸின் என்ற இடத்தில் மூதாட்டி ஒருவர் பல்பொருள் அங்காடி வைத்திருக்கிறார். இந்த அங்காடிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக கைத்துப்பாக்கியுடன் முகமூடி அணிந்து கொண்டு வந்த கொள்ளையன் ஒருவன் கடையில் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளான். அப்போது அந்த மூதாட்டி அவனை பார்த்ததும் துப்பாக்கியை நீட்டி மிரட்டியுள்ளான். ஆனால் அந்த மூதாட்டி […]

Categories
உலக செய்திகள்

இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற முனைப்பு… துருக்கி மற்றும் சிரியா நாடுகளுக்கிடையே போர் பதற்றம்..!!

சிரியாவின் இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளும் முனைப்பு காட்டுவதால் போர் பதற்றம் நிலவுகிறது.  சிரியாவின் வடக்கு பகுதியில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயற்பட்டுவரும் குர்திஷ் போராளிகள் குழுக்கள் மீது ரஷ்யா உதவியுடன் சிரியா இராணுவம் தொடர் தாக்குதல் நடத்திவருகிறது. இதனிடையே இட்லிப் மாகாணத்தில் இருக்கும் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகள் குழுக்களுக்கு ஆதரவு அளித்து வரும் துருக்கி, அத்துமீறி சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

உலகையே மிரட்டும் கொரோனா… பலியானவர்களின் எண்ணிக்கை 2,698 ஆக உயர்வு..!!

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,698-ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உலகத்தையே பயமுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. சீனாவை தவிர்த்து தென் கொரியாவில் 890-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல குவைத், பஹ்ரைன், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் கொரானா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி ? அதிர்ச்சி பின்னணி

ஐரோப்பிய நாடான ஸ்லோவாக் (Slovakia)  இன் பிரதமர் பீட்டர் பெல்லெகிரினி கொரானா வைரஸ் பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை பெல்ஜியம் நகரில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட் உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார். பின்னர்  நாடு திரும்பிய அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில் அவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற வதந்தி பரவ […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

நீண்ட இழுபறி… சரி வந்து கூட்டிட்டு போங்க… நாளை சீனா செல்லும் இந்திய விமானம்..!!

நீண்ட இழுபறிக்கு பின் சீனா முடிவை மாற்றியதால்  வூஹான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இராணுவ விமானம் நாளை அங்கு செல்கிறது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். தற்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் 2,663  பேர் பலியாகியுள்ளனர் என்றும்,  77,658 பேருக்கு வைரஸ் பரவியதால் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், வைரஸ் தாக்கம் […]

Categories
உலக செய்திகள்

கண்ணும் இல்ல… ஒன்னும் இல்ல… ‘என்னடா இது’… வினோத உயிரினத்தை பார்த்து மிரண்டு போன பயணிகள்..!!

மெக்சிகோவில் கடற்கரையில் வினோத உயிரினம் ஓன்று இறந்து கரை ஒதுங்கியிருப்பதை பார்த்து அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். மெக்சிகோ நாட்டில் அமைந்திருக்கும் அழகிய கடற்கரை நகரம் புவேர்ட்டோ வல்லார்டா. இந்த நகரத்தின் எழில் மற்றும் இயற்கை அழகை ரசிக்கவும், கடலில் அலைச்சறுக்கு சாகசங்கள் செய்யவும் பல்வேறு நாட்டு சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்வார்கள். இந்நிலையில், இப்பகுதியில் இருக்கும் டெஸ்டிலாடெரஸ் என்ற கடற்கரையில் கண்கள் இல்லாத பார்ப்பதற்கே விசித்திரமான வினோத உயிரினம் ஒன்று கரை ஒதுங்கி பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்த பலரும் […]

Categories
உலக செய்திகள்

பல மீட்டர் தூரம்… எப்படியாவது மாஸ்க் வாங்கிரனும்… கொரோனா அச்சத்தில் தென்கொரிய மக்கள்..!!

தென்கொரியாவில் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முகமூடிகளை வாங்க பல மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் வரிசையில் நிற்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பினால்  2,592 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 77,150 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதேநேரம் கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

லாட்டரியில் 700 கோடி அள்ளிய நபருக்கு ஏற்பட்ட சிக்கல்… மொத்த தொகையும் இழக்க வாய்ப்பு..!

பிப்ரவரி  7-ஆம் தேதி யூரோ லாட்டரியில் இந்திய மதிப்பில் 700 கோடி (90 மில்லியன் யூரோ) தொகை பரிசாக அள்ளிய ஜெர்மானியர் இதுவரை தொகையை வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.  இது குறித்த தகவலை நிர்வாகிகள் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினர்.  வெற்றி பெற்றவர் லாட்டரி சீட்டை உரிய நிர்வாகிகளிடம் கொடுத்து  தொகையை பெற்று கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. ஜெர்மனியின் இந்த லாட்டரி சீட்டை 18.5 யூரோ (1,443.53 INR)  தொகைக்கு வாங்கியுள்ளார். வெற்றியாளரின் முகவரி நிர்வாகிகளும் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

துணிச்சலான பெண்கள்… புலியாக மாறி விழிப்புணர்வு… வீடியோ இதோ!

