Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பக்முத் நகரில் தீவிர சண்டை…. பிரபல நாட்டு படைகள் தொடர் தாக்குதல்….!!!!!

பக்முத் நகரில் தீவிரமாக சண்டை நடந்து வருவதாக அந்நகர துணை மேயர் தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டில் டொனெட்ஸ்க் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பக்முத் மற்றும் அருகிலுள்ள அவ்திவ்கா நகரங்கள் மீது ரஷ்ய ராணுவ படைகள் தொடர்ந்து சண்டை  நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உக்ரைனிய துருப்புகள் உறுதியாக நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு முன்பு சுமார் 80 ஆயிரம் பேர் இந்நகரில் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் இந்த படையெடுப்பு தொடங்கியதிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

எல்லாம் இவர்களின் வேலை தான்…. உக்ரைனில் அத்துமீரும் ரஷியா…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

ரஷிய படைகளிடமிருந்து தங்களது பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் உக்கிரைன்  இறங்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலின் மூலம் உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றியுள்ளது. தற்போது உக்ரைனின்  தெற்கு பகுதி நகரமான கெர்சனுக்குள் புகுந்த ரஷிய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். மேலும் அங்குள்ள வீடுகளை ஆக்கிரமித்து வருவதுடன் பெரும்பாலான பொருட்களையும் கொள்ளையடித்து வருகின்றனர். மேலும் பொது மக்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டு வருவதாக உக்ரைன்  அரசு […]

Categories
உலக செய்திகள்

15ஆம் தேதி பெரிய அறிவிப்பு…! ட்ரம்ப் எடுத்த முடிவு… உற்றுநோக்கும் உலக நாடுகள் ..!!

நவம்பர் 15ஆம் தேதி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 2016 முதல் 2020 ஆம் வருடம் வரை நான்கு வருடங்கள் அமெரிக்காவின் அதிபராக இருந்த டெனால்டு ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். இவர் அமெரிக்காவின் அதிபராக இருந்த காலகட்டத்தில் வடகொரியா உடன் நட்பு, இஸ்ரேல் அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதே சமயம் 2020 ஆம் வருடம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் […]

Categories
உலக செய்திகள்

நம்ம உறவு எப்படி இருக்கு ? உக்ரைன் – ரஷ்யா நிலை என்ன ? என இந்தியா – அமெரிக்கா பேச்சு…!

அமெரிக்க வெளியுறவு துணை செயலாளர் உடன் இந்திய வெளியுறவு துணை செயலாளர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா அமெரிக்காவில் அந்த நாட்டு வெளியுறவு துணை செயலாளர் ஆன வெண்டி ஷெர்மானை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி பேசி உள்ளார். இதனை அடுத்து ஜனநாயக கொள்கைகள்,  மண்டல பாதுகாப்பு மற்றும் வளம் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது போன்ற இருநாட்டு விவகாரங்கள் பற்றிய  செயல் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் நாங்கள் வருவோம்…. பிரபல நாட்டில் “தொடங்கும் பேரணி”…. வெளியான தகவல்….!!!!!

இம்ரான் கான் மீண்டும் நாளை முதல் பேரணியை தொடங்குகிறார். பாகிஸ்தானில்  முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவரது ஆட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிழ்க்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்து பேரணி நடத்தி வருகிறார். அதேபோல் கடந்த வியாழக்கிழமை  வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்று இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு  பாய்ந்தது. இதனையடுத்து அவரை […]

Categories
உலக செய்திகள்

மேடைக்கு வந்து காதில் குசுகுசு..!! டக்குனு கிளம்பிய ரிஷி சுனக்… வெளியான பரபரப்பு தகவல் ..!!

ஐநா பருவ கால மாற்ற மாநாட்டில் பாதியிலேயே பிரிட்டன் பிரதமர் ரிஷி வெளியேறிய சம்பவம் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டின் ஷாம்- எல் ஷேக் நகரில் நடைபெற்ற ஐநாவின் பருவ கால மாற்ற மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டுள்ளார். இதனை அடுத்து அவர் கிளாஸ் பருவ கால ஒப்பந்தம் பற்றி உரையாற்றும் போதும், பிற நாடுகளையும் அதிலிருந்து விலகாமல் வாக்குறுதி அளித்ததை பின்பற்றும் படியும் வலியுறுத்துவார். மேலும் இந்த பருவ கால […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. உணவுக்கு திண்டாடும் இலங்கை…. ஐ.நா. விடுத்த எச்சரிக்கை….!!!!

ஐ.நா. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 1948-ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது. அன்று  முதல் தற்போது வரை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன், பணவீக்கம், மின் தடைகள் போன்ற  பிரச்சினைகளையும் சமாளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விலையேற்றம், உணவு மற்றும் மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதன் விளைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தற்போது இலங்கையில் உணவு பற்றாக்குறை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை தாக்குவதற்கே இந்த பயிற்சி…. வடகொரியா அதிரடி…!!!

வடகொரிய அரசு, அமெரிக்க நாட்டை தாக்கும் பயிற்சியாகத் தான் ஏவுகணைகள் பரிசோதனைகள் என்று தெரிவித்துள்ளது.  அமெரிக்காவும் தென்கொரிய படைகளும் சேர்ந்து கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியை மேற்கொள்வதை வடகொரியா தொடர்ந்து எதிர்த்து வந்தது. அதற்காக அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனைகளை மேற்கொள்கிறது. கடந்த வாரத்தில் கண்டம் தாண்டி  கண்டம் பாயக்கூடிய ஏவுகணை உட்பட பல ஏவுகணைகளை வடகொரியா அனுப்பியது. தென்கொரியாவை நோக்கி நூற்றுக்கும் அதிகமான போர் விமானங்களை செலுத்தியது. எனவே, கொரிய தீபகற்பம் பதற்றமடைந்துள்ளது. இது பற்றி […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பிரபல நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட நார்வே எண்ணெய் கப்பல்…. 3 இந்திய மாலுமிகள் சிக்கி தவிப்பு….!!!!

கினியாவில் கடற்படை சிறைபிடித்த கேரள மாலுமிகளை மீட்கும் பணிகளில் இந்திய தூதரகத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் கினியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி  கச்சா எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நார்வே கப்பல் ஒன்று கினியா நாட்டுக்கு சென்றுள்ளது. அக்கப்பலில் இந்தியாவை சேர்ந்த 16 மாலுமிகள் உள்பட 26 பேர் உள்ளனர். இதனை அடுத்து நடுக்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றுவதற்காக ஏற்கனவே பல கப்பல்கள் காத்திருந்தன. அவற்றுடன் இந்திய […]

Categories
உலக செய்திகள்

“இதனால்தான் கடலில் தள்ளி விட்டேன்”…. குற்றத்தை ஒப்புக்கொண்டு சரண் அடைந்த…. 81 வயது முதியவர் ஜப்பானில் அதிர்ச்சி….!!!!

ஜப்பான் நாட்டில் ஹிரோஷிப் புஜிவாரா என்ற முதியவருக்கு 81 வயது ஆகின்றது. இவருடைய மனைவி 40 வருடங்களுக்கு முன்பு கால்களை இழந்துள்ளார். அதிலிருந்து ஹிரோஷி தான் அவருடைய மனைவியை கவனித்து வந்துள்ளார். தற்போது இவருக்கும் வயதானதால் மிகவும் சோர்வடைந்துள்ளார். இதனால் அவருடைய மனைவியை கவனிக்க முடியாததால் அவரை வீல் சேருடன் கடலில் தள்ளி விட்டுள்ளார். இதனையடுத்து ஹிரோஷியே தனது கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீசில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

“இரு நாடுகளும் உடனடியாக இதை பண்ணனும்”…. போர் குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேச்சு….!!!!

ரஷ்யா மற்றும் இந்திய நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் மாஸ்கோவில் சந்தித்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா போரானது தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோ சென்றடைந்துள்ளார். அங்கு ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் உடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இருநாட்டு வெளியுறவு துறை அமைச்சர்களும் நான்கு முறை சந்தித்து பேசி உள்ளனர். இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து மாஸ்கோவில் இந்திய […]

Categories
உலக செய்திகள்

“அய்யயோ!”… ஐரோப்பாவில் பயங்கரம்…. 15,000 பேர் உயிரிழப்பு… கடும் வெயிலால் நேர்ந்த கொடூரம்…!!!

ஐரோப்பிய நாடுகளில் இந்த வருடத்தில் கடுமையான கோடை வெப்பத்தில் 15 ஆயிரம் மக்கள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவலை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது. உலக சுகாதார மையத்தினுடைய மண்டல இயக்குனராக இருக்கும் ஹான்ஸ் ஹென்றி குளூஜ்  வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஐரோப்பாவில் இந்த வருடத்தில் கோடை காலம் கடுமையாக இருந்தது. இந்த மூன்று மாதங்களில் வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் 15000 மக்கள் பலியாகி இருக்கிறார்கள். இதில் ஜெர்மனியில் அதிகமாக 4500 நபர்களும் ஸ்பெயினில் 4000 நபர்களும் பலியாகியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

35 மாடி கட்டிடத்தில்…. பயங்கர தீ விபத்து…. துரித நடவடிக்கையில் தீயணைப்புத் துறையினர்….!!!!

உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில் உள்ள புர்ஜ் கலிப்பா ஆகும். இந்த கட்டிடத்தின் அருகில் உள்ள 35 மாடி கட்டிடத்தில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ வேகமாக கட்டிடத்தின் மேல் பகுதிக்கும் பரவியது. இதனால் அப்பகுதியில் கரும்புவை சூழ்ந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ அதிகாலை 4 மணிக்கு […]

Categories
உலக செய்திகள்

வங்கி கணக்கில் விழுந்த ரூ.10 கோடி…. திடீரென கோடீஸ்வரரான காவல் அதிகாரி…. அதிரடியில் வங்கி ஊழியர்கள்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கராய்ச்சி நகரில் அமைந்துள்ள காவல் நிலையம் ஒன்றில் விசாரணை அதிகாரியாக ஆமீர் கோபங் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இவருடைய வங்கி கணக்கில் சம்பள பணத்துடன் சேர்த்து  ரூபாய் பத்து கோடி விழுந்துள்ளது. ஆனால் இது பற்றிய அவருக்கு எதுவும் தெரியவில்லை. இதனை அடுத்து வங்கியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை ஆமீர் எடுத்து பேசியுள்ளார். அதில் “உங்களுடைய வங்கி கணக்கில் ரூபாய் 10 கோடி விழுந்துள்ளது” என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியை அடைந்த […]

Categories
உலக செய்திகள்

சூரியனை விட 10 மடங்கு பெரியது…. புதிய கருந்துளையை கண்டறிந்த விஞ்ஞானிகள்….!!!

உலகிற்கு மிக அருகில் இருக்கும் கருந்துளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.அந்தக் கருந்துளை சூரியனை விட 10 மடங்கு பெரியதாக இருக்கிறது என்றும் அது 1600 லைட் இயர் தொலைவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது ஒளியின் வேகத்தில் சென்றால் 1200 ஆண்டுகள் எடுக்கும் அளவிற்கு தொலைவில் உள்ளது. இதற்காக விஞ்ஞானிகள் ஜெமினி நார்த் என்ற தொலை நோக்கியை பயன்படுத்தி உள்ளனர். இந்த தொலைநோக்கி வழியே கருந்துளை மற்றும் அதன் துணை பொருளான சூரியனை ஒத்த நட்சத்திரம் ஒன்றின் இயக்கமும் ஆராயப்பட்டுள்ளது. சூரியனை […]

Categories
உலக செய்திகள்

ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் மெட்டா….? காரணம் என்ன…? அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!!

ட்விட்டர் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்ததையடுத்து, தற்போது பேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டா ஆயிரம் கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் காலாண்டு லாபம் கடந்த வருடத்தை விட 52 சதவீதம் குறைந்து 4.4 பில்லியன் டாலராக சரிந்தது. இதனால் அதனுடைய மொத்த மதிப்பு 600 அமெரிக்க டாலராக உள்ளது. இந்த நிலையில் அதன் பங்கு விலையும் ஒரே நாளில் 25% சரிவை கண்டுள்ளது. இதையடுத்து மெட்டாவில் புதிதாக பணியாளர்களை நியமிப்பதை […]

Categories
உலக செய்திகள்

மக்களே…. இன்று முழு சந்திரகிரகணம்…. எங்கெல்லாம் தெரியும்?….. இதோ முழு விவரம்….!!!!

சந்திர கிரகத்தின் போது நிலவின் ஒரு பகுதியில் முழு நிழல் பகுதி படியும். முழு நிழல் பகுதியில் சூரிய ஒளி நேரடியாக படிவதில்லை. நிலவின் ஒரு பகுதி அதிக இருளாகவும் மற்ற பகுதிகள் குறைந்த இருளாகவும் இருக்கும். பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதால் சந்திர கிரகணத்தை பூமியின் பெரும்பான்மையான பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் காண முடியும். இன்று  இந்திய நேரப்படி பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முழு சந்திர கிரகணம் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

1இல்ல… 2இல்ல… 90%காலி செய்த எலான் மாஸ்க்… அதிரும் ட்விட்டர் நிறுவனம்…!!

இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்தின் 90% சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பணக்காரராக ஜொலிக்கும் எலான் மஸ்க் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கி வாங்கி இருந்தார். இது குறித்த அறிவிப்பு வெளியானது முதல் எலான் மஸ்கின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த விவாதங்கள் உலக அளவில் பேச்சு பொருளானது. அவர் ட்விட்டரை வாங்கிய அடுத்த நிமிடமே அங்கிருக்கும் நிர்வாக அதிகாரங்களையும் ஊழியர்களையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு எங்களின் ஆதரவு தொடரும்…. உறுதியளித்த நாடுகள்…!!!

ரஷ்ய போரை எதிர்த்து போராடும் உக்ரைன் நாட்டிற்கு வழங்கி வரும் எங்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்கா, ஜெர்மன் நாடுகள் உறுதி கூறியிருக்கின்றன. ஜெர்மன் நாட்டின் அதிபரான ஓலப் ஸ்கால்ஸ், சீன நாட்டிற்கு சமீபத்தில் சென்றிருக்கிறார். அப்போது சீன அதிபர் ஜின்பிங் அவரை நேரடியாக பார்த்து பேசியுள்ளார். ரஷ்ய நாட்டின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இரண்டு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஜெர்மன் நாட்டின் அதிபரான ஓலப் […]

Categories
உலக செய்திகள்

குறைவான விமானங்கள், அதிக ரயில்கள்…. விமானங்களை மறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திடீர் போராட்டம்…!!!!!

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்தால் ஏற்படும் மாசுபாட்டை கண்டித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெதர்லாந்தில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தின் மிகப்பெரிய ஆதாரமாக ஷிபோல் விமான நிலையம் இருப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை அடுத்து குறுகிய தூர விமானங்கள் மற்றும் தனியார் ஜெட் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி உள்ளனர். குறைவான விமானங்கள், அதிக ரயில்கள் என்னும் தலைப்பில் அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

“தவறு செய்துவிட்டோம்”… பணியிலிருந்து நீக்கப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் அழைப்பு…!!!

ட்விட்டர் நிறுவனம் பணியிலிருந்து நீக்கிய பணியாளர்களில் சில பேரை மீண்டும் பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்கின், கைகளுக்கு சென்ற பிறகு அதில் அதிரடியாக பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் உலகம் முழுக்க உள்ள 7500 பணியாளர்களில் பாதி பேரை கடந்த நான்காம் தேதி அன்று பணி நீக்கம் செய்து விட்டனர். இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களில் சில பேரை மட்டும் மீண்டும் பணிக்கு […]

Categories
உலக செய்திகள்

இம்ரான்கான் மீதான கொலை முயற்சி… 3 பேரும் உடனடியாக பதவி விலக வேண்டும்… தயக்கம் காட்டும் போலீசார்…??

 கொலை முயற்சியில் பஞ்சாப் மாகாண போலீசார் தயக்கம் காட்டி வருவதாக இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த மூன்றாம் தேதி பஞ்சாப் மாகாணம் பாஜிராபாத் நகரில் அரசுக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவரது வலது காலில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் இம்ரான் கான் நேற்று மருத்துவமனையில் இருந்தபடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, என் மீதான இந்த […]

Categories
உலக செய்திகள்

போலி ட்விட்டர் கணக்குகளுக்கு ஆப்பு வைத்த எலான் மஸ்க்… அதிரடி அறிவிப்பு…!!!

ட்விட்டரில் போலியான கணக்குகளை எச்சரிக்கை இல்லாமல் நிரந்தரமாக நீக்கிவிடுவோம் என்று எலான் மஸ்க் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவராகவும் டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைவராகவும் இருக்கும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திக்கொண்டார். அதன் பிறகு அதிரடியாக பல மாற்றங்களை அறிவித்து வருகிறார். இதற்கிடையில் விளையாட்டு, சினிமா மற்றும் அரசியல் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் பெயரில் போலியாக சிலர் கணக்குகள் தொடங்குகிறார்கள். இவ்வாறான போலி கணக்குகளால் ட்விட்டர் மீது இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

190 அடி ஆழ குகைக்குள் சிக்கிய முதியவர்கள்….. காபி மட்டுமே குடித்து 9 நாட்கள் உயிர் வாழ்ந்தார்களா….? வினோத சம்பவம்…..!!!!

190 அடி‌ குகைக்குள் சிக்கிய 2 முதியவர்களை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். தென்கொரியாவில் சிங் மைன் உடைப்பின் போது 56 மற்றும் 62 வயதுடைய 2 முதியவர்கள் பாதாள குழிக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த 2 முதியவர்களும் 190 அடி குகைக்குள் சிக்கிக் கொண்ட நிலையில் 9 நாட்களாக வெறும் காபித்தூளை மட்டும் கலக்கி குடித்து அவர்கள் உயிர் வாழ்ந்துள்ளனர். இவர்களை தற்போது மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்நிலையில் 2 முதியவர்களையும் பரிசோதனை செய்த […]

Categories
உலக செய்திகள்

அட!…. பூமிக்கடியில் இப்படி ஒரு அதிசய கிராமமா…. அதுவும் ஆடம்பர வசதிகளுடன்….. கொடுத்து வச்ச மக்கள்….!!!!!

