Categories
உலக செய்திகள்

“நீடிக்கும் குழப்பம்”…. மலேசியா நாடாளுமன்ற தேர்தலில்…. நடந்தது என்ன….?

மலேசியா நாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 3 பிரதமர்கள் மாறியுள்ளனர். இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதியதாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்  நேற்று முன்தினம் மலேசியா நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் என்னும் பணியும் உடனடியாக தொடங்கப்பட்டது. இந்த தேர்தலில் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த நிலையில் 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரான அன்வர் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. நடுவானில் நொறுங்கி விழுந்த விமானம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென நொறுங்கி விழுந்ததில் 4 பேர்  பலியாகியுள்ளனர். அமெரிக்க நாட்டில் வாஷிங்டன் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஸ்னோஹோமிஷ் நகரிலுள்ள ஹார்வி பீட் என்ற விமான நிலையத்திலிருந்து தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் விமானி உள்பட நான்கு பேர் பயணித்துள்ளனர். இந்த நிலையில்  விமானம் நடுவானில்   பறந்து கொண்டிருக்கும் போது திடீரென உடைந்து  குடியிருப்பு பகுதிகளில்  விழுந்துள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் […]

Categories
உலக செய்திகள்

பயங்கர நிலநடுக்கம் – 44 பேர் பலி….. 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. பெரும் பரபரப்பு…..!!!!

இந்தோனேசியாவில் ஜாவா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக 44 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நில நடுக்கத்தில் 300 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது ரிட்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நில நடுக்கம் ஏற்பட்டபோது மிகப் பெரிய அதிர்வை உணர்ந்ததாகவும் இதனை தொடர்ந்து கட்டிடங்களுக்குள் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியே வந்ததாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

பயங்கர நிலநடுக்கத்தில் 44 பேர் பலி…. 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம்….. பரபரப்பு சம்பவம்…..!!!!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தோனேசியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம்  ஜாவா மற்றும் இந்தோனேசியாவின் பிற பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்ததோடு, 300-க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. மேலும் ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்ததோடு, 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தது பெரும் பரபரப்பையும், சோகத்தையும் […]

Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு திருமணமா?…. “உனக்கு 19, எனக்கு 70″….. காதலுக்கு வயது தேவையில்லை….!!!!

பாகிஸ்தானில் சயத் பாசித் அலி என்பவர் youtube ஒன்றை நடத்தி வருகிறார். ஏராளமான நேர்காணல்களை தனது youtube தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அவ்வகையில் சமீபத்தில் 70 வயது முதியவர் 19 வயது இளம்பெண்ணை திருமணம் செய்தது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். லாகூர் நகரை சேர்ந்தவர் லியாகத் அலி (70), அதே நகரை சேர்ந்தவர் சுமைலா அலி(19) இருவரும் காதல் வயப்பட்டு சமீபத்தில் திருமணம் செய்துள்ளனர். இளம் பெண் பாடும் பாடலை கேட்டு காதலில் விழுந்ததாக அந்த நபர் […]

Categories
உலக செய்திகள்

அதிக மொழிகள் கொண்ட நாடுகளின் பட்டியல்…. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

2022 ஆம் ஆண்டின் படி உலக அளவில் அதிக மொழிகள் கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியலை பிரபல ஆய்வு நிறுவனமான எத்னோலோகு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா 456 மொழிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பப்புவா நியூ கிணி 840 மொழிகள், அதற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இந்தோனேசியா 715 மொழிகள், மூன்றாவது இடத்தில் நைஜீரியா 527 மொழிகள், ஐந்தாவது இடத்தில் 337 மொழிகளுடன் அமெரிக்கா, அடுத்ததாக ஆஸ்திரேலிய 317, சீனா 307, மெக்சிகோ 301, […]

Categories
உலக செய்திகள்

No No…! மீண்டும் டுவிட்டருக்கு வர மாட்டேன்…. பிடிவாதம் காட்டும் டிரம்ப்…!!!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ட்விட்டர் பக்கம் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் ட்ரம்ப் ட்விட்டர் கணக்கை வாக்கெடுப்பின் அடிப்படையில் எலான் மஸ்க் மீண்டும் நிறுவினார். ஆனால், இந்த அறிவிப்பை அடுத்து மீண்டும் டுவிட்டர் பக்கம் வர போவதில்லை என்று டொனால்டு தெரிவித்துள்ளார். தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் ஸ்பெஷல் என்ற சமூக வலைதளத்தில் மட்டுமே செயல்படுவேன் என்று அவர் தெரிவித்திருந்தார். இதனால் அவரது டுவிட்டர் பக்கம் தடை நீக்கம் […]

