Categories
மாநில செய்திகள்

கலெக்டர் அம்மா…! உங்கள் முடிவே எங்க சந்தோசம்….! மாணவர்கள் அனுப்பிய மெசேஜ்…. இணையத்தில் வைரல்….!!!

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்கள் ஆகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று பெய்த மழையால் பள்ளி மாணவர்கள் இன்ஸ்டாகிராமில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுக்கு அனுப்பிய மெசேஜ் ஐ இணையத்தில் பகிர்ந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கவிதா ராமு. இவர் ஆட்சி நிர்வாக பணியுடன் சமூக ஊடகங்களிலும் […]

Categories
மாநில செய்திகள்

2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்பேராய விருதுகள் அறிவிப்பு..!!

2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்பேராய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வடபழனியில் 2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்பேராய விருதுகளை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தரான பாரிவேந்தர் எம்.பி அறிவித்துள்ளார். தொல்காப்பியர் தமிழ் சங்க விருது – புதுவை தமிழ்ச் சங்கத்தலைவர் முனைவர் வி.முத்து பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது – கவிதை மரபும் தொல்காப்பியமும் – பேராசிரியர் ராம குருநாதன். சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது – மணல் வீடு – மு.அரிகிருஷ்ணன். புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது – […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக மக்கள் மோடிக்கு தான் ஓட்டு போடுவாங்க”…. பா.ஜ.க தலைவர் அதிரடி ஸ்பீச்…..!!!!

ஆஸ்பென் இன்ஸ்டிடியூட் நிறுவனம் நடத்தக்கூடிய சர்வதேச தலைவர் பெல்லோஷிப் என்ற பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செப்டம்பர் 30-ல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்கு சென்றார். இந்த மாதம் 8ஆம் தேதி பயிற்சியை முடித்த அவர் கலிபோர்னியா வாஷிங்டன் மாநிலத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். சான்பிரான்சிஸ்கோவில் வெளிநாடு வாழ் பாஜக நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் இந்த மாதம் 9ஆம் தேதி அண்ணாமலை பேசினார். அப்போது 8 வருடங்களில் மோடி […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர்…. வெள்ள எச்சரிக்கை….!!!

காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அக்டோபர் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் அதன் எதிரொலியாக சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்  வடகிழக்குப் பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால், 2ஆவது முறையாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு….? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் சமீப காலமாக மின் பயன்பாடு அளவீடில் குளறுபடி, அதிகமான மின்கட்டணம் செலுத்து நிர்பந்திக்கப்படுவது போன்றவை மக்களிடையே பெரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் “இந்த பொருட்களை” கொடுத்தால்….. கடும் நடவடிக்கை…. அதிரடி உத்தரவு….,!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களிலும் மக்கள் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் விதமாக அந்தந்த பண்டிகைகுரிய பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும். இந்நிலையில் மழையில் நனைந்த பொருட்களை மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்று கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அடடே அதிசயமா இருக்கே! வீட்டில் மகாராணி போல்!.. சிட்டு என்றவுடன் ஓடோடி வரும் அணில்…. எங்கே இருக்கு தெரியுமா?…!!!!

நெல்லை வேப்பங்குளம் பகுதியில் வசித்து வரும் தாவித்ராஜா கட்டிட ஒப்பந்ததாரரான இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்தமகள் பியூலா சென்னையிலுள்ள தனியார் பல்கலையில் இளங்கலை உளவியல் 2ஆம் ஆண்டு படித்துவருகிறார். 2வது மகள் 12ம் வகுப்பு பயின்று வருகிறார். சென்ற 2020ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வீட்டின் அருகேயுள்ள மரத்தில் இருந்து அணில் குஞ்சு ஒன்று, தாவித்ராஜா வீட்டிற்குள் விழுந்துள்ளது. இதை பார்த்த மூத்தமகள் பியூலா அணிலை பாதுகாத்து பராமரிக்க துவங்கியுள்ளார். இதையடுத்து வீட்டில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்?… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…. எதிர்பார்ப்பில் பயணிகள்…..!!!!

