Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி… வீட்டில் முடங்கி கிடக்கும் மக்கள்…. வெறிச்சோடி காட்சியளிக்கும் சாலைகள்!

கொரோனா வைரஸ் தாக்குதலால் நியூயார்க் நகரில் பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்கள் மூடப்பட்டுள்ளதால் சாலைகள் போக்குவரத்து நெரிசலின்றி வெறிச்சோடி கிடக்கின்றது  சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொரோனா இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா,  உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பயமுறுத்தி வருகிறது. இதுவரையில் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி – ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்க முடிவு!

கொரோனா வைரஸ் அச்சத்தால் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 24ம் தேதி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் கோலாகலமாக தொடங்க இருந்தது. ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி பாரம்பரிய முறைப்படி மார்ச் 12ம் தேதி கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியா கிராமத்தில் ஏற்றப்பட உள்ளது. இந்த ஜோதியை முதலில் கைகளில் ஏந்தும் நபராக கிரீஸ் நாட்டின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான அனா கோரகாக்கியை ஹெலெனிக் […]

Categories
உலக செய்திகள்

கணவன் சமைத்த உணவை சாப்பிட்ட மனைவி … காவல் நிலையத்தில் கொடுத்த புகார்..! விசாரணையில் உறைந்துபோன போலீஸ்.!!

உத்திரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர்  பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது மனைவிகாக உணவு சமைத்து வைத்துள்ளார். அவரின் மனைவி மளிகை கடைக்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி கொண்டு மிகவும் சோர்ந்து வந்த நிலையில் குடிபோதையில் கணவன் சமைத்த உணவை சாப்பிட தொடங்கியுள்ளார். கணவன் சமைத்த அசைவ உணவை வாயில் வைத்த சில நொடியிலேயே அந்தப் பெண் வாந்தி எடுத்துள்ளார். அதன் பின்பு அந்த உணவை என்னவென்று கேட்டபோது அதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

முதலில் 1,500 தலிபான்கள் விடுவிக்கப்படுவார்கள்… உத்தரவில் கையெழுத்திட்டார் ஆப்கான் அதிபர்.!

ஆப்கான் அதிபர் அஷ்ரப்  கானி (Ashraf Ghani) தலிபான் கைதிகளை விடுவிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப்  கானி தலிபான் கைதிகளை விடுவிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். சிறையில் இருந்து விடுதலையாகும்போது தலிபான் கைதிகளை அழைத்துச் செல்லத் தயாராக  வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல பதிலுக்கு சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள ஆயிரம் ராணுவ வீரர்களை விடுவிக்க தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கும் தலிபானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய அம்சமாகும். ஆப்கானிஸ்தானில் சிறைகளில் உள்ள 5,000 தலிபான்களில் […]

Categories
உலக செய்திகள்

கோஸ்ட்டா ரிகாவில் 3 டன் கொகைன் பறிமுதல்… 4 பேர் கைது!

கோஸ்ட்டா ரிகா நாட்டில் 3 டன் கொகைன் போதை பொருட்களை அந்நாட்டு கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கோஸ்ட்டா ரிகாவில் (Costa Rica) 3 டன் கொகைன் (Cocaine) போதை பொருளை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த போதைப்பொருள்  கொலம்பியாவிலிருந்து படகு மூலம் கரீபியன் கடல் பகுதி வழியாக கடத்தி வரப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக கொலம்பியா நாட்டைச் சேர்ந்த 3 பேரும், நிகரகுவா நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

ஏற்கனவே யூஸ் பண்ண மாஸ்க்… இப்படி செஞ்சீங்க… ரூ 7,00,000 அபராதம்… எச்சரிக்கும் ஜப்பான்!

