வடகொரியா, தென்கொரிய நாட்டிற்குள் அத்துமீறி ட்ரோன்களை அனுப்பியது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனைகள் மேற்கொண்டு தென்கொரியாவையும், அமெரிக்காவையும் அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக, கொரிய தீபகற்பத்தில் பதற்ற நிலை நீடிக்கிறது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று தென்கொரிய நாட்டிற்கு ஐந்து ட்ரோன்களை வடகொரியா அனுப்பியிருக்கிறது. தென்கொரிய நாட்டின் எல்லைக்குள் அவை அத்துமீறி புகுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரிய நாட்டின் எல்லைக்கு அருகில் இருக்கும் ஜியோங்கி மாகாணத்திற்குள் அந்த ட்ரோன்கள் நுழைந்து வட்டமிட்டுள்ளன. அதில், […]