Categories
உலக செய்திகள்

“உலகத்திற்கே பெரும் உத்வேகமாக அமைந்தது”… உக்ரைன் மக்கள் குறித்து ரிஷி சுனக் பேச்சு…!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையான கண்டனம்  தெரிவித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகிறது. இதற்கிடையே இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்று கொண்ட ரிஷி சுனக் உக்ரைன், ரஷ்யா இடையேயான போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் இன்று உக்ரைனுக்கு சென்ற ரிஷி சுனக் தலைநகர் கீவ்வில் அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை  நேரில் […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி…. எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்…!!!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பின் முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கின் தடை நீக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு 2 வருடங்களுக்கு முன் தடை செய்யப்பட்டது. மக்களிடையே வன்முறையை தூண்டும் விதமாக கருத்துக்கள் பதிவிட்டதாக  டிரம்பின் கணக்கை முடக்கினர். சமீபத்தில், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய நிலையில் டிரம்பின் கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியுமா? என்று கேள்விகள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து, டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கிற்கான தடையை நீக்கலாமா? என்று […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் மீண்டும் தலை தூக்கும் கொரோனா… மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை…!!!!!

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவில் உள்ள உகான் நகரில் பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பதிப்பை ஏற்படுத்தியது.  இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் அவ்வபோது பல்வேறு நகரங்களில் தீவிரமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால் வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தியேட்டர்கள் போன்றவை மூடப்பட்டுள்ளது. அந்த வகையில் சீனாவில் வரலாற்று சிறப்புமிக்க ஜிக்ஸியாங் தியேட்டர் 27-ஆம் தேதி மீண்டும் செயல்பட இருந்தது. சில நாட்களிலேயே […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல நாட்டில் “அடுக்குமாடி குடியிருப்பில் வெடித்த கியாஸ் சிலிண்டர்”….. அலறித் துடித்த மக்கள்….!!!!

பிரபல நாட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவில் உள்ள திமோவ்ஸ்கோய்  நகரில் கடந்த 1980-ஆம் ஆண்டு  5 மாடிகளை கொண்ட ஒரு  அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் பல குடும்பங்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் திடீரென கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதனால் கட்டிடத்தின்  ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 9 பேர் இடிபாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு….. தொடர்ந்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்….!!!!!

பிரபல நாட்டு குண்டுவெடிப்பில் தொடர்புடைய 5  பேரை போலீசார் கைது செய்துள்ளனர். துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லில் மிகவும் பிரபலமான கடைவீதி ஒன்று அமைந்துள்ளது. இந்த கடைவீதி பகுதியில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 6  பேர் உயிரிழந்தனர். மேலும் 81 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் இந்த குண்டு வெடிப்பிற்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்கவில்லை. இது குறித்து வழக்கு […]

Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் நாடாளுமன்ற தேர்தல்…. ஆர்வமாக வாக்களித்த மக்கள்… எந்த கட்சிக்கு வாய்ப்பு….?

நேபாளத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில், மக்கள் காலை முதலே வாக்களிக்க தொடங்கியுள்ளனர். நேபாளத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு ஆரம்பமானது. இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்துள்ளது. மக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏழு மாகாணங்களில், வாக்களிக்க தகுதி உடையவர்கள் சுமார் ஒரு கோடியே 79 லட்சம் பேர். உறுப்பினர்கள் 275 பேரில் 165 நபர்கள் நேரடியாக வாக்கு செலுத்துவதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமிருக்கும் […]

Categories
உலக செய்திகள்

335 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொலைந்த…. ஆமை போல மிதக்கும் நகரம்…. இப்போது மீண்டும்…!!!

இத்தாலியை சேர்ந்த கப்பல் கட்டுமான டிசைனர் பியர்பாவ்லோ லஸ்ஸாரினி நிறுவனம் தற்போது புதிய கப்பல் ஒன்றை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனை கப்பல் என்று சொல்வதை விட மிதக்கும் நகரம் என்றே சொல்லலாம். பிரம்மாண்டமான மிதக்கும் கப்பல்களான “Yacht” எனப்படும் வகையில் கட்டப்படும் இந்த மிதக்கும் நகரத்தில் “பாஞ்சியா யாச்ட்” என பெயரிடப்பட்டுள்ளது. 335 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் கண்டங்கள் ஒரே நிலப்பகுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த ஒற்றை நிலத்தின் பெயர்தான் “பாஞ்சியா”. இந்த ஆமை […]

Categories
உலக செய்திகள்

ஷாக்!…. 10 நாட்களாக ஒரே இடத்தில் வட்டமிடும் செம்மறி ஆடுகள்…. சீனாவில் அரங்கேறிய வினோத சம்பவம்….!!!!!

வடக்கு சீனாவில் ஒரு வினோதமான சம்பவம் 10 நாட்களாக அரங்கேறியுள்ளது. அதாவது 100-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் 10 நாட்களாக ஒரே இடத்தில் வட்டமாக நடந்து வருகிறது. கடந்த 4-ம் தேதியிலிருந்து ஆடுகள் அனைத்தும் ஒரே இடத்தில் நடக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ காரணம் எதையும் வெளியிடவில்லை. இருப்பினும் ஆடுகளின் வித்தியாசமான நடவடிக்கைக்கு வட்ட வடிவில் நடந்து செல்லும் நோய்தான் காரணம் என்று […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் அகதிகளை கட்டாயமாக வெளியேற்றிய நாடு…. சர்வதேச சட்டங்களை மீறி நடவடிக்கை…!!!

துருக்கி நாட்டின் எல்லை பகுதியிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோரை வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துருக்கி தங்கள் நாட்டின் எல்லைப் பகுதியிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோரை ஈரான் நாட்டிற்கு அனுப்பி கொண்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் கடந்த 8 மாதங்களில் தற்போது வரை ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் 44, 768 பேரை துருக்கி, ஈரான் நாட்டின் விமானத்தில் அனுப்பிவிட்டது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியவுடன் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. 30,000 கிமீ தூரமா?… கண்டம் விட்டு கண்டம் சென்று உணவு டெலிவரி…!!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் சிங்கப்பூரில் இருந்து அண்டார்டிகாவில் இருக்கும் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக 30,000 கிலோமீட்டர் தொலைவு கடந்து 4 கண்டங்கள் தாண்டி சென்றிருக்கிறார். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மானசா கோபால் என்ற பெண் சிங்கப்பூரில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் இருக்கிறார். இவர் அண்டார்டிகாவில் இருக்கும் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக 30,000 கிலோ மீட்டர் தொலைவு கடந்து சென்றதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இம்மாதம் ஐந்தாம் தேதி அன்று அவர் பதிவிட்ட […]

Categories
உலக செய்திகள்

“விவரங்கள் அனைத்தையும் கொடுங்கள்”…. நட்பு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி….!!!

நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. அதனால் கடந்த பிப்ரவரி மாதம் அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த போரானது 9 மாதங்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டின் மீது தொடர்ச்சியாக ரஷ்யா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடத்த தாக்குதலில் போலந்து நாட்டில் ஏவுகணை விழுந்து வெடித்துள்ளது. இந்த ஏவுகணையை வீசியது ரஷ்யாவா? உக்ரைனா? என்பது இன்னும்  […]

Categories
உலக செய்திகள்

ஈகுவேடார் நாட்டில் பயங்கரம்…. சிறையில் கோஷ்டி மோதல்…. வன்முறையில் 10 கைதிகள் பலி…!!!

ஈகுவேடார் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் கலவரம் வெடித்து 10 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈகுவேடார் என்ற தென் அமெரிக்கா நாட்டில் அமைந்துள்ள சிறைச்சாலைகளில் சமீப நாட்களில் கலவரங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சிறையில் இருக்கும் கைதிகளிடையே மோதல்  ஏற்பட்டு பெரும் வன்முறையாக மாறி வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, அரசு இவ்வாறான வன்முறைகளை தடுப்பதற்கு சிறையில் குழு தலைவர்களாக இருக்கும் நபர்களை பிற சிறைகளுக்கு மாற்ற தீர்மானித்தது. அந்த வகையில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா வரும் ஆஸ்திரேலியா பிரதமர்… ஏன் தெரியுமா…? வெளியான முக்கிய தகவல்…!!!!!!

