Categories
சிவகங்கை மாநில செய்திகள்

“5_வது கட்ட அகழாய்வு பணி நிறுத்தி வைப்பு” அனுமதி வழங்காத தமிழ் வளர்ச்சி துறை….!!

தமிழ் வளர்ச்சி துறையின் அனுமதி இல்லாத காரணத்தால் கீழடியில் 5வது கட்ட அகழாய்வு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ளது கீழடியில் பண்டைய காலத்து தமிழர்களின்  நாகரீகம் இருந்ததற்கான ஆதாரங்களை  கண்டறிய கடந்த  2015_ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றது.பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை , ஓடுகள், ஆயுதங்கள், கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் அதிகமான […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள்

அதிமுக பிரச்சினை வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளது… கனிமொழி பேட்டி …!!

அதிமுகவில் உள்ள பிரச்சினைகள் வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளது என்று தூத்துக்குடி MP கனிமொழி கூறியுள்ளார். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டுமென்று அதிமுகவின் MLA தங்களது கருத்துக்களை கூறி வருவது அதிமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுக தலைமை கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேச வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறுகையில் , அதிமுகவில் உள்ள பிரச்சினைகள் வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளன என்றார். தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

24 மணிநேரமும் கடைகள் இயங்கும் அரசாணை “அனைவருக்கும் பொருந்தாது” சிறிய வணிகர்கள் கவலை..!!

24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம் என்ற அரசாணை அனைத்து  கடைகளுக்கும் பொருந்தததால் சிறிய வணிகர்கள் கவலையடைந்துள்ளனர். தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வதற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக அரசு வெளியிட்ட  அரசாணையில் தமிழகத்தில் உள்ள  கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கான உத்தரவு பிரபைக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பால் இனி  எல்லா கடைகளும் இரவு நேரங்களிலும் திறந்திருக்கும் என்று பொது மக்கள் நம்பிய நிலையில் இந்த அரசனை  எல்லா கடைகளைளுக்கும் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

“எய்ம்ஸ் அமைக்கும் பணியில் தொய்வு இல்லை” அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..!!

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியில் எவ்வித சுணக்கமும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசின் ஒப்புதலுடன் ரூ.1,264 கோடி ஒதுக்கியதை _ யடுத்து மதுரை தோப்பூரில் அதற்க்கான பணி நடைபெற்று வருகிறது. எவ்வித சுணக்கமுமின்றி தொடரும்  பணியையும் , எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தையும் ஆய்வு செய்வதற்காக வருகின்ற 10_ஆம் தேதி முதல் 15_ஆம் தேதி வரை டெல்லி மற்றும் ஜப்பானில் இருந்து 8 பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவினர் வர இருக்கின்றது. மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மாநில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீதிமன்றம் ,சி.பி.ஐ., ஆர்.பி.ஐ., தேர்தல் கமிஷன்,  ஆகியன பிரதமர் மோடியின் விரல்கள் …. சீமான் குற்றம் சாட்டு …

நீதிமன்றம் ,சி.பி.ஐ., ஆர்.பி.ஐ., தேர்தல் கமிஷன்,  ஆகியன பிரதமர் மோடியின் விரல்கள் போல செயல்படுவதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.  திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் , நீட் தேர்வை நீக்கவேண்டும்  என்றார். அத்துடன், திமுக தமிழகத்தில் ஆட்சியை களைக்க முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் . உலகில் வளர்ந்த நாடுகள் கூட வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்துகிறது . ஆனால் ஊழல் மிகுந்த இந்தியாவும், நைஜீரியாவும் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதாக குறைகூறியதுடன் வாக்குச்சீட்டு முறையை பின்பற்றவேண்டும் என்றும் கூறினார் .

Categories
மாநில செய்திகள்

“அச்சத்தை ஏற்படுத்தும் நிபா” முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

தமிழகத்தில் நிபா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் தாக்குதலுக்கு  17 பேர் பலியாகினர். அவர்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த செவிலியர் ஒருவரும் உயிரிழந்தார். தற்போது நிபா வைரஸ்  மீண்டும் கொச்சியில் பரவி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  திருச்சி விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் நிபா வைரஸ் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

“தமிழகம் , புதுவைக்கு நீட் இரத்து” முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள்…!!

தமிழகம் மற்றும் புதுவையில் நீட் தேர்வை இரத்து செய்யவேண்டுமென்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மருத்துவ சேர்க்ககைக்கு நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு சட்டமா இயற்றியது. இதற்க்கு தமிழகம் முழுவதும் மாணவரிடையே எதிர்ப்பு எழுந்து போராட்டம் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. நீட் நடைபெற்ற மூன்று ஆண்டுகளுமே மதிப்பெண் குறைவு என்பதால் மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியது. தேர்வு முடிவு […]

Categories
மாநில செய்திகள்

“24 மணிநேரமும் கடைகளை திறக்கலாம்” தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வதற்கு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையில்,  தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், தொழில் நிறுவனங்கள், ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் தியேட்டர்கள் ஆகியவை வருடத்தின் 365 நாட்களும் திறந்திருக்கலாம். அதே நேரத்தில் பணியாளர் ஒருவரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலையில் ஈடுபடுத்த வேண்டும். பெண் பணியாளர்கள் இரவு 8 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள்  பங்கேற்ற  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி நல்ல வெற்றியை பெற்றது. 22 சட்டசபை இடைதேர்தலில் திமுக 13 இடங்களிலும் , அதிமுக 09 இடங்களிலும் வென்றது. அதே போல மக்களவையில் ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக கூட்டணியும் , 37 இடங்களில் திமுக கூட்டணி அசுர வெற்றி பெற்றது. சட்டமன்ற தேர்தல் வெற்றியால் அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதி கருணாநிதி….. காங்கிரஸ் புகழாரம்….!!

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதி கருணாநிதி என்று இந்திய தேசிய காங்கிரஸ் புகழ்துள்ளது. ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான  கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை பல்வேறு மாநில முதல்வர்களும் , அரசியல் கட்சியினரும் நினைவு கூர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கருணாநிதியின் 96_ஆவது பிறந்த நாள்” முக.ஸ்டாலின் மரியாதை …!!

திமுக தலைவர் கருணாநிதியின் 96_ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதையை செலுத்தினர். ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான  கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்பட்டுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். அதே போல சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் சிலைக்கு மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக M.L.A , M.P மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது …..!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. ஜூன் 3_ஆம் தேதி திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் வைத்து திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திமுக_வின் மாவட்டச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

 “அழகிய தீர்வு” இந்தி கட்டாயமல்ல – வரவேற்ற ஏ.ஆர். ரஹ்மான்..!!

இந்தி கட்டாயமல்ல என்ற திருத்தப்பட்ட புதிய வரைவு கொள்கைக்கு “அழகிய தீர்வு” என்று ஏ ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசின் புதியவரைவு கல்வி கொள்கையின் படி மும்மொழி கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியை பயிற்று விக்க வேண்டும். அதேபோல இந்தி மொழி பேசும் பிற மாநிலங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர ஏதேனும் மொழியை கூடுதலாக கற்பிக்கப்படும் என பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“8 வழிச்சாலை திட்டம்” மத்திய அரசின் மேல் முறையீட்டு மனு இன்று விசாரணை….!!

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகின்றது. மத்திய அரசு கொண்டு வந்த பாரத்மாலா என்ற திட்டத்தின் கீழ் சென்னை முதல் சேலம் வரை 276 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி செலவிவு செய்து 8 வழி சாலை அமைக்கும் திட்டம் முடிவு செய்யப்பட்டது.  இந்த திட்டத்தை செயல்படுத்த சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு….!!

50 நாட்களாக இருந்த கோடை விடுமுறைக்கு பின் தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.  கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் மற்றும் உஷ்ணத்தால் பொதுமக்கள் வெளியே நடமாட இயலாத நிலை உருவாகியுள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டி மக்களை வாட்டி வதக்கி எடுக்கிறது. ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் வெளியிலின் தாக்கத்தால் பள்ளிகளின் திறப்பு நாள் தள்ளி போகும். அதே போல […]

Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரி மீனவர்கள் 20 பேர் ஆழ்கடலில் தத்தளிப்பு..!!

கன்னியாகுமரியை சேர்ந்த 20  மீனவர்கள் ஆழ்கடலில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . கன்னியாகுமரி சின்னத்துறை என்ற கிராமத்தை  சேர்ந்த 20  மீனவர்கள் கடந்த 18-ம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கு கடலுக்குள் சென்றுள்ளனர். மீனவர்கள் லட்சத்தீவு அருகேயுள்ள  தித்திரா தீவுப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது 2 படகுகள் திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து படகு நடுக்கடலில் பழுதானதால் உணவு மற்றும் குடிநீரின்றி மீனவர்கள் தத்தளித்து வருகின்றனர். மீனவர்கள் 20 பேர்  உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆழ்கடலில் சிக்கி தத்தளித்து […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் மகிழ்ச்சி “பழைய பஸ் பாஸ்ஸில் பயணிக்கலாம்” போக்குவரத்து துறை அறிவிப்பு…!!

நாளை பள்ளி திறக்க்கவுள்ள நிலையில் அனைத்து மாணவர்களும் பழைய பஸ் பாஸ் பயன்படுத்தி செல்லலாம் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் வெளியிலின் தாக்கத்தால் பள்ளிகளின் திறப்பு நாள் தள்ளி போகும். அதே போல இந்தமுறையும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறை நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி திறக்கும் தேதியை மாற்ற வாய்ப்பு இல்லை , திட்டமிட்டபடி ஜூன் 3 […]

Categories
மாநில செய்திகள்

நாளை நீதி மன்றங்கள் திறப்பு ..!!

கோடை விடுமுறை முடிந்து நாளை புள்ளிகளுடன் சேர்த்து நீதிமன்றங்களும் திறக்கப்பட உள்ளன . கோடை காலத்தை முன்னிட்டு மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் படுவது போல் நீதிமன்றங்களுக்கும் மே மாதம் விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டிருக்கும். இந்நிலையில் கோடை காலம் முடிவடைந்த நிலையில் நாளை சென்னை உயர் நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களும் திறக்கப்பட உள்ளன. கோடைகாலங்களில் அவசர வழக்குகளை விசாரிக்க அவ்வப்போது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சிறப்பு அமர்வு என்பது அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு அமர்வில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“முடி மற்றும் ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு “பள்ளி கல்வித்துறை அதிரடி..!!

நாளை நான் முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பள்ளிக்கல்வித் துறை மாணவர்களுக்கு பல்வேறு விதமான விதிமுறைகளை விதித்து உள்ளது. கோடை விடுமுறை முடிந்து நாளை முதல் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் தொடங்க உள்ள நிலையில், பள்ளியின் முதல் நாளே பஸ் பாஸ், புத்தகம் உள்ளிட்டவைகளை மாணவர்களுக்கு உடனடியாக வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, மாணவிகள் இறுக்கமான மேலாடைகள் மற்றும்  லெக்கின்ஸ் போன்றவற்றை அணிந்து பள்ளிக்கு […]

Categories
மாநில செய்திகள்

“டிப்-டாப்பா ட்ரெஸ் பண்ணுங்க “கிரிஜா வைத்தியநாதன் அறிவுரை ..!!

தலைமைச் செயலகத்தில் வேலைபுரியும்  அரசு ஊழியர்கள் உடை உடுத்துவதில்  புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆணையிட்டுளார். தலைமை செயலகத்தின்   நல்மதிப்பை பராமரிக்கும் வகையில் அங்கே பணிபுரியும்    அரசு ஊழியர்கள், ஒழுக்கமான உடைகளை அணிய வேண்டும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தியுள்ளார். பெண் ஊழியர்கள் சேலை, சல்வார்  சுடிதார் போன்ற உடைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்  என்றும்  சேலையைத் தவிர மற்ற ஆடைகளை அணியும் போது துப்பட்டாவையும் சேர்த்து அணிய வேண்டும் என […]

Categories
மாநில செய்திகள்

ஆபத்தான PUBG …!! ” விளையாண்ட சிறுவன் மாரடைப்பால் மரணம் “

மத்திய பிரதேச மாநிலத்தில் நீண்ட நேரம் pubg விளையாடியதால் மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நீமூச் பகுதியில் பர்கான் குரேஷி  என்ற 12 ஆம் வகுப்பு மாணவன் இரவு முழுவதும் pubg விளையாடியுள்ளார். விளையாடி விட்டு வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே தூங்கி ,மீண்டும் எழுந்து சாப்பிட்டு விட்டு விளையாட ஆரம்பித்து விட்டார் . தொடர்ந்து ஆறு மணி நேரத்திற்கும் மேலாக pubg கேம்மை விளையாடியுள்ளார். இதனால் சோர்வடைந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு 2 இடம்” அமைச்சர் பேட்டி ..!!

மத்திய அமைச்சரவையில் அதிமுகவை சேர்ந்த 2 பேர் இடம்பெற்ற வாய்ப்புள்ளதாக அமைச்சர் பாண்டியராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் பாஜக இடம்பெற்று தேனி மக்களவை […]

Categories
மாநில செய்திகள்

 மத்திய அரசு பொதுத்துறையில் “தமிழருக்கே வேலை” சட்டம் இயற்ற வைகோ வேண்டுகோள்..!!

 மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் 100% பணிவாய்ப்பு கிடைக்க சட்டம் இயற்ற வேண்டுமென்று வைகோ தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வேலையில்லா திண்டாட்டமும் சேர்ந்தே வாட்டி வதக்கி வருகின்றது.இதனால் படித்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் செய்வதறியாது தவிக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் வட மாநிலத்தவர்களை பணியில் அமர்த்துவது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“ஜூன் 3_இல் பள்ளிகள் திறக்கப்படும்” அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…..!!

தமிழகத்தில் ஜூன் 3_ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமென்பதில் எந்த மாற்றமுமில்லை என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.  கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் மற்றும் உஷ்ணத்தால் பொதுமக்கள் வெளியே நடமாட இயலாத நிலை உருவாகியுள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டி மக்களை வாட்டி வதக்கி எடுக்கிறது. ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் வெளியிலின் தாக்கத்தால் பள்ளிகளின் திறப்பு நாள் தள்ளி போகும். அதே போல இந்தமுறையும் வெயிலின் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு நீட் தேர்வு…… அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி….!!

சித்தா மற்றம் ஆயுர்வேத படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் படைப்பு கலை சிகிச்சை மையம், காற்றழுத்த குழாய் வழி அதி நவீன ஆய்வக சேவையை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார். இது மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளை பாதுகாப்பான முறையில் பராமரிப்பதற்கு ஏற்ப நவீன வசதிகளுடன் கூடிய சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மத்திய அமைச்சரவையில் அதிமுக” உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும்… பாஜக இல.கணேசன் கருத்து…!!

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது  நேரத்தில் பரிசீலிக்கப்படுமென்று   பாஜக_வின் இல.கணேசன்  தெரிவித்துள்ளார். மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் பாஜக இடம்பெற்று தேனி மக்களவை தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜூன் 3_இல் திமுக M.L.A மற்றும் M.P_க்கள் கூட்டம்….!!

ஜூன் 3_ஆம் தேதி திமுக M.L.A , M.P மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுமென்று திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் 22  சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 38 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட இக்கூட்டணி 37 இடங்களிளிலும் , 22 சட்டமன்ற தொகுதிகளில் 13 இடங்களையும் கைப்பற்றியது. இதில் வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற வேட்பாளர்கள் மூன்று தினங்களுக்கு முன்பு கட்சியின் தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சரவையில் இடமில்லை “சென்னைக்கு திரும்பாத OPS” டெல்லியில் இருக்கிறார்…!! 

தனது மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் டெல்லியில் இருந்து OPS மற்றும் அவரது மகன் சென்னை கிளம்பாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார்.  அவருடன் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டு அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். மோடியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி தான் முடிவு செய்வார் “மத்திய அமைச்சரவையில் அதிமுக” குறித்து தமிழிசை பதில்…!!

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது குறித்து பாஜக தலைமை மற்றும் பிரதமர் மோடி முடிவு செய்வார்கள் என்று தமிழிசை தெரிவித்துள்ளார். மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது. இந்நிலையில் தமிழக பாஜக_வின் மாநில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக_வில் சலசலப்பு “மகனுக்கு பதவி” OPS மீது கடுப்பில் EPS அணி…..!!

தனது செல்வாக்கை பயன்படுத்தி OPS தனது மகனுக்கு பதவி வாங்கியுள்ளார் என்று அதிமுக_விற்க்குள் முணுமுணுப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகவில் ஏற்கனவே நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் வைத்தியலிங்கம் அதிமுக_வின் நிர்வாகியாக இருக்கிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சார்பில் தேனி மக்களவை தொகுதியில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே ஒரு வேட்பாளர் ரவீந்திரநாத் குமார்.மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடைந்தது.அமைய இருக்கும் மத்திய அமைச்சரவை பொருத்தவரை பாரதிய ஜனதா கட்சி தனது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“மத்திய அமைச்சராகும் OPS மகன்” பிரதமர் அலுவலகம் அழைப்பு…!!

தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350_க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உரிமை பெற்று இருக்கிறது. இன்று மாலை 7 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். […]

Categories
மாநில செய்திகள்

“வேலை தரக்கோரி இளம்பெண் தற்கொலை மிரட்டல்” ஹரியானாவில் பரபரப்பு ..!!

ஹரியானா மாநிலத்தில் வேலை தராததால் இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது . ஹரியானா மாநிலம் குறுகிராமில்  உள்ள பகுதியில் இளம் பெண் ஒருவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சரியான காரணமின்றி அவரை பணியிலிருந்து தனியார் கம்பெனி நிர்வாகம் நீக்கியது. இதனால் மனமுடைந்த அவர் செய்வதறியாது கம்பெனியின் மொட்டை மாடிக்குச் சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த கம்பெனியின் காவலாளி நிர்வாகத்திடம் மற்றும் காவல்துறையினரிடமும் தெரிவித்தார். இதனை அடுத்து காவல்துறையும்,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வரலாற்று சாதனை படைத்த பாஜக ..!!

அருணாச்சல பிரேதேசத்தில் வரலாற்றில்  முதன்முறையாக ஆட்சியைப் பிடித்து பாரதிய ஜனதா கட்சி சாதனை படைத்துள்ளது . நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது தற்போது அனைவராலும் பேசப்பட்டு வரும் நிலையில், மற்றொரு வரலாற்று சாதனையை அருணாச்சல பிரதேசத்தில் பாஜக நிகழ்த்தியுள்ளது. இந்தியாவின் இளம் முதலமைச்சர் என்று அனைவராலும் புகழப்பட்டவர்  பெமா காண்டூ . இவர் தற்போது பாஜக கட்சியில் இணைந்துள்ளார். இதனை அடுத்து சமீபத்தில் அருணாச்சல பிரதேசத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் […]

Categories
மாநில செய்திகள்

“பெங்களூர் விமான நிலையத்தில் தீ விபத்து “பயணிகள் அதிர்ச்சி ..!!

மின்கசிவினால் பெங்களூர் விமானநிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள உணவு விடுதி ஒன்றில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் உணவுவிடுதி பலத்த சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விமானநிலைய காவல் துறையினர் தீ விபத்து குறித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MLA_வாக பதவியேற்ற 9 பேர் “தப்பியது அதிமுக அரசு” பெரும்பான்மை கிடைத்தது..!!

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக_வின் 9 வேட்பாளர்கள் MLA_வாக பதவி ஏற்றுக்கொண்டனர். தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில்  , அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக_வின் இந்த வெற்றியால் அரசுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளது. இந்நிலையில் இன்று சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். தமிழக சட்ட பேரவையில் சபாநாயகர் தனபால் முன்னிலையில் வெற்றிபெற்ற அதிமுகவின் 9 வேட்பாளர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். […]

Categories
மாநில செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை “நீதிமன்றம் அதிரடி ..!!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகள் இன்றளவிலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் காணப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைக்கு நிகராக அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனையில் இருந்தால் அனைத்து அரசு ஊழியர்களும் அங்கேயே சிகிச்சை பெற்று இருப்பார்கள். ஆகவே அரசு மருத்துவமனைகளின் தரம் உயரும் வரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பதவியிலிருந்து விலக வேண்டாம்” முக ஸ்டாலின் வேண்டுகோள்..!!

ராகுல் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. ஆனால் காங்கிரஸ் 52 இடங்கள் மட்டுமே வென்று மோசமான தோல்வியடைந்தது. இதனால் காங்கிரஸ்  தலைவர் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகுவதாக அறிவித்தார். இதற்க்கு காங்கிரஸ் செயற்குழு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த்தும்  ராகுல் காந்தி பதவி விலக கூடாது என்று கூறினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ராகுல் பதவி விலகக்கூடாது” ரஜினி கூறியது மகிழ்ச்சி- கே.எஸ். அழகிரி..!!

ராகுல் காந்தி பதவி விலகக்கூடாது என்று ரஜினி கூறியது மகிழ்ச்சியளிப்பதாக  கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக  வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது. ஆனால் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதனால் காங்கிரஸ்  தலைவர் தலைவர் ராகுல் காந்தியும் பதவி விலகுவதாக அறிவித்தார்.  இந்நிலையில் இது குறித்து போயஸ் கார்டனில் உள்ள  இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய  ரஜினி காந்த், காங்கிரஸ் பழமையான கட்சி. அந்த கட்சியில் மூத்த தலைவர்கள் உள்ளனர். அவர்களை கையாள்வது இளையவரான ராகுல் காந்திக்கு கடினம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தேர்தலில் கணிசமான வாக்குகள்” கமலுக்கு ரஜினி வாழ்த்து..!!

தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற கமல் ஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும் வென்றது. இடைத்தேர்தலிலும் திமுக 13 இடங்களும், அதிமுக 09 இடங்களும் கைப்பற்றியது. இந்த தேர்தலில் பிரபல நடிகர் கமல்ஹாசனால் புதிதாக தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி களம் கண்டது. இந்த கட்சி ஒரு தொகுதியிலும் கூட வெற்றி பெற முடியவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் அமமுக மற்றும் நாம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மகனுடன் சேர்ந்து 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தாய்..!!

மகனுடன் சேர்ந்து தாயும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த சம்பவம் அனைவரின் மனதையும் நெகிழவைத்துள்ளது . ஒடிசாவை சேர்ந்தவர் பசந்தி . இவர் தனது பத்தாம் வகுப்பு படிப்பை படித்து கொண்டிருக்கும் பொழுதே திருமணம் ஆகிய காரணத்தினால் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டார். திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்த பின்பும் படிப்பை கைவிட்ட வருத்தம் அவர் மனதிற்குள் இருந்துகொண்டே இருந்தது. ஆகையால் அவரது மகன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அவருடன் சேர்ந்து மகன் சொல்லிக்கொடுக்க தாயும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பதவி விலகாமல் நின்று நிரூபிக்க வேண்டும்” ராகுல் குறித்து ரஜினி கருத்து..!!

ராகுல் பதவி விலகாமல் நின்று நிரூபித்து காட்ட  வேண்டும் என்று  ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் வெறும் 52 இடங்களை மட்டுமே  கைப்பற்றியது. இந்த படு தோல்வியால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பதவி விலகி வருகின்றனர். அதே போல காங்கிரஸ்  தலைவர் தலைவர் ராகுல் காந்தியும் பதவி விலகுவதாக முன் வந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மோடியின் தலைமைக்கு கிடைத்தது” வெற்றி குறித்து ரஜினி கருத்து..!!

மோடி என்கிற தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி என்று பாஜக வெற்றி குறித்து ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.   நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்று வருகின்ற 30_ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கின்றது. மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக தனது பதவியை தொடர்கிறார். வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அரசியல் பரபரப்பு” சசிகலாவுடன் ஆலோசனை நடத்தும் டிடிவி…!!

டிடிவி தினகரன்  பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதிகளிலும்  வென்றது. இடைத்தேர்தலிலும் திமுக 13 இடங்களும், அதிமுக 09 இடங்களும் பிடித்தது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக  போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும்  படு தோல்வி அடைந்தது. பெரும்பாலான இடங்களில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சியை விடவும்  குறைவான வாக்குகளையே பெற்றது. அமமுகவின் இந்த தோல்வியால் மாநிலம் முழுவதும் உள்ள அமமுக தொண்டர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் “Wait And See” ஸ்டாலின் பேட்டி…!!

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதிலளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்ட மன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில்    திமுக கூட்டணி 13 தொகுதிகல் வெற்றி பெற்றது. அதிமுக 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களின் பதவி ஏற்பு   திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.  சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற  தி.மு.க வேட்பாளர்கள் 13 பேரும் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றனர். இதனால் தமிழக சட்ட மன்றத்தில் 88 ஆக இருந்த […]

Categories
மருத்துவம் மாநில செய்திகள்

“குழந்தைகளின் இறப்பு விகிதம் தமிழகத்தில் தான் மிக குறைவு “அமைச்சர் பேட்டி ..!!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .இதுகுறித்து அவர் கூறியதாவது, இன்றைய காலகட்டத்தில் பல்வேறுவிதமான நோய்களால் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது .குறிப்பாக  வயிற்றுப்போக்கு காரணமாக 13 சதவீதம் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்படுவதாக தெரிவித்தார். மேலும் இதனை தடுக்கும் விதமாக இன்று முதல் கிராமப் பகுதிகளிலும், நகரப் பகுதிகளிலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக MLA_க்கள் பதவி ஏற்பு” சட்டசபையில் 101ஆக உயர்வு…!!

இடைதேர்தலில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க எம்.எல்.ஏக்கள் 13 பேர் ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்றனர்  மக்களவை தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் முக ஸ்டாலின் தலைமையிலான  திமுக கூட்டணி 13 தொகுதிகல் வெற்றி பெற்றது. அதிமுக 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற திமுக  எம்.எல்.ஏக்கள் 28ம் தேதி பதவி ஏற்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில்  சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற  தி.மு.க எம்.எல்.ஏக்கள் 13 […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியுள்ளது……!!

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.   கர்நாடகா மாநிலம் தமிழகத்துக்கு ஆண்டுதோறும், காவிரியில் இருந்து 177.25 டி.எம்.சி., அளவு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்ணீர் பங்கீட்டு அளவை  உறுதிப்படுத்துவதற்கு மற்றும்  தண்ணீரின் அளவு சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காகவும்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு இரு மாநில பிரதிநிதிகளுடன்  ஆலோசனை கூட்டம் நடைபெறும். இந்நிலையில்  மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே டெல்லியில் மசூத் ஹூசைன் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கியது. இதில்  தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கர்நாடக […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

காவிரி ஆணையத்தில் தமிழகம் கோரிக்கை….!! 

டெல்லியில் நடைபெறும் காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு காவிரி நீர் தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளது.  கர்நாடகா மாநிலம் தமிழகத்துக்கு ஆண்டுதோறும், காவிரியில் இருந்து 177.25 டி.எம்.சி., அளவு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்ணீர் பங்கீட்டு அளவை  உறுதிப்படுத்துவதற்கு மற்றும்  தண்ணீரின் அளவு சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காகவும்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு இரு மாநில பிரதிநிதிகளுடன்  ஆலோசனை கூட்டம் நடைபெறும். இந்நிலையில்  மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே டெல்லியில் மசூத் ஹூசைன் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கியது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ரஜினி, கமலுக்கு அழைப்பு” பாஜக ஊடுருவ முயற்சி – வைகோ குற்றசாட்டு…!!

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு  ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுத்தது, தமிழகத்தில் பா.ஜ.க. ஊடுருவ முயற்சி என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.  மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து  வரும் மே -30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் மீண்டும் பிரதமர் மோடி பதவியேற்கிறார். இவ்விழாவில் உலக தலைவர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதே போல நடிகர் ரஜினிகாந்த் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“பள்ளி திறப்பில் மாற்றமில்லை” அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…..!!

கோடை விடுமுறை முடிந்து பள்ளியை திறப்பதில் மாற்றமில்லை என்றும் ஜூன் 3_ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமென்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.  கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் மற்றும் உஷ்ணத்தால் பொதுமக்கள் வெளியே நடமாட இயலாத நிலை உருவாகியுள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டி மக்களை வாட்டி வதக்கி எடுக்கிறது. கோடை விடுமுறையில் வெளியிலின் தாக்கத்தால் பள்ளிகளின் திறப்பு நாள் […]

Categories

Tech |