தெற்கு ஆஸ்திரேலியாவில் கூப்பர் லேடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமமானது மண்ணுக்கடியில் அமைந்துள்ளது. இந்த தனி உலகமானது சுரங்கப்பாதையில் இருப்பது தான் மிகவும் சிறப்பு. இந்த சுரங்கப்பாதையில் 1500 வீடுகள் இருப்பதுடன் 3500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி ஒரு காலத்தில் பாலைவனமாக இருந்ததாகவும் அங்கு தட்பவெப்ப நிலை சரியாக இல்லாததால் மக்கள் வாழ்வதற்கு மிகவும் சிரமப்பட்டதன் காரணமாகவும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 1915-ம் ஆண்டு சுரங்கப்பாதை பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகு […]

Categories
உலக செய்திகள்

பசிக்கொடுமை – அதிர வைக்கும் பட்டியல்…. இந்தியாவுக்கு இப்படி ஒரு நிலையா…???

உலக அளவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 116 நாடுகளில் இந்தியா 101 வது இடம் என்ற மோசமான இடத்தை பெற்றுள்ளது.முந்தைய ஆண்டில் இந்த பட்டியலில் 94 ஆவது இடத்திலேயே இந்தியா இருந்த நிலையில் அதை காட்டிலும் மோசமான நிலைக்கு 2021 ஆம் ஆண்டு போனது.குழந்தைகள் உரிய எடை இல்லாமல் இருப்பது 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த போது 15.1 சதவீதமாக இருந்தது. அது 2022 ஆம் ஆண்டு […]

Categories
உலக செய்திகள்

தெரியாம நீக்கிட்டோம்….! திரும்ப வாங்க: ஊழியர்களை அழைக்கும் ட்விட்டர்…!!!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பிரபல twitter நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டரை வாங்கிய உடனே முதலில் ட்விட்டரின் முக்கிய அதிகாரிகளை நீக்கினார். பின்பு ஆலோசனைக் குழுவும் நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புளூ டிக் சலுகை பெற்றவர்களுக்கு கட்டணம் நிர்ணயித்ததுடன் twitter வார்த்தை வரம்புகளையும் அதிகரித்தார். இந்த நிலையில் சரிபாதி அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்த ட்விட்டர், தற்போது அவர்களில் வெகுசிலரை திரும்ப பணிக்கு அழைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்த அதிரடி….! பிரபலங்களின் டுவிட்டர் கணக்கிற்கு…. எலான் மஸ்க் விடுத்த எச்சரிக்கை….!!!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் பிரபல twitter நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டரை வாங்கிய உடனே முதலில் ட்விட்டரின் முக்கிய அதிகாரிகளை நீக்கினார். பின்பு ஆலோசனைக் குழுவும் நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புளூ டிக் சலுகை பெற்றவர்களுக்கு கட்டணம் நிர்ணயித்ததுடன் twitter வார்த்தை வரம்புகளையும் அதிகரித்தார். இந்த நிலையில் பிரபலங்களுடைய பெயரில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதாவது பிரபலங்களின் பெயரில் அல்லது மற்றொருவர் பெயரில் தொடங்கப்படும் கணக்குகளில் […]

Categories
உலக செய்திகள்

அடடே ஒரு நிமிஷத்தில் இத்தனை முறை கைத்தட்ட முடியுமா…? கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இளைஞர்..!!!!!

அமெரிக்காவில் 20 வயதான டால்டன் மேயர் எனும் இளைஞர் ஒருவர் ஒரு நொடிக்கு 19 தடவை என்று ஒரு நிமிடத்திற்கு 1,140 முறை கைதட்டி உலக சாதனை படைத்திருக்கின்றார். ஒரு நிமிடத்திற்கு 1,140 முறை கைதட்டி அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் இது பற்றி பேசிய டால்டன் இந்த திறமை தனக்கு இயற்கையாகவே வந்ததாகவும் தான் இந்த சாதனைக்காக பயிற்சி கூட செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி..! தான்சானியாவில் பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்து – 19 பேர் உயிரிழப்பு.!!

தான்சானியாவில் பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். தான்சானியா தலைநகர் தார்-எஸ்- சலாமில் இருந்து புகோபா நகருக்கு சென்றபோது விபத்தில் சிக்கியது பிரிஷிஷியன் விமானம். 49 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். விமான நிலையத்துக்கு 100 மீட்டர் முன்னதாக பிரிஷிஷியன் விமானம் ஏரிக்குள் விழுந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 49 பேர் பயணித்த நிலையில் 26 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சியவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா… மே 8 ம் தேதி வங்கி விடுமுறை… அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மரணமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்குப் பின் அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அடுத்த வருடம் மே மாதம் ஆறாம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை கூறியுள்ளது. இதில் பாரம்பரிய மரபு படி கையில் செங்கோல், தடி போன்றவற்ற ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்கின்றார். அதன் […]

Categories
உலக செய்திகள்

அச்சச்சோ!!… பிரபல நாட்டில் ” வறட்சியால் உயிரிழக்கும் வனவிலங்குகள்”…. அதிர்ச்சியில் நாட்டு மக்கள்….!!!!