பயன்படுத்திய முகமூடிகளை புதியது போன்று மறுவிற்பனை செய்தால் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று ஜப்பான் அரசாங்கம் கடுமையாக எச்சரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொரோனா இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா,  உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பயமுறுத்தி வருகிறது. இதுவரையில் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து […]

Categories
உலக செய்திகள்

”ஆபீஸுக்கு வராதீங்க” ஊழியர்களை அறிவுறுத்தும் நிறுவனங்கள் …!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊழியர்கள் அனைவரும் அலுவலகம் வராமல் வீட்டில் இருந்தே பார்க்கும் படி பல நிறுவனங்கள் அறிவுத்துத்தியுள்ளது. ட்விட்டர் அமெரிக்காவில் இருக்கும் தனது சியாட்டில் அலுவலகத்தை தூய்மை படுத்துவதற்காக மூடியிருக்கிறார்கள்.கொரோனா பாதிப்பு காரணமாக ஐடி நிறுவனங்கள், அவங்களுடைய ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்கும் படி சொல்லி இருக்கிறார்கள். அந்த வகையில் கொரோனா பாதிப்பு காரணமாக சியாட்டலில் இருக்கக்கூடிய ட்வீட்டர் அலுவலகத்தையும் ட்வீட்டர் மூடி சுத்தம் செய்வதற்காக ஊழியர்கள் எல்லாரையும் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் படி அறிவுறுத்தி […]

Categories
உலக செய்திகள்

கொடிய கொரோனாவின் தாக்கம்… அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 26ஆக உயர்வு!

உலகை மிரட்டி வரும் கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இதுவரையில் மொத்தம் 4,025 பேர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 299 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  6,088 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் அமெரிக்காவில் கொடிய கொரோனாவால் 26 பேர் […]

Categories
உலக செய்திகள்

வேலை, பணம் எதுவும் வேண்டாம்… சிங்கத்துடன் தில்லாக வாழ்ந்து வரும் இளைஞன்!

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு பணக்காரர் தனது வேலையை ராஜினாமா செய்து ஆப்பிரிக்காவில் சிங்கங்களுடன் வாழ்ந்து வரும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. டீன் ஸ்னெய்டர் (deanschneider) என்ற பணக்கார இளைஞர் ஒருவர்  பல்வேறு தொழில்களை செய்து வந்துள்ளார். அதேநேரத்தில் அவருக்கும் சிங்கத்தின் மீது ஈர்ப்பு அதிகம். ஆப்பிரிக்க சிங்கங்கள் அழியும் நிலையில் இருந்து வருவதை அறிந்த அவர், தென்னாப்பிரிக்காவில் சுமார் 360 ஹெக்டேர் நிலத்தை வாங்கி சிங்கங்களை வளர்த்து வருகிறார். இதற்காகவே தனது அனைத்து வேலைகளையும் ராஜினாமா செய்த அவர், […]

Categories
உலக செய்திகள்

கொரானாவால் உயிரிழந்த நபர் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 60 பேர்..! தற்போதய நிலை என்ன.??

ஸ்பெயினில் கொரானாவால் உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 60 பேருக்கு கொரானா  வைரஸ் பரவிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவில் உருவான கொரான வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரானா வைரஸ்சால்  ஸ்பெயினில்  இதுவரை 1200-க்கும்  அதிகமான பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் விக்டோரியா  நகரில் 2 வாரங்களுக்கு முன் கொரானா நோயால் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் இருந்து 10 நாட்களில் அமெரிக்க படைகள் வெளியேறும்!

தலிபான்களுடனான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அடுத்த 10 நாட்களில் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வாபஸ் பெறத்தொடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க செய்தித் தொடர்பாளர் கர்னர்  சன்னி லெகெட் (Sonny Leggett) செய்தியாளர்களிடம் பேசிய போது, அடுத்த 135 நாட்களுக்குள் வீரர்களின் எண்ணிக்கையை 12 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் ஐ.எஸ், அல்கொய்தா உள்ளிட்ட அமைப்பினருடன் எதிர்த்துப் போராடுவதற்காக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையினருடன் தாங்கள் சேர்ந்துள்ளதாகவும்  அவர் […]

Categories
உலக செய்திகள்

யார் சொன்னது… மது குடித்தால் கொரோனா வராதுன்னு… பரிதாபமாக 27 பேர் பலியான சோகம்!

ஈரான் நாட்டில் மது குடித்தால் கொரோனா தாக்காது என்று நம்பி போய் மதுக்குடித்த 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கும் இந்த வைரசால் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஈரான் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது. ஈரானில் இதுவரை 230க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், […]

Categories
உலக செய்திகள்

தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் – உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,000ஐ தாண்டியது!

கொரோனா வைரஸால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,000ஐ தாண்டியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. அந்த வைரசால் உலகளவில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதலிடத்தில் சீனாவும், அதற்கடுத்த இடத்தில் இத்தாலியும் உள்ளது. சீனாவில் 3 […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கையாக இருங்க… மொத்தம் 4,025 பேர் மரணம்…. 1,14, 299 பேரை பிடித்து வைத்து மிரட்டும் கொரோனா!

கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளதால் உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இத்தாலியில், கொரோனா வைரஸால் 463 பேர் இறந்துள்ளனர். இதன் காரணமாக 60 மில்லியன் மக்கள் வெளியே செல்ல தடை விதித்துள்ளது இத்தாலி அரசு. நாடு முழுவதும் இருக்கின்ற அனைவரும் வேலை மற்றும் அவசரநிலைகளைத் தவிர வேறு இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தாலிய அரசாங்கம் அனைத்து பொதுக் […]

Categories
உலக செய்திகள்

“ரியல் சிங்கப்பெண்கள்” 3 மணி நேரம் மட்டுமே தூக்கம்…… கண் கலங்க வைக்கும் தியாகம்…..!!

சீனாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவரக்ளுக்கு சிகிச்சை அளிக்க செவிலியர்கள் செய்யும் தியாகம் உலக மக்களை வியக்க செய்கிறது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில்  தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்   இந்த வைரஸ்க்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க அந்நாட்டு அரசின் மருத்துவர்களையும் குறிப்பாக செவிலியர்கள் அதிதீவிரமாக உழைத்து வருகின்றனர். கொரோனா  வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேரமும் சேவை வழங்க வேண்டும் என்பதால் மிகப்பெரிய தியாகத்தை […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை… கண்டு கொள்ளாத வட கொரியா… உன்னிப்பாக கவனிக்கும் தென் கொரியா!

உலக நாடுகளின் எதிர்ப்பை கண்டுக்கொள்ளாமல் செயற்பட்டுவரும் வடகொரியா, மீண்டும் ஏவுகணை சோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருக்கும் ஹாம்யாங் (Hamyang) மாகாணத்தில் உள்ள சோன்டாக் பகுதியில் இருந்து 3 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக, தென்கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற ஏவுகணைகள் மீண்டும் ஏவப்படலாம் என்றும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தென் கொரியா இராணுவம் கூறியுள்ளது. முன்னதாக, வட கொரியா கடந்த வாரம் கடலில் அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை […]

Categories
உலக செய்திகள்

இனி நெருங்க வேண்டாம்… கொரோனா நோயாளிகளை பரிசோதிக்கும் புதிய ரோபோ..!!

கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு பரிசோதனைகள் செய்வதற்கு 2 ரோபாக்களை  சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா தீயாக பரவியுள்ளது. இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியாவில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. உலக நாடுகள் அனைத்துமே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு […]

Categories
உலக செய்திகள்

தீயாக பரவும் கொரோனா…. வழியில்லாமல் 70,000 கைதிகளை விடுவித்த ஈரான்..!!

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க ஈரான் நாட்டின் சிறைகளில் இருக்கும் 70 ஆயிரம் கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா தீயாக பரவியுள்ளது. இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியாவில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. உலக நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பயம்… ‘டாய்லெட் பேப்பர்’ இல்லாமல் தவிக்கும் மக்கள்…. உதவி செய்த செய்தித்தாள் நிறுவனம்!

கொரோனா வைரசால் ஆஸ்திரேலிய நாட்டில் டாய்லெட் பேப்பருக்கு பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து NT News என்ற செய்திதாள் நிறுவனம் கூடுதல் பக்கங்களை அச்சிட்டு மக்களுக்கு உதவியுள்ளது  சீனாவின் வூஹான் நகரில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா 109 நாடுகளில் பரவி உலகையே மிரட்டி வருகிறது. ஆஸ்திரேலியாவிலும் கொரோனா வைரசின் கோர தாக்குதலுக்கு 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 4 பேர்  உயிரிழந்துள்ளனர். இதனால் பீதியில் உறைந்திருக்கும் அந்நாட்டு மக்கள் அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களையெல்லாம் வாங்கி வீட்டில் குவித்து வருகின்றனர்.  அதனால் […]

Categories
உலக செய்திகள்

ரூ 1,85,00,000 மதிப்பு… வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ஆமைக்குஞ்சுகள் பறிமுதல்!

கொலம்பியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆமை குஞ்சுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அமேசானாஸ் (Amazonas) விமான நிலையத்தில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஒரு அட்டைப் பெட்டிக்குள் மறைத்து வைத்து ஆமைகளை கடத்த முயன்றதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.உடனே அட்டைப் பெட்டியை அவர்கள் திறந்த பார்த்த போது, உயிருள்ள நிலையிலும், இறந்த நிலையிலும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் இருந்தன. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சட்ட விரோதமாக […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING : ”அதிபர் பதவியேற்பில் குண்டுவெடிப்பு” ஆப்கானில் பதற்றம் …!!

ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவி ஏற்பு விழாவின் போது அடுத்தடுத்து குண்டு வெடித்ததால் பற்றமான சூழல் நிலவி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபானுக்கும் , அந்நாட்டு நாட்டு அரசுக்கும் எதிராக கடந்த 18 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பல பிரதிநிதிகள் முயற்சி எடுத்தும் பலனளிக்கவில்லை. இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தாலிபானின் எச்சரிக்கையை மீறி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் நடக்கக்கூடாது, தேர்தலில் மக்கள் யாரும் வாக்களிக்க கூடாது, […]

Categories
உலக செய்திகள்

வேட்டையாடி வரும் கொரோனா…. ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 237 ஆக உயர்வு!

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசால் ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை  237 ஆக உயர்ந்தது சீனாவில் தொடங்கி 109 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஈரான் நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் (Kianoush Jahanpour) இன்று  கூறுகையில், கடந்த 24 […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி முட்டாள்தனம்… வருமானம் கொறஞ்சி போன எரிச்சல்… டெஸ்லா நிறுவனரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

கொரானா வைரஸ் பீதி முட்டாள்தனம்  என டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலோன் மஸ்க் (Elon Musk) கூறியதால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார். சீனாவில் தொடங்கி 97 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 827 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,09,976 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்து, இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

நாட்டின் அரசன் நான்… ”பாத பூஜை செய்ய வாங்க”….அழைக்கும் நித்தி….!!

தனக்கு பாதபூஜை செய்ய வாருங்கள் என்று மின்னஞ்சல் ஒன்றை நித்தி வழங்கியுள்ளார். கைலாசத்தின் அதிபர் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ள நித்தியானந்தா எதாவது ஒரு நாட்டில் இருந்து கொண்டோ அல்லது யாருக்கும் தெரியாதவாறு ஏதேனும் ஒரு மூலையில் இருந்து கொண்டு அவருக்கு தோன்றியதெல்லாம் பேசி சர்சைக்கு பெயர்போனவர். அண்மையில் புதுக்கதையை அளந்து விட்டுள்ள நித்தி , அமெரிக்காவில் இருப்பதாக சொல்லிய ஒரு தீவை கைலாசநாடு என்று அறிவித்தார். கைலாசாவிற்கு அனைத்து நாடுகளிலும் தூதரகம் அமைக்கும் பணி ஈடுபட்டு வருவதாக தெரிவித்த […]

Categories
உலக செய்திகள்

13 நாட்களில் கொரோனாவை வென்ற 100 வயது முதியவர்..!

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 100 வயது முதியவர் சிகிச்சைக்கு பின்னர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சீனாவில் தொடங்கி 97 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 827 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,09,976 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்து, இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. இதனிடையே […]

Categories
உலக செய்திகள்

கிண்டல் செய்த மசூத் அசார்… போட்டு தள்ள முடிவெடுத்த அமெரிக்கா?… பயந்து போய் சிறை மாற்றிய பாகிஸ்தான்!

அமெரிக்க தாக்குதலுக்கு பயந்து போய் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவரான மசூத் அசார் ராவல்பிண்டி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான். பாகிஸ்தானில் பாஹாவால்புர் சிறையில் மசூத் அசார் அடைக்கப்பட்டிருந்தான். ஆனால் தற்போது அவன் திடீரென ராவல்பிண்டி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான். காரணம், அமெரிக்கா அவனுக்கு குறி வைத்தாக சொல்லப்படுகிறது.  ஆம் , அமெரிக்காவுக்கும், தாலிபான் தீவிரவாத இயக்கத்திற்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதை கிண்டலடித்துப் பேசினான் மசூத் அசார். அவன், ஓநாயின் வால் அறுந்து ஓடி விட்டது […]

Categories
உலக செய்திகள்

ராக்கெட் வேகத்தில் கொரோனா… வீரர்களே இந்த 2 நாட்டுக்கு போகாதீங்க… அமெரிக்கா அதிரடி உத்தரவு!

கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக இருப்பதால் தங்கள் இராணுவத்தினர் இத்தாலி மற்றும் தென் கொரியாவுக்கு செல்லவேண்டாம் என்று அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.  சீனாவில் தொடங்கி 97 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 827 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,09,976 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்து, இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறினால்……. 3 மாதம் சிறை….. 1,50,00,000 பேர் வீட்டுக்குள் முடக்கம்…..!!

இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா  வைரஸ் இத்தாலி, ஜப்பான், தாய்லாந்து, இந்தியா என படிப்படியாக உலகம் முழுவதும் அதிவிரைவில் பரவி வருகிறது. இந்நிலையில் தென்கொரியா, சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இத்தாலியில் எதிர்பாராதவிதமாக இதனுடைய எண்ணிக்கை கூடிக் கொண்டே போவதால் அந்நாட்டு அரசு அவர்களது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டு […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 133 பேர் மரணம்… அதிர்ச்சியில் உறைந்த இத்தாலி… கட்டுக்குள் கொண்டு வந்த சீனா… மொத்தம் 3,827 பேரை கொன்று குவித்த கொரோனா!

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசின் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 3,827 ஆக உள்ள நிலையில் சீனாவில் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது  கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் உலகளவில் மொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 3, 827 ஆக உயர்ந்துள்ளது. 97 நாடுகளில் 1,09,976 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில்  சீனாவில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான இறப்பு ஏற்பட்டு வந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்… ஈரானுடனான எல்லையை மூடிய ஈராக்.!!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஈராக் அரசாங்கம் ஈரானுடனான எல்லையை மூடியுள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா உலகையே கதிகலங்க வைத்து வருகின்றது. 95க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை 3,400 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

பல இடங்களில் போலீசார் அதிரடி சோதனை… போலி ‘மாஸ்க்’ தயாரித்தவர்கள் கைது!

இந்தோனேசியாவில் தரமில்லாத போலி முககவசங்கள் தயாரித்தவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. 95 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ள கொரானா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு முகக்கவசத்தின் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் மக்கள் பொது வெளியில் செல்லும்போது நோய் தாக்காமல் இருக்க ஒவொருவரும் முகக்கவசம் அணிந்து கொண்டுதான் செல்கின்றனர். தற்போது வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் முகக்கவசம் முன்பை விட அதிகமாக தேவைப்படுகிறது. இதனை […]

Categories
உலக செய்திகள்

சிரியாவில் புற்று நோய் பாதித்த குழந்தைகள்… நேரில் சென்று ஆறுதல் சொன்ன அதிபரின் மனைவி!

சிரியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை அந்நாட்டு அதிபர் அல்-அசாத்தின் (Bashar al-Assad) மனைவி அஸ்மா அல்-அசாத் (Asma al-Assad) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சிரியாவில் உள்நாட்டுப் போர் கடந்த 8 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், அதிபர் பஷர் அல்-அசாத்தின் மனைவி அஸ்மா அல் அசாத், சண்டையில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி வந்தார். இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸுக்குச் சென்ற அஸ்மா அல் அசாத், அங்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

ரூ 40,00,000 பரிசு… அடர்ந்த பனியில் 1, 609 கி.மீ தூர நாய்கள் வண்டி பந்தயம்… அலாஸ்காவில் கோலாகல தொடக்கம்!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 1, 609 கி.மீ தூர நாய்கள் வண்டி பந்தயம் கோலாகலமாக தொடங்கியது.  அமெரிக்க நாட்டின் அலாஸ்கா மாகாணம் ஏங்கரேஜ் (Anchorage) நகரத்தில் இருந்து தங்கள் நாய்களுடன் போட்டியாளர்கள் புறப்பட்டு விட்டார்கள். அநேகமாக 9 நாட்களுக்குப் பிறகுதான் அவர்கள் இறுதி இடமான நோம் நகரை (Nome) அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு  40 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்படும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். முன்னெப்போதும் இல்லாத அளவை […]

Categories
உலக செய்திகள்

வேகமாக பரவும் கொரோனா… இத்தாலியில் பலி எண்ணிக்கை 233 ஆக உயர்வு..!!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு இத்தாலியில்  233 பேர் இறந்துள்ளனர் என்றும் 5,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா உலகையே கதிகலங்க வைத்து வருகின்றது. 95க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை 3,400 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

JUST NOW : ஈரானில் கொரோனா உயிரிழப்பு 194ஆக உயர்வு ….!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரான் நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான், பிரான்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சீனா முன்பை விட உயிரிழப்புகளை கட்டுப்படுத்தி […]

Categories
உலக செய்திகள்

கொரோனா மிரட்டல்… திருமணத்திற்கு கட்டுப்பாடு விதித்த இத்தாலி!

கொரோனாவின் மிரட்டல் காரணமாக இத்தாலியில் திருமணங்கள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா. 90க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா குடியிருக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா இத்தாலியில் அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில் இத்தாலியில் திருமணத்திற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, திருமணத்திற்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாக இருக்க வேண்டும் எனவும், விழாவிற்கு வருபவர்களை முன்புபோல கட்டியணைத்து […]

Categories
உலக செய்திகள்

புளோரிடாவில் 2 முதியவர் கொரோனாவால் மரணம்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 முதியவர்கள் சிகிச்சை பலனின்றி பலியானதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகின்றது. 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா குடியேறிருக்கிறது. இதுவரை கொரோனவால் 3200க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் பிடியில் வல்லரசு நாடான அமெரிக்காவும் சிக்கியுள்ளது. இந்நிலையில் சீனாவுக்கு சென்று புளோரிடா திரும்பிய 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு உதவுங்க… பாகிஸ்தானை கதி கலங்க செய்த வெட்டுக்கிளிகள்… இம்ரான் கான் எடுத்த முடிவு!

 பாலைவன வெட்டுக்கிளிகளை சமாளிக்க முடியாததால்  பாகிஸ்தான் அரசு சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடியிருக்கிறது பாகிஸ்தான் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான வெட்டுக்கிளி தாக்குதலை சந்தித்து வருகின்றது. இதனால் பாகிஸ்தான் அதிரடியாக தேசிய நெருக்கடி நிலையை (அவசர நிலை) அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பொதுவாக வெட்டுக்கிளிகள் குளிர் காலங்களில் மட்டுமே காணப்படும். ஆனால் இந்த முறை,  அங்கு நிலவும் குறைந்த வெப்பநிலை காரணமாக தொடர்ச்சியாக வெட்டுக்கிளிகள் அங்கேயே டேரா போட்டு தங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் என்னசெய்வதென்று […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து… ஒருவர் பலி… 5 பேருக்கு தீக்காயம்!

பிரான்ஸ் நாட்டில் அடுக்குமாடி கட்டிடம் ஓன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானதோடு 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் உயரமான கட்டிடம் ஒன்றில் 8 ஆவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயிணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே ஒருவர் தீயில் சிக்கி உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த 5 பேரை […]

Categories
உலக செய்திகள்

நேற்று ஒரே நாளில் 1,200 பேர் பாதிப்பு… இப்படியே போனா அவ்வளவுதான்… இத்தாலி எடுத்த அதிரடி முடிவு!

கொரோனா வைரஸ் வேகம் காட்ட தொடங்கியதால்  இத்தாலி அரசாங்கம் அதிரடி முடிவெடுத்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உலகையே பயமுறுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்து அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஓன்று இத்தாலி. இந்நாட்டில் கொரோனா தற்போது நாளுக்குநாள் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் இத்தாலி அரசாங்கம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது, அந்நாட்டின் லோம்பர்டு பிராந்தியம் மற்றும் 14 மாகாணங்களில் வசிக்கும் சுமார் 16 மில்லியன் மக்களை தனிமைப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

கொரானா நோயாளிகள் பாதுகாக்கப்பட்ட கட்டிடம் இடிந்து விபத்து..! மீட்புப்பணிகள் தீவிரம்

சீனாவில் சுமார் 70 கொரானா நோயாளிகள் மருத்துவர்களின் கண்காணிப்பில் தனிமைப்படுத்தி வைத்திருந்த ஹோட்டல் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் கிழக்கு புஜியான் மாகாணத்தில்  உள்ள ஹோட்டல் ஒன்றில் கொரானா நோயாளிகளிடம் தொடர்பு கொண்டிருந்த நபர்களை தனிமைப்படுத்தி கொரானா தோற்று உள்ளதா என கண்டறிவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு  7:30 மணி அளவில் ஹோட்டல் இடிந்து  விழுந்தது. இந்த ஹோட்டலில் 70 பேர் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

97 நாடுகள்….. லட்சம் பேர் பாதிப்பு…. கொரோனாவால் நடுங்கும் உலக நாடுகள் …..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா என்ற ஒற்றைச் சொல்லுக்கு தான் உலகமே தற்போது அஞ்சி நிற்கிறது.சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 97 நாடுகளுக்கு பரவி நிற்கிறது.உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 80 ஆயிரத்து 651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை மட்டும் புதிதாக 99 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3070 ஆக உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

17 பேர் மரணம்… ஆனால் எங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவு தான்… அதிபர் டிரம்ப்!

அமெரிக்காவில் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு குறைவே என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இதுவரையில் ஒட்டு மொத்தமாக கொரோனாவின் கோர பிடியில் சிக்கி 3,380 பேர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. சீனா முன்பை விட தற்போது கொரோனாவை கட்டுக்குள் […]

Categories
உலக செய்திகள்

கார் விபத்தில் உயிரிழந்த 2 இளம் பெண்கள் ! இறுதிச்சடங்கில் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்.!!

கார் விபத்தில் உயிரிழந்த  இரண்டு இளம் பெண்களின் பெற்றோர் தங்கள் மகள்களின் உடல்கள் தவறாக அடையாளம் காணப்பட்டு உடல்கூறு செய்யப்பட்டதாகக் கூறி காவல்துறை மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் புளோரிடாவின் பென்சகோலா பகுதியில் ஏற்பட்ட விபத்தில் டெலிகா ‘லீகா’ கிப்சன்(18) மற்றும் சமாரா குக்ஸ்(15) இருவரும் இறந்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர்கள் உடலை உடல்கூறு செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்                   […]

Categories
உலக செய்திகள்

கொரானா தோன்றிய சந்தையில் 40 நாட்களாக பதுங்கி வாழ்ந்து வந்த குடும்பம்..! தற்போதய நிலை என்ன..?

கொரானா வைரஸ் தோன்றியதாக கூறப்படும்  சீனாவின் வூஹான் நகர உணவுச் சந்தையில் இரகசியமாக வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தை அதிகாரிகள் நேற்று மீட்டுள்ளனர். சீனாவின் வூஹான் நகரில் வழக்கம்போல கிருமி நாசினி தெளிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர் வந்துள்ளனர். அப்போது  வூஹான்  நகரின் முக்கிய உணவுச் சந்தையில் இ ரகசியமாக வாழ்ந்து வந்த 4 பேர் கொண்ட குடும்பத்தை கண்டறிந்துள்ளன. அதிகாரிகள் உடனடியாக அந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை மற்றும் வயதான உள்ளிட்ட 4 பேரை மீட்டு […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெளுத்து வாங்கும் கனமழை… 17 பேர் மரணம்…. 30க்கும் மேற்பட்டோர் காயம்!

பாகிஸ்தான் நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக  ஏற்பட்ட விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே கனமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. அந்நாட்டின் கைபர் பக்துவா மற்றும் சிந்து உள்ளிட்ட மாகாணங்களில் பெய்துவரும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருக்கும் வீடுகள் இடிந்தும், சாலைகளில் மழை நீர் சூழ்ந்தும் காணப்படுகின்றது. இந்நிலையில், அந்நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழையின் […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில்… 49 பேர் மரணம்… இத்தாலியில் வேகமாக காவு வாங்கும் கொரோனா!

இத்தாலியில் கொரோனா வைரசின் ஆக்ரோஷ தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49 பேர் உயிரிழந்த நிலையில்  பலியானோரின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இதுவரையில் ஒட்டு மொத்தமாக கொரோனவால் 3,380 பேர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து […]

Categories
உலக செய்திகள் வைரல்

முடி வெட்டினால் கொரோனா பரவுமா?… அப்படின்னா அதுக்கும் நாங்க ரெடி…. சீனர்களின் புது யோசனை… வீடியோவ பாத்துட்டு நீங்களே சொல்லுங்க!

சீனர்கள் கொரோனா வைரஸ் தொற்றக்கூடாது என்பதற்க்காக தள்ளி நின்று கம்பால் முடிவெட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவின் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான், பிரான்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இதுவரையில் கொரோனவால் 3200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

உலகப் புகழ்பெற்ற மோவாய் சிலை… கார் மோதி உடைக்கப்பட்டதால் அதிர்ச்சி.!!

ஈஸ்டர் தீவில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற மோவாய் சிலை ஒன்று கார் மோதி சுக்கு நூறாக உடைக்கப்பட்டு  கிடக்கும் காட்சி வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சிலி நாட்டின் ஈஸ்டர் தீவில் இருக்கிறது உலக புகழ்பெற்ற மோவாய் சிலைகள் (moai’ statues). இந்த சிலைகள் மனித முகம் போன்ற தோற்றத்துடன் காணப்படுகின்றது. அந்த தீவில் ஒரே மாதிரியான ஏராளமான கற்சிலைகள் இருக்கின்றன. இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி அந்த சிலைகளில் ஒன்று, கார் மோதி சுக்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கோரம்… பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,00,000 ஆக உயர்வு!

உலகையே மிரட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,000ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான், பிரான்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சீனா முன்பை விட உயிரிழப்புகளை […]

Categories

Tech |