தீபாவளி சிறப்பு ரயில்கள் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் எனும் எதிர்பார்ப்பானது பயணிகள் இடையே அதிகரித்துள்ளது. வருகிற 24ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்தஊர் செல்வோருக்காக தமிழ்நாடு அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனினும் சிறப்பு ரயில் தொடர்பான விரிவான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிடவில்லை. கூட்டம் அதிகமிருக்கும் வழித் தடங்களில் ஓரிரு ரயில்கள் மட்டும் அறிவிக்கப்பட்டு வருகிறது. பண்டிகைக்கு முந்தைய மற்றும் பிந்தைய சிறப்பு ரயில்கள் பற்றிய அறிவிப்பு வெளிவரவில்லை. தினமும் இயங்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆபரேஷன் மின்னல்…. 24 மணி நேரத்தில் எப்படி வந்தார்கள்…? இபிஎஸ் சரமாரி கேள்வி…!!!!

தமிழ்நாடு முழுவதும் இதுவரை “ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” நடவடிக்கையின் கீழ் கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கிக் கணக்குகளில் உள்ள சுமார் ₹50 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 460 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு, 1,006 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் கஞ்சா கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் இந்த குற்றத்தின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துகளும் முடக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார். இந்நிலையில் ஆபரேஷன் […]

Categories
மாநில செய்திகள்

1,021 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது….? MRB வெளியிட்ட தகவல்…!!!!

1,021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) வெளியிட்டுள்ளது. இது குறித்து மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிடுள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் 1021 உதவி மருத்துவர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை எம்.ஆர்.பி நேற்று வெளியிட்டது. இதில் அனைத்து சமூக பிரிவுகளிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 74 இடங்கள், எஸ்டி பிரிவினருக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மாற்றுத்திறனாளிகளுக்கு 500, மற்றவர்களுக்கு ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

“மதுபான கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறுதல்” உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சென்னை உயர் நீதிமன்றம் மதுபானக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் நவம்பர் 15-ஆம் தேதி முதல் செயல்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. வன பாதுகாப்பு மற்றும் வன  விலங்குகளின் நலனை கருத்தில் கொண்டு மலை வாசஸ்தலங்களில் மதுபான பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு அந்த மது பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அந்த 10 ரூபாயை திரும்ப கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

இப்படி செய்ய நினைத்தால்?…. தமிழர் நிலத்தில் மீண்டும் ஒரு மொழிப்போர்!….. சீமான் கடும் எச்சரிக்கை….!!!!!

ஒன்றிய உயர்க ல்வி நிலையங்களிலும், ஒன்றிய அரசின் பள்ளிகளிலும் இந்தியை கட்டாய பயிற்று மொழியாக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை கட்டாய மொழியாக்கி, தேர்வுகள் இந்தியில் தான் நடத்தப்பட வேண்டும் என்றும் அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்து இருக்கிறது. இதனால் இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் தற்போது சீமானும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவற்றில் பல்வேறு தேசிய இனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

கொஞ்சம் கூட பயமில்லை!… தடையை மீறி பிளாஸ்டிக் பைகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

தீபாவளி பண்டிகையையொட்டி கோவை மாநகரிலுள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. அதன்படி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த சமயத்தில் சில பேர் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனைசெய்து வருகின்றனர். இந்நிலையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகள் விற்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து டவுன்ஹால், ஒப்பணைக்காரர் வீதி, தாமஸ் வீதி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தனபால் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 500 […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு: அப்படியே வந்த வழியே ரிட்டர்ன் போங்க…. திருமாவளவன் எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுதும் நேற்று மாலை நடந்த சமூக நல்லிணக்க மனிதசங்கிலி அறப்போரில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்யும் பிரிவினைவாதிகளை இங்கு ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் என மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னெடுப்பால் தமிழகம் முழுதும் நேற்று இந்த பேரணி நடந்தது. இவற்றில் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட 26 கட்சிகள் மற்றும் 44 அமைப்புகள் சார்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இபிஎஸ் எடுக்க போகும் அந்த தவறான முடிவு….. அமைதி காக்கும் ஓபிஎஸ்…. சட்டமன்ற கூட்டத் தொடரில் காத்திருக்கும் சம்பவம்….!!!!

அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமியும் துணை எதிர்கட்சி தலைவராக ஓ. பன்னீர்செல்வமும் இருந்து வந்தனர். ஆனால் தற்போது அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்ததால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக பிரிந்து கடுமையாக மோதிக் கொள்கின்றனர். இந்நிலையில் அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்த பிறகு முதன்முதலாக சட்டமன்ற கூட்டத்தொடர் கூட இருக்கிறது. இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 17-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கைகள் யாருக்கு ஒதுக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

“பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு” சட்டசபை நோக்கி நடை பயணம்…. 17-ஆம் தேதி சம்பவம் செய்ய முடிவு…..!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகாதேவி மங்கலம், சிங்கிலி பாடி, அக்கமாபுரம், குணகரம் பாக்கம், எடையார்பாக்கம், ஏக்னாபுரம், மடப்புரம், மேல்பெடவூர், நெல்வாய், தண்டலம், வளத்தூர், பரந்தூர் ஆகிய 13 கிராமங்களை உள்ளடக்கி தமிழகத்தின் 2-வது பெரிய பசுமை விமான நிலையம் அமைய இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட நிலையில், விமான நிலையம் அமைப்பதற்கு சுமார் 4750 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதனால் மேலேறி, நாகப்பட்டு, தண்டலம், நெல்வாய் மற்றும் ஏகனாபுரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Seeman, Thirumavalavanனை கைது செய்யவேண்டும்..NTK, VCK வை தடை செய்ய வேண்டும்..Arjun Sampath ஆக்ரோஷம் ..!!

செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தை இந்த இரண்டு அமைப்புகளும், அந்த இரண்டு அமைப்புகள் உடைய தலைவர்களான திரு சீமான் மற்றும் சகோதரர் தொல் திருமாவளவன் ஆகியோர் இருவருமே தடை செய்யப்பட்ட, இந்திய அரசாங்கத்தால் தேச விரோத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட  PFI ஐ ஆதரித்தும், அதனுடைய கொள்கைகளை ஆதரித்தும் தொடர்ந்து இவர்கள் பேசி வருகிறார்கள். எனவே இந்த இரண்டு இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும். […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

உங்க கிட்ட PF கணக்கு இருக்கா…? இபிஎப் ஆல் கிடைக்கும் காப்பீடு திட்ட பலன் என்னென்ன…? இதோ முழு விவரம்..!!!!!

ஊதியம் பெறுபவர்களின் ஊதியத்தில் ஒரு பகுதி பிஎஃப் ஆக கழிக்கப்பட்டு வருகிறது சேவை துறையிடம் தொடர்புடையவர்களுக்கு ஓய்வுக்கு பின் பிஎப் கணக்கு மூலமாக ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பிஎஃப் பணத்தின் மூலமாக காப்பீடு வசதியும் கிடைக்கின்றது. இதை எப்படி பயன்படுத்திக் கொள்வது? இந்த காப்பீட்டு பணத்தை எடுக்க யாருக்கெல்லாம் தகுதி இருக்கிறது? போன்ற அனைத்தையும் பற்றி இங்கே காண்போம். இந்த வசதி இபிஎஃப்ஓ மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்வதற்கு நீங்கள் epfoவில் உறுப்பினராக இருக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(12.10.22) மின்தடை…. காலை 9.30 மணி வரை தான் டைம்…. எங்கெல்லாம் தெரியுமா…???

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தஞ்சாவூர் இன்று மின் நிறுத்தம் செய்வது தொடர்பாக மாநகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கம் பணி மற்றும் மின்கம்பம் நடும் பணி இன்று நடைபெற உள்ளது இதனால் இந்த சாலையில் அமைந்துள்ள மருத்துவமனையில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

பழைய நிறுவனத்தின் பிஎஃப் கணக்கை புது நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி…? முழு விவரம் இதோ….!!!!!!

epfoவின் விதியின்படி ஊழியர் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறினாலும் அவரது பழைய pfi கணக்கை அப்படியே தொடர்ந்து கொள்ள முடியும். அதனால் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தை மாற்றி இருந்தால் கண்டிப்பாக உங்களது பிஎஃப் இருப்பையும் மாற்றிக் கொள்ள வேண்டும். சில நேரம் சிலர் புதிய நிறுவனத்திற்கு மாறியவுடன் அவர்களது பழைய பிஎப் கணக்கில் உள்ள இருப்பை மறந்து விடுகின்றார்கள். நீங்கள் எத்தனை நிறுவனங்களுக்கு மாறி இருந்தாலும் சரி பழைய பி எஃப் கணக்கில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அக்டோபர் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் அதன் எதிரொலியாக சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், ஈரோடு,சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 26 […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. இனி இந்த ரயில்கள் தாமதமாக தான் இயங்கும்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

குறிப்பிட்ட பாதையில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சில ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மானாமதுரை-சூடியூர்,சங்கரன்கோவில் மற்றும் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் சில ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மதுரை மற்றும் விழுப்புரம் ரயில் 17 முதல் 22 வரையிலும், 26 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இந்த பதவியில் இவர்களுக்கு சலுகை…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றிய தொகுப்பு புதிய விரிவுரையாளர்களுக்கும் அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றிய கௌரவ விரிவுரையாளர்களுக்கும் பணி நியமனத்தில் சலுகை வழங்கப்படும் என்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில் 497 இடங்கள் முதல் கட்டமாகவும் 1030 இடங்கள் இரண்டாம் கட்டமாகவும் நிரப்பப்பட்டுள்ளது . 493 காலி இடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய விரிவுரையாளர்களுக்கும் பனி […]

Categories
மாநில செய்திகள்

பனைமரம் ஏற கருவி…. கண்டுபிடிப்பவருக்கு ஒரு லட்சம் பரிசு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஆபத்தில்லாமல் பனைமரம் ஏறுவதற்கு கருவியை கண்டுபிடித்தால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாள்தோறும் பனையேறும் தொழிலாளர்கள் காரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் மரம் ஏறி இறங்குகிறார்கள். இதுவரை மரம் ஏறுவதற்கு சரியான கருவி ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.இந்த போட்டியில் பல்கலை தனியார் நிறுவனம் முன்னோடி விவசாயி மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்கலாம். இந்த சிறந்த கருவியை கண்டுபிடிப்பவரை தேர்வு செய்ய அரசு தேர்வு குழுவற்றை அமைத்துள்ளது. மேலும் கருவியை கண்டுபிடிப்பதற்கு ஆகும் செலவினம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சிறப்பு பருவ பயிர்களுக்கு 481 கோடி ரூபாய் இழப்பீடு தொகையினை 4,43,000 விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இயற்கை பேரிடரால் அடிக்கடி பயிர்கள் பாதிக்கப்படும் நிலையை கருத்தில் கொண்டு நடப்பு நிதியாண்டில் 2057 கோடி நிதியை தமிழக அரசின் காப்பீட்டு கட்டண மானியமாக ஒதுக்கப்பட்டு தற்போது வரை 63,331 ஏக்கர் பரப்பளவு 85 ஆயிரத்து 597 விவசாயிகளால் பயிர் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. பட்டாசு வெடிக்க திடீர் கட்டுப்பாடுகள் எதற்கு தெரியுமா?…. காரணம் இதுதான்….!!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்று பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி குறைந்த ஒலியுடன் அதாவது சத்தம் குறைந்த அளவில் காற்று மாசு தடுக்கும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே எடுக்க வேண்டும். திறந்தவெளியில் ஒன்று கூடி ஒன்றாக பட்டாசுகளை வெடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச் […]

Categories
மாநில செய்திகள்

4000 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அரசு போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.அதே சமயம் காலி பணியிடங்களை நிரப்பவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக புதிதாக 4000 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். உதவி பேராசிரியர்கள் தேர்வில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 15 சதவீதம் வெயிட்டேஜ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்கள் யாரும் இங்க போகாதீங்க…. அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் அங்கு போர் பதற்றம் இலகுவதால் மாணவர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தலில், தற்போது இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இந்தியா்கள் உக்ரைனுக்கும், அந்நாட்டில் உள்ள நகரங்களுக்கு இடையிலும் அவசியமற்ற பயணங்கள் மேற்கொள்வதைத் தவிா்க்கவும். மேலும் முன்பு இந்த போர் காரணமாக தமிழக திரும்பிய மாணவர்கள் யாரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமான் மன்னிப்பு கேட்கணும்..! ஸ்டாலின் ராஜினாமா செய்யுங்க… திருமாவுக்கு பயம் இருக்கு ..!!

செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சீமான் இப்படி தொடர்ந்து தடை செய்யப்பட்ட PFI இயக்கத்தை ஆதரித்து பேசுகிறார், ஏற்கனவே யாசின் மாலிக்கை கூப்பிட்டு வந்து இங்கே நிகழ்ச்சி நடத்தி  இருக்கின்றார். அதனால் தான் நாம் தமிழரையும், சீமானையும் கைது செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறோம். ஏற்கனவே ராகுல் காந்தி ஆர் எஸ் எஸ் காந்தியை கொன்றது என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்.  நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்தோம், நீதிமன்றம் அவரை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : போராடும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவு..!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் போராடும் கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி  அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் எழுதி இருக்கக்கூடிய கடிதத்தில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் போராடும் கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்கள் மீண்டும் பணி கோரி வந்தால் சேர்க்கக்கூடாது. நீக்கம் செய்யப்படும் பணியிடங்களில் உடனடியாக யுஜிசி விதிகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு புதிய பேருந்துகள்…. இப்படிதான் பிரித்துக் கொடுக்கப்படும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்திற்கு வாங்கப்படும் பேருந்துகளுக்கான ஒப்பந்தப்புள்ளியை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என தமிழக அரசு கடந்து சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. தற்போது அதற்கான ஒப்பந்தப்புள்ளியை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதில் போக்குவரத்து கழகம் சார்பில் 1,771 பிஎஸ் -4 ரக பேருந்துகள்  வாங்கப்பட உள்ளது. அதன் பின்னர் அனைத்து பேருந்துகளும் போக்குவரத்து கழகம் மண்டலத்திற்கு பிரித்து வழங்கப்படும். அதில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402 பேருந்துகளும், விழுப்புரம் மண்டலத்திற்கு  347 […]

Categories
மாநில செய்திகள்

அச்சச்சோ!! …. “கிரெடிட் கார்டுக்கு கட்டணம் வசூலித்த தனியார் வங்கி…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தனது சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்க  தனியார் வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டை பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்குகளை கையாளும்  போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு உள்ளது. இந்நிலையில் அசோக்குமார் அந்த வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வந்துள்ளார்.  கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு  கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கியதற்கு செலுத்த வேண்டிய பணத்தை குறிப்பிட்ட […]

Categories
மாநில செய்திகள்

மழைக்கு முன்பு…. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு…. கூட்டுறவு சங்கம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல இணைய பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கத்தின் பதிவாளர் சண்முகம் சுந்தரம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் மழை மற்றும் புயல் காரணமாக பாதிப்பிற்கு உள்ளாக கூடிய தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகள் மற்றும் கிடங்குகளை உயர்வான பகுதிகளுக்கு உடனடியாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கூடுதல் ஒதுக்கீடு பெற்று தேவையான பொருட்களின் நகர்வு செய்து, பாதுகாப்பாக […]

Categories
மாநில செய்திகள்

“I AM WAITING” 2024….. ஒரு கோடி வாக்குகளை நோக்கி…. அசுர வளர்ச்சியில் நாம் தமிழர்…. சீமான் புதிய அதிரடி….!!!!

இந்தியாவில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த இரண்டு தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வியூகத்துடன் நகர்ந்து வருகின்றன. அதிலும் திமுக, அதிமுக கட்சிகள் கடுமையான போட்டிகளை சந்திக்க உள்ளது. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது அடுத்த சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டியும் நிலவலாம். நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதால் திமுக, அதிமுக செல்வாக்கு உள்ள இடங்களில் வாக்குகளை கணிசமாக […]

Categories
மாநில செய்திகள்

“பில்டிங் ஸ்ட்ராங் BUT பேஸ்மட்டம் கொஞ்சம் வீக்”…… திமுகவை கிண்டலடித்த செல்லூர் ராஜு….!!!!

திமுக தலைவராக 2 வது முறையாக முதல்வர் ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு பொதுக்குழுவில் பேசிய அவர், கட்சியின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் சிலர் ஒன்று பின் ஒன்றாக பிரச்சனைகளை உருவாக்கி தனக்கு தூக்கம் இல்லாத இரவுகளை தருவதாக வேதனையுடன் பேசியிருந்தார். ஸ்டாலின் இந்த பேச்சுக்கு வரவேற்பும் விமர்சனங்களும் கலவையாக வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மு.க.ஸ்டாலினை பார்க்கும்போது பாவமாக உள்ளது என முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!! …. இந்த விதிமுறைகளை பின்பற்றி தான் தீபாவளி கொண்டாட வேண்டும்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தீபாவளி கொண்டாடுவதற்கான விதிமுறைகளை அரசு கூறியுள்ளது ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை  விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.  இந்நிலையில்  பட்டாசு விபத்து இல்லாமலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமலும் பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என  அரசு கூறியுள்ளது. மேலும் இதற்கான விதிமுறைகளையும் கூறியுள்ளது. 1. குறைந்த ஒலி மற்றும் காற்று மாசுபடுத்தும் தன்மை இல்லாத  பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் வெடிக்க வேண்டும். 2. மேலும் திறந்தவெளியில் கூட்டமாக பட்டாசு […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி!…. தமிழக மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்….!!!!

உக்ரைன் தலைநகரான கீவ்-ல் ரஷ்ய ராணுவமானது தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் அவசியமற்ற பயணங்களை தவிர்க்கும்படி இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் அங்கு போக வேண்டாமென வெளிநாட்டுவாழ் தமிழர் நலத்துறையானது அறிவுறுத்தி இருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழகம் திரும்பிய மாணவர்கள் யாரும் அங்கு அதிகாரபூர்வமாக போகவில்லை எனவும் தெரிவித்துள்ளது. போர் காரணமாக தமிழகத்திற்கு திரும்பிய மாணவர்கள் மீண்டுமாக படிப்பை தொடருவதற்கு அங்கு போகவில்லை. இந்நிலையில் மீண்டும் உக்ரைன்போர் […]

Categories
மாநில செய்திகள்

வருமானத்திற்கு அதிகமான சொத்து… ஆ.ராசாவுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்…!!!!

வருமானத்திற்கு அதிகமாக 5.53 கோடி அளவிற்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக சிபிஐ சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி தொகுதி எம்பி மாநாடு ஆ.ராசா கடந்த 1999 முதல் 2010 ஆம் வருடம் வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கின்றது. இந்த நிலையில் கடந்த 2015 ஆம் வருடம் […]

Categories
மாநில செய்திகள்

என் காதலனை எதுவும் செய்யாதீர்கள்…. தூக்கில் தொங்கி இளம் பெண்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சின்ன மாத்தூர் பாரதி நகரில் டேனியல் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏஞ்சல் என்ற மகள் உள்ளார். இவர்   அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏஞ்சல்  தனுஷ் என்பவரை கடந்த 6  ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். தற்போது  ஏஞ்சல்  திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு தனுஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலையே கடிதம் எழுதிய OPS..! மாலை EPS பதிலடி கடிதம்… மீண்டும் சூடுபிடிக்கும் ADMK விவகாரம் ..!!

தமிழக சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில்,  எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டு வந்தார். இதனிடையே அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்து, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டார். இதிலிருந்து அதிமுகவில் ஓபிஎஸ் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. ஓபிஎஸ் ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவரையும் அதிமுகவிலிருந்து நீக்கிய எடப்பாடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் கிடையாது; இனி அவரை கூப்பிடாதீங்க; சபாநாயகருக்கு ஈபிஎஸ் கடிதம் ..!!

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் சட்டமன்ற துணை தலைவராக ஆர்.பி உதயகுமாரை தேர்வு செய்துள்ளோம் என்று பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையை பொறுத்தவரைக்கும் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்க கூடிய நிலையில்,   எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து விவாதம் எழுந்து,  அதன் பிறகு அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவில் துணை தலைவராக ஆர்பி […]

Categories
மாநில செய்திகள்

MRP-யை விட கூடுதல் விலை…. வாடிக்கையாளருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க ரிலைன்ஸ் ட்ரெண்ட்ஸ்க்கு அதிரடி உத்தரவு….!!!!!

இந்தியாவில் முன்னணி நிறுவனம் ஆக ரிலையன்ஸ் நிறுவனம் விளங்கி வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் தொலைத் தொடர்பு துறை, ஸ்மார்ட்போன்கள், ஆடைகள், இரும்புப் பொருட்கள், சிம்கார்டுகள், வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் என மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய அனைத்து துறைகளிலும் இயங்கி வருகிறது. இந்நிலையில் MRP-யை விட கூடுதல் விலைக்கு உள்ளாடையை விற்பனை செய்த ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ், ரூபாய்.2,10,000 இழப்பீடு வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரூபாய்.260க்கு விற்கப்படவேண்டிய உள்ளாடைகளை ரூ.278க்கு விற்றதாக சிவபிரகாசம் என்பவர் […]

Categories
மாநில செய்திகள்

இனி வரும் நாட்களில் விட்டுவிட்டு… காலை-இரவு மழை பெய்யும்… தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட பதிவு…!!!!!

தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, எதிர்பார்த்தது போல தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இனிவரும் நாட்களில் மழை விட்டு விட்டு பெய்யும். மேலும் தமிழகத்தின் மேற்கு உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், தேனி, விருதுநகர், மதுரை, டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யும். அதே போல சேலம், நாமக்கல், திருச்சி, கிருஷ்ணகிரி, […]

Categories
மாநில செய்திகள்

குப்பைகளை கொட்டினால் அபராதம்… மேயரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட பொதுமக்கள்…!!!!

வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களைச் சேர்ந்த 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மூலமாக குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றது. இதனால் குப்பைத் தொட்டி வைக்கும் நடைமுறை தற்போது கைவிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் பொதுமக்கள் குப்பைகளை பொது இடத்தில் கொட்டுவதாலும் தரம் பிரித்து தராத காரணத்தினாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா […]

Categories
மாநில செய்திகள்

அந்நிய மரங்கள் அகற்றம் – தமிழக வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ..!!

தமிழக வனப்பகுதிகளில் அந்நிய மரங்களை அகற்றுவதற்கு தனி குழு அமைக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அன்னிய மரங்களை அகற்றவும்,  கண்காணிக்கவும் குழுக்களை அமைக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்து இருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை” கோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வலியுறுத்தி மதுபான கடை சார்பில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், டெண்டருக்காக விண்ணப்பிக்கும் போது நில உரிமையாளர்களிடம் தடையில்லா சான்று கேட்டு நிர்பந்திக்கவில்லை. ஆனால் டெண்டரை இறுதி செய்த பிறகு நில உரிமையாளர்களிடம் குத்தகை ஒப்பந்தம் தாக்கல் செய்ய வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். அதோடு அனைவருக்கும் டெண்டர் படிவங்கள் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: நவம். 15ஆம் தேதி முதல் 2 மாதங்களுக்கு; டாஸ்மாக்கிற்கு நீதிமன்றம் ஆணை …!!

டாஸ்மாக்கில் காலி பாட்டல்களை வாங்கும் விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. வன பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் இருக்கக்கூடிய மலைவாழ்  ஸ்தலங்களில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டல்களுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்று, பின்னர் அந்த காலி மதுபாட்டில்களை  திரும்ப ஒப்படைக்கும் போது, அந்த பத்து ரூபாய் தொகையை திரும்ப ஒப்படைக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த திட்டம் தமிழகத்தில் இருக்கக்கூடிய மலைவாழ் ஸ்தலங்களில் செயல்படுத்தப்படுத்தப்பட்டு வரக்கூடிய நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

30 ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி… தேவர் குரு பூஜையில் பங்கேற்கிறார்…? வெளியான தகவல்…!!!!!

வருகிற 30ம் தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி தேவர் குரு பூஜையில் பங்கேற்க இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்திற்கு வருகிற 30-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகின்றார். ராமநாதபுரத்தில் நடைபெறும் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை வரும் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு வரும் பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

கொலை வழக்குகளுக்கு தனி பிரிவு – நீதிமன்றம் பரிந்துரை

தமிழகத்தில் கொலை வழக்குகளை விசாரிக்க தனி பிரிவை உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்திருக்கிறது. சட்ட ஒழுங்கு காவல்துறையினரே கொலை வழக்குகளை விசாரிப்பதால், அதிக வேலைப்பளு இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. தனி விசாரணை பிரிவை உருவாக்குவது சட்ட ஒழுங்கு காவல்துறையினருக்கு பனிச் சுமையை குறைக்கும் என நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |