Categories
உலக செய்திகள்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பற்றி மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் உணவுக்கு கூட கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இலங்கையில் பல மாதங்களாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பற்றி பெரடனியா பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்று மேற்கொண்டுள்ளது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது அந்த வகையில் நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் அதாவது 96 லட்சத்திற்கும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “மீண்டும் ராக்கெட் தாக்குதல்”…. அதிர்ச்சியில் நாட்டு மக்கள்….!!!!

பிரபல நாட்டில் நாடாளுமன்றத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈராக் நாட்டில் உள்ள பாக்தாத்தின் பசுமை மண்டலம் நிறைந்த பகுதியில் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்த நாடாளுமன்றத்தில் நேற்று  புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்த 9 ராக்கெட்டுகள்  மூலம் கத்தி வாய்ந்த குண்டுகள் வீசப்பட்டது. இந்த தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. விமான நிலையங்களில் 2050-க்குள் “இது பூஜ்ஜியமாக இருக்கும்”…. உலக நாடுகள் ஒப்பந்தம்….!!!!

பிரபல நாட்டில் விமான போக்குவரத்து அமைப்பின் சார்பில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. கனடாவில்  சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் சார்பில்  நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து 184 நாடுகள் மற்றும் பிராந்தியங்களை சேர்ந்த 2,500   பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூட்டத்தில் பாதுகாப்பு, வழி செலுத்துதல் உள்ளிட்ட தொழில்நுட்பம் தொடர்பாக 56 தலைப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து வருகின்ற 2050-ஆம் ஆண்டிற்குள் சர்வதேச விமானங்கள் நிகர  பூஜ்ஜிய […]

Categories
உலக செய்திகள்

முக்கிய அறிவிப்பு…. இந்தியாவின் நிதி பற்றாக்குறையை குறைக்க வேண்டும்…. சர்வதேச நிதியம் எச்சரிக்கை….!!!!

இந்தியா நீதி பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என சர்வதேச நிதியம் கூறியுள்ளது. சர்வதேச நிதியத்தின் நிதி விவகார துறையின் துணை இயக்குனர் புவலோ  மவுரோ செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது. நமது  நாட்டின் கடன் விகிதம் இந்த ஆண்டு இறுதிக்குள் 84 சதவீதமாக இருக்கும். இது வேறு வளர்ந்து வரும் நாடுகளை விட அதிகம். இதனை  தாங்கிக் கொள்ளக் முடியும். மேலும் நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10  சதவீதமாக உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

வேற லெவல்!!…. ஐ.நா.வில் “மாஸ் காட்டும் இந்திய பெண்”…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

ஐ.நா. வில்  சிறப்பு அறிக்கையாளராக பெண் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக இந்தியாவை சேர்ந்த அஸ்வினி கே.பி. என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவில் உதவி பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். தற்போது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்ட 6-வது நபர் மற்றும் ஆசியாவை  சேர்ந்த முதல் நபர் ஆகிய பெருமைகளை அஸ்வினி கே.பி. பெற்றுள்ளார். இந்த நிலையில் இதுவரை நியமிக்கப்பட்ட அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

என்ன….? “உலகத்தை மீண்டும் இணைத்தல்”…. சர்வதேச சிவில் விமான போக்குவரத்து கூட்டத்தின் ஒப்பந்தம்…!!!

“உலகத்தை மீண்டும் இணைத்தல்” என்ற தலைப்பில் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.  கனடா நாட்டில் மாண்ட்ரியல் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரிலுள்ள சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு அதன் தலைமையகத்தில் 41-வது நிர்வாகக் குழு கூட்டமானது நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 2050-ம் ஆண்டுக்குள் சர்வதேச விமானங்கள் நிகர பூஜ்ய கார்பன் வெளியீடு என்ற இலக்கை எட்டுவதற்கான வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதனை அடுத்து 184 நாடுகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

கிரிமியா-ரஷ்யா…. பாலம் துண்டிக்கப்பட்டதற்கு பின்…. படகு போக்குவரத்து தொடக்கம்….!!!!!

கிரிமியா தீபகற்பத்திற்கும், ரஷ்யாவிற்கும் இடையேயான படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. கிரிமியா தீபகற்பத்தில் ரஷ்யாவால் கட்டப்பட்ட கெர்ச் தரைப்பாலம், கடந்த சனிக்கிழமை அன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து இந்த பாலம் சேதமடைந்ததால் ரஷ்யா – கிரிமியா இடையிலான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கெர்ச் பாலத்தில் சேதமடைந்த பகுதிகளை விரைவில் சீரமைப்பதற்கு பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கிரிமியாவில் 40 நாட்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

இதற்கு என்ன காரணம்?…. பிரபல நாட்டில் “மர்மமான முறையில் உயிரிழந்த கங்காரு இனம்”…. விசாரணையில் அதிகாரிகள்….!!!!

பிரபல நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த விலங்குகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரபல நாடான ஆஸ்திரேலியாவில்  உயிரியல் பூங்கா ஒன்று  அமைந்துள்ளது . இந்த பூங்காவில் ஏராளமான விலங்குகள் வசித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென 8 கங்காருகள், 2  பாறை வலாபிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் இது குறித்து அந்த  பூங்கா செய்தி தொடர்பாளர் கூறியதாவது. இவைகள்  […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்….! புலி குட்டிகளுடன் கொஞ்சி விளையாடும் சிம்பான்சி குட்டி…. இணையத்தில் வைரலாகும் செம வீடியோ….!!!!!

குழந்தைகளின் நட்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக புலி குட்டிகளுடன் சிம்பான்சி குட்டி ஒன்று கொஞ்சி, விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சிறு குழந்தைகளுக்கு இடையேயான நட்பு எல்லைகளை கடந்தது. அந்த நட்புறவுக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில் இரண்டு புலி குட்டிகளுடன் சிம்பான்சி குட்டி ஒன்று கொஞ்சி, விளையாடும் காட்சிகள் மனம் கவர்கின்றன. அந்த வீடியோவில், அங்கத் என்ற பெயரிடப்பட்ட சிம்பான்சி குட்டி ஒன்று, இரண்டு புலி குட்டிகளுடன் கொஞ்சி, விளையாடியபடி காணப்படுகின்றது. […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….! விமானத்திலிருந்து கழன்று விழுந்த டயர்…. அதிர்ஷ்டவசமாக விபத்தின்றி தப்பிய பயணிகள்….!!!!

இத்தாலியில் போயிங் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் லேண்டிங் கியர் பகுதின் கீழ் இருந்த டயர் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போயிங் 787 ட்ரீம்லைனர் உதிரிபாகங்களைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் ராட்சத விமானம் இத்தாலியில் உள்ள டரன்டோவிலிருந்து புறப்பட்டு, அமெரிக்காவின் சார்லஸ்டனில் நகருக்கு செல்ல இருந்தது. ட்ரீம்லிஃப்டரின் தரையிறங்கும் கியர் பகுதியிலிருந்த டயர்கள் தரையிலிருந்து சில மீட்டர்கள் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது கீழே விழுந்தது. இதனால் விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை அங்கிருந்த […]

Categories
உலக செய்திகள்

இன்னுமா முடிக்கல?… அவரை எங்களிடம் அனுப்புங்கள்…. இந்திய அரசுக்கு ஜெர்மன் அரசு கடிதம்…!!!

ஜெர்மன் அரசாங்கம், சிலை கடத்திய வழக்குகளில் சிக்கிய சுபாஷ் கபூரை தங்கள் நாட்டிற்கு அனுப்புமாறு இந்தியாவிற்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. சிலை கடத்தலில் மன்னனாக அறியப்பட்ட சுபாஷ் கபூர் மீது ஐந்து வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் வலை வீசி தேடி வந்த நிலையில், கடந்த 2011 ஆம் வருடத்தில் சர்வதேச காவல்துறையினரின் உதவியோடு ஜெர்மனியிலிருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார். சுபாஷ் கபூர் குறித்த வழக்குகளை […]

Categories
உலக செய்திகள்

இது மட்டும் இருந்தால்… விரைவில் போருக்கு முடிவு கட்டிடுவோம்… உக்ரைன் அதிபரின் நம்பிக்கை…!!!

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அதிகமாக நிதி உதவி கிடைத்தால் ரஷ்யா மேற்கொள்ளும் போரை விரைவாக முடிவடைய செய்யலாம் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ரஷ்யா மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதல்களால் வீடுகளும், குடியிருப்புகளும் மொத்தமாக அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே அவற்றை மீண்டும் கட்ட கூடுதலாக பணம் தேவை என்று கோரிக்கை வைத்திருக்கிறார். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய வருடாந்திர கூட்டமானது, வாஷிங்டனில் நடந்தது. அமைச்சர்களோடு காணொளி காட்சி மூலமாக ஜெலன்ஸ்கி உரையாடினார். அப்போது, அவர் தங்கள் […]

Categories
உலக செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு… இத யார் வச்சது…? சீனாவில் பரபரப்பை ஏற்படுத்திய பேனர்…!!!

சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்று தலைநகரின் மேம்பாலத்தில் ஒரு பேனர் கட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங்கின் அரசாங்கத்திற்கு எதிராக எப்போதாவது அரிதாகத் தான் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும். இந்நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் சீன அரசாங்கத்திற்கு எதிராக எழுதப்பட்ட வாசகங்களுடன் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்நகரில் மக்கள் நடமாடும் நெருக்கடி நிறைந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு மேம்பாலத்தில் அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்றும் […]

Categories
உலக செய்திகள்

சீன நகரில் திடீரென்று அதிகரித்த கொரோனா…. வெளியான தகவல்…!!!

சீன நாட்டின் ஷாங்காய் நகரத்தில் மூன்று மாதங்கள் இல்லாத வகையில் ஒரே நாளில் 47 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் தற்போது கொரோனா தொற்று குறைந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது எனினும் சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது உலக சுகாதார மையம் வருத்தம் தெரிவித்துள்ளது இந்நிலையில் முதல் தடவையாக கொரோனா பரவியை சீன நாட்டில் மீண்டும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் ஷாங்காய் நகரத்தில் மூன்று மாதங்களில் இல்லாத […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் நடக்கும் பாலியல் குற்றங்கள்… ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு பெண் பாதிப்பு…. அதிர்ச்சி தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஆய்வில் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ஒரு புலனாய்வு பிரிவு மேற்கொண்ட ஆய்வின்படி நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது அதிகரித்து இருக்கிறது. எனினும் அந்த வழக்குகள் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டு குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையின் விகிதமானது 0.2 சதவீதம் தான் இருக்கிறது. 2017 ஆம் வருடத்தில் 3327 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கு அடுத்த வருடத்தில் அந்த […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரம்…. பேருந்தில் பற்றி எரிந்த தீ…. குழந்தைகள் உட்பட 18 நபர்கள் உயிரிழப்பு…!!!

பாகிஸ்தானில் திடீரென்று பேருந்தில் தீப்பற்றி எரிந்ததில் குழந்தைகள் உட்பட 18 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் நூரியா பாத் என்ற பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சென்ற பேருந்தில் 60க்கும் அதிகமானோர் பயணித்தனர். அப்போது திடீரென்று பேருந்தில் தீ பற்றி எரிந்தது. உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். எனினும் அதற்குள் பேருந்து முழுக்க தீ பரவியது. எனவே, சிலர் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியில் குதித்து தப்பிவிட்டனர். எனினும் குழந்தைகள் உட்பட 18 பேர் வெளியேற முடியாமல் பேருந்துக்குள் […]

Categories
உலக செய்திகள்

அமைதி பேச்சுவார்த்தைக்கு…. “முடியாது என்று ஒரு போதும் கூறாதீர்கள்”…. பிரபல நாட்டு வெளியுறவுத்துறை ஆலோசகர் அறிவிப்பு….!!!!

அமைதி பேச்சுவார்த்தைக்கு முடியாது என்று ஒருபோதும் கூறாதீர்கள் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை கொள்கை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.  உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 231 நாட்களாக நீடித்து வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த போரில்  கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக் […]

Categories
உலக செய்திகள்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை…. பிரபல நாடு நிறுத்த வேண்டும்…. ஐ.நா.வில் கண்டனம் தெரிவித்த இந்தியா….!!!!

ரஷ்யா மீதான ஐ.நா.சபை வாக்கெடுப்பின் போது காஷ்மீர் குறித்து பாகிஸ்தானின் “அர்த்தமற்ற” கருத்துகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து வருகின்றது. உக்ரைன் நாட்டில் உள்ள  4 பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்ததை கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ரஷ்யாவை கண்டிக்கும் இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. இந்நிலையில், இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்துள்ளன. மேலும் இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன. […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு விவகாரம்…. ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.சபையில் தீர்மானம்…. வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா….!!!!

உக்ரைன் பகுதிகளை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஐ.நா.சபையில் நிறைவேறியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய நிலையில் 8 மாதங்களாக போர் முடிவில்லாமல் நீடித்துக் கொண்டு வருகின்றது. இதற்கிடையே, போரில் உக்ரைனிடமிருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன் மற்றும்  ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள திட்டமிட்டுள்ள ரஷ்யா, இது குறித்து பொது வாக்கெடுப்பை நடத்தியது. இதன் பின்னர் இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர்…. பிரபல நாட்டு அதிபரிடம் பேசினேனா…. எலான் மஸ்க் கேள்வி….?

