Categories
மாநில செய்திகள்

“தேவர் கவசம்” ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு ஆதரவு…. காந்தி மீனாளின் தடாலடி முடிவால் அதிமுகவில் புதிய பரபரப்பு…..!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகரில் முத்துராமலிங்க தேவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்க தேவருக்கு குருபூஜை நடத்தப்படும். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த அம்மா ஜெயலலிதா 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை தேவர் சிலைக்கு வழங்கினார். இதனால் அதிமுக கட்சிக்கு முக்குலத்தோர் மத்தியில் செல்வாக்கு பெருகியது. இதனையடுத்து ஒவ்வொரு வருடமும் தேவர் ஜெயந்தி நடைபெறும் போது அதிமுக கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்தியாவே இல்லை… அப்போ அது மட்டும் எப்படி வந்திருக்கும்?… சீமான் அதிரடி ஸ்பீச்….!!!!

குடிவாரி கணக்கெடுப்பு நடத்தகோரி நாம் தமிழர் கட்சி சார்பாக மதுரை பழங்காநத்தத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொட்டும் மழையில் சீமான் கட்சியினரோடு அமர்ந்து இருந்தார். இதையடுத்து சீமான் பேசியதாவது, “குடிவாரி கணக்கெடுப்புதான் சாதி ஒழிப்பிற்கான முயற்சி ஆகும். குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்காவிட்டால் சமூகநீதி பற்றி பேசக் கூடாது. இதற்கிடையில் தமிழக அரசு குடிவாரி கணக்கெடுத்து கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்கவேண்டும். ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்தியாவும் இல்லை, இந்துமதமும் இல்லை. வரலாற்றில் ராஜ […]

Categories
மாநில செய்திகள்

“இப்ப யாரு ஆட்சின்னு தெரிஞ்சுக்கோங்க” ஓட ஓட விரட்டி அடிப்போம்….. பாஜகவுக்கு பகிரங்கமாக வார்னிங் விடுத்த உதயநிதி….!!!!!

இந்தியாவில் மத்திய அரசானது ஹிந்தி மொழியை திணிப்பதற்கு முயற்சி செய்வதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அந்த வகையில் மத்திய அரசால் நடத்தப்படும் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களான உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயம் ஹிந்தி மொழியை பின்பற்ற வேண்டும் எனவும், ஆங்கிலத்தை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வுகளிலும் ஆங்கில மொழியை நீக்கிவிட்டு ஹிந்தி மொழியை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என […]

Categories
மாநில செய்திகள்

எங்க தலைவர் சொந்த காசில் போனார்…. ஆனால் நீங்க?…. அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சினேகன்….!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அண்மையில் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் அண்ணாமலை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை விமர்சனம் செய்தார். இதையடுத்து இவற்றிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த கட்சியின் நிர்வாகி கவிஞர் சினேகன் பேசியதாவது “அண்ணாமலை சார் எங்கதலைவர் அமெரிக்காவில் அரசியல் பேசுவதாக கூறியிருக்கிறீர்கள். அவர் லாஸ் ஏஞ்சல்சிற்கு சொந்தகாசில் போனார். ஆனால் நீங்கள் எந்த பணத்தில் அமெரிக்கா சென்றிருந்தீர்கள் என்று எங்களுக்கு தெரியாது. அவர் அமெரிக்காலிருந்து அரசியல் பேசுறார்னா?… இப்போ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆலமரம் போல VCK கட்சி…! இந்தியா முழுக்க வளர்ச்சி… உயர்ந்த திருமாவின் செல்வாக்கு ..!!

அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சியில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தொடங்கி, இந்த தமிழகத்தினுடைய முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் வரை, தொடர்ந்து திராவிட கழக முன்னேற்ற கழகத்தோடு பற்றோடும், பாசத்தோடும் நெருக்கத்தோடு, மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு சகோதரனாக…  தம்பியாக இருந்து, உற்ற துணையாக இருந்து, அறனாக இருக்கக்கூடிய தொல் திருமாவளவன் அவர்களுடைய விழா என்பது, உள்ளபடியே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற விழாவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவிலை விட்டு வெளியே போ …. மனம் மாறிய திருமாவளவன்…! வரவேற்ற BJP… !!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி,1975 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சொல்லி வருகிறோம், ஹிந்து என்பது ஒரு வாழ்க்கை முறை, ஒரு மதம் அல்ல என்று… இன்றைக்கு திருமாவளவன் அவர்கள் மற்ற இடதுசாரிகளும், காங்கிரஸ்காரர்களும் அதைத்தான் சொல்கிறார்கள் இன்றைக்கு.. இந்து என்பது ஒரு மதமே அல்ல. உடனே வைஷ்ணவமும், சைவமும் இருந்தது, உடனே திருமாவளவன் சொல்கிறார்… நாங்கள் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறோம், அரசே  ஆலயத்தை விட்டு வெளியேறு. ஏனென்றால் கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக ஆகிவிட்டன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எழுதி வச்சுக்கோங்க…! தமிழகத்தில் ஒன்னும் இருக்காது… BJP, RSSயை சொல்லி எச்சரித்த மார்க்சிஸ்ட் ..!!

மனிதநேய மக்கள் கட்சி நடத்திய ஆர்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இன்றைக்கு நம்முடைய நாட்டில் இருக்கின்ற உச்சநீதிமன்றத்திலே பல வழக்குகள் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் ஒரு வழக்கு என்ன வழக்கு என்றால் ? இந்தியாவிலேயே இருக்கின்ற எல்லா மசூதிகளுக்கும் சென்று நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். இந்தியாவில் இருக்கின்ற எல்லா தேவாலயங்களுக்கும் சென்று நாங்கள் ஆய்வு நடத்த வேண்டும், அந்த ஆய்வு நடத்துவதற்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும். அப்படி ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: மிக கனமழை…. தமிழகத்தில் 28 மாவட்டங்களில்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அது மட்டுமல்லாமல் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ஆறு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம்,தர்மபுரி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பாதை பராமரிப்பு பணி…. 6 விரைவு ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில் 6விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதனால் சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தாம்பரம் மற்றும் கோவில் இரவு 11 மணி அந்தியோதயா விரைவு ரயில் வருகின்ற 17ஆம் தேதி திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். நாகர்கோவில் மற்றும் தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் வருகின்ற அக்டோபர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன ஹிந்தில எழுதி இருக்கு….! சட்டென்று வந்த கோபம்… பிரதமர் முன்பே கிழித்தெறிந்த வைகோ…! பாஜகவுக்கு கடும் எச்சரிக்கை …!!

மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பேசும் போது, 1938 இல் ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்த்து அன்று தந்தை பெரியாரால் மூட்டப்பட்ட பெரும் நெருப்பை, அணையாமல் பாதுகாத்து, பின் நாட்களில் அது மிகப் பெரிய மக்கள் இயக்கமாக மாற்றி, அதில் வெற்றியும் கண்டார் பேரறிஞர் அண்ணா. அவர் முதலமைச்சராக ஆன பின்பு தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை சட்டம் ஆக்கினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வழியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இனி…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான புதிய மையங்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அதற்காக புதிய தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.அதாவது தங்கள் மாவட்டத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தேர்வு எழுதும் அரசு […]

Categories
மாநில செய்திகள்

4000 பணியிடங்கள்…. தமிழகத்தில் செம அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் காலியாக உள்ள 4000 விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்வி தகுதி: 12th, 10th சம்பளம்: ரூ.5,500 – ரூ.29000 மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்களின் இணையதள பக்கம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். வயது: 18-32 விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 14 எனவே இதில் விருப்பமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுவாகவே தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது வெளியூரில் இருக்கும் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.அதனால் அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்களின் கூட்டம் அலைமோதும்.இதனால் மக்களின் வசதிக்காக தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்டுகொள்ளாத ஸ்டாலின்… ஜஸ்ட் பாஸ் ஆன உதயநிதி…! தமிழில் மட்டும் 90 மார்க்…!!

”கலைஞருக்கும் தமிழுக்குமான அந்த உறவு” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், ”கலைஞருக்கும் தமிழுக்குமான அந்த உறவு” என்ற இந்த நூலை வெளியிடுவதற்கு எனக்கும், யாருக்குமே அருகதை கிடையாது, நம்முடைய அன்பில் மகேஷ் அவர் சொன்னது போல… தாத்தா உடைய நூலை வெளியிட பேரன் வந்திருக்கிறேன் என்று… நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது,  அங்கு படிக்கும்போது மற்ற அத்தனை பாடங்களிலுமே நான் எப்பவுமே ஒரு ஜஸ்ட் பாஸ்தான், என்னுடைய தந்தையார், தலைவர் வந்து….. ரொம்ப […]

Categories
மாநில செய்திகள்

கந்த சஷ்டி விழாவில் பக்தர்களுக்கு…. இந்த வருடம் இதற்கு அனுமதியில்லை….. முக்கிய அறிவிப்பு ….!!!!

வரும் 25ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கி 30 ஆம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் கந்தசஷ்டி திருவிழாவை இந்த வருடம் வெகு சிறப்பாக நடத்துவது குறித்தும் பாதுகாப்பாக நடத்துவது குறித்தும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைவர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பாதுகாப்பான, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை-யின் வெற்று விளம்பரம்.. CM ஸ்டாலினை காப்பியடிக்கும் BJP.. வறுத்தெடுத்த செந்தில்பாலாஜி ..!!

அரசியல் கட்சி நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசும் போது,  எங்கோ இருந்து வந்த ஒருவர், குறிப்பாக தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் எல்லாம்,  அடுத்தது நாங்கள்தான், அடுத்தது நாங்கள் தான் என்று சிலபேர் சொல்கிறார்கள். கோயம்புத்தூரிலும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. சாலையில் சென்றார்கள், மறியல் செய்தார்கள், போட்டி போட்டார்கள், பூத்துக்கும் போனார்கள், எல்லாம் செய்தார்கள்.  நூற்றுக்கு ஜீரோ. அரவக்குறிச்சிகளின் சில பேர் முயற்சி செய்தார்கள்… ஒன்றியத்தில் இருக்கின்ற உள்துறை அமைச்சரை அழைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் – வெளியானது முக்கிய தகவல் …!

இன்று மாலை அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாளை திங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆனது நடைபெற இருக்கிறது. இந்த சட்டப்பேரவை கூட்டம் பொருத்தவரை நான்கு நாட்கள் நடைபெறும் என்றாலுமே இதில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்தும், இதில் பேசவேண்டிய முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்திலே பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக அமைச்சரவை கூட்டமும் நேற்றைய தினம் நடந்து முடிந்திருக்கிறது. இதில்  அமைச்சர்களுக்கு முதலமைச்சர் என்னென்ன விஷயங்களுக்கு எவ்வாறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆமாம்..! அது மனுஸ்மிருதி இல்ல… ஆங்கிலேயர் எழுதிய நூல்… TVவிவாதத்தில் பரபரப்பு ஒப்புதல் வாக்குமூலம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, சமீப காலத்தில் தமிழ்நாட்டில் திமுக தன்னுடைய கூட்டணி கட்சிகளை வைத்து, சில அரசியலை செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக திருமாவளவன் அவர்கள் தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னால் நீங்கள் பார்த்திருக்கலாம்.  நான்கு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னால் மனுஸ்மிர்தியை நான் எரித்தேன் என்று சொன்னார். அப்போது நாம் சொன்னோம் நீங்கள் சொல்கின்ற நீங்கள் குறிப்பிடுகின்ற புத்தகம் மனுஸ்மிர்தி கிடையாது, அது லா ஆஃப் மனு என்று சொல்லப்படுகின்ற சர் வில்லியம் […]

Categories
மாநில செய்திகள்

10 கிமீ தூரத்தில் தேர்வு மையம் இருந்தால்…. இதை செய்யுங்க….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பான முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பரிந்துரைகளை அனுப்புமாறு மாவட்ட அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.  புதிய தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக பள்ளிகள் அனுப்பும் கருத்துருக்களை பரிசீலனை செய்து, அப்பள்ளிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பிறகு அதுபற்றிய கருத்துருகளை தேர்வுத்துறையிடம்  நவ. 10க்குள் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் பரிந்துரையின்படி தரப்படும் கருத்துருக்கள் மற்றும் உரிய காலக்கெடுவுக்கு பிறகு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அந்த சட்டத்தை ரத்து செய்யுங்க… கோர்ட்டில் கேஸ் போட்ட பிஜேபி.. பெரிய ஆபத்தை நோக்கி இந்தியா..!!

மனிதநேய மக்கள் கட்சி நடத்திய ஆர்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நான் இன்னொன்றையும் சொல்லிக் கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன், அந்த தடை செய்யப்பட்டு இருக்கின்ற ( பிஎப்ஐ ) அமைப்பின் மீது எங்களுக்கு மாறுபட்ட பல கருத்துக்கள் உண்டு. அந்த அணுகுமுறையை நாங்கள் ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை, அந்த அமைப்பிற்கும், எங்களுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. மனிதநேயம் மக்கள் கட்சியை சகோதரத்துவத்தோடு ஏற்றுக் கொள்கின்ற நாங்கள், அகில இந்திய முஸ்லிம் லீக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொக்கரிக்கும் பிஜேபி..! குப்பை தொட்டியில் போட்டுடுச்சு… கூட்டிப் பார்த்தால் அது ”வைகோ”!!

மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பேசும் போது, பிரச்சாரம், களம், போராட்டம், சிறை இந்த சொற்களை கூட்டிப் பார்த்தால் வார்த்தை கிடைக்காது வைகோ தான் கிடைப்பார் என்று ஐயா வீரமணி அவர்களின் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து வரும் எங்கள் இயக்க தலைவர் மாமனிதன் வைகோ அவர்களே..  இந்தி  ஆதிக்கத்தை கடுமையாக எதிர்க்கும் ஒரு காலகட்டத்தில் நாம் உள்ளோம். கடந்த 8 ஆண்டுகளாக மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து ஈடுபட்டு வருவது நமது மோடி அவர்கள் தலைமையிலான […]

Categories
மாநில செய்திகள்

எப்போதும் மாப்பிள்ளையாக இருக்க…. இதை மட்டும் சாப்பிடுங்க….! அமைச்சரின் டிப்ஸ்…!!!!!

 “எப்போதும் மாப்பிள்ளை போல் இருக்க, மாப்பிள்ளை சம்பா அரிசி சாப்பிடுங்கள்” எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் அமைச்சர்எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,  தமிழகத்தில் தனித்துறை 92 லட்சம் விவசாயிகள் நெல் உற்பத்தி செய்கின்றனர். பூந்தி காலத்தில் மன்னர்கள் மட்டுமே சாப்பிட்ட மாப்பிள்ளை சம்பா அரிசி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தல் என்பதால் தற்போது அனைவரும் சாப்பிட ஆர்வம் காட்டி வருகின்றனர். எப்பொழுதும் மாப்பிள்ளை போல் இருக்க வேண்டுமா? அப்படியானால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தும் DMK ஆட்சி தான்..! BJPயின் ஒப்புதல் வாக்குமூலம்… செம குஷியில் உதயநிதி …!!

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தான புத்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், இங்கே அண்ணன் திரு.கரு பழனியப்பன் அவர்கள் பேசும்போது சொன்னார்கள்…  பெரியார் என்ற மாடல் முடிந்து விட்டது, அது இனிமேல் வருவதில்லை, ஆனால் பெரியாருக்கு அடுத்து பேரறிஞர் அண்ணா மாடல் வந்தது, அதுவும் முடிந்து விட்டது. அதற்குப் பிறகு கலைஞர் என்ற மாடல் அதுவும், முடிந்துவிட்டது.  இப்போது இவர்கள் எல்லாருடைய மாடலும் சேர்த்து பெரியார், அண்ணா, கலைஞர் அனைத்தையும் சேர்த்து ஒரே […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!….ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திருட்டு….. பெரும் பரபரப்பு….!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் கைலாசப்பட்டி பகுதியில் அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டில் கீழ் உள்ள இரண்டு அறைகள் உள்ளது. அந்த வீட்டின் மாடியில் ஓபிஎஸ் ஓய்வெடுக்கும் அறை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஓபிஎஸின் பண்ணை வீட்டில் மேல்புறம் உள்ள சுவரின் வழியாக ஏரி குதித்த கொள்ளையர்கள் ஓபிஎஸ் ஓய்வு எடுக்கும் மேல் மாடியில் உள்ள அறையின் கதவை உடைத்து அந்த அறையில் இருந்த பீரோவை உடைத்து […]

Categories
மாநில செய்திகள்

வேற லெவலில் மாறப்போகும் மாதவரம்…. பூமிக்கு அடியில் CMRL போட்ட பலே பிளான்…. வெளியான சூப்பர் தகவல்…!!!!

சென்னையில் போக்குவரத்து எளிமையாக கூடிய வகையில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே நீல வழித்தடம், பச்சை வலிகளை இரு வழித்தடங்களில் முதல் கட்டம் திட்டத்தின் கீழ் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது. அடுத்த கட்டமாக ஊதா வழித்தடம், காவி வழித்தடம், சிவப்பு வழித்தடம் என மூன்று வழித்தடத்தில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் இரண்டாம் கட்ட திட்டத்தின் மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாணவர்களுக்கு இனி தமிழ் மொழிப் பாடம் கட்டாயம்…. அதிரடி…!!

Bcom, BBA, BCA படிப்புகளின் 2ஆம்ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கழைக்கழகங்களைத் தவிர, மற்ற பல்கலைக்கழங்களில்  இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பதற்காக இந்தஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இந்த கல்வியாண்டிலே நடைமுறைக்கு வரும்.

Categories
மாநில செய்திகள்

நோய்களை இவர்கள்தான் உருவாக்குகிறார்களா?…. சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்ட ஐகோர்ட்…..!!!!

புதிது புதிதாக பரவும் நோய்களுக்கான காரணத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கோயமுத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருந்து கொள்முதல் அதிகாரியாக முத்துமாலை ராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தேவைக்கு அதிகமான மருந்துகளை கொள்முதல் செய்துள்ளார். ஆனால் அந்த மருந்துகள் அனைத்தும் காலாவதியாகிவிட்டது. இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டது என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் முத்துமாலை ராணி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

இப்படி ஒரு ஆசிரியர் இருந்தால்….. மாணவர்கள் எளிதில் படிப்பார்கள்…. புகழ் பாடும் நெட்டிசன்கள்…. வைரல் வீடியோ….!!!!

கொரோனாவால் மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக தமிழக அரசு எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கியது. இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் 2025 ஆம் வருடத்திற்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை பெற வேண்டும் என்பதேயாகும். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஒன்று மற்றும் இரண்டு, மூன்றாம் வகுப்புகளில் தமிழ் ஆங்கிலம், கணக்கு பாடங்கள் சூழ்நிலையில் பாட கருத்துகளுடன் ஒருங்கிணைந்து கற்பிக்கப்படும். ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டதற்கான […]

Categories
மாநில செய்திகள்

Please பா “எல்லாரும் அமைதியா இருங்க”…. அறிவுரை வழங்கிய மு.க. ஸ்டாலின்…. எதற்கு தெரியுமா?….!!!!!

நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் அனைவரும் அமைதியான முறையில் கலந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். நமது தமிழ்நாட்டில் வருகின்ற திங்கட்கிழமை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இதுகுறித்து நேற்று மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நமது தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை அவசர சட்டம் தற்போது அமலில் உள்ள நிலையில், அதனை நிரந்தர சட்டமாக மாற்றுவதற்கு தாக்கல் செய்யப்படும் […]

Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. திடீரென ஏற்பட்ட ‌” route தலை பிரச்சனை”…. அச்சத்தில் உறைந்த பயணிகள்….!!!!

ரயில்  நிலையத்தில் மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரியில் இருந்து அரங்கோணம் செல்லும் ரயிலில் மாநில கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வது வழக்கம். அதேபோல் இந்த கல்லூரியில் படிக்கும் இருதரப்பை சேர்ந்த மாணவர்களும் மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளனர். அப்போது திடீரென அவர்களுக்கு இடையே ரூட் தலை பிரச்சினை காரணமாக  தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் ராயபுரம் ரயில் நிலையத்திற்கு வந்து நின்றுள்ளது. இதனையடுத்து ரயிலில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கீழே இறங்கினர். […]

Categories
மாநில செய்திகள்

“எங்களுக்கு விடிவு காலம் எப்போது?”…. பகுதிநேர ஆசிரியர்கள் கல்வித்துறை அமைச்சரிடம் திடீர் மனு….!!!!

Categories
மாநில செய்திகள்

எங்களுக்கு இந்தி தெரியாது போடா…. சவால் விட்ட உதயநிதி ஸ்டாலின்….!!!!

இந்தி திணிப்பை எதிர்த்து  ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் இந்தி திணிப்பு, நுழைவுத் தேர்வு போன்றவற்றை எதிர்த்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் கூறியதாவது. எங்கள் தமிழ்நாட்டில் இந்தி எந்த வடிவில் வந்தாலும் சரி நாங்கள் ஒரே ஒரு பதிலை தான் சொல்லுவோம். அது  இந்தி தெரியாது போடா என்பதுதான். நீங்கள் இந்த முயற்சியை கைவிடும் […]

Categories
மாநில செய்திகள்

2023 அரசு விடுமுறை மாற்றம்…? ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தப்பிக்குமா விநாயகர் சதுர்த்தி….? வலுக்கும் கோரிக்கை…!!!

சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தில் 2023 ஆம் வருடத்திற்கான அரசு பொது விடுமுறை பட்டியலை தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டிருந்தார். அதில் விநாயகர் சதுர்த்தி பட்டியலை தவறுதலாக ஒருநாள் முன்னதாக அரசு அறிவித்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழக அரசு வெளியிட்ட விடுமுறை பட்டியலில் விநாயகர் சதுர்த்தி விழா விடுமுறையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, 2023 செப்டம்பர் 18-ல் விநாயகர் சதுர்த்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு எதன் அடிப்படையில் விநாயகர் சதுர்த்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே வருஷம் தான்…! 70% OK ஆகிடுச்சு… எல்லாரும் பாராட்டுறாங்க… குதூகலகத்தில் DMK எம்.பி …!!

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, இன்றைய கழகத்தின் தலைவர் அவர்களும் மக்களோடு, நடமாடி வளர்ந்த தலைவர் என்ற காரணத்தினால், தேர்தல் அறிக்கையை தயாரிக்கிற போது…  தமிழ்நாட்டில் முலை முடுக்குகளில் எல்லாம் வாழ்கின்ற மக்களின் பிரச்சனைகளை தொகுத்து, அதற்கு தீர்வுகளும் தருகிறோம் என்ற வாக்குறுதிகளை தந்தோம். அந்த வாக்குறுதிகளை நம்பி, மக்கள் எங்களை தேர்ந்தெடுத்தார்கள். தேர்ந்தெடுத்ததற்கு பின்னால், வாய்ப்பில்லை, வசதி இல்லை என்று காரணம் சொல்லாமல், நீங்கள் கொடுக்கிற அவகாசம் ஐந்து ஆண்டு காலம்.. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது…? முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்…!!!!!

திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த பின்  சுமையை காரணம் காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி நிலையை காரணம் காட்டி தயக்கம் காட்டி வருவதாக அரசு ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டுமல்லாமல் தமிழக நிதி அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு..! கோவிலை விட்டு வெளியே போங்க… BANK மாதிரி வேலைக்கு எடுங்க..! அரசுக்கு டிமாண்ட் வச்ச எச்.ராஜா…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து சமய அறநிலையத்துறை திருவண்ணாமலைல… நீங்க இதுக்கு தகுதியானவர்கள் பரிட்சை வைத்து தான் வேலைக்கு ஆட்கள் எடுக்கணும். ஆனால் மந்திரி லஞ்சம் வாங்கி, ஆட்கள் நியமிக்கப்படுறதா ?  நமக்கு தகவல் இருக்கு. இந்த மாதிரி முறைகேடுகள் நடக்கக் கூடாது. இன்னும் சொல்லப்போனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை  தேர்ந்தெடுக்கிறதுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்.பேங்க்கு ஆட்கள் செலக்ட் பண்றாங்களோ, அதே மாதிரி ஒரு போர்டு வைக்கணும். இது எல்லாமே தற்காலிகம் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பரிசு இதுதான்….! அரசுதுறைகளில் திடீர் ரெய்டு….. காரணம் என்ன….????

நாடு முழுவதும் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளி முன்னிட்டு அரசு அலுவலகங்கள் பலவற்றில் அதிகாரிகள் அதிகமாக லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்கள், சோதனை சாவடிகள் என அனைத்து பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று மாலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில் தமிழகம் முழுவதும் 16 துறைகள் சார்ந்த 46 […]

Categories
மாநில செய்திகள்

நவ.15 முதல் அமல்… கிரெடிட் கார்டு விதிமுறைகளில் அதிரடி மாற்றம்…. வாடிக்கையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

கிரெடிட் கார்டு விதிமுறைகளில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா புதிய மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. புதிய கட்டணங்கள் நவம்பர் 15 முதல் அமலுக்கு வரும். அதனால் நவம்பர் 15ஆம் தேதிக்கு முன் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணங்கள் பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அன்பு வாடிக்கையாளர் உங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் ? எடப்பாடி… கத்தி, கம்போடு சுத்தும் 20பேர்… நைட்டில் ஒரே அராஜகம்… EX நிர்வாகி பரபரப்பு தகவல் ..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய  சி.ஆர் சரஸ்வதி, விடியலாட்சி யாருக்கோ என்னமோ தெரியல… எனக்கு விடிய மாட்டேங்குது,  விடிஞ்சா தூக்கம் வர மாட்டேங்குதுன்னு சொல்லி இருக்காரு. செய்தியில் பார்க்கின்றேன்… ஆலந்தூரில் ஒரு 20 பேர் ரோட்ல கத்தி எடுத்துக்கிட்டு, கம்பு எடுத்துக்கிட்டு ராத்திரியில அவ்வளவு ஒரு அராஜகம். அவ்வளவு கட்ட பஞ்சாயத்து, கஞ்சா இன்னிக்கி தெரு தெருவா விற்கப்படுது. சட்டம் ஒழுங்கு என்ன நடக்குதுன்னு தமிழ்நாட்டுல தெரியல ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

21 வயதில் கலைஞர் சொன்ன வார்த்தை…! அப்படியே மாறி போன திருச்சி சிவா… இப்படி ஒரு காரணம் இருக்காம் ..!!

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, அறிஞர் அண்ணா எங்களுக்கு தொடக்க காலத்தில் சொல்லிக் கொடுத்தது, கலைஞரும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அண்ணாவும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்…  அண்ணா சொன்னது,  தம்பி மக்களோடு சென்று அவர்களோடு சேர்ந்து வாழ வேண்டும். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களிடம் என்ன இருக்கிறதோ, அதிலிருந்து தொடங்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு இடத்திற்கு செல்கிறோம். அங்கே இருக்கிற மக்களுக்கு ஆரம்ப கல்வி வசதி கூட இல்லை என்றால்,  ஆனா, ஆவன்னாவில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

சத்யா மரணம்… இனி எந்தப் பெண்ணுக்கும்…. நொறுங்கிப் போன ஸ்டாலின்…!!!!

ரயில்முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யாவின் மரணத்தை அறிந்து நொறுங்கிப் போய்விட்டதாக முதலமைச்சர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பேசிய அவர், “இயற்கையில் பெற்றோர்கள் குழந்தைகளை சமூக நோக்கம் கொண்டவர்களாக வளர்க்க வேண்டும் இந்த நேரத்தில் ஒரு முக்கிய விஷயத்தைக் கூற கடமைப்பட்டு உள்ளேன். வேதனையுடன் இதை தெரிவிக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் சத்யா என்ற மாணவிக்கு நடந்த துயரத்தை நினைத்து நான் நொறுங்கி போய் உள்ளேன். நான் மட்டுமல்ல, இதைப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M_க்கு மரியாதை இல்ல..! ”ஜெ” இருந்தா குண்டூசி கூட விழாது… புலம்பி தள்ளிய ஸ்டாலின்..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, என்ன நடக்குது இன்னைக்கு தமிழ்நாட்டில் ? வாட்ஸ் அப்ல எல்லாம் போட்டு இருந்தாங்க. நல்லா இருந்தது புலம்பி இருக்கார் ஸ்டாலின் மேடையில பொதுக்குழுவுல… இது தாங்க எங்க அம்மா ஆட்சிக்கும், உங்க ஆட்சிக்கும் இருக்கிற வித்தியாசம். எங்க அம்மா மேடையில இருந்தா பின் டிராப் சைலன்ட்னு சொல்லுவோமே…..  குண்டு ஊசி கூட கீழே விழ முடியாது அப்படி ஒரு கட்டுக்கோப்புடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்க தேர்தல் அறிக்கை கொடுங்க..! உ.பியில் பேசும் திராவிட மாடல்… காலரை தூக்கிவிடும் DMKவினர்

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, இன்றைக்கு தமிழக மக்கள் ஒரு நல்ல ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கம் மக்களின் கவலைகளுக்கு காரணமாக இருந்த காலம் முடிந்து, மக்களின் கவலைகளை போக்குகிற அரசாக இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு, நம்முடைய கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்கள் தலைமையில் சீரோடு நடைபெறுகின்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் பணியாற்றுகிறார்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் வீடு தோறும் வந்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கிறார்கள். வடக்கே வாழ்கிறவர்கள் தெற்கே இப்படி […]

Categories
மாநில செய்திகள்

“கடலுக்குள் பேனா வைக்க நிதி இருக்கும்” போனஸ் வழங்கும் மட்டும் பணம் இருக்காதா….? டிடிவி தினகரன் சரமாறி கேள்வி….!!!!!

தமிழகத்தில் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவுகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் போன அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. இந்த 28 மாவட்டங்களில்…. மிக கனமழை எச்சரிக்கை…..‌ வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகம், புதுச்சேரிக்கான அடுத்த 5 தினங்களு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா-வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவு வளிமண்டலன் கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன் படி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“மாணவி சத்யா மரணத்தால் நொறுங்கிப் போய் உள்ளேன்”…. வேதனை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு கல்லூரி மாணவி சத்யாவை தள்ளிவிட்டு சதீஷ் என்ற இளைஞர் படுகொலை செய்துள்ளார். மகளை இழந்த சோகத்தில் மன அழுத்தத்தில் இருந்து அவர் தந்தை மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ஏழு தனிப்படைகள் அமைத்து ஈசிஆர் பகுதியில் சுற்றித்திரிந்து சதிஸை கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்ற […]

Categories
மாநில செய்திகள்

C.Mஸ்டாலின் ஆட்சியை பார்த்து வியக்கும் வடக்கர்கள்.. திருச்சி சிவா பெருமிதம் ..!!

திமுக சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய திருச்சி சிவா, வடக்கே வாழ்கிறவர்கள், தெற்கே இப்படி ஒரு ஆட்சி நடக்கிறதே என்று வியப்போடு பார்க்கின்ற பெரும் மரியாதைக்குரிய கட்சியாக நம்முடைய கட்சி திகழ்கிறது. இங்கிருந்து வெளிநாடு போகின்ற போது பரவசத்தோடு கோட்டு, சூட்டோடு போக வேண்டும் என்பது இல்லை. இது உங்கள் பாரம்பரிய உடையா ? ஆம் நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன், அதன் அடையாளம் தான் நான் கட்டி இருக்கிற வேட்டி. நாங்கள் தமிழ் உணர்வு உள்ளவர்கள், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. 234 தொகுதிகளிலும் வேலை வாய்ப்பு: முதல்வர்

234 தொகுதிகளிலும்  வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்ட அளவில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் தேர்வாகும் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வேலைக்கு செல்கின்றனர். அந்த வகையில் இன்று சென்னையில் 300க்கும் மேற்பட்ட தனியாக நிறுவனங்கள் பங்கு பெற்ற இளைஞர்களுக்கான தனியார் வேலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியின் துரோக கூட்ட விஞ்ஞானி செல்லூர் ராஜு – AIADMKவின் EXநிர்வாகி கிண்டல்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, தற்போதுக்குள்ள திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வால்  யாரும் ஃபேன் போட முடியாது, யாரும் டிவி பார்க்க கூடாது, யாரும் லைட் போடக்கூடாது, பழைய காலத்துக்கு போயிடுங்க என்கிறார் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்கள்…. நீங்க எங்க லைட் போடுறீங்க ? அரிக்கன் விளக்கு வாங்கிக்கோங்க, ஒரே ஒரு லைட்டில் இருங்க. ஒரு 100 யூனிட் இலவசம் சொல்றீங்க…  சரி […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு….. தமிழக அரசின் முடிவு என்ன…..?

தனியார் தொழிற்சாலையில் இரவு காவல் காவலாளியாக இருப்பவரின் மகள் வர்ஷா. இவர் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவ படிப்பு ஆசையில் இருந்த நிலையில் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காதால் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் துணை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி என்கின்ற படிப்பை படித்துக் கொண்டே இருமுறை நீட் தேர்வு எழுதி ஒரு முறை 210, 250 மதிப்பெண் எடுத்திருந்தார். அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால் […]

Categories

Tech |