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பேசியபோது, இந்திய பிரதமர் மோடியை ஜி20 மாநாட்டில் சந்தித்து பேசினேன். அப்போது ஆஸ்திரேலியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பு, ஒப்பந்தத்தை உறுதி செய்வது பற்றி நாங்கள் விவாதம் நடத்தினோம். ஆஸ்திரேலியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான பொருளாதார உறவை மேம்படுத்துவதை  முக்கியமான ஒன்றாக நாங்கள் கருதுகின்றோம். இந்நிலையில் வருகின்ற மார்ச் மாதம்  இந்தியாவிற்கு வர இருக்கிறேன். அப்போது நாங்கள் ஒரு வணிக குழுவை இந்தியாவிற்கு அழைத்து செல்வோம். மேலும் இது ஒரு முக்கியமான […]

Categories
உலக செய்திகள்

இது போருக்கான சகாப்தம் கிடையாது…. புடினிடம் தெரிவித்த மோடி…. புகழ்ந்து தள்ளும் அமெரிக்கா…!!!

இது போருக்கான சகாப்தம் கிடையாது என்ற தகவலை ஜி-20 கூட்டறிக்கையில் இணைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பங்காற்றிய உரை மிக முக்கியமானதாக அமைந்தது என்று அமெரிக்கா பாராட்டி இருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபரை சந்தித்தபோது பிரதமர் நரேந்திர மோடி இது போருக்கான சகாப்தம் கிடையாது என்று தெரிவித்திருந்தார். மேலும் இந்தோனேசிய நாட்டில் சமீபத்தில் நடந்த […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டு வேலை…. பாலியல் தொழிலுக்கு விற்கப்படும் பெண்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

இலங்கைப் பெண் ஒருவர் ஓமன் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார். அந்தப் பெண் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஓமனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக இலங்கை போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த பெண்ணைப் போலவே 90 பெண்கள் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு ஒரு அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் சில […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரை நிறுத்த…. நாங்கள் பேச்சுவார்த்தை மேற்கொள்ள மாட்டோம்…. அமெரிக்கா வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் போரை நிறுத்த ரஷ்ய நாடுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள மாட்டோம் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெள்ளை மாளிகையானது, ரஷ்ய நாட்டுடன் போரை நிறுத்த அமைதி பேச்சு வார்த்தை மேற்கொள்ள உக்ரைன் ஜனாதிபதி தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. இது பற்றி வெள்ளை மாளிகையினுடைய தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளராக இருக்கும் ஜான் கிர்பி தெரிவித்ததாவது, ரஷ்ய ஜனாதிபதி தங்கள் படைகளை உக்ரைனிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டரில் புதிய கொள்கை… என்ன தெரியுமா…? எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு…!!!!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான டுவிட்டர்  நிறுவனத்தை கடந்த மாதம் 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில் சர்வதேச  அளவில் டுவிட்டர் நிறுவனத்தில் 7,500 ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில் அவர்களில்  பாதி பேரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்துள்ளார். இதனையடுத்து டுவிட்டர் நிறுவனத்தில் லாப நோக்கத்தில் செயல்பட வைப்பதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என ஊழியர்களுக்கு உத்தரவிட்டு ஒரு வாரத்தில் […]

Categories
உலக செய்திகள்

இதை நாங்க கண்டிப்பா செய்வோம்…. அமெரிக்காவால் ஒன்னும் பண்ண முடியாது…. பாகிஸ்தான் மந்திரியின் பளீர் பேச்சு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் 13-ஆம் தேதி துபாய் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் தொண்டர்கள் மத்தியில் அந்நாட்டின் மந்திரி இஷாக் தார் உரையாற்றினார்.  அப்போது அவர் கூறியதாவது, “ரஷ்யாவிடமிருந்து பாகிஸ்தான் விரைவில்  கச்சா எண்ணெய்யை வாங்கும். இதனை அமெரிக்காவால் தடுக்க இயலாது” என்று அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக செப்டம்பர் மாதம் அமெரிக்க பயணத்தின் போது இஷாக் தார் அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது மேற்கு நாடுகளின் பொருளாதார […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்கா வரை செல்லும் தொலைதூர ஏவுகணை”… வடகொரியா அடாவடி…!!!!!!

வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்திருந்தாலும் கூட அதற்கெல்லாம் மதிப்பு கொடுக்காமல் கிம் ஜாங் அன் அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அமெரிக்காவைத் தாக்கும் விதமாக நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணையை வடகொரியா கிழக்கு கடல் பகுதியில் வைத்து பரிசோதனை செய்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த சோதனையில் கண்டம் விட்டு கண்டம் […]

Categories
உலக செய்திகள்

போதையில் மாடல் அழகி செய்த காரியம்… மருத்துவமனையில் காதலன்…. ஆடைகளின்றி தப்பியதால் பரபரப்பு…!!!

பிரேசில் நாட்டில் மாடல் அழகி, போதை மயக்கத்தில் தன் காதலனை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஆடைகளின்றி அங்கிருந்து தப்பித்திருக்கிறார். பிரேசில் நாட்டில் மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ் என்ற மாடல் அழகி தன் காதலருடன் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார். இருவரும் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் திருமணம் செய்யவுள்ளார்கள். இந்நிலையில், ஓட்டலில் இருக்கும் போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது போதை மயக்கத்தில் இருந்த அந்த அழகி, தன் காதலரின் துப்பாக்கியை பிடுங்கி அவரை நோக்கி சுட்டு […]

Categories
உலக செய்திகள்

ஊதி விளையாடு பாப்பா: RIP meme போட்ட மஸ்க்…. RIP பதிவுகள் ட்ரெண்டிங்…!!!

டுவிட்டர் ஊழியர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும், இல்லையென்றால் வெளியேறுங்கள் என்ற எலன் மஸ்க்கின் உத்தரவை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அலுவலகங்கள் நவம்பர் 21 ஆம் தேதி வரை மூடப்படுகிறது என ஊழியர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி மஸ்க் இம்சை தாங்கமுடியாமல் தாங்களாகவே ட்விட்டரிலிருந்து ஊழியர்கள் வெளியேறி வருகிறார்கள். இப்படியே எல்லாரும் ட்விட்டரிலிருந்து வெளியேறினால் மூடுவிழா நடத்த வேண்டியதுதான் என ட்விட்டருக்கு RIP […]

Categories
உலக செய்திகள்

குவைத்தில் ஒரே நேரத்தில் 7 பேருக்கு தூக்கு தண்டனை…? எழுந்து வரும் கண்டனங்கள்..!!!!

குவைத்தில் ஏழு வருடங்களுக்குப் பின் மீண்டும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குவைத்தில் 1960 -ஆம் வருடம் தொடங்கி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் 7 பேருக்கு ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய சிறைச்சாலையில் நேற்றுமுன்தினம்  மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் துக்கிலிடப்ட்டதாக அந்த நாட்டு அரசுக்கு சொந்தமான குனா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் குவைத் நாட்டைச் சேர்ந்த 3  ஆண்கள், […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் திடீர் துப்பாக்கிச் சூடு… பயங்கர தாக்குதலில் 5 பேர் பலி… பரபரப்பு சம்பவம்…!!!!!

ஈரானில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் தென்மேற்கு மாகாணமான குசெஸ்தானில் அமைந்துள்ள இசே என்னும் நகரில் உள்ள சந்தையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் குற்றவாளிகள் துப்பாக்கிச் சூடு  நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில்  10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஏற்கனவே ஹிஜாப் போராட்டங்களால் ஈரானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போராட்டங்களின் போது பயங்கரவாதத்தை தூண்டும் விதமாக ஆயுதங்களை […]

Categories
உலக செய்திகள்

தைவான் மீதான தாக்குதல்… “இது தவறானதாக அமையும்”…? பிரபல நாடு எச்சரிக்கை…!!!!!

உக்ரைன் ரஷ்யாவின் மீதான படையெடுப்பு போல தைவான் மீதான தாக்குதல் சீனாவிற்கு தவறானதாக அமைந்து விடும் என அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மில்லி கூறியுள்ளார். இது பற்றி ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மில்லி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, தைவானின்  பெரும் பகுதி மலைப்பாங்கான தீவு. அதனால் தைவான் ஜல சந்தியின் குறுக்கே தைவானை தாக்குவதும் முற்றுகையிடுவதும் மிகவும் கடினமான வேலையாகும். மேலும் “இது மிகவும் கடினமான ராணுவ நோக்கம். சீனர்களுக்கு இதில் அதிகமான […]

Categories
உலக செய்திகள்

இனி விசாவுக்கு விண்ணப்பிக்க காவல்துறை நற்சான்றிதழ் தேவையில்லை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

சவுதி அரேபியா செல்லும் இந்தியர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது இனி காவல்துறையின் நற்சான்றிதழ் அளிக்க தேவையில்லை என இந்தியாவில் உள்ள சவுதி தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியாவுடன் பலமான உறவு மற்றும் கூட்டு காரணமாக விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது இந்தியர்களுக்கு காவல்துறையின் நற்சான்றிதழ் தருவதில் இருந்து விலக்கு அளிப்பதாக தற்போது சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சவுதியில் வசிக்கும் சுமார் இரண்டு மில்லியன் இந்தியர்களின் பங்களிப்பை பாராட்டுவதாக அந்நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

கோடிகளை அள்ளிக் கொடுக்கும் கால்பந்து உலகக் கோப்பை…. மொத்த பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

கத்தாரில் இந்த ஆண்டு நடைபெறும் கால்பந்த உலக கோப்பையில் மொத்த பரிசு தொகை எவ்வளவு என்பது குறித்த செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி கால்பந்து உலக கோப்பையில் மொத்தம் பரிசுத்தொகை 3,587 கோடி ஆகும். இதில் கோப்பை வெல்லும் மணிக்கு மட்டும் 320 கோடி கிடைக்கும். உலகில் அதிக தொகையை பரிசாக கொடுக்கும் போட்டி இதுதான். இதனைத் தொடர்ந்து யுஎஸ் ஓபன் டென்னிஸ் 498 கோடியும், விம்பில்டனில் 399 கோடியும், பிரெஞ்சு ஓப்பனில் 350 கோடியும்,டி20 உலக […]

Categories
உலக செய்திகள்

OMG: ஆறாக மாறும் பிரபல நாட்டின் சாலைகள்…. அச்சத்தில் நாட்டு மக்கள்….!!!!

பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இது குறித்து  வானிலை ஆய்வு மையம் கூறியதாவது. நாட்டின் சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மிட்லாண்ட்ஸ்  மற்றும்  கிழக்கு ஸ்காட்லாந்தின்  பெரும் பகுதி முழுவதும் பலத்த கனமழைக்கான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுச்சூழல் அமைப்பானது பிரித்தானியாவில் 24 வெள்ள அபாயங்களையும், 98 எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை லண்டன் […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேலில் நிலவும் மோதல் போக்கு… 2 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையேயான மோதல்   நீண்ட காலங்களாக நீடித்து வருகின்றது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பகுதிகளான மேற்கு கரை மற்றும் ஜெருசலேம் நகரில் பாலஸ்தீன பயங்கரவாதிகள் இஸ்ரேலியர்களை குறி வைத்து தாக்குதல் நடத்துகின்றனர். அதற்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் ராணுவ வீரர்களும் பாலஸ்தீன அகதிகள் முகாமிற்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவம் வழக்கமாகிக்  கொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேலின் மேற்கு கரை பகுதியில் உள்ள ஏரியல் நகரில் வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் கேஸ் நிலையத்திற்கு அருகில் இஸ்ரேலியர்கள் […]

Categories
உலக செய்திகள்

நான் இன்னும் இளமையாக தான் இருக்கிறேன்…. 70 வயது முதியவரை திருமணம் செய்த 19 வயது பெண்….!!!!!

பிரபல நாட்டில் 19 வயது பெண் 70 வயது முதியவரை திருமணம் செய்துள்ள சம்பவம் பலரையும்  ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள லாகூர் பகுதியில் ஷிமைலா என்ற 19 வயது பெண் வசித்து வருகிறார். இவர் 70 வயதுடைய லியாகத் என்ற முதியவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் லாகூரில் அதிகாலை நடைப்பயிற்சி செய்த  போது ஷிமைலா  முதியவரை  சந்தித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். அதேபோல் ஒரு நாள் லியாகத் அதிகாலை நடைப்பயிற்சியின்  போது ஷிமைலா  பின்னால் பாடல் […]

Categories
உலக செய்திகள்

ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு… பிரதமரின் மனம் கவர்ந்த இந்திய மக்கள்..!!!!!

இந்தோனேசியாவின் பாலிதீவில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று முன்தினம்  கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் இந்தோனேசியாவில் வாழும்  இந்திய மக்களை சந்தித்தது தான் பிரதமரின் மனம் கவர்ந்த சந்திப்பாகஇருந்தது. ஏனென்றால் அவரை சந்திப்பதற்காக ஏராளமான இந்திய மக்கள் நமது பாரம்பரிய உடைகள் மற்றும் தலைப்பாகைகள் அணிந்து கொண்டு வந்திருந்தனர். மேலும் அவர்கள் பாரதமாதாவுக்கு ஜே என ஆரவாரித்தனர். இதனையடுத்து பிரதமர் மோடியை நோக்கி இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்துள்ளனர். பின்னர்  புன்சிரிப்புடன் அவர்களது […]

Categories
உலக செய்திகள்

பயங்கரம்…!! “இந்த தாக்குதலை கண்டிக்க வார்த்தைகள் போதாது”…. ஷெபாஸ் ஷெரீப் பேச்சு…!!!!!

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவின் லக்கி மார்வாட்டில் நேற்று  பயங்கரவாத தாக்குதல் சம்பவம்நடைபெற்றுள்ளது. இதில் போலீசார் 6 பேர் உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பயங்கரவாதிகள் வேன் மீது துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா போலீசார் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் பற்றி தலைமை செயலாளர் மற்றும் கைபர் பக்துன்க்வா ஐஜியிடம் அறிக்கை கேட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். இது […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. இவ்ளோ நீளமான பெயரா?…. மன்னர் சார்லஸின் முழுப்பெயர் என்ன தெரியுமா?…

பிரிட்டன் மன்னர் சார்லஸின் முழு பெயர் பட்டங்களுடன் வெளியாகியுள்ளது. பிரிட்டன் அரச குடும்பத்தினரின் பட்டங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் சில பேருக்கு அதிகபட்டங்கள் இருக்கும். அந்த வகையில் மன்னர் சார்லஸின் பட்டங்களுடன் சேர்த்து அவரின் முழு பெயர் மிகவும் நீளமானது. அதாவது, அவரின் பெயர் Charles III, by the Grace of God, of the United Kingdom of Great Britain and Northern Ireland and of his other realms […]

Categories
உலக செய்திகள்

271 பயணிகளுடன் சென்ற படகில் தீ விபத்து…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

இந்தோனேசிய நாட்டின் பாலி நகருக்கு அருகில் சுமார் 271 நபர்கள் பயணித்த படகு தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீட்டாபாங் நகரத்திற்கு செல்வதற்காக லிம்பர் துறைமுகத்திலிருந்து ஒரு படகு புறப்பட்டு இருக்கிறது. அதில் பயணிகள் 236 பேரும், பணியாளர்கள் 35 பேரும் பயணித்திருக்கிறார்கள். படகு, இந்தோனேசியாவின் பாலி நகரத்திற்கு அருகில் சென்ற போது திடீரென்று படகு தீப்பற்றி  எரிந்தது. எனவே, உடனடியாக பயணிகளை மீட்க 2 கடற்கரை கப்பல்கள் அங்கு விரைந்தது. மீட்பு […]

Categories
உலக செய்திகள்

புகைபிடித்துக்கொண்டே மாரத்தான் ஓட்டம்…. முதியவர் அசத்தல் சாதனை….!!!

சீன நாட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் ஒரு முதியவர் புகைப்பிடித்துக் கொண்டே ஓடி  போட்டியின் தூரத்தை கடந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். விளையாட்டு வீரர்கள் என்றாலே எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாமல் இருக்க வேண்டும்  என்பது பொதுவாக கூறப்படும் கருத்து. ஆனால், அதனை முற்றிலுமாக மாற்றி சாதித்திருக்கிறார் 50 வயதுடைய ஒரு முதியவர். அங்கிள் சென் என்ற அந்த நபர் ஜியாண்ட் பகுதியில் நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றார். அதில் சுமார் 1500 பேர் பங்கேற்று ஓடினர். அதில் இவர் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள்…. விதிக்கப்பட்ட நிபந்தனை…!!!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேர்  விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கச்சிமடத்தின் மீனவர்கள் 15 பேர் இரண்டு விசை படகுகளுடன் கடந்த ஐந்தாம் தேதி அன்று மீன்பிடிப்பதற்காக சென்றிருக்கிறார்கள். எல்லையை தாண்டி சென்றதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை, கடந்த ஏழாம் தேதி அன்று மன்னாரில் இருக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி 17ஆம் தேதி வரை அவர்களை சிறையில் வைத்திருக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். அதன் பிறகு அவர்களை வவுனியா சிறையில் அடைத்தனர். இன்று […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே அதிக தங்கம் உள்ள நாடு எது தெரியுமா?…. இந்தியாவிடம் எவ்வளவு உள்ளது?…. இதோ முழு விவரம்….!!!!

ஒரு நாட்டில் உள்ள தங்கம் கையிருப்பு தான் அந்த நாட்டின் சொத்துக்கள் மற்றும் நிதி நிலையை தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. உலக அளவில் அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது. சமீபத்திய புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் தங்கம் கையிருப்பு 112 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவிடம் 357 சதவீதம் மெட்ரிக் டன் தங்கம் கையிருப்பு இருந்தது. முதலிடத்தில் அமெரிக்கா 8133 […]

Categories
உலக செய்திகள்

எந்த நிறுவனத்திற்கும் CEO-ஆக இருக்க விருப்பமில்லை…. எலான் மஸ்க் ஓபன் டாக்…!!!

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் எந்த நிறுவனத்திலும் தலைமை செயல் அதிகாரியாக இருப்பதற்கு எனக்கு விருப்பம் கிடையாது என்று கூறியிருக்கிறார். உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க், டெஸ்லா என்னும் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார்.  இந்நிலையில், அந்நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கும் ரிச்சர்ட் ஜே. டோர்னெட்டா அவருக்கு  எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார். கடந்த 2018 ஆம் வருடத்தில், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த எலான் […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”…. 8658 வருடங்கள் தண்டனையா?…. வசமாக சிக்கிய மதபோதகர்….!!!

துருக்கியில், பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய மத போதகருக்கு இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றமானது சுமார் 8658 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. துருக்கி நாட்டின் மதபோதகரான 66 வயதுடைய அட்னான் அக்தார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சிகள் நடத்தியதன் மூலம் பிரபலமானார். மேலும், அவர் பழமையான  கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில், கடந்த வருடம் அவர் மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது, மோசடி, இராணுவத்தில் உளவு பார்த்தது என்று […]

Categories
உலக செய்திகள்

வாகனம் நிறுத்துவதில் பிரச்சனை…. பிரபல நடிகையின் வாகனத்தின் மீது துப்பாக்கிசூடு…!!!

வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையில் ஹாலிவுட் நடிகையின் கார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட்டின் பிரபல நடிகையான டெனிஸ் ரிச்சர்ட்ஸ், ஸ்டார்ஷிப் ட்ரூப்பர்ஸ், வைல்ட் திங்க்ஸ் உட்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், அவரும் அவரின் கணவர் ஆரோன் பிலிப்ஸ்-ம் லாஸ் ஏஞ்சல் நகரத்தில் இருக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தங்களின் வாகனத்தை நிறுத்துவதற்காக இடம் தேடியிருக்கிறார்கள். அப்போது அவர்களின் பின்னால் வந்த வாகனத்தில் இருந்த நபர் “வழி […]

Categories
உலக செய்திகள்

ப்ளூ டிக்கிற்கு கட்டணம் செலுத்தும் முறை…. 29-ஆம் தேதி முதல் நடைமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

ட்விட்டரில் அதிகாரப்பூர்வமான கணக்கை குறிக்கும் நீல நிற குறியீட்டிற்கு கட்டணம் செலுத்தும் முறையானது வரும் 29ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிவிட்டார். அதனை தொடர்ந்து அதிரடியாக அதில் பல மாற்றங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் ஒருவரின் கணக்கு அதிகாரப்பூர்வமானது தான் என்பதை குறிக்கும் நீல நிற குறியீட்டை வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் 1600 ரூபாய் வரை செலுத்த […]

Categories
உலக செய்திகள்

2-வது மரண தண்டனை அறிவிப்பு…. ஹிஜாப் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறையால் பரபரப்பு….!!!!

பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி நேற்று  ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் கடந்த செப்டம்பர் மாதம் மாஷா அமினி என்ற பெண்  ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தினால் காவல்துறையினர் அவரை தாக்கியுள்ளனர். இதில்  அந்தப் பெண்  உயிரிழந்துள்ளார். இதனை கண்டித்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் ஹிஜாப் உடையைக் கிழித்தும் எரித்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினரக்கும் இடையே  மோதல் ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“ரொம்ப இரைச்சலா இருக்கு”…. அமெரிக்க இராணுவ தளத்திற்கு எதிராக…. 14வது முறையாக தொடரப்பட்டுள்ள வழக்கால் பரபரப்பு….!!!

அமெரிக்க ராணுவ தளத்தில் இரவிலும், பகலிலும் நடக்கும் விமானப் பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவின் மேற்கு பகுதியிலுள்ள யோகோடாவில் அமெரிக்க ராணுவத்தின் விமானப்படைத் தளம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த விமானப்படைத் தளத்தில் உண்டாகும் இரைச்சல் காரணமாக அப்பகுதி மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “அமெரிக்க ராணுவ தளத்தில் இரவிலும், பகலிலும் விமானப் பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் ஒலி […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும்….. கொரோனா நோய் தொற்றின் பரவல்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா நோய் தொற்று.  சீனா நாட்டில் உகான் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் தான் உலகில் முதல் கொரோனா நோய் தொற்று உருவானது. பின்னர் அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா நோய் தொற்று  ஏற்படுத்திவிட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா  நோய்தொற்றிலிருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனா நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் […]

Categories

Tech |