பேச்சுவார்த்தைக்கு தயாராகுவதாக ரஷ்ய அதிபர் புதின் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க்கிடம் கூறியதாக தகவல் வெளியாாக்கியுள்ளது.  உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 231 நாட்களாக தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையல் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைன் நாட்டு பிராந்தியங்களான லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் போன்ற 4 நகரங்களை ரஷ்யா தங்கள் […]

Categories
உலக செய்திகள்

முதல் நிலவு பயணம்…. முதியவரின் தன்னம்பிக்கை…. வெளியான தகவல்…!!!

முதல் தடவையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சுற்றுலா சென்ற டென்னிஸ் டிட்டோ சந்திரனுக்கு சுற்றுபயணம் செய்ய ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2001 ஆம் வருடத்தில் டென்னிஸ் டிட்டோ என்ற நபர் விண்வெளி நிலையத்திற்கு முதல் தடவையாக அவரது சொந்த செலவில் சுற்றுலா சென்றார். தற்போது 21 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஒரு துணிச்சல் மிகுந்த சாகசத்தை மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறார். அந்த வகையில் 82 வயதாகும் அவர், எலான் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் கடந்த வருடம் ஒப்பந்தம் […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”.. தோண்ட தோண்ட வந்த எலும்புக்கூடுகள்…. அதிர்ச்சியில் கட்டிட பணியாளர்கள்… பீதியில் மக்கள்…!!!

இங்கிலாந்து நாட்டில் இருக்கும் டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றின் அஸ்திவாரத்தை தோண்டிய போது, அதில் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் ஹாவர்ஃபோர்ட்வெஸ்த் என்ற பகுதியில் அமைந்துள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர் 2013 ஆம் வருடத்திலிருந்து அடைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அதனை இடிக்கும்  பணி நடக்கிறது. எனவே பணியாளர்கள் அஸ்திவாரத்தை தோண்டியுள்ளனர். அப்போது அதிலிருந்து மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டது. இதனால் கட்டுமான பணியாளர்கள் அதிர்ந்து போனார்கள். உடனடியாக தொல்பொருள் ஆய்வாளர்களும் புலனாய்வு அமைப்பினரும் அந்த […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இனவெறியா..? பதவி விலகிய இந்திய வம்சாவளி எம்.பி…!!!

அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி Tulsi Gabbard பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அந்த வகையில், அந்நாட்டின் ஜனநாயக கட்சியில் எம்.பி பதவியில் இருந்தவர் Tulsi Gabbard. இன்னிலையில், திடீரென்று அவர் எம்.பி பதவியை விட்டு தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார். மேலும், ஜனநாயக கட்சியில் இன வெறியும், போர் வெறியும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகை மரணம்…. தூங்கி கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்…!!!

அமெரிக்க நாட்டில் ஆஸ்கர் விருது பெற்ற புகழ்பெற்ற நடிகையான ஏஞ்சலா லான்ஸ்பெரி வீட்டில் தூங்கிய நிலையில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் 1984 ஆம் வருடத்திலிருந்து 1996 ஆம் வருடம் வரை ஒளிபரப்பு செய்யப்பட்ட மர்டர் ஷி ரைட் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த ஏஞ்சலா மிக பெரிய அளவில் புகழ்பெற்றார். தற்போது 97 வயதான நிலையில், வயது முதிர்வு காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் அவருடைய வீட்டில் தூங்கி நிலையிலேயே அவரின் உயிர் பிரிந்தது. […]

Categories
உலக செய்திகள்

கொட்டு தீர்க்கும் கனமழை…. சிக்கிக்கொண்ட வாகன ஓட்டிகள்…. பிரபல நாட்டில் மக்கள் அவதி….!!!!

கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல வாகன ஓட்டிகள் சிக்கித் தவித்து வருகின்றனர். ஸ்பெயின் நாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவைகள் பெரும் சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில் கொட்டி தீர்த்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் டோராவிஜா பகுதியை சேர்ந்த பல வாகன ஓட்டிகள் சிக்கிக் […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்த குண்டு வெடிப்பு…. 8 பேர் படுகாயம்…. பாக்தாத்தில் பரபரப்பு….!!!!

அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடித்ததில் எட்டு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் ஆகும். இந்த பகுதியில் நேற்று பொது மக்களின் கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இதனை அடுத்து வெடிகுண்டை அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென்று மற்றொரு குண்டும் வெடித்துள்ளது. இதில் மூன்று பாதுகாப்பு பணியாளர்களும் ஒரு […]

Categories
உலக செய்திகள்

கனமழையால் பலி எண்ணிக்கை…. 43 ஆக உயர்வு…. பிரபல நாட்டில் அச்சத்தில் மக்கள்….!!!!

வெனிசுலா நாட்டில் தெஜேரியாஸ் பகுதியில் ஜூலியா புயல் உருவாகியுள்ளது. இதனால் அங்கு கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கினால் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அரகுவா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 43 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் இதில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக […]

Categories
உலக செய்திகள்

வேணுகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான 2 சிலைகள்… பிரபல நாட்டில் கண்டுபிடிப்பு… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!!!!

திருவாரூர் ஆலந்தூர் வேணுகோபால சுவாமி கோயிலில் உள்ள சிலைகள் மாயமானதாக கடந்த 50 வருடங்களுக்கு முன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் உலக அளவில் உள்ள அருங்காட்சியகத்தில் சிலைகளை ஒப்பிட்டு பார்க்கும்போது மாயமான இரண்டு சிலைகளும் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிலைகளை மீட்கும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசின் மூலமாக ஆவணங்களை அனுப்பி யுனெஸ்கோ […]

Categories
உலக செய்திகள்

20 வருடங்களுக்குப் பின் முதன்முறையாக… விண்ணுக்கு அனுப்பப்பட்ட 7 நிமிடங்களில் நிறுத்தப்பட்ட திட்டம்… நடந்தது என்ன…?

ஜப்பானின் ககோஷிமாவில் உள்ள உச்சினூரா விண்வெளி மையத்தில் இருந்து எப்சிலன்-6 ராக்கெட் மூலமாக எட்டு செயற்கை கோள்கள் விண்ணிற்கு ஏவப்பட்டுள்ளது. இது அனுப்பப்பட்டு ஏழு நிமிடங்களில் நிறுத்தப்பட்டு இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் எப்சிலன்-6 ராக்கெட் பூமியை சுற்றிவர சரியான நிலையில் இல்லாத காரணத்தினால் தான் இந்த திட்டம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜப்பான் விண்வெளி கண்டுபிடிப்பு அமைப்பின் தலைவர் ஹிரோஷி யமகாவா இது பற்றி பேசும்போது, முதல் கட்டமாக ராக்கெட் தோல்விக்கான காரணத்தை […]

Categories
உலக செய்திகள்

ஐயோ! கடவுளே…. தோண்ட தோண்ட 240 எலும்பு கூடுகள்…. பிரபல நாட்டில் பகீர் சம்பவம்….!!!!

ஒரு சூப்பர் மார்க்கெட்டை இடித்துவிட்டு அந்த இடத்தில் குழி தோண்டிய போது ஏராளமான எலும்புக்கூடுகள் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள ஹாவர்போர்ட்வெஸ்டில் ஒரு சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட் கடந்த 2013-ம் ஆண்டு முதல்  மூடப்பட்ட நிலையில் இருக்கிறது. இந்நிலையில் சூப்பர் மார்க்கெட்டை தற்போது இடிப்பதற்கு முடிவு செய்துள்ளனர். அதன்படி சூப்பர் மார்க்கெட் இருக்கும் இடத்தை இடித்துவிட்டு குழி தோண்டி உள்ளனர். அப்போது தோண்ட தோண்ட ஏராளமான எலும்பு […]

Categories
உலக செய்திகள்

வேலை நேரத்தில் வெப்கேம் ஆன் செய்யாத ஊழியர்… பணி நீக்கம் செய்த நிறுவனம்… கோர்ட் விதித்த அதிரடி உத்தரவு…!!!!

பணி நேரத்தின் போது வெப் கேமராவை ஆன் செய்ய சொன்ன நிறுவனத்தின் மீது கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் ளோரிடா மாகாணத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் டெலி மார்க்கெட்டிங் நிறுவனம் சேட்டு. இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஒன்று நெதர்லாந்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அலுவலகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் நெதர்லாந்து சேர்ந்த ஒரு நபர் ஊழியராக பணிக்கு சேர்ந்துள்ளார். இவர் வேலைக்கு சேர்ந்து சுமார் ஒரு வருடம் கழித்து அந்த […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே! வேலையை இழக்கும் ஐடி ஊழியர்கள்…. முன்னணி நிறுவனத்தின் அறிவிப்பால் பெரும் அதிர்ச்சி….!!!!