பிரபல நாடுகளில் ஏற்பட்டுள்ள வறட்சியால் வனவிலங்குகள் உயிரிழந்து வருகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தற்போது வறட்சி நிலவி  வருகிறது. இதனால் காடுகளில் வசித்து வரும் வரிக்குதிரை, ஒட்டகசிவிங்கிகள், காட்டெருமைகள் என 14 வகையான வனவிலங்குகள் உயிரிழந்துள்ளது. இந்த வனவிலங்குகளின் இறப்பு சமூக ஆர்வலர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. மேலும் இதனால் அந்நாட்டின் சுற்றுலாத் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்  அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  மேலும் தற்போதைய சூழ்நிலையில் மழைப்பொழிவுக்கான சூழ்நிலையும் […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவி?…. பிரபல நாட்டில் “மனைவி குடும்பத்தை தீர்த்து கட்டிய நபர் தற்கொலை”…. அதிர்ச்சியில் போலீசார்….!!!!

பிரபல நாட்டில் 4 பேரை சுட்டுக்கொன்ற நபர் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவில் உள்ள மேரிலேட் மாகாணத்தில் ஆண்டிரு  சேல்ஸ்-சாரா மென் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கெலின், வெஸ்மி என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆண்டிருவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி  தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சாரா தனது தாய் வீட்டில்  வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சாராவின் வீட்டிற்கு ஆண்டிரு வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்….. அச்சத்தில் உறைந்த மக்கள்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அதேபோல் இன்று வடக்கு சுலவேசி மாகாணத்தில் திடீரென நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் மத்திய இந்தோனேசியா குலுங்கியது. ஆனால் இந்த நிலநடுக்கத்தின் போது சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “நாளுக்கு நாள் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு”…. வேதனையில் அதிபர்…. வெளியான தகவல்….!!!!

அதிபர் ஜோ பைடன்  அறிக்கை ஒன்றே வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள அல்லெக்னி பகுதியில் மதுபான பார்  ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் நேற்று இரவு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை […]

Categories
உலக செய்திகள்

என்ன….? இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர்…. பிரபல நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா….!!!!

அமெரிக்க நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 5 பேர் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர். அமெரிக்க நாட்டின் வருகிற 8-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல அரசியல் தலைவர்கள் 5 பேர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களில் 4 பேர் […]

Categories
உலக செய்திகள்

OMG: ரொம்ப போர் அடிக்குதாம்….! அதுக்கு உயிருக்கே உலை வைப்பதா….? ஆன்லைனில் தேடி வாங்கிய நபர்….!!!

லண்டனை சேர்ந்த டேனியல் எமிலின் இணையதளத்தில் தற்கொலை எண்ணத்தை தூண்டும் தாவரத்தினை தேடி ஆர்டர் செய்து வாங்கி வளர்த்து வருகிறார். ஜிம்பி ஜிம்பி என்று அழைக்கப்படும் அந்த செடியை அவர் வளர்த்து வருகிறார். இந்த செடியின் இலைகள் மீது சிறிய செய்யும் முட்கள் இருக்கும். இது மனிதர்களின் உடலில் பட்டதும் மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும். இதைத் தொட்டாலே உடலில் மிகவும் கடுமையான வலி ஏற்பட்டு பல மாதங்களுக்கு இதனால் ஏற்பட்ட வீக்கமும், வலியும் அப்படியே இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

தான்சானியாவில் 43 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஏரியில் விழுந்தது..!!

தான்சானியாவில் 43 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமான நிலையத்துக்கு 100 மீட்டர் முன்னதாக பிரிஷிஷியன் விமானம் ஏரிக்குள் விழுந்தது. தான்சானியா தலைநகர் தார்-எஸ்- சலாமில் இருந்து புகோபா நகருக்கு சென்றபோது விபத்தில் சிக்கியது பிரிஷிஷியன் விமானம். விமானத்தில் பயணித்தவர்களில் 26 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து மீட்பு பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.   https://twitter.com/KaustuvaRGupta/status/1589188610838138880

Categories
உலக செய்திகள்

வறட்சி காரணமாக…. 205 யானைகள் பலி…. கென்யாவில் பரபரப்பு….!!!!

கென்யா நாட்டில் தற்போது கடும் வரட்சி நிலவி வருகின்றது. இதன் காரணமாக அந்த நாட்டில் உள்ள யானைகள் அடுத்தடுத்து இறந்து வருவதாக WWF என்ற உலக வனவிலங்கு பாதுகாப்பு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி தற்போது கென்யா நாட்டில் நிலவி வருவதால் யானைகளும் அதன் குட்டிகளும் போதுமான நீர் மற்றும் உணவு இல்லாமல் யானைகள் கடும் சிரமப்படும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் கடந்த அரை ஆண்டில் வறட்சியால் […]

Categories
உலக செய்திகள்

சீக்கியர்கள் சென்ற சிறப்பு ரயில்…. தடம் புரண்டு விபத்து…. பஞ்சாப்பில் பரபரப்பு….!!!!

சீக்கியர்களின் மதகுருவான குருநானக் என்பவரின் பிறந்தநாள் வருகின்ற 8 தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. இதற்காக பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குருதுவாராவில் சீக்கியர்கள் வழிபாடு செய்ய பாகிஸ்தான் ரயில்வே அமைச்சகம் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் நேற்று கராய்ச்சியில் இருந்து நங்கனா சாஹிப் நகருக்கு சிறப்பு ரயில் ஒன்று புறப்பட்ட சென்றது. இதில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் பயணம் செய்தனர். இந்த ரயில் ஷார் கோட் மற்றும் பீர் மஹால் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று […]

Categories
உலக செய்திகள்

இரு பெரும் மாகாணங்களை தாக்கிய சூறாவளி…. ஒருவர் பலி…. துரித நடவடிக்கையில் மீட்பு பணிகள்….!!!!

இரு பெரும் மாகாணங்களை சூறாவளி தாக்கியதில் ஒருவர் பலியாகியுள்ளார். அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா மாகாணங்களை நேற்று முன்தினம் பயங்கரமான சூறாவளி தாக்கியுள்ளது. இந்த சூறாவளியில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்த சூறாவளி நூற்றுக்கணக்கான வீடுகளை சூறையாடி உள்ளது. இதனை அடுத்து மீட்பு குழுவினர் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து 7000 பேர் வசிக்கும் நகரில் சூறாவளியால் […]

Categories
உலக செய்திகள்

இரவு விடுதியில் திடீர் தீ விபத்து…. 13 பேர் பலி…. போலீஸ் விசாரணை….!!!!

ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவிற்கு அருகில் கோஸ்ட்ரோமா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் நேற்று மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில் அந்த விடுதியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென பரவி விடுதி முழுவதும் புகைமண்டலமானது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் கடும் சிரமப்பட்டனர். இது குறித்து உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் மீட்டுக் குழுவினர் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து திருவிழா… ரசிகர்களை அடக்க மிருகத்தனமான அமைப்பு… வெளியான தகவல்…!!!!

வளைகுடா நாடு ஒன்றில் முதன்முறையாக கால்பந்து உலக கிண்ணம் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்ற நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து சிறப்பு படைகளை களம் இறக்கி கட்டுக்கோப்பான ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறது. நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18ஆம் தேதி வரை நடக்க இருக்கும் இந்த கால்பந்து போட்டிக்கு சுமார் 1.2 பில்லியன் பார்வையாளர்கள் கட்டார் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அமெரிக்கா, பிரித்தானியா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளை சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

அடடே! சூப்பர்…. இனி சவப்பெட்டியை கையில் தூக்கி செல்ல வேண்டாம்…. அசத்தலான கண்டுபிடிப்பு அறிமுகம்….!!!!!

மிதிவண்டியில் சவப்பெட்டியை கொண்டு செல்லும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் இசபெல் ப்ளூமேரா. இவர் ஒரு முக்கிய தகவலை கூறியுள்ளார். அதாவது அந் நாட்டில் மிதிவண்டி சவப்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாம். இதன் மூலம் சவப்பெட்டியை இனி கையில் சுமந்து செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இந்த மிதிவண்டி சவப்பெட்டியில் சவத்தை வைத்துவிட்டு சைக்கிள் ஓட்டுவது போன்ற ஓட்டினால் சுலபமான முறையில் சவத்தை சுடுகாட்டுக்கு கொண்டு சேர்க்க முடியுமாம். மேலும் இந்த முறை டென்மார்க் மற்றும் ஸ்விட்சர்லாந்து […]

Categories
உலக செய்திகள்

FLASH NEWS: பிரபல பாப் இசை பாடகர் ஆரன் கார்ட்டர் மர்ம மரணம்…!!!

அமெரிக்காவில் பிரபல பாப் இசை பாடகர் ஆரன் கார்ட்டர் (34) மர்ம மரணம் அடைந்துள்ளார். பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ் பாப் இசை குழுவுடன் ஒப்பந்தம் போட்டு பணியாற்றி வந்தவர் கார்ட்டர். இவர் கடந்த காலங்களில் மனநல பாதிப்பு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், தனது வீட்டில் ஆரன் கார்ட்டர் சந்தேகத்திற்குரிய வகையில் மரணமடைந்து கிடந்துள்ளார். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

மகனின் 5 ஆவது ஆசை….! 56 வயதில் “பேத்தி”யை பெற்றெடுத்த “தாய்”… நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்….!!!!

