Categories
மாநில செய்திகள்

“நயன்-விக்கி தம்பதியினரின் இரட்டை குழந்தை விவகாரம்” தமிழக அரசின் அறிக்கை….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு அண்மையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்த செய்தியை இயக்குனர் விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார். ஆனால் திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி குழந்தை பிறந்தது என்று சர்ச்சை கிளம்பியதால், வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டார்கள் என்று தகவல் வெளியானது‌. கடந்த ஜனவரி மாதமே வாடகை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!… தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் “சூரிய கிரகணம் ஆரம்பம்”…. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க….!!!!

 சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படும். அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைப்பதால் அது சூரிய கிரகணம் எனப்படுகிறது. அதேபோல் இன்று உலகம் முழுவதும் மதியம் 2.19 மணிக்கு தொடங்கி மாலை 6.32 மணி வரை இருக்கும். ஆனால் நமது தமிழ்நாட்டில் மாலை 5.14 மணி முதல் 5.44 மணி வரை மட்டுமே தென்படும். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

“இது உண்மைக்கு புறம்பானவை”…. பேட்டி கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்….!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப் பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் வி.கே.சசிகலா, அவரின் உறவினர் டாக்டர் கே.எஸ்.சிவகுமார், முன்னாள் அமைச்சர் சி.விஜய பாஸ்கர், சுகாதாரத்துறை முன்னாள் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் போன்றோர் குற்றம் செய்தவர்கள் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அதன் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் விஜய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சாராயம் விற்றுப் பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரம்”?….. அண்ணாமலை காட்டம்….!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது twitter பக்கத்தில் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். அதில்,கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர் டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தைச் சுட்டிக் காட்டிய பத்திரிக்கையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம்.இந்த விற்பனையின் மூலமாக தனக்கு கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்து விடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? சாராயம் விற்று பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரம் இருந்தால்,மாத சம்பளம் வாங்கிக் கொண்டு உண்மையான செய்திகளை மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்னும் ஐந்து நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், நெல்லை, தென்காசி ,தூத்துக்குடி ,தேனி ,கன்னியாகுமரி ,சிவகங்கை ,திண்டுக்கல் ,விருதுநகர் ,மதுரை, தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி ,கோவை, […]

Categories
மாநில செய்திகள்

நயன் – விக்கி இரட்டை குழந்தை விவகாரம்…. நாளை மாலை முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் என்ற செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்ட 180 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். குறைவான அளவில் விபத்துக்கள் இருந்தாலும் விபத்துக்களை இருக்கக் கூடாது என்று அரசு நடவடிக்கை எடுத்தது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் 17 சதவீதம் அளவில் மட்டுமே தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் உயிர்சேதம் எதுவும் இல்லை.மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….. உடனே போங்க…!!!!

தமிழகத்தில் அரசு வேலைக்காக பலரும் காத்திருக்கும் நிலையில் ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் 164 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வு நடத்தப்படாமல் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களில் விண்ணப்பிக்க https://drbmadurai.net என்ற இணையதளம் மூலம் நவம்பர் 14ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதள பக்கத்தில் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் பணிக்கான குறைந்தபட்ச கல்வி, வயதுவரம்பு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் தகுதி தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.ஒரு சில நேரங்களில் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில் அரசு தற்காலிக ஆசிரியர்களை தேர்வு நடத்தாமல் நியமனம் செய்கிறது.ஆனால் இவர்களுக்கு நிரந்தர ஆசிரியர்களின் அளவிற்கு ஊதியம் மற்றும் மற்ற சலுகைகள் எதுவும் வழங்கப்படாது.இருந்தாலும் நிரந்தர ஆசிரியர்கள் நியமனத்தில் தற்காலிகமாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 1990 – 2019 ஆம் கல்வியாண்டு […]

Categories
மாநில செய்திகள்

உடனே அத ஒடுக்குங்க…. இல்லனா மத்திய அரசு தலையிடும்…. அப்புறம் சிக்கல் தான்…. DMK-வுக்கு‌ BJP வார்னிங்……!!?

திருப்பூர் வித்யாலயம் பகுதியில் பாஜக மாவட்ட தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பாஜக கட்சியின் மூத்த தலைவரான சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, கோட்டையில் இருப்பவர்கள் பயங்கரவாத செயல்களை கண்காணிக்க வேண்டும். ஆனால் அவர்கள் பயங்கரவாத செயல்களை கண்காணிக்க தவறி விட்டதால் கோட்டை ஈஸ்வரன் தான் தீபாவளி அன்று பொது மக்களை காப்பாற்றியுள்ளார். அதன் பிறகு அந்த இடத்திற்கு டிஜிபி வருகிறார். திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மிகச்சிறந்த அதிகாரிகளை நியமித்துள்ளது. தமிழக […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! இன்று மாலை உஷாரா பாருங்க; கண் பார்வை பறிபோகும் என எச்சரிக்கை:

இன்று மாலை சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில் அதை வெறும் கண்ணால் பார்த்தால் கண் பார்வை பறி போகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மாலை 5 14 மணிக்கு சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில் பாதுகாப்பு இல்லாமல்  சூரிய கிரகணத்தை பார்த்தால் கண்களில் பார்வை குறைபாடு ஏற்படும் என்று அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்தால் பார்வை பறிபோகும் என்று தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் எச்சரிக்கை […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

அப்பாடா…. சீரானது வாட்ஸ் அப் சேவை…!!!

வாட்ஸ்அப் செயலியானது சரியாக 12 20க்கு அதனுடைய செயல்பாடு முற்றிலும் முடங்கியது. யாருக்குமே மெசேஜ் அனுப்ப முடியல, மெசேஜ் கிடைக்கவில்லை. தொடர்ந்து இந்த பிரச்சனை இந்தியா முழுவதும் நீடித்திருந்தது. தற்போது வாட்ஸ் அப் செயலி 2 மணி நேரம் கழித்து செயல்படத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக வாட்ஸ் அப்பில் பயன்படுத்தப்படக் கூடிய பயனாளர்கள் நாடு முழுவதும் அதிக அளவில் இருந்து,  வாட்ஸ்அப்  செயலி மூலமாக தான் தங்களுடைய மெசேஜ்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு மணி நேரம் வாட்ஸ் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING: வாட்ஸ்அப் செயல்பட தொடங்கியது: 2 மணி நேரம் கழித்து நிம்மதி பெருமூச்சு விட்ட பயனர்கள் ..!!

வாட்ஸ்அப் தளம் முழுமையாக தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. முடங்கியுள்ள வாட்ஸ்அப்பை சரி செய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டு கொண்டு  இருந்தது உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயனர்களால் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர். எங்கெல்லாம் வாட்ஸ் அப் முடங்கியுள்ளதோ,  அவர்கள் டுவிட்டர் போன்ற பிற தளங்கள் மூலமாக புகார்கள் அளித்து வந்தார்கள். வாட்ஸ்அப் பயன்படுத்த முடியவில்லையே,  உங்கள் ஊரில் நீங்கள் பயன்படுத்த முடிகிறதா ? போன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். […]

Categories
உலக செய்திகள் உலகசெய்திகள் டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

வாட்ஸ்அப் சேவை விரைவில் சீராகும் – மெட்டா விளக்கம்

கடந்த அரை மணி நேரத்துக்கு மேலாக வாட்ஸ் அப்பில் தகவலை அனுப்ப முடியாமலும்,பெற முடியாமலும் whatsapp பயனாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இதை சரி செய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. பல நாடுகளிலும் whatsapp சேவை முடங்கி இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் whatsapp சேவையை நிர்வகிக்கக்கூடிய மெட்டா நிறுவனம் விரைவில் சீராகும் என்று கூறி இருக்கிறது. சேவையை சீராக்கக் கூடிய பணியில் மெட்டா  நிறுவனத்தினுடைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். எனவே whatsapp சேவை விரைவில் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING: நாடு முழுவதும் வாட்ஸ் அப் சேவை முடங்கியது..!!

அரைமணி நேரத்துக்கு மேலாக வாட்ஸ் அப் சேவை முடங்கியுள்ளதால் பயனாளர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் அரைமணி நேரமாக வவாட்ஸ் அப் சேவை முடங்கியுள்ளதாகவும், எந்த குறுசெய்தியும் அனுப்ப முடியாமல் பயனாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

கோவை கார் குண்டு வெடிப்பு விவகாரம்…. முதல்வரின் பதில் என்ன?… கொந்தளித்த எடப்பாடி….!!!

