Categories
அரசியல் மாநில செய்திகள்

“நதிகளை தூர்வாரி மழை நீரை சேகரிக்க வேண்டும்” தமிழக அரசுக்கு பிரேமலதா கோரிக்கை …!!

நதிகளை தூர்வாரி மழை நீரை சேகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா வேண்டுகோள்விடுத்துள்ளார். இன்று சென்னை சாலிகிராமம் பகுதியில்  தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பத்திரிக்கையாளரிடம் பேசினர் அப்போது பல்வேறு அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர் நதிகளை தூர்வாரி மழைநீரை சேகரித்து தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுயமென்று தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இங்கே திண்ணை நாடகம்” டில்லியில் தெருக்கூத்து?…. மு.க.ஸ்டாலின் மீது தமிழிசை சவுந்தரராஜன் சாடல்…!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை சந்தித்து மத்தியில் 3வது அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வை இன்று மாலை 4 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்திக்கிறார். இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு இன்று வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அனல் காற்றும்  வீசுவதால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஆனால் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால்  பொதுமக்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளார்கள். இருந்தாலும் கோடை மழையை தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் சூறாவெளியுடன் கூடிய பலத்த  கனமழைக்கு  வாய்ப்பு….வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …!!!

தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு  மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களுக்கு  சூறாவெளியுடன் கூடிய பலத்த  கனமழை பெய்ய  வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. மே  4 ஆம் தேதி, கத்தரி வெயில் தொடங்கிய நிலையில் ,தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், தமிழ்நாட்டின், உள் மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களில், பலத்த காற்றுடன், இடியுடன் கூடிய  கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.   திண்டுக்கல், […]

Categories
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நரேந்திர மோடி….!

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளைக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 65-வது பிறந்தநாள் ஆகும். தேர்தல் பிரசாரத்துக்காக திருப்பரங்குன்றம் சென்ற அவர் இன்று காலையில் மதுரையில் தங்கி இருந்துள்ளார். அப்போது அவர் தனது பிறந்த நாளைக்கூட கொண்டாடாமல் எளிமை காட்டிக்கொண்டு வழக்கம் போல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை தெரிந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை […]

Categories
மாநில செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி 1 கோடி பணம், சொத்து ஆவணம் பறிப்பு….!!

சென்னை துரைப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி ஒரு கோடி பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முகமது தாகிர். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். முகமது தாகிரிடம் துரைப்பாக்கத்தை சேர்ந்த சிலர் புறம்போக்கு நிலம் தொடர்பாக கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் முகமது தாகிரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் சொத்து […]

Categories
மாநில செய்திகள்

1முதல் 5 வரை படிக்கும் குழந்தைகளுக்கு சத்துணவில் தினமும் பால் வழங்க தமிழக அரசு யோசனை…..!!

தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் தினமும் பால் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜரால் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. இது காலப்போக்கில் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. தற்போது பள்ளி சத்துணவில் மாணவ-மாணவிகளுக்கு 13 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. இதில் 1 முட்டையும் வழங்கப்படுகிறது. தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் காலையில் ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பழுதாகியுள்ள தமிழக அரசு” ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும் சரி செய்ய முடியாது… கமல்ஹாசன் விமர்சனம்…!!

டெல்லியில்  இருந்து ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும் பழுதாகியுள்ள தமிழக அரசை சரி செய்ய முடியாது  என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகள் இறந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது புகார்  மக்கள் நீதி மய்யத்தின் தலைவரையும் நடிகருமான   கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசும் போது டெல்லியில் இருந்து கொண்டு ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும் பழுதாகியுள்ள தமிழக அரசை சரிசெய்ய முடியாது என்று விமர்சனம் செய்தார். தொடர்ந்து பேசிய அவர் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

இன்று காலை 9:30 மணியளவில் +1 எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியீடு…!!!

இன்று காலை சரியாக 9:30 மணி அளவில் 11_ ஆம் வகுப்பு எஸ்எஸ்எல்சி  தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. கடந்த மாதம் பள்ளி கல்வித்துறை 10_ ஆம் வகுப்பு மற்றும்  +2 எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை  வெளியிட்ட  நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு +1 முடிவுகள்  வெளியிடப்படவுள்ளதாக ஏற்கனவே  அறிவித்ததையடுத்து அதற்கான பணி நடைபெற்று வருகிறது.மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறப்பு தேதியை பயன்படுத்தி  tnresults.nic.in , dge.tn.nic.in என்னும் இணையதளம் மூலம் தங்கள் முடிவுகளை பதிவிறக்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு உதவி வழங்குவதில் தமிழகம் முதலிடம் … எடப்பாடி பழனிசாமி !!!

விவசாயிகளுக்கு காப்பீடு திட்டத்தின் மூலம் உதவி வழங்குவதில் தமிழகம் முதலிடம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பெருங்குடி பகுதியில் வாக்கு சேகரிக்கும் போது,  விவசாயிகளுக்கு உதவி வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று கூறினார் . மேலும் விவசாயிகளின் நலம்காத்து ,குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நீர் நிலைகள் மேம்பாடு திட்டம் ஆகியவை  அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஏய்ம்ஸ் மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைக்கப்படும் என்றும்  அறிவித்தார்.  

Categories
அரசியல் மாநில செய்திகள்

25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதி மு.க. ஸ்டாலின்-துரைமுருகன் புகழாரம்!!!

மு.க. ஸ்டாலின் , இன்னும் 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார் . தூத்துக்குடி ஸ்பிக் நகரில் , திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன் , ”ஸ்டாலினுக்கு இணையான அரசியல் தலைவர் தமிழகத்தில் யாரும் இல்லை” என புகழ்ந்தார் .   அதோடு,  மு.க. ஸ்டாலின் இன்னும் 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாகக் கூட வரலாம். அதற்க்கான வாய்ப்பு அதிகமுள்ளது  எனவும்  கூறினார்.

Categories
மாநில செய்திகள்

மத்திய சிறைகளில் போதை மறுவாழ்வு மையம் -சிறைத்துறை முடிவு !

தமிழ்நாட்டிலுள்ள  மத்திய சிறைகளில் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்க சிறைத்துறையினர் திட்டவகுத்துள்ளனர். தமிழ் நாட்டில் மொத்தம் 14 மத்திய சிறைகள் உள்ள நிலையில்   சிறைவாசிகளில் பலர்  போதை பழக்கதிற்கு  அடிமையாக உள்ளனர். சிறை வளாகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவது சவாலாகவே இருந்துவரும் நிலையில்  தேசிய சமூக பாதுகாப்பு நலத்துறையுடன் சிறைத்துறையினர் இணைந்து, சிறைகளில் போதை மறுவாழ்வு மையம் அமைக்க  திட்டமிட்டுள்ளதாக, சிறைத்துறை கூறியுள்ளது .

Categories
ஆன்மிகம் இஸ்லாம் மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை தொடங்குகிறது ரமலான் நோன்பு !!

நாளை முதல் தமிழகத்தில் ரமலான் நோன்பு  தொடங்குகிறது. இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு மிகவும் புனிதமான ஒன்று .இந்நோன்பு இருப்பது அவர்களின் புனித கடமை ஆகும் . சூரியன் உதிப்பதற்குள் உணவருந்தி, மாலை வரை ஒருதுளி நீரைக்கூட குடிக்காமல் , 30 நாட்களையும் கழிப்பதே இதன் சிறப்பாகும். ரமலான் பிறை தோன்றியதால் இந்த ஆண்டின் ரமலான் நோன்பு நாளை அதிகாலை தொடங்குவதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.  

Categories
மாநில செய்திகள் வானிலை

இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த மழை!!! விவசாயிகள் மகிழ்ச்சி!!

 வேலூர்,தர்மபுரி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் நேற்று  மழை நன்றாக பெய்துள்ளது. அக்கினிநட்சத்திரம் ,தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் நிலையில் ,திருத்தணியில் 113 டிகிரியும், வேலூரில் 110 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளது . தமிழகத்தில்  ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் , நேற்று மாலை வேலூரில், பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது . அதே போல் ,தர்மபுரியில் நேற்று மாலை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்….

தமிழகத்தில்  ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் , வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்  ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்த   24  மணி நேரத்தில் ,வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 14 சென்டி மீட்டர், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 7 சென்டி மீட்டர் மற்றும்  […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஒடிசா மாநிலத்திற்கு 10 கோடி  நிதியுதவி- தமிழக அரசு!

தமிழக அரசு,  ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு 10 கோடி  நிதியுதவி வழங்க உள்ளது . முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  ஃபானி புயல், புனித நகரம் பூரி என பல  நகரங்களை, கடுமையாக தாக்கி  பாதிப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளதாக கூறியுள்ளார் .மேலும்  ஃபானி புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், கூறினார் . ஒடிசா மாநிலத்திற்கு, தமிழ்நாடு அரசின் சார்பில்,  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

நீட் தேர்வு ஒத்தி வைப்பு !!! பானி புயல் எதிரொலி !!

ஒடிசாவில், பானி புயலால்,  நீட் நுழைவுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  தேசிய அளவில், இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர  நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு  மே 5-ஆம் தேதி நடக்க உள்ள  நிலையில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒடிசா மாநில அரசு கேட்டுக் கொண்டது. பானி புயலால்  கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில்,  இதை ஏற்று நாளை ஒடிசாவில் நடைபெற உள்ள நீட் தேர்வு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது என  தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அக்னி நட்சத்திரத்தின் ருத்திரத்தாண்டவம் இன்று ஆரம்பம் !!!

தமிழகத்தில்  அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம்  அதிகரித்து வந்த நிலையில்,  மக்கள் வாடிவதங்கினர்.   புயல் ஒடிசாவுக்கு சென்றதே இதற்கு  காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று  அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள்ளது .இது  வரும் 29ஆம் தேதி வரை நீடிக்க உள்ளதால் , அனல்காற்றுடன் வரும்  3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கவுள்ளது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் பதவி விலக ரெடியா…. !!! துரைமுருகன் சவால் !!!

என்னுடைய  இடத்தில்  12 கிலோ தங்கம் மற்றும்  ரூ.13 கோடியை வருமான வரித்துறை கைப்பற்றினார்கள் என  முதல்வர் இ. பி  எஸ் நிரூபித்தால், நான் பதவி விலகுகிறேன் ; இல்லையேல் , இ. பி . எஸ்  பதவி விலக  தயாரா என கேள்வி கணை தொடுத்துள்ளார் . எனது  வீடு மற்றும்  கல்லூரியில் நடத்தப்பட்ட   சோதனைகளில்  ரூ.10 லட்சம் மட்டுமே கைப்பற்றப்பட்டது.  தங்கம் ஏதும்  கைப்பற்றப்படவில்லை. ஆனால் 12 கிலோ தங்கம் மற்றும்  ரூ.13 கோடிரூபாய் வருமான வரித்துறையால்  கைப்பற்றப்பட்டதாக  […]

Categories
மாநில செய்திகள் வானிலை

புயல் தாக்கும் போது பிறந்த பெண் குழந்தைக்கு ”பானி”என்று பெயரிடப்பட்டது..

இன்று புவனேஸ்வரில் பிறந்த பெண் குழந்தைக்கு ”பானி”என்ற பெயர் சூட்டப்பட்டது . ஒடிசா மாநிலம்  புரி பகுதியை ,மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் தாக்கிய பானி புயல்,  புவனேஸ்வர் போன்ற  மாவட்டங்களில் பெரிய  சேதத்தை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில்  புவனேஸ்வர் அருகே அமைந்துள்ள ,மன்சேஸ்வர் ரெயில் பெட்டி பழுதுபார்க்கும் தொழிற்சாலையில், வேலை பார்க்கும்  ஒரு பெண் தொழிலாளிக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டடு , ரெயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அங்கு காலை 11.03 மணியளவில் அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக தயாரா…!! துரைமுருகன் கேள்வி….!!

எனது இடத்தில் வருமான வரித்துறை கைப்பற்றியதை ரூ.13 கோடி பணத்தை முதல்-அமைச்சர் நிரூபிக்க வில்லை என்றால் பதவி விலக தயாரா? என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு சொந்தமான இடத்தில் 12 கிலோ தங்கம், ரூ.13 கோடி பணத்தை வருமான வரித்துறை கைப்பற்றியதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்தால் நான் பதவி விலக தயாராக இருக்கிறேன். நிரூபிக்க வில்லையென்றால் முதல்-அமைச்சர் பதவி விலகத் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். எங்கள் வீடு […]

Categories
மாநில செய்திகள்

குடிபோதையில் கார் ஓடி விபத்து…. மூதாட்டி உட்பட 2 பேர் பரிதாப பலி…!!

சென்னை வில்லிவாக்கத்தில் குடிபோதையில் ஒருவர் கார் ஓட்டியதில் விபத்துக்குள்ளாகி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  சென்னை வில்லிவாக்கத்தில் குடி போதையில் ஒருவர் கார் ஓட்டியதில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். கார் மோதியதில் மூதாட்டி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மது போதையில் சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் தப்பி ஓட முயற்சி செய்தார். அப்போது பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

“ராமலிங்கம் கொலை வழக்கு”…. அதிரடி சோதனையில் NIA….!!!!

ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் தூண்டில்விநாயகம்ப்பேட்டையை சேர்ந்த ராமலிங்கம் வாடகை பாத்திரக்கடையி ன் உரிமையாளர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 5_ம்  தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் 16 பேர் மீது வழக்குபதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். மார்ச் 14 _ம் தேதி தேசிய புலனாய்வு துறைக்கு மற்றபட்ட இந்த வழக்கு நேற்று விசாரணை […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

திருச்சி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடத்திய NIA…!!!

ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு துறையினர் திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் தூண்டில்விநாயகம்ப்பேட்டையை சேர்ந்த ராமலிங்கம் வாடகை பாத்திரக்கடையி ன் உரிமையாளர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 5_ம்  தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் 16 பேர் மீது வழக்குபதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு மார்ச் 14 _ம் தேதி தேசிய புலனாய்வு […]

Categories
மாநில செய்திகள்

“சமையல் கியாஸ் விலை உயர்வு” பொதுமக்கள் அதிர்ச்சி…..!!

மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை 6 உயர்ந்ததுள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். நேற்றைய தினம் மானிய கியாஸ் விலையும், மானியம் அல்லாத கியாஸ் விலையும் உயர்த்துள்ளது.ஒரு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மேல் வாங்கி பயன்படுத்துவர்களுக்கு  மானியம் அல்லாத விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்பட்டு வருகின்றது . இதனுடைய  விலை சிலிண்டருக்கு ரூபாய் 6 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இதனுடைய விலை அதாவது சிலிண்டருக்கு ரூபாய் 722_இல் இருந்து ரூபாய் 728_ஆக அதிகரித்துள்ளது.மானியத்துடன் வழங்க கூடிய கியாஸ் சிலிண்டர் விலை […]

Categories
கோயம்புத்தூர் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“லாட்டரி அதிபருக்கு சொந்தமான 70 இடங்களில் சோதனை” வருமானவரி துறை அதிரடி…!!

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமானவரி துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகின்றது. கோயம்புத்தூர் மாவட்டம் காந்திநகரை சேர்ந்த தொழிலதிபர் சான்டியாகோ மார்ட்டின். இவர் லாட்டரி விற்பனை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் செய்து வருகின்றார். இவரை லாட்டரி கிங் மற்றும் லாட்டரி மார்ட்டின் என்று அழைப்பர். இவருக்கு சென்னை , இந்தியா முழுவதும் பல்வேறு சொத்துக்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று இவருக்கு சொந்தமான இடங்களில் வாருமான வரித்துறையினர் தீவிர  நடத்தினர். […]

Categories
மாநில செய்திகள் வானிலை

“பாணி புயல் எச்சரிக்கை “தமிழகத்திற்கு 309 கோடி ஒதுக்கீடு !!..

பாணி புயல் உருவானதை தொடர்ந்து   முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு ரூபாய் 309 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள பாணி புயல், அதி வேகமாக வலுப்பெற்று நகர்ந்து கொண்டேஇருக்கிறது. இந்த புயலானது தர்ப்பொழுது ஒடிசா பகுதியின் அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புயல் கரையை கடக்கின்ற சமயத்தில்  ஒடிசா பகுதியை தாக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது , இதனையடுத்து பாணி புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக […]

Categories
மாநில செய்திகள் விளையாட்டு

ரூ15,00,000… தங்கம் கோமதிக்கு பரிசு அறிவித்தது அதிமுக…..!!

கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  கத்தாரின் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப்போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயப்போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதனை படைத்தார். தங்கம் வென்ற கோமதிக்கு பல்வேறு தரப்பினர் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதில்  தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும் ,காங்கிரஸ் சார்பில் ரூ.5 லட்சமும் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. மேலும் திரைத்துறையை […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள் வானிலை

அடுத்த 36 மணி நேரம் “தீவிரப்புயலாகும் ஃபானி” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

வங்க கடலில் உருவாகியுள்ள  ஃபானி புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மிக அதி தீவிரப்புயலாக மாறுகின்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்தும் , அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று  ஃபானி புயலாக மாறியது பற்றியும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை  தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.   மேலும் ஃபானி புயல் எப்போது கரையை கடக்கும் , புயலின் நகர்வு உட்பட மீனவர்கள் கடலுக்கு செல்வது […]

Categories
கல்வி செய்திகள் மாநில செய்திகள்

11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அனைத்துப்பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால்தான் காலேஜ் அட்மிஷன் …கல்லூரிக்கல்வி இயக்குநர் திட்டவட்டம் …

11 மற்றும்  12ஆம் வகுப்பு ஆகிய இரு பொதுத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே  உயர்கல்வி சேர்க்கைக்கு தகுதியானவர்கள் என்று  கல்லூரிக்கல்வி இயக்குநர் திட்டவட்டமாக  தெரிவித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம்,   பிளஸ் ஒன் தேர்வு  600 மதிப்பெண்களுக்கும்  கடந்த மார்ச் மாதம் , பிளஸ் 2 தேர்வு 600 மதிப்பெண்களுக்கும்   மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில், இரு தேர்வுகளிலும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே  உயர்கல்வி சேர்க்கைக்கு தகுதியுடையவர்கள்  என்று  அனைத்து கலை, அறிவியல் கல்லூரி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

இன்று 10-ம் வகுப்பு இறுதித்தேர்வுமுடிவு வெளியீடு ….

இன்று காலை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்  வெளியாகின்றன. கடந்த  மார்ச் 14 முதல் 29ந் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.தமிழ்நாடு முழுவதும் 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ- மாணவியர்கள்  இந்த தேர்வை எழுதியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவு வெளியாகவுள்ளது . மின்னஞ்சல் மற்றும்  SMS மூலமாக,மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். வருகின்ற 2ந் தேதி , தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும் மே 6 […]

Categories
கல்வி மாநில செய்திகள்

”டெட்” தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தம் -பள்ளிக்கல்வித்துறை அதிரடி !!!!

”டெட்” தேர்வில் வெற்றி பெறாததால்,  அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியிலுள்ள  1500 ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ”டெட்” தேர்வு எழுதாமல் 2014 – 2015 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.ஆனாலும் இந்த 5 ஆண்டுகாலத்தில் 1500 ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாமல்  உள்ளனர்.இதனால்  அவ்வாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும்  இதர சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த 5 ஆண்டுகால அவகாசம் வரும்  ஏப்ரலுடன் நிறைவடைய உள்ளது .அதனால்  தேர்ச்சி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

நாளை வெளியாகிறது 10-ம் வகுப்பு ரிசல்ட்…

 நாளை 10-ம் வகுப்பு தேர்வுமுடிவு வெளியிடப்படவுள்ளது . நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது . நாளை காலை 9.30 மணிக்கு முடிவுகள் வெளியாகும் என்று  அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். மதிப்பெண் சான்றிதழை பள்ளிகளில் மே 2ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் எனவும் , தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வேண்டுவோர் மே 6ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மே 2 முதல் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….. பீதியில் பொதுமக்கள்….!!

பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர், இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வரும் பயணிகளின் உடைமைகள் மற்றும் அவர்களை போலீசார் தீவிர சோதனை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகிறார்கள். பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

12 மணி நேரத்தில் வலுப்பெறும் “ஃபனி புயல்”….. தமிழகம், புதுச்சேரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை…!!

வங்கக் கடலில் உருவான ஃபனி புயல், சென்னையை நெருங்க வாய்ப்பு குறைவு என்றும், கடலோர பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது புயலாக மாறி கடலோர பகுதிகளை தாக்க அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். ஆனால் தற்போது இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“8 மாநிலங்களில் வெடிகுண்டு தாக்குதல்” பொய் தகவல் அளித்த மர்ம ஆசாமி கைது…!!

தமிழகம் பல முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் பெங்களூரு போலீசாருக்கு பொய் தகவல் அளித்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஓசூரில் இருந்து நேற்று பகலில் மர்ம நபர் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்புகொண்டு ஒரு திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அதில் தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, மராட்டியம், தெலுங்கானா, கோவா உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களில், குண்டு வெடிக்கும் என்றும், ராமநாதபுரத்தில் இதற்காக 19 பயங்கரவாதிகள் நுழைந்திருக்கிறார்கள் என்றும், குறிப்பாக தென்னக ரெயில்களில் குண்டு வெடிக்க அதிக வாய்ப்பு  உள்ளதாகவும் தகவலை சொல்லிவிட்டு அந்த […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் அதிகாரிகள் கூண்டோடு மற்றம்… சென்னை நீதிமன்றம் அதிரடி…!!

அனுமதி இல்லாமல் வாக்கு எண்ணும் மையத்திற்குள்  நுழைந்த பெண் அதிகாரி விவகாரத்தில் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் வாக்குப் பதிவு என்னும் மையத்திற்குள் பெண் அதிகாரி நுழைந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. மேலும் இதற்க்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜன் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர் சு. வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வாக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதில் , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாக செயல்படுவோம்”- எம்எல்ஏக்கள் பேட்டி…

  கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. பிரபு நிருபர்களிடம் கூறுகையில், ”நாங்கள் அரசு கொறடாவின் உத்தரவை எதிர்த்து எப்போதும் வாக்களிக்க வில்லை.சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தான்  வாக்களித்துள்ளோம். அ.ம.மு.க என்பது அ.தி.மு.க.வின் அங்கம் தானே தவிர இது தனிக்கட்சி கிடையாது. எதற்காக அரசு கொறடா எங்களை தகுதி நீக்கம் செய்வதற்கு மனு அளித்துள்ளார் என்பது தெரியவில்லை”என கூறினார் . மேலும் நாங்கள் வேறு எந்தக் கட்சியிலும் சேர்ந்து விடவில்லை. நடைபெறுகின்ற இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள் வானிலை

தமிழகம் , ஆந்திரா_விற்கு எச்சரிக்கை….. “மிக கனமழை_க்கு வாய்ப்பு” வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வங்க கடலில் உருவாகியுள்ள உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிஅடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் ,  வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்பு வலுப்பெற்று  புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலுக்கு ஃபனி என பெயரிடப்படும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும் வருகின்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

4 MLA_க்கள் தகுதி நீக்கமா..? சபாநாயகருடன் கொறடா ஆலோசனை…!!

சபாநாயகர் தனபாலை அதிமுக_வின் கொறடா ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் சிவி சண்முகம் திடீரென சந்தித்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சபாநாயகர் தனபாலை அதிமுக_வின் சட்டமன்ற  கொறடா ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் சிவி சண்முகம் திடீரென சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதில் அதிமுக கட்சியின் சட்டமன்ற கொறடா பங்கேற்றுள்ளதால் அதிமுக M.L.A_க்கள்  தொடர்பாக ஏதாவது பரிந்துரையாக இருக்கலாம் என தகவல் தெரியவந்துள்ளது. இதில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அதிமுக MLA_க்கள்  மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என்றும் பேசப்படுகின்றது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரம்….. “உருவாகிறது புயல்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்க கடலில் உருவாகியுள்ள உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிஅடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் ,  வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்பு வலுப்பெற்று  புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலுக்கு ஃபனி என பெயரிடப்படும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும் வருகின்ற […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள்

”பச்சிளம் குழந்தை விற்பணை” விசாரணைக்கு உத்தரவிட்டது தமிழக அரசு…!!!

ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பான ஆடியோ வெளியானதை  அடுத்து முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகிள்ளது. குழந்தையின் கலர் மற்றும் அழகை பார்த்து விலையை தீர்மானிப்பதாகவும்,  ஆண் குழந்தை  என்றால் 4 லட்சம் ரூபாய்க்கும், பெண் குழந்தை என்றால் 3 லட்சம் ரூபாய்க்கும் இந்த நர்ஸ் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த குழந்தை இல்லாத ஒருவரிடம் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

30_ம் தேதி கரையை கடக்கும் ”ஃபனி” புயல்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!

இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பரவலாக கோடை மழையும்  பெய்து வருகிறது. இதை தொடர்ந்து இந்திய பெருங்கடல்-வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், தற்போது புயல் உருவாகியுள்ளது என சென்னை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. ‘இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“4 சட்டமன்ற இடைத்தேர்தல்” அதிமுக வேட்பாளர் அறிவிப்பு …..!!

நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படபோது அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் தவிர்த்து ஏனைய 18 சட்டமன்ற தொகுதிக்கான  இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த 18_ஆம் தேதி தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து சூலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மரணமடைந்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் நீதிமன்ற வழக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“4 சட்டமன்ற இடைத்தேர்தல்” அமமுக வேட்பாளர் அறிவிப்பு …..!!

நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் யார் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படபோது அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் தவிர்த்து ஏனைய 18 சட்டமன்ற தொகுதிக்கான  இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த 18_ஆம் தேதி தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து சூலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மரணமடைந்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. […]

Categories
அரசியல் தர்மபுரி மாநில செய்திகள்

“தமிழகத்தில் மீண்டும் தேர்தல்” மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை …..!!

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8 வாக்குச்சாவடி என  10 வாக்குச்சாவடிக்கு மறுவாக்குபதிவு நடத்த தேர்தலை ஆணையத்தை தமிழக தேர்தல் அதிகாரி வழியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 18_ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் சில இடங்களில் முறைகேடாக கள்ள ஓட்டு போட்டதாக புகார் எழுந்ததையடுத்து தமிழக தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இந்த அறிக்கையில் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று தமிழக தேர்தல் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளரான எஸ்.முத்தையா திடீர் மரணம்….!!

சென்னை மாநகரத்தின் அரசியல், கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்கள்  எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா இன்று காலமானார். சென்னையில் பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான எஸ்.முத்தையா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 89. சிவகங்கை மாவட்டத்தில், பள்ளத்தூர் என்ற நகரில் 1930ஆம் ஆண்டு முத்தையாபிறந்தார். இவர், கட்டிடப்பொறியியல் மற்றும் அரசியல் அறிவியல் படித்துள்ளார். இவர் 1951-ம் ஆண்டு டைம்ஸ் ஆப் சிலோன் பத்திரிகையில் இணைந்து 17 ஆண்டுகள் பணியாற்றினார். தொடர்ந்து ஞாயிறு இதழின் தலைமை ஆசிரியராக […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

24_ஆம் தேதி தமிழகம் முழுவதும் விசிக போராட்டம்….. திருமாவளவன் அறிவிப்பு…!!

பொன்பரப்பி கிராமத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் விசிக கட்சி சார்பில் 24_ஆம் தேதி ஆர்ப்பாட்டம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் போட்டியிடும் சின்னமான பானையை ஒரு சிலர் உடைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் தாக்கப்பட்டார். இதனையடுத்து மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பொன்பரப்பி கிராம குடியிருப்பில் புகுந்த மற்றொரு தரப்பினர் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட வீடுகளை […]

Categories
மாநில செய்திகள்

காவல் துறையை துறையை தவறாக பயன்படுத்தும் மாநில அரசு…!!!

பா .ஜனதா காவல்துறையை தவறாக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.   பெங்களூரில் உள்ள அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் பண மதிப்பிழப்பிறகு பின் 2 ஆண்டுகளில் 50 லட்சம் மக்கள்  வேலையை இழந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஆளும் கட்சியான பா.ஜனதாவிற்கு வேலைவாய்ப்பின்மை பற்றிய விவகாரம் ஒரு சவாலாக உள்ளது. இந்நிலையில் தற்போது கோவாவில் நடந்த பா.ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் அப்பகுதியின் பா.ஜனதா அமைச்சர் ரானேவிடம்  வேலைவாய்ப்பின்மை தொடர்பாக கூட்டத்திலிருந்த தர்சன் கோன்கார் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தர்சன் கூறுகையில் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு….!!

பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. கடந்த 2019 மார்ச் மாதம் நடத்தப்பட்ட +2 பொதுத் தேர்வினை பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதினர். இவற்றின் முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவ , மாணவிகள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in http:/www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in http:/www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, http:/www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.  மேலும் மாணவர்கள் பயின்ற பள்ளிக்கூடங்கள் […]

Categories

Tech |