அமெரிக்கா நாட்டின் உத்தா பகுதியில் வசிப்பவர் நான்சி ஹாக்கி. இவர் தன்னுடைய மகன் மற்றும் மருமகளோடு வசித்து வருகிறார். தனது மகனிற்கு ஏற்கெனவே நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் ஐந்தாவதாக ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை ஏற்பட்டுள்ளது. ஆனால் மருமகளுக்கு உடல் ஒத்துழைக்கவில்லை. எனவே தன்னுடைய மகனின் ஆசையை நிறைவேற்ற அந்த தாய் கர்ப்பமடைந்துள்ளார். அதாவது மகனின் குழந்தைக்கு தாயே வாடகை தாயாக மாறியுள்ளார். 56 வயதான நான்சி மகன் மற்றும் மருமகளுக்காக கருவை சுமந்து […]

Categories
உலக செய்திகள்

BREAKING: இலங்கை கிரிக்கெட் வீரர் கைது….. பெரும் பரபரப்பு….!!!!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா பாலியல் வன்கொடுமை வழக்கில் சிட்னியில் சற்று முன் கைது செய்யப்பட்டார். டி20 உலக கோப்பை தொடருக்கு தேர்வான இவர் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து திடீரென விலகினார். அவருக்கு பதிலாக அஷேன் பண்டார சேர்க்கப்பட்டார். நேற்று சிட்னியில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி தனது கடைசி குரூப் ஆட்டத்தில் விளையாடிய போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Categories
உலக செய்திகள்

ஆர்டெமிஸ் ராக்கெட் ஏவும் தேதியை….. மீண்டும் அறிவித்தது நாசா ….!!!

அமெரிக்கா நாட்டில் நாசா விண்வெளி அமைப்பு நிலவு மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நிலவுக்கு ஆர்டெமிஸ் 1 என்ற ராக்கெட் அனுப்பும் திட்டம் செயல்பாட்டிலுள்ளது. இந்த ராக்கெட்டில் ஆட்கள் யாரும் செல்லவில்லை. ஆர்டெமிஸ் 2 திட்டத்தில் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விண்ணில் அனுப்பப்படும் ஆர்டெமிஸ் 1 ராக்கெட் உதவியுடன், அதனுடன் இணைக்கப்பட்ட ஆரியன் என்ற விண்கலம் நிலவின் மேற்பரப்பிலிருந்து 60 மைல்களுக்கு தொலைவில் […]

Categories
உலக செய்திகள்

“சமாதான பேச்சுவார்த்தைகள் மூலம் போருக்கு முடிவு கட்டுதல் அவசியம்”…? சர்வ மத மாநாட்டில் போப் ஆண்டவர் பேச்சு…!!!!

சமாதான பேச்சுவார்த்தைகள் மூலமாக போருக்கு முடிவு கட்டுதல் அவசியம் என போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார். பக்ரைன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று தலைநகர் மணமாவில் அந்த நாட்டின் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபாவில் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வமத உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளார். மேலும் இந்த மாநாட்டில் முன்னணி முஸ்லிம் இமாம்கள் உலகின் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் தலைவர் மற்றும் நீண்ட காலமாக மதங்களுக்கு இடையேயான உரையாடலில் ஈடுபட்டு […]

Categories
உலக செய்திகள்

அடடே…. கண் பார்வையில் ஏற்பட்ட பிரச்சினையும்…. நன்மைக்கே என்று கூறும் இளவரசர்…. காரணம் என்ன….!!!!

சிலர் உயரமான இடங்களுக்குச் செல்ல பயப்படுவார்கள், சிலர் இருட்டைப் பார்த்தால் பயப்படுவார்கள், இப்படி ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக பயப்படுவதை ஆங்கிலத்தில் ஃபோபியா (phobia) என்று கூறப்படுகின்றன.  இளவரசர் வில்லியம் மற்றும் ஹரிக்கும் கூட ஒரு விஷயம் பயத்தை ஏற்படுத்துமாம். ஆம், மக்கள் கூட்டத்தின் முன் நின்று பேசுவதற்கு இருவருக்குமே பயமாம். தனது பயத்தை தான் எப்படி சமாளித்தேன் என்பது குறித்து சுவாரஸ்யமான ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார் இளவரசர் வில்லியம். அதாவது, வயது ஏற ஏற இளவரசர் வில்லியமுக்கு […]

Categories

Tech |