கோவை மாநகரின் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் நேற்று அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்தில் சிக்கியது பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் கார் ஓட்டுனர் ஒருவர் பலியாகி உள்ளது பரபரப்பை கூட்டி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஜிபி முதல் டிஜிபி வரை சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்த உண்மை கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே! பட்டாசுகள் வெடித்ததில் ஏற்பட்ட புகைமூட்டம்….. மூச்சு திணறலால் குழந்தைகள் பாதிப்பு….. அதிர்ச்சி தகவல்…..!!!!!

தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை ஆனது சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் பலரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். தீபாவளி பண்டிகையின் போது ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் அதை எல்லாம் யாருமே காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இந்நிலையில் தலைநகர் சென்னையில் அதிக அளவில் பட்டாசுகளை வெடித்ததால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பட்டாசுகள் வெடித்ததால் ஏற்பட்ட புகை முட்டத்தினால் சென்னை முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

ஒப்பந்ததாரர்களே!!…. இனி இப்படி தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும்….. அதிகாரிகள் எச்சரிக்கை….!!!!

பாதுகாப்பு தடுப்பு வேலி  அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள பல பகுதிகளில் வடிகால் அமைக்கும் பணிகள்  `சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் அனைத்து பகுதிகளிலும் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஜாபர்கான் பேட்டை பகுதியிலும் இந்த பணி நடைபெற்று வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் விவகாரம்… ரஜினியை வம்புகிழுத்த டிடிவி தினகரன்‌…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து தமிழக சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்ததாக வெளியான தகவல் பொய் என்றும் அவர் டிசம்பர் 4ஆம் தேதி இறந்து விட்டார் என்பது தெரிய வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சசிகலா, கே.எஸ். சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் ஜெயலலிதா மரணம் குறித்து […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்றும்,  நாளையும் லேசானது முதல் மிதமான  மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், கோவை, டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 29ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளியை சீர்குலைக்க சதி திட்டம்”…. தமிழக-கேரள எல்லையை பூட்டி சீல் வைங்க…. முதல்வருக்கு கோரிக்கை…..!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று சிலிண்டர் வெடித்து பயங்கர கார் விபத்து ஏற்பட்டதில் ஜமீஷா முபின் (23) என்ற வாலிபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி ஒரு பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப் பட்டிருப்பதாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை கார் வெடித்து பயங்கர விபத்தை ஏற்பட்டதில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து சந்தேகப்படும்படியாக நடந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது‌. கொரோனா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாராய அமைச்சரே..! முதல்வர் வழிகாட்டுறாரா ? அண்ணாமலை பரபரப்பு ட்விட் ..!!

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில்,  கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம். இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? (1/5) பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிடுவதற்கு முன் அறிவாலயத்தின் அனுமதி பெற வேண்டுமா? அப்படியே உங்களுக்கு வழக்கு தொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு கைதியுடன் முபினுக்கு தொடர்பா ? பரபரப்பு தகவல் !!

கோவை உக்கடம் பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு,  புலன் விசாரணை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கூடுதலாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் இந்த புலன் விசாரணையானது மாவட்டத்தை விட்டு அண்டை மாநிலமான கேரளாவிற்கு செல்ல வேண்டிய ஒரு சூழல் இருக்கிறது. அதன் அடிப்படையில் மூன்று தனிப்படைகள்  அமைத்து ஒன்பது தனி படைகள் தற்போது புலன் விசாரணையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பல இடங்களில்…. சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. முழு விவரம் இதோ….!!!

தமிழகத்தில் தீபாவளிக்கு பிறகு தினமும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.24 ஆம் தேதி வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 530 சிறப்பு பேருந்துகளும் சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 580 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து இன்று வழக்கம் போல இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 1578 சிறப்பு பேருந்துகளும் சென்னையை தவிர்த்து பிற இடங்களுக்கு திரும்ப 2050 சிறப்பு பேருந்துகளும் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை….. தமிழகத்தில் மட்டும் 280 தீ விபத்து சம்பவங்கள்….. தீயணைப்புத்துறை தகவல்….!!!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் தமிழகத்தில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் 180 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொடநாடு பங்களாவில் சிபிசிஐடி நேரில் ஆய்வு – அதிரும் ADMK தலைகள் ..!!

கொடநாடு பங்களாவில் சிபிசிஐடி போலீசார் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். கொடநாடு கொலை,  கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் இதுவரை நடத்திய விசாரணை ஆவணங்கள் சில தினங்களுக்கு முன்பு உதகை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  சிபிசிஐடியானது விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சிபிசிடியானது கொடநாடு பங்களா இருக்கக்கூடிய பகுதிகளில்  விசாரணையை துவக்கி உள்ளது. கொடநாடு பங்களாவில் தொடர்ந்து பணிபுரியக்கூடிய கணக்காளர் , மேலாளரிடம்  விசாரணையை மேற்கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

“கோவை கார் விபத்து”…. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு….‌ பாஜக எழுப்பும் சந்தேகம் உண்மையா?…..!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைமேடு அருகே நேற்று அதிகாலை ஒரு கார் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்தக் கோர விபத்தில் ஜமேஷா முபீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்‌. இது குறித்த தகவலின்படி  காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதிவான தடையங்களை சேகரித்தனர். அதன்பிறகு விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கிரகணம் எப்போது…? எங்கே பார்க்கலாம்….? இதோ தெரிஞ்சுக்கோங்க மக்களே….!!!!

ஒவ்வொரு ஆண்டுமே இரண்டு முறை சூரிய கிரகணமும், 2 முறை சந்திர கிரகணமும் ஏற்படும். ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் சூரிய கிரகணம் முதல் முறையாக ஏற்பட்டுவிட்டது. தற்பொழுது, இரண்டாவது முறை ஐப்பசி மாதம் சூரிய கிரகணம் தோன்ற இருக்கிறது. இந்த சூரிய கிரகணத்தின் உச்சக்கட்ட நிலையை ரஷியாவில் 4:39 மணியளவில் காணலாம். இந்தியாவை பொறுத்தவரை இந்த சூரிய கிரகணம் மாலை 4:29 மணிக்கு தென்படும். சூரிய அஸ்தமன நேரமான 5:42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். இந்தியாவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் இந்த பொருளுக்கு தட்டுப்பாடு…. மக்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

இந்தியாவில் கொரோனா காரணமாக மக்களின் அத்தியாவசிய தேவையை கருதி மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலமாக இலவச தானியங்களை வழங்கியது. அதாவது பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக நாட்டில் உள்ள 80 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச உணவு தானியங்களை பெற்று பயனடைந்தனர். இந்நிலையில் மத்திய அரசு கோதுமை ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. மேலும் தமிழ்நாடு,கேரளா மற்றும் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து அதிக அளவில் அரிசி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வு தேர்வு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கிராமப்புற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக ஊரக திறனாய்வு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள செய்தியில், கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஊரகத் திறனாய்வு தேர்வு வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது . […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா?…. காசி, அயோத்திக்கு இலவச சுற்றுலா…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை அறிவித்துள்ளது.அதன்படி மூவாயிரம் சிறப்பு விருந்தினர்கள் காசி மற்றும் அயோத்தியை பார்க்க தமிழகத்திலிருந்து இலவசமாக சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வெளிக்கொண்டுவர இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அதன்படி நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை சங்கமும் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாதா….? மூட நம்பிக்கையை ஒழிக்க சூப்பர் ஏற்பாடு….!!!!

ஒவ்வொரு ஆண்டுமே இரண்டு முறை சூரிய கிரகணமும், 2 முறை சந்திர கிரகணமும் ஏற்படும். ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் சூரிய கிரகணம் முதல் முறையாக ஏற்பட்டுவிட்டது. தற்பொழுது, இரண்டாவது முறை ஐப்பசி மாதம் சூரிய கிரகணம் தோன்ற இருக்கிறது. இந்த சூரிய கிரகணத்தின் உச்சக்கட்ட நிலையை ரஷியாவில் 4:39 மணியளவில் காணலாம். இந்தியாவை பொறுத்தவரை இந்த சூரிய கிரகணம் மாலை 4:29 மணிக்கு தென்படும். சூரிய அஸ்தமன நேரமான 5:42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். இந்தியாவில் […]

Categories
மாநில செய்திகள்

இனி இந்த தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வு கட்டாயம்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் அரசு தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களை விட வெளி மாநிலத்தவர்கள் அதிகம் பணியாற்றி வருவதாக புகார்கள் எழுந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித் தாள் கட்டாயமாக்கப்பட்டது.அதனால் தேர்வர்கள் கட்டாயமான முறையில் தமிழ் மொழியை படித்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனங்களான ரயில்வே, என்எல்சி, துறைமுகம்,விமான நிலையங்கள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியில் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

கணினி தமிழ் விருது…. டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

கணினி தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் முதலமைச்சர் கணினி தமிழ் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2021 -22 ஆம் ஆண்டிற்கான கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்தை tamilvalarchithurai.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால்…. 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து?…. தமிழக மின்வாரியம் திடீர் விளக்கம்….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அரசு அறிவித்திருந்தது. இந்தச் செய்தியை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் தமிழகத்தில் வந்துள்ள மின் கட்டண உயர்வு மற்றும் சீர்திருத்தங்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . முக்கியமாக 1-Dசீர்திருத்தம் ஆனது வாடகை வீடு மற்றும் அறைகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்…25) விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக முழுவதும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பல மக்களும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதலே பேருந்துகள் மற்றும் ரயில்களில் மக்களின் கூட்டம் அலைமோதியது. ஆனால் திங்கட்கிழமை தீபாவளி முடிந்து செவ்வாய்க்கிழமை மீண்டும் வேலை நாட்கள் என்பதால் தீபாவளியன்று பலரும் தங்கள் சொந்த ஊர் செல்ல வேண்டும் என கவலையில் இருந்தனர். அதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்தடுத்து மோதி கொண்ட கார்கள்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. பின் நடந்த சம்பவம்…..!!!!

சென்னையிலிருந்து நேற்று காரில் பா.ம.க தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி திண்டிவனம் வந்துகொண்டிருந்தார். திண்டிவனம் அருகில் ஒலக்கூர், பாதிரி எனும் இடத்தில் கார் சென்றபோது முன்னாள் சென்ற கார் திடீரென்று பிரேக் அடித்ததில், அதன் மீது சவுமியா அன்புமணி சென்ற கார் மோதியது. அதன்பின் பின்னால் பாதுகாப்பிற்காக வந்தகார் சவுமியா அன்புமணி சென்ற கார் மீது வேகமாக மோதியது. அத்துடன் அதன் பின்னால்வந்த மேலும் இரண்டு கார்களானது மோதி கொண்டது. அதன்பின் அருகிலுள்ள அவர்களுக்கு சொந்தமான […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணை நீர்வரத்து…. விநாடிக்கு 85,000 கன அடியாக நீட்டிப்பு…. அரசு தகவல்….!!!!

மேட்டூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 85 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. கர்நாடகமாநில காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்து இருப்பதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்து உள்ளது. இதில் ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து 78 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அங்கு உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், பரிசல் இயக்க மற்றும் அருவிகளில் குளிக்க தடைநீடிக்கிறது. அதேபோன்று மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் விநாடிக்கு 85 […]

Categories
மாநில செய்திகள்

நாளை தமிழகத்தில்!!… இவர்களுக்கு மட்டும் விடுமுறை…. தமிழக அரசு வெளியிட்ட குட் நியூஸ்….

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக பள்ளி,கல்லூரிகள், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஆனால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு  திரும்பும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஏதுவாக நாளை ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் அமைந்துள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்!!…. போலீசார் பலத்த பாதுகாப்பு….. டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை மக்கள்  கொண்டாடி  வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவையில் ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட பரபரப்பையும், பதற்றத்தையும் குறைப்பதற்காக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது. அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். மேலும்  பஸ் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

“புஸ்” னு போன சிட்ரங் புயல்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

இன்று (24/10/2022) மாலை சிட்ரங் புயல் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் கூறியது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான சிட்ரங் புயல் வங்கதேச கரையில் மையம் கொண்டுள்ளது. தமிழகத்திற்கு மழையை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்புயல் வடக்கு நோக்கி பயணித்துவிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு…. நாளை கோயம்பேடு சந்தை இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக கோயம்பேடு சந்தை நாளை(25/10/2022) செயல்படாது என்று காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் அறிவித்து இருக்கிறார். தீபாவளி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் கூலித்தொழிலாளர்களாகப் பணியாற்றிய பல பேரும் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்று இருக்கின்றனர். இந்த நிலையில் ஜி.டி.ராஜசேகரன் பேசியதாவது, விவசாயதொழிலாளர்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் இருப்பதால் நாளை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். அத்துடன் லாரி ஓட்டுநர்கள் மற்றும் சுமை தூக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில்…. அமைச்சர்கள் மரியாதை…. வெளியான புகைப்படம்…..!!!!

இன்று (24/10/2022) மருதுபாண்டியர்களின் நினைவு நாளை முன்னிட்டு பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், பல்வேறு அமைப்பினர் பங்கேற்று மருதுபாண்டியர்களின் சிலைகள் மற்றும் நினைவுதூணுக்கு அஞ்சலி செலுத்தினர். இவற்றில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போன்றோர் மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி எதிரொலி!…. சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

நாடு முழுதும் தீபாவளி பண்டிகைக்கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது. அந்த அடிப்படையில் தமிழகத்திலும் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக மக்கள் பட்டாசு வெடித்து வரும் நிலையில் சென்னையில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. காற்றில் நேற்று நுண்துகள்களின் அளவு 109 ஆக இருந்த நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் 192 ஆக அதிகரித்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக மணலி, ராயபுரம், வேளச்சேரி போன்ற பகுதிகளில் காற்றின் தரம் மிக அதிகமாக […]

Categories
மாநில செய்திகள்

கோவை சிலிண்டர் விபத்தில் இருக்கும் மர்மம்?…. காவல்துறை நடவடிக்கை எடுக்கணும்…. பா.ஜ.க தலைவர் கோரிக்கை….!!!!

கோவை காா் சிலிண்டர் விபத்தின் மா்மமானது விலகுவதற்கு காவல்துறை போதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ஜ.க மாநிலத்தலைவா் அண்ணாமலை கோரிக்கை விடுத்து இருக்கிறார். இது தொடர்பாக அவா் தன் டுவிட்டர் பக்கத்தில் “தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற இந்த விபத்து மிகுந்த அதிா்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது. இதனிடையில் தமிழக காவல் துறை டிஜிபி மற்றும் காவல்துறை உயா் அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு உடனே சென்று விசாரணையைத் […]

Categories
மாநில செய்திகள்

கோவை சம்பவம்: புதுப்புது தகவல் வெளிவருது…. அச்சத்தில் மக்கள்?…. -டிடிவி தினகரன்….!!!!

கோவை கார் சிலிண்டர் விபத்து தொடர்பாக புதுப் புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருப்பதாக அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.  இது தொடர்பாக அவர் தன் டுவிட்டர் பதிவில், கோவை கார் சிலிண்டர் விபத்து பற்றி புதுப் புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகை சமயத்தில் மக்களை பதற்றத்திற்கு ஆளாக்கும் விதமாக நிகழும் இத்தகைய சம்பவங்கள் கவலை அளிக்கிறது. தி.மு.க அரசின் நிர்வாகத் திறமையின்மையே […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!…. மின் சாதனங்கள் அருகே பட்டாசு வெடிக்காதீங்க…. மின் வாரியம் அறிவுறுத்தல்….!!!!

டிரான்ஸ்பார்மர், மின் விநியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்களுக்கு அருகே பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என பொது மக்களை தமிழக மின் வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது. இதுகுறித்து மின்வாரியம் விடுத்த செய்திகுறிப்பில் அகல் விளக்கு மற்றும் மெழுகுவர்த்திகளை மின்இணைப்பு கேபிள்களிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும். அதன்பின் உலோக கம்பங்களில் மின் அலங்காரம் விளக்குகள் கட்டுவதை தவிர்க்கவேண்டும். வீட்டு மின்சாதனங்களை ஒரே நேரத்தில் இயக்கி, அதிக மின்பளு ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாதவற்றை அணைக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி அன்று 17 தீ விபத்துகள்…. எங்கென்னு தெரியுமா?….. தீயணைப்புத்துறை வெளியிட்ட தகவல்….!!!!

நாடு முழுதும் தீபாவளி பண்டிகைக்கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது. அந்த அடிப்படையில் தமிழகத்தில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுதும் பட்டாசு வெடித்ததில் 17 தீ விபத்துகள் நடந்ததாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பொதுமக்கள் பட்டாசு வெடித்ததாகவும், இவ்விபத்துக்கள் அனைத்தும் சிறிய அளவிலான விபத்துகள் என்பதால் பெரிய அளவில் பொருட்சேதமோ, தீக்காயங்களோ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Categories
மாநில செய்திகள்

இந்தியன் வங்கியில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான முக்கிய ஆவணங்கள்….. பரபரப்பு……!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இந்தியன் வங்கியில் நகைக்கடை ஆவணங்கள் பல வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நகைக்கடை ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டதில் ஆவணங்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியன் வங்கியில் நகைக்கடன் ஆவணங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை சூரிய கிரகணம் எப்போது நிகழும்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாளை(25/10/2022) