கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக காவிரியின் உப நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு ஆகியவற்றில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் தற்போது காவிரி ஆற்றில் திறந்து […]