Categories
அரசியல் மாநில செய்திகள்

அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் ஏன் பங்கேற்கவில்லை….ஸ்டாலின் கேள்வி..!!

10% இடஒதுக்கீடு தொடர்பாக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஏன் பங்கேற்கவில்லை? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  10% இடஒதுக்கீடு குறித்து அனைத்து கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு வந்த கட்சிகள் எதன் அடிப்படையில் அழைக்கப்பட்டன என்றும்,வருகை தந்த அனைத்து கட்சிகளும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தான? என்றும்  திமுகவை சேர்ந்த துரைமுருகன் சட்ட பேரவைக் கூட்டத்தில்  கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதன் அடிப்படையில் அழைப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காங் MLA 10 பேர் தகுதி நீக்கம்…சித்தராமையா பேட்டி..!!

ராஜினாமா செய்த 10 காங்கிரஸ் MLAக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை மனு  அளிக்க உள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சியை சேர்ந்த அதிருப்பதி MLAக்கள் 14 பேர் திடீரென ராஜினாமா செய்தததையடுத்து,மும்பை பிரபல நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கான முழு ஏற்பாடுகளையும் பாஜக கட்சி மேற்கொண்டதாக ஆளுங்கட்சி குற்றம் சாட்டியது.இதையடுத்து ஆட்சியை காப்பற்ற பெங்களூருவில்  காங்கிரஸ் MLAக்களுக்கான ஆலோசனை கூட்டம் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது இந்நிலையில் ஆலோசனை கூட்டம் முடிந்த பின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

7 பேர் விடுதலை “இனி ஆளுநர் தான் முடிவெடுக்கனும்” முதல்வர் பல்டி …!!

7 பேர் விடுதலை தொடர்பாக இனி ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் சட்டம் நீதி நிர்வாகம் சிறைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சன் 7 பேர் விடுதலை தமிழக அரசு தீர்மானம் போட்டு ஆளுநருக்கு அனுப்பியுள்ள நிலையில் என்ன முடிவு எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதற்க்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் , எங்கள் அதிகாரத்துக்குட்பட்ட அமைச்சரவையை கூட்டி தீர்மானனம் நிறைவேற்றி ஆளுநருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கர்நாடக MLA க்களின் ராஜினாமா ரத்து…சபாநாயகர் அறிவிப்பு..!!

கர்நாடக மாநிலத்தில் 14 MLAக்களின் ராஜினாமாவை ரத்து செய்துள்ளதாக சட்ட சபை சபாநாயகர் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேர், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 14 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, தனி விமானத்தின் மூலம்  மும்பை கொண்டு  செல்லப்பட்டு அங்குள்ள பிரபலமான   நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.   இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும்  பாரதீய ஜனதா கட்சி செய்ததாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சி  தலைவர்கள் குற்றம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MP ஆகிறார் வைகோ…ஏற்கப்பட்டது வைகோவின் மனு..!!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு பின் வேட்புமனு பரிசீலினையில் வைகோவின் மனு ஏர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்காக  நடைபெறும் தேர்தலுக்க்கான  வேட்புமனு தாக்கல் நேற்றுடன்  நிறைவடைந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் மற்றும்  அரசியல் கட்சிகளை சேர்ந்த 8 பேர்  என மொத்தம் 11 பேர் வேட்புமனுக்களை  தாக்கல் செய்துள்ளனர்.இந்நிலையில் வைகோ உட்பட 11 பேரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியான  சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வைகோ மனு ஏற்கப்படுமா? தொடங்கியது பரிசீலினை…எதிர்பார்ப்பில் திமுக,மதிமுக..!!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வைகோ உள்ளிட்ட 11 பேரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலினை தொடங்கியது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்காக  நடைபெறும் தேர்தலுக்க்கான  வேட்புமனு தாக்கல் நேற்றுடன்  நிறைவடைந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் மற்றும்  அரசியல் கட்சிகளை சேர்ந்த 8 பேர்  என மொத்தம் 11 பேர் வேட்புமனுக்களை  தாக்கல் செய்துள்ளனர்.இந்நிலையில் வைகோ உட்பட 11 பேரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியான  சட்டப் பேரவை செயலாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏற்கப்படுமா? “வைகோவின் வேட்பு மனு”இன்று பரிசீலனை..!!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க   வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற இருக்கிறது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்காக  நடைபெறும் தேர்தலுக்க்கான  வேட்புமனு தாக்கல் நேற்றுடன்  நிறைவடைந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் மற்றும்  அரசியல் கட்சிகளை சேர்ந்த 7 பேர்  என மொத்தம் 10 பேர் வேட்புமனுக்களை  தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள்  சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் முன்மொழியாத காரணத்தினால்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS மகனின் வெற்றியை எதிர்த்து மனு …….!!

தேனி மக்களவைத் தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார் இந்நிலையில் ரவிந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தேனியை சேர்ந்த மிலானி  என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தேனி தொகுதியில் அதிகார துஷ்பிரயோகம் செய்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அனைத்து கட்சி கூட்டம்” 21 கட்சிகளுக்கு அழைப்பு…!!

10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. ஆனால் தமிழகம்  இந்த சட்ட மசோதாவை எதிர்த்து வந்தது. இதையடுத்து மத்திய அரசு தமிழகத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 25 சதவீத இடம் அளிக்கப்படும் என்று உறுதியும் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ண முடியாது “விஷால் மனு நிராகரிப்பு”நீதிமன்றம் அதிரடி..!!

நடிகர் சங்க தேர்தல் வாக்குகளை எண்ண அனுமதி வழங்க கோரி விஷால் அளித்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நடிகர் சங்க தேர்தலை தடை செய்யக்கோரி தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து நடிகர் விஷால்  தேர்தலை நடத்த அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் நடிகர் சங்க தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என்றும், ஆனால்   வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதியில்லை என்றும் உத்தரவிட்டனர்.  இதையடுத்து ஜூன் 23ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அனைத்து கட்சி கூட்டத்தில் ம.நீ.ம சார்பில் கமல் பங்கேற்கிறார்…!!

முதலவர் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மையத்தின் சார்பில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை  மத்திய அரசு நிறைவேற்றியது. தமிழகத்தில் இன்னும் அமுல்படுத்தப்படாமல் இருக்கும் இந்த இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு முதலவர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் , தலைமை செயலகத்தில் இன்று மாலை  ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கர்நாடக அரசை காப்பாற்ற அனைத்து அமைச்சர்களும் பதவி விலகல்..!!

கர்நாகவில் காங்கிரஸ் கட்சி அமைச்சர்களை தொடர்ந்து மதசார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில்   காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமைச்சர் பதவியில்  இருந்து நீக்கப்பட்ட ,  காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின்  அதிருப்தி எம்எல்.ஏக்கள் 12 பேர்  நேற்று திடீரென  பதவியை ராஜினாமா செய்தனர்.இதனால் ஆட்சி கவிழக்கூடிய அபாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக  குமாரசாமி அரசிற்கு  நெருக்கடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“10 சதவீத இட ஒதுக்கீடு” முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகின்றது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. ஆனால் தமிழகம்  இந்த சட்ட மசோதாவை எதிர்த்து வந்தது. இதையடுத்து மத்திய அரசு தமிழகத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 25 சதவீத இடம் அளிக்கப்படும் என்று உறுதியும் அளித்துள்ளது. ஆனாலும் தமிழகத்தில் 10 % […]

Categories
மாநில செய்திகள்

நாங்கள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளோம்…அமைச்சர் மனம் நெகிழ பேட்டி..!!

அமைச்சர் ஜெயகுமாரும், நானும் உடல் உறுப்பு தானம் செய்துள்ளோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உடல் உறுப்பு தான விழிப்புணர்வு வார விழாவானது, சென்னை,  அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது, அமைச்சர் ஜெயக்குமார் மற்றும்  விஜயபாஸ்கர் விழாவை   தொடங்கி வைத்து ,உடல் உறுப்பை தானம் செய்த 5 பேர்  குடும்பத்திற்கு   பாராட்டு மற்றும் நினைவுப் பரிசுகளை  வழங்கினார்கள்.மேலும்  உடல் உறுப்பு தானத்தை மையப்படுத்தி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து  நிகழ்ச்சியில் பேசிய சுகாதார துறை அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

11 எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர் பதவி…குமாரசாமி அரசு அதிரடி…!!

கர்நாடகா மாநிலத்தில்  ராஜினாமா செய்த  11 எம்எல்ஏக்களுக்கும்  அமைச்சர் பதவி அளிக்க  ஆளும் கூட்டணி அரசு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்காக 11 எம்.எல்.ஏ.க்கள் பேர் திடீரென்று ராஜினாமா செய்தனர். இதன் தொடர்ச்சியாக ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியும்   தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக காங்கிரசுக்கு முதல்வர் பதவி அளிக்கப்படலாம்  என்ற கருத்தும் பரவி வருகிறது. இதையடுத்து மேலும் 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குமாரசாமிக்கு வந்த சோதனை…கர்நாடகாவில் மேலும் 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா..!!

கர்நாடகாவில் 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியான தகவல் அரசு மத்தியில் உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில்   காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமைச்சர் பதவியில்  இருந்து நீக்கப்பட்டதன் காரணமாக  அதிருப்தியடைந்த  காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின்  12 எம்எல்ஏக்கள் நேற்று திடீரென  பதவியை ராஜினாமா செய்தனர்.இதனால் ஆட்சி கவிழக்கூடிய அபாயம் எழுந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் 5 […]

Categories
மாநில செய்திகள்

பூனை மேல் அவ்வளவு பாசமா..??காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த குஜராத் தம்பதி..!!

திருப்பதியில் தரிசனம் செய்ய வந்த குஜராத் தம்பதியினர் வளர்ப்பு பூனையை  கண்டுபிடிக்கக் கோரி ரேணிகுண்டா ரயில்வே காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர் ஜேஸ்பாய் இவரது மனைவி மினாபீ இவர்களுக்கு  திருமணமாகி 17 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாத காரணத்தால் பூனை ஒன்றை செல்லமாக வளர்த்து வந்த நிலையில்  திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக  பூனையுடன் வந்துள்ளனர். இதையடுத்து தரிசனத்திற்கு பின் சொந்த ஊர் செல்வதற்காக  ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ரயிலுக்காக  காத்திருந்தவர்களின் பூனை தொலைந்தது. இதனால் பதற்றமடைந்தவர்கள் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில்  […]

Categories
மாநில செய்திகள்

ரயில் முன் பாய்ந்த முதியவர்…அதிரடியாக காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரருக்கு குவியும் பாராட்டு..!!

மும்பையில் ரயில் முன் பாய்ந்த வயதான முதியவரை பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றிய வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மும்பை ரயில்வே  நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருந்த வயதான  முதியவர் ஒருவர், திடீரென்று  தண்டவாளத்தில் இறங்கி நடந்து  சென்றார். ரயில் தண்டவாளத்தை முதியவர் கடந்து செல்கிறார்  என  பயணிகள் நினைத்து கொண்டிருந்த சமயத்தில்,  எதிர்புரம்  மின்சார ரயில் வருவதை கண்ட முதியவர், சட்டென்று  தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் முதியவரை காப்பற்றுமாறு  கூச்சலிட்ட நிலையில்,ரயில்வே […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்கள் மகிழ்ச்சி ”செருப்பு கிடையாது இனி ஷூ” அமைச்சர் அதிரடி ….!!

6_ஆம் வகுப்பு முதல் 12_ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் ஷூ வழங்கப்படுமென்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் , பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். மேலும் பேசிய அவர் , தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியில் படிக்கும் 6_ஆம் வகுப்பு முதல் 12_ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்….EPS ,OPS கூட்டாக அறிக்கை வெளியீடு…!!

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பாக  போட்டியிடும் வேட்பாளர் பெயர்களை அதிமுக தலைமை  அறிவித்துள்ளது. தமிழகத்தில்   வருகின்ற  18 ஆம்  தேதியன்று  மாநிலங்களவைத் தேர்தலானது  நடைபெற இருக்கிறது. எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை பொறுத்து  அதிமுக கூட்டணிக்கு    3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்க உள்ளது. இந்நிலையில், அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பளார்களின்  பெயர்களை  அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளதன்படி, அதிமுக சார்பில்  முகமது  ஜான் மற்றும்  சந்திரசேகரன்   ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில்  பா.ம.க கட்சிக்கு ஒரு சீட்டு  ஒதுக்கப்பட்டுள்ளதாக    அதிமுகவின்  ஒருங்கிணைப்பாளர் O.பன்னீர்செல்வம் மற்றும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

2,00,00,000 ரூபாய் செலவில் 70,00,000மாணவர்களுக்கு TAB…கல்வித்துறை அதிரடி..!!

 2000 கோடி ரூபாய் மதிப்பில் 70 லட்சம் மாணவர்களுக்கு  TAB வழங்க நடவடிக்கைகளை  மேற்கொள்வதாக கல்வி துறையமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம்  ஆர்க்காடு  வீராசாமி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கல்விதுறையமைச்சர்   செங்கோட்டையன் மாணவிகளுக்கு இலவச லேப்டாப்களை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மூச்சு நின்றால் மட்டும்  மரணம்  அல்ல , முயற்சி நின்றாலும்   மரணம் தான்   என்ற அறிவுரையுடன் தொடங்கி மாணவர்கள் மத்தியில் பேசினார். அதன் பின்  செய்தியாகளை சந்தித்து  பேசிய அமைச்சர்  செங்கோட்டையன், புதிய பாடத்திட்டத்தை நன்கு புரிந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10% இடஒதுக்கீடு குறித்து விவாதம்…அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் முதலமைச்சர் அழைப்பு..!!

பொருளாதார அடிப்படியில் பின்தங்கிய  பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து  ஜூலை 8 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. பொருளாதார அடிப்படியில் பின்தங்கிய  பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு  போன்றவற்றில்  10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியநிலையில், 10%  இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து  விவாதிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி,  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இது  குறித்து விவாதிக்க  வருகின்ற ஜூலை 8 ஆம் தேதியன்று  அனைத்துக் கட்சி கூட்டம்  தலைமை செயலக […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு ….!!

மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் முடிவு ஜூன் 5_ஆம் தேதி வெளியாகிய நிலையில் தமிழக அரசு மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பங்களை ஜூன் 7_ஆம் தேதி முதல் 20_ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது.மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப கடந்த மாதம் 22_ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்திருந்தது. இந்நிலையில் இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். […]

Categories
மாநில செய்திகள்

மகாராஷ்டிராவில் வினோதம்…நண்டுகளை கைது செய்யக்கோரி போராட்டம்..!!

மகாராஷ்டராவில் நண்டுகளை சிறையில் அடைக்க  கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக  பெய்து வருகிறது. கன மழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள   சிப்லுன் தாலுகாவில் திவாரே என்னும் அணை உடைந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள்  புகுந்த  தண்ணீர்  12 வீடுகளை வெள்ளத்தில் அடித்து சென்றது. இந்த பேரிடரில் சிக்கி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.   இச்சம்பவம் குறித்து  மகாராஷ்டிரா மாநிலத்தின்  நீர்வளத்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு…!!

சென்னையில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். நீட் தேர்வு முடிவானது   ஜூன் 5 ஆம் தேதி வெளியான நிலையில், மருத்துவ படிப்புகளில் பயில விரும்புவோர்  விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்  என தமிழக அரசு அறிவித்தன்படி, கடந்த 7 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை  பதிவு செய்யுமாறு  அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.   மாணவர்கள் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களுடன் சேர்த்து,  தங்களது  சான்றிதழ் நகலை இணைத்து அனுப்ப ஜூன்  22 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

“தலையில் இடி விழுந்தது போல் இருந்தது” வைகோ ஆவேசம் …!!

தீர்ப்பை பார்த்ததும் எனக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது என்று என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மேலும் ஒரு ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

“MP கனவு கம்பி எண்ண வச்சுருச்சே” வைகோ குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட்

எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே என்று வைகோ வழக்கின் தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார். கடந்த 2009 தி.மு.க ஆட்சி காலத்தில்  நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய மதிமுக வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் , விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும்  பேசியதாக தேச துரோக வழக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்  விசாரித்து வந்த நிலையில் வைகோ […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் விதிகளை மீறுகிறீர்களா??…அமைச்சரிடம் ஸ்டாலின் கேள்வி..!

வேலூரில் தேர்தல் நடத்தை   விதிமுறைகள்      அமலுக்கு     வந்தநிலையில்  புதிய  அறிவிப்புகளை வெளியிடுவது விதிமீறல் ஆகாத? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று புதிய அறிவிப்புகளை  மின்துறை அமைச்சர் தங்கமணி வெளியிட்ட போது , வேலூர் மாவட்டத்திற்கும்  சேர்த்து அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில்  இறுதி நேரத்தில் பேசிய திமுக  தலைவர் ஸ்டாலின், வேலூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தநிலையில், புதிய அறிவிப்புகளை வெளியிடுவது தேர்தல் விதிமீறல் ஆகாதா என்று கேள்வி எழுப்பினார். ஸ்டாலின் கேள்விக்கு  […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை….ஒரு வாரத்தில் இயக்க அமைச்சர் உறுதி..!!

கள்ளக்குறிச்சியில்   சர்க்கரை  ஆலையை  ஒரு வாரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் சம்பத் சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார். இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி, கள்ளக்குறிச்சியில் உள்ள கூட்டுறவு  சர்க்கரை ஆலைகள் இயங்காமல் மூடிக் கிடப்பததால் , கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுகின்றனர். எனவே ,  ஒரு சர்க்கரை ஆலையையாவது இயங்க அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்து  அமைச்சர் சம்பத் பேசுகையில் , கரும்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

பாலின் விலை உயர்வு…பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!!

சட்ட பேரவை கூட்டம் முடிவதற்கு முன் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜூன் 28ல் சட்டப்பேரவை தொடங்கி மானியாக்   கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.இதை தொடர்ந்து  இன்று நடைபெற்ற நீர்வளம்,பால்வளம்,  கால்நடை துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் திமுக சார்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பால் கொள்முதல் விலையை உயர்த்தினால், நுகர்வோருக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாடாளுமன்றத்தில் குரல் ஒலிக்குமா…? வைகோ அதிரடி பதில் …!!

நாடாளுமன்றத்தில் என்குரல் ஒலிக்காது என்றவர்களுக்கு எதுவும் நான் கூற விரும்பவில்லை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது. வைகோ மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடும் சூழலில் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள்” வைகோ பேட்டி …!!

இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள் மற்றும் வாழ்க்கையில் முக்கியமான நாள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் தண்டனையாக ஓராண்டு சிறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வைகோ சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு” சிறப்பு நீதிமன்றம் உத்தரவு …!!

தேச துரோக வழக்கில் வைகோ_வுக்கு ஓராண்டு சிறை தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்ததுசிறப்பு நீதிமன்றம். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரிக்கும்  சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. காலை 10.30 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் போது  மதிமுக வழக்கறிஞர்கள்  மல்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சிறை செல்லும் வைகோ” குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு ….!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திமுக ஆட்சி காலத்தில் வைகோ இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல் துறையினர் 2009_ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு MP மற்றும் MLA_க்கள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் அவர் மீது குற்றம் நிரூபணமாக்கப்பட்டு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை வெளியிட்ட நீதிபதி சாந்தி , உங்களுக்கான தண்டனையை அறிவிக்கப்பிக்கின்றேன் இன்று அறிவிக்கவா அல்லது திங்கள்கிழமை அறிவிக்கவா என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக … இந்தியளவில் ட்ரெண்டிங்… அதிர்ச்சியில் கழகத்தினர்..!!

திமுகவின் உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு  வழங்கப்பட்டுள்ளதை சமூக வலைதளவாசிகள்  கலாய்த்து வருவதால் திமுகவினர் வேதனை அடைந்துள்ளனர். ரெட்ஜெயண்ட் மூவி என்ற பெயரின் திரைப்பட தயாரிப்பாளராக இருந்து வந்து , நடிகராக தோன்றி, முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்தவர்  திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். சினிமா துறையில் தனது கவனத்தை செலுத்தி வந்த இவர் திமுகவின் அரசியல் கூட்டங்களில் பங்கேற்க ஆரம்பித்தார். திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் , போராட்டம் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உதயநிதிக்கு பொறுப்பு தாமதமாக வழங்கப்பட்டுள்ளது” சாமிநாதன் கருத்து …!!

 திமுக-வுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள  உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு தாமதமாக வழங்கப்பட்டுள்ளது என்று சாமிநாதன் தெரிவித்துள்ளார். திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்து வந்த சாமிநாதன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அதிகார பூர்வமாக வெளியிட்டார்.  மேலும் இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பு வகித்த சாமிநாதனுக்கு  திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணிச் […]

Categories
மாநில செய்திகள்

“நீட் தேர்வு வழக்கு “அரசியல் கட்சிகளுக்கு நீதிமன்றம் அறிவுரை..!!

நீட் தேர்வு தொடர்பாக வெற்று வாக்குறுதிகளை அளிக்கவேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு  உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக மாணவர்கள் அகில இந்திய போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான அனைத்து பயிற்சி வகுப்புகளையும் நடத்த வேண்டும் , மாணவ மாணவிகளின் தற்கொலைகளை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.2017 ஆம் ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதையடுத்து தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இளைஞரணியை மிகத்திறம்பட உதயநிதி வழிநடத்துவார்” வைகோ வாழ்த்து

திமுக இளைஞரணியை மிகத்திறம்பட உதயநிதி ஸ்டாலின் வழிநடத்தி செல்வார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்தியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.   இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார். தமிழகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஸ்டாலினை போன்று உதயநிதியும் செயல்படுவார்” கே.எஸ்.அழகிரி வாழ்த்து …!!

திமுக தலைவர் ஸ்டாலினை போன்று உதயநிதியும் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்தியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமமுக_வின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு …..!!

அமமுக சார்பில் புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொது செயலாளர் TTV தினகரன் அறிவித்துள்ளார். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்வியைடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பலர் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்கதமிழ் செல்வன் திமுக_வின் இணைந்ததை தொடர்ந்து இசக்கி சுப்பையா அதிமுக_வில் இணைவதாக அறிவித்தார். மேலும் TTV ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். தொடர்ந்து நிர்வாகிகள் மாற்றுக் கட்சியை […]

Categories
மாநில செய்திகள்

“அளவாக குடித்தால் பிரச்சனை இல்லை” பேரவையில் தங்கமணி பேச்சு….!!

மதுபானம் அருந்துபவர்கள் அளவாக குடித்தால் எந்த பிரச்சினையும் இல்லை என்று பேரவையில் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. துறைசார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இன்று பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சி MLA பிரின்ஸ் கூறுகையில் ,  மதுபானங்களின் தரம் குறைவாக உள்ளதால் உயிரிழப்பு ஏற்படுவதாக குற்றம்சாட்டினார்.இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி , மதுபானம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவின் இளைஞரணி சாமிநாதனுக்கு புதிய பொறுப்பு ….!!

திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்து வந்த  வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்தவர் வெள்ளக்கோவில் சாமிநாதன்.திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கு பிறகு திமுக இளைஞரணி மாநில செயலாளராக இருந்து வந்த அவர் தற்போது அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு  திமுக_வின் புதிய இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார்.இந்நிலையில் இளைஞரணி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் உறுப்பினராக […]

Categories
மாநில செய்திகள்

“டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு” தமிழக அரசு அதிரடி …!!

தமிழக டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 2000  ஊதிய உயர்வு வழங்கப்படுமென்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற சட்டப்பேரவை  கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள டாஸ்மர்க் ஊழியர்கள் , விற்பனையாளர்கள் , உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை சார்பில் அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ள அறிவிப்பில் ,  டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத தொகுப்பு ஊதியமாக 2000 உயர்த்தி வழங்கப்படும். இதனால்    […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“காழ்ப்புணர்ச்சி காரணமாகவே குடும்ப அரசியல்” RS பாரதி கருத்து ..!!

காழ்ப்புணர்ச்சி காரணமாகவே குடும்ப அரசியல் என விமர்சிக்கப்படுகிறது என்று  திமுக_வின் RS பாரதி தெரிவித்தார். திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அதிகார பூர்வமாக வெளியிட்டார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் உருவாக்கிய இளைஞர் அணியை இனிமேல் உதயநிதி ஸ்டாலின் வழிநடத்துவார். திமுக தலைவர் இளைஞர் அணி  செயலாளராக இருந்து திமுகவின் பொருளாளர் , செயல் தலைவரை என்று உயர்ந்து தற்போது தலைவராக இருந்து வருகின்றார். முக.ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி “தமிழகம் முழுவதும் கொண்டாடும் தளபதி தொண்டர்கள்..!!

இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது.   இந்நிலையில் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதிக்கு பொறுப்பு “இளைஞர்களை ஈர்ப்பதற்கான அறிவிப்பு” துரைமுருகன் கருத்து…!!

உதயநிதி ஸ்டாலினை  திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டது  வரவேற்கத்தக்கது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக_வின் இளைஞரணி செயலாளராக உதயநிதி…. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு …!!

திமுக_வின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் உருவாக்கிய  இளைஞரணி திமுக_வில் உள்ள முக்கியமான அணியாக பார்க்கப்படுகின்றது.திமுகவில் 200க்கும் மேற்பட்ட அணிகள் இருக்கின்றன அதில் முக்கியமான அணியாக இளைஞரணி திகழ்கின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழகத்தில் பூரண மதுவிலக்கு” பேரவையில் அமைச்சர் தங்கமணி..!!

தமிழகத்தில் 6,132 ஆக இருந்த மதுபான கடைகளின் எண்ணிக்கை 5,152 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சட்ட பேரவையில்  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதன் காரணமாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல் சட்ட சபை ஒத்திவைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து  ஜூலை 28ம் தேதி மீண்டும் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வேலூருக்கு 5_ஆம் தேதி தேர்தல்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு …!!

நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல்  ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்ற சூழலில் வேலூர் மக்களவை தொகுதி_க்கான தேர்தல் பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தலை இரத்து செய்தது.இந்திய வரலாற்றிலேயே பணப்பட்டுவாடா_வால் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என்றால் அது வேலூர் தொகுதி என்ற கடுமையான மோசமான வரலாறு பதிவாகி இருந்த நிலையில் தற்போது  மறு தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிர்வாகிகளை வைத்துதான் கட்சி இருக்கிறதா..? TTV தினகரன் கேள்வி …!!

நிர்வாகிகளை வைத்து தான் கட்சி இருக்கின்றதா என்று TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்வியைடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பலர் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.குறிப்பாக அக்கட்சியின் முன்னணி நிர்வாகியாக இருந்த தங்கதமிழ் செல்வன் திமுக_வின் இணைந்தார். அவரை தொடர்ந்து இசக்கி சுப்பையா அதிமுக_வில் இணைவதாக அறிவித்தார். மேலும் TTV ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும்  முதல்வரை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில்  செய்தியாளர்களை சந்தித்த TTV […]

Categories

Tech |