உலகில் இருக்கின்ற பெண்கள் அனைவரும் கொண்டாடப்பட வேண்டியவர்களில்  முதலிடத்தில் இருக்கிறார்கள். அப்பெண்கள் அனைவரையும் ஒவ்வொரு ஆண்களுமே மதிக்க வேண்டும்.  தாய், சேய், தாரம், அக்கா, சகோதரி, என ஆண்களை உருவாக்கும் இவர்கள் அனைவருமே போற்றப் பட வேண்டியவர்கள். ஆனால் இன்றைய காலத்தில் அப்படி எதுவுமே நடப்பதாக தெரியவில்லை. ஆம்,பெண்களுக்கான பாதுகாப்பு ஆண்களிடம் இருந்து கிடைப்பதே இல்லை. பிறந்த சிறு குழந்தை தொடங்கி முதியவர் வரை வயது வித்தியாசமின்றி அனைவருக்குமே சில கொடூரர்கள் பாலியல் தொல்லை, கொடுக்கின்றனர். இதுபோன்று […]

Categories
உலக செய்திகள்

ஈரானிய கப்பல்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய தடை – குவைத்!

ஈரானிய கப்பல்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு குவைத் தற்காலிக தடை விதித்துள்ளது. உலகையே பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரையில் சீனாவில் 2,592 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 77, 150 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல ஈரானில் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்து, 43 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தங்கள் நாட்டுக்கும் (குவைத்) கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் : வேட்பாளர் தேர்வில் பெர்னி சாண்டர்ஸ் வெற்றி..!!

அமெரிக்க அதிபர்  தேர்தலுக்காக ஜனநாயகக் கட்சியினரிடையே நவாடா மாகாணத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders) வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக ஒவ்வொரு மாகாணங்களிலும் வாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, தென்மேற்கில் அமைந்திருக்கும் நவாடா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மூத்த தலைவரும், வெர்மான்ட் மாகாண […]

Categories
உலக செய்திகள்

கொன்று குவித்து வரும் கொரோனா… நாளுக்குநாள் அதிகரிப்பு… 2,592 பேர் மரணம்..!!

இதுவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் மட்டும் 2, 592 பேர் உயிரிழந்துள்ளனர்.  சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் வூஹானில் தான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின் கொரோனா தனது வேகத்தை காட்டத் தொடங்கியது. அந்நாட்டின் பீஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் வூஹான் மாகாணத்தில் அதிவேகமாக பரவி அடுத்தடுத்து மக்களை கொன்று குவித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சீன பெருஞ்சுவரையும் தாண்டி உலக […]

Categories
உலக செய்திகள்

மலேசிய மன்னரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார் பிரதமர் மகாதீர் மொஹமத்! 

மலேசிய பிரதமர் மகாதீர் மொஹமத் அந்நாட்டு மன்னரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். 2003ம் ஆண்டு அரசியலில் இருந்து  ஓய்வுபெற்றவர் மகாதீர் மொஹமத். உலகின் மிகவும் வயதான பிரதமர் என்று சிறப்பை பெற்றவர்தான் 94 வயது நிரம்பிய மகாதீர் மொஹமத். கடந்த 2018ல் இவர் மீண்டும் மலேசியாவின் பிரதமர் ஆன போது உலகமே இவரை கொண்டாடியது. அந்நாட்டு ஆளும் கட்சியின் ஊழல்களுக்கு இடையில் தான் தேர்தலை சந்தித்து மகாதீர் மொஹமத் வெற்றிபெற்றார். \ மலேசியன் யுனைட்டட் இண்டிஜினியஸ் […]

Categories
உலக செய்திகள்

2 பேருக்கு கொரோனா… ஆஸ்திரிய எல்லையில் நிறுத்தப்பட்ட இரயில்..!!

இத்தாலி நாட்டில்  இருந்து ஆஸ்திரியா செல்வதாக இருந்த இரயில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இரு நாட்டு எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது . கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமில்லாமல் மற்ற பிற நாடுகளுக்கும் பரவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதாவது, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், ஈரான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு பலர் உயிருக்கு போராடி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடான […]

Categories
உலக செய்திகள்

BREAKING : மலேசிய பிரதமர் மகாதீர் ராஜினாமா..!!

மலேசிய பிரதமர் மகாதீர் பின் முகமது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள மகாதீர் பின் முகமதுக்கு வயது 95. ஆளும் கூட்டணியில் இருந்தும் மகாதீர் முகமதுவின் கட்சி விலகியது. மலேசிய மன்னரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார் பிரதமர் மகாதீர். மேலும் அன்வர் இப்ராகிம் பிரதமர் பதவிக்கு வராமல் தடுக்க மகாதீர் கூட்டணிக் கட்சியினர் முயற்சி செய்கின்றனர். பிரதமர் பதவியை மகாதீர் ராஜினாமா செய்ததால் மலேசிய அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

வூஹானில் மேலும் ஒரு வைத்தியர் கொரோனா வைரசால் பலி..!!

சீனாவின் வூஹானில் மேலும் ஒரு வைத்தியர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பலியாகியுள்ளார். சீனாவில் உள்ள ஜாங்னான் வைத்தியசாலை வட்டாரங்கள் அதிகாரப் பூர்வமாக இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 29 வயதான சியா சிசி என்ற அந்த வைத்தியர் கடந்த 19 ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் அவர் வூஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் வைத்தியசாலையில் அந்த வைத்தியர் தொடர்ந்து சிகிச்சை பெற்று […]

Categories

Tech |