உலக அளவில் கடந்த 2020-ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல் படுத்தப் பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இதனால் வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் வேலைகளை செய்ய ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஐடி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அதிகரித்தது. இதனால் உலகில் உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்கள் வேலைக்கு பணியாளர்களை நியமித்ததோடு அவர்களுக்கு வேண்டிய சம்பள உயர்வு, விடுப்பு உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலா லான்ஸ்பரி காலமானார்…. சோகம்…!!!!

அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலா லான்ஸ்பரி (97) காலமானார். வயது மூப்பு காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது உயிர் பிரிந்தது. 1984 முதல் 1996 வரை ‘மர்டர் ஷி ரோட்’ என்ற டிவி தொடரில் நடித்து பிரபலமான இவர், 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஆஸ்கர், 6 முறை கோல்டன் குளோப் விருதுகளை பெற்றுள்ளார். அக்.,16-ல் 98-வது பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில், இவரது மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்திய மாணவரை கொன்றது ஏன்..? இதுதான் காரணமா..? கொரிய மாணவர் வாக்குமூலம்…!!!!

அமெரிக்காவின் இன்டியானா பர்டூ பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு இந்தியாவைச் சேர்ந்த வருண் மணீஷ் சேடா (20) என்ற மாணவரும் இவருடன் கொரியாவை சேர்ந்த மின் ஜிம்மி ஷா என்ற மாணவரும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் இவர்கள் இருவரும் அறையில் இருந்த போது மின் ஜிம்மி ஷா திடீரென மணீஷ் சேடாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனை அடுத்து போலீசுக்கு போன் செய்து தான் […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து எரிவாயு குழாயில் ஏற்படும் கசிவு…? பெரும் பரபரப்பு..!!!!

நிலம் வழியாக கொண்டு செல்லும் எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பிய நாடுகளின் எரிவாயு தேவையை பெரும் அளவு ரஷ்யா பூர்த்தி செய்து வருகிறது. ரஷ்யாவில் இருந்து நிலம் மற்றும் கடல் வழியாக குழாய்கள் அமைக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு க் கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில் ரஷ்யாவில் இருந்து பெலாரஸ் வழியாக  ஜெர்மனிக்கு குழாய் மூலமாக எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. டுருஷப் குழாய் என அழைக்கப்படும் இந்த எரிவாயு […]

Categories
உலக செய்திகள்

பூமிக்கு ஆபத்தாக கருதப்பட்ட…. சிறுகோளை வெற்றிகரமாக…. திசைதிருப்பிய நாசா…!!!!

விண்வெளியில் வான் பொருளின் சுற்றுப்பாதையை முதன்முறையாக மனிதர்கள் மாற்றியமைத்துள்ள சாதனை தற்போது அரங்கேறியுள்ளது. சூரிய மண்டலத்திலுள்ள கோள் பூமி. பூமியை சுற்றிக்கொண்டு லட்சக்கணக்கான வால்மீன்கள், சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் உள்ளன. இதற்கிடையில் இந்த சிறுகோள்கள் அல்லது பிற விண்வெளி கற்கள் போன்றவை பூமியை தாக்க வாய்ப்பு இருக்கின்றதா? என விஞ்ஞானிகள் கண்காணித்துள்ளனர். அந்த வகையில், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கிரக பாதுகாப்புக்கான அதன் தற்போதைய பணியை நிர்வகிக்க “கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம்(பிடிசிஓ)” ஒன்றை நிறுவியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பிரபல நாட்டு விமான நிலையத்தில்….. இணையதளங்களில் சைபர் தாக்குதல்….!!!!

அமெரிக்க நாட்டில் விமான நிலைய இணையதளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பினீக்ஸ் மற்றும் செயின்ட் லூயிஸ் விமான நிலைய இணையங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. கிவ் நெட் எனப்படும் ரஷ்ய சார்பு ஹேக்கிய குழு, அமெரிக்க விமான நிலைய இணைய தளங்களில் ஊடுருவியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக விமான சேவை, தகவல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை. இதனை அடுத்து விமான நிலைய இணைய தளங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் உடனே செயல்பாட்டுக்கு […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பிரபல நாட்டு அதிபருக்கு…. கொரோனா நோய் தொற்று உறுதி…. வெளியான தகவல்….!!!!

கொரோனா நோய் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். நேபாள நாட்டின் அதிபராக உள்ள பித்யா தேவி பண்டாரி. இவருடைய  வயது 61ஆகிறது. இவர் உடல்நல குறைவால் காத்மண்டுவிலுள்ள மருத்துவமனையில் கடந்த 7-ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இது குறித்து அவரது செயலாளரான பேஷ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு குளிர் ஜுரம், இருமல் […]

Categories
உலக செய்திகள்

பாலோயர்கள் இழப்பு….! பேஸ்புக் சொல்லும் காரணம் என்ன….? வெளியான தகவல்…!!!

இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஏராளமான சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் உலக அளவில் அதிகமாக பயனாளர்கள் பயன்படுத்தும் சமூக வலைதள செயல்களின் முக்கியமான ஒன்று facebook. இந்த செயலியில் ஒரு பல கோடிக்கும் அதிகமான மக்கள் கணக்குகள் வைத்துள்ளனர். பேஸ்புக்கில் இருக்கும் ஒரு நபர் தன்னுடைய கணக்கிலிருந்து அதிகபட்சமாக 5 ஆயிரம் நபரோடு மட்டுமே நட்பில் இருக்க முடியும். இதனால் குறிப்பிட்ட அந்த […]

Categories
உலக செய்திகள்

இதற்கு வாய்ப்பே இல்லை…. இந்தியா -பாகிஸ்தான இடையே போக்குவரத்து…. அந்நாட்டு போக்குவரத்து துறை மந்திரி தகவல்….!!!!

இந்தியாவிற்கும் பிரபல நாட்டிற்கும் இடையே மீண்டும் போக்குவரத்து தொடங்குவது குறித்து எந்த திட்டமும் இல்லை என அந்நாட்டு மந்திரி கூறியுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இதனால் இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் 2  நாடுகளுக்கும் இடையே இயக்கப்பட்ட  விமானங்கள் , ரயில்கள், பேருந்துகள் என அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இந்த போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு தற்போது 3  ஆண்டுகள் ஆகிவிட்டது.இதுகுறித்து  அந்நாட்டு   போக்குவரத்து துறை […]

Categories
உலக செய்திகள்

எங்களை கட்டுப்படுத்தாதீர்கள்…. பிரபல நாட்டில் “போராட்டத்தில் இறங்கிய மக்கள்”…. நிபுணர்கள் கோரிக்கை….!!!!

 பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பிரபல நாட்டில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன்  மீது ரஷியா கடந்த 8  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள அகதிகளாக பல நாடுகளை நோக்கி படையெடுக்க தொடங்கினர். இதனால்  ரஷியா மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடையால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில்  பெட்ரோல்  பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது இங்கிலாந்தில் பெட்ரோல்  உள்ளிட்ட பல  பொருட்களின் […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் உங்களுக்கு ஆதரவளிக்க மாட்டோம்…. ரஷியாவிற்கு எதிராக திரும்பும் உலக நாடுகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

ரஷியாவிற்கு எதிராக 107 நாடுகள் வாக்களித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 8  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை  தொடர்ந்து ரஷியா தாக்குதல் நடத்தி உக்ரைனின்  4 முக்கிய பிராந்தியங்களை  கைப்பற்றியது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு நான்கு பிராந்தியங்களையும்  தங்களுடன்  இணைத்துக்கொள்ள போகிறோம் என ரஷிய அதிபர் புதிய அறிவித்தார். அதேபோல் இந்த பிராந்தியங்களை இனைப்பதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தாங்கள் வெற்றி பெற்றதாக கூறி 4  பிராந்தியங்களையும் ரஷியா தன்னுடன் நினைத்துக் கொண்டது. ரஷியாவின் […]

Categories
உலக செய்திகள்

ஓ இப்படித்தான் முடி சூட்டப்படுமா?…. அரச குடும்பம் வெளியிட்ட முக்கிய அறிக்கை….!!!!

சார்லஸ் முடிசூடும் விழா குறித்து அசர குடும்பம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் ராணி  இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக தனது 96-வது வயதில் கடந்த மாதம்  உயிரிழந்தார். அதன்பின்னர் புதிய மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்டார். இதனால் இவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடி சூட்டு விழா நடைபெறும் தேதி குறித்து அரச குடும்பம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வருகின்ற 2023 -ஆம் ஆண்டு மே மாதம் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் வெள்ள நிவாரண நிதியில் ஊழல்… வெளியான தகவல்… கடுங் கோபத்தில் பிரபல நாடு…!!!!!

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 1,700 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12,800 பேர் காயமடைந்து இருக்கின்றனர். இது தவிர 20 லட்சம் வீடுகள் சேதுமடைந்தோ அல்லது முற்றிலும் அழிந்தோ இருக்கிறது மேலும் 79 லட்சம் பேர் வீடுகளை விட்டு புலம்பெயர்ந்து சென்றிருக்கின்றனர். 5.98 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர் 25,100 பள்ளிகள் சேதம் அடைந்துள்ளது. 7000 பள்ளிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா  வெள்ள நிவாரணம் மற்றும் மனிதநேய […]

Categories
உலக செய்திகள்

இந்த மனசு தான் சார் கடவுள்… புற்று நோயாளிகளுக்கு தனது முடியை தானமாக வழங்கிய தமிழக மாணவி…!!!!

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை புற்றுநோய் நண்பர்கள் அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இதன் ஒரு பகுதியாக துபாய் பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பல்கலைக்கழக தலைவர் டாக்டர் ஈஷா எம் பஸ்தகி தொடங்கி வைத்துள்ளார். இதில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக தலைமுடியை தானமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது துபாயில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா-கிரீமியாவின் முக்கிய பாலத்தில் நடந்த தாக்குதல்…. 8 நபர்களை கைது செய்த ரஷ்யா…!!!

ரஷ்ய நாடுடன் கிரீமியா தீபகற்ப பகுதியை சேர்க்கும் பாலத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சந்தேகத்தின் அடிப்படையில் 8 நபர்கள் கைதாகியுள்ளனர். ரஷ்ய நாட்டுடன் கிரீமியா தீபகற்ப பகுதி சேர்க்கப்பட்ட பிறகு, அந்நாட்டு ஜனாதிபதியான விளாடிமிர் புடின் புதிதாக ஒரு பாலத்தை அமைத்தார். கடந்த 2018 ஆம் வருடத்தில் அவர் அந்த பாலத்தை திறந்து வைத்த நிலையில், 2020 ஆம் வருடத்தில் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தது. இதற்கிடையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போரின் ஒரு […]

Categories
உலக செய்திகள்

ஆடைக்குள் மறைத்து கொண்டு வந்த நபர்…. உள்ளே இருந்தது என்ன தெரியுமா?…

அமெரிக்காவிற்கு, கனடா நாட்டிலிருந்து Calvin Bautista என்ற வகை பாம்புகளை எடுத்து வந்த நபர் கைதான நிலையில், அவருக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் 36 வயதுடைய Calvin Bautista என்ற நபர் கடந்த 2018 ஆம் வருடத்தில் ஜூலை மாதம் 15 ஆம் தேதி அன்று கனடாவிலிருந்து Burmese என்ற மூன்று பாம்புகளை பேன்ட்டிற்குள் மறைத்து கடத்தி வந்த வழக்கில் கைதானார். இந்நிலையில் சில […]

Categories
உலக செய்திகள்

ராணியாக பதவியேற்க போகும் கமிலா…. சாமர்த்தியமாக கடந்து வந்த பாதைகள்…!!

பிரிட்டன் மன்னருடன் அடுத்த வருடம் மே மாதத்தில் அவரின் மனைவி கமீலாவும் ராணியாக பதவியேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவை அதிகம் நேசித்த நாட்டு மக்களால் கமிலாவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும், சார்லஸ்-டயானாவின் பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை நன்கு உணர்ந்திருந்த கமிலா  டயானாவிற்கு வழங்கப்பட்டிருந்த வேல்ஸ் இளவரசி பட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது மக்கள் மிகவும் நேசிக்கும் டயானாவின் பட்டத்தை தான் பறித்து விட்டால் […]

Categories
உலக செய்திகள்

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க… ஐரோப்பிய உறுப்பு நாடுகளுக்கு அறிவுறுத்தல்…!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை எதிர்த்து இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் ரஷ்யாவிற்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக இந்த தடைகள் விதிக்கப்பட்டது இருப்பினும் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த வருடம் கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் எரிசக்தி தேவைக்கு ரஷ்யாவின் இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை […]

Categories
உலக செய்திகள்

“இந்திய பொருளாதாரம் மட்டுமல்ல உலக பொருளாதாரமும் சரிவை சந்திக்கும்”…? சர்வதேச நிதியம் கணிப்பு….!!!!!

அமெரிக்காவில் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு உலக பொருளாதார பார்வை பற்றிய தனது வருடாந்திர  அறிக்கையை சர்வதேச நிதியம் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் (2021-2022) இந்திய பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டி (2022-2023) இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறையும் என சர்வதேச நிதியம் கணித்திருக்கின்றது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டுள்ள கணிப்பில் இந்திய பொருளாதார […]

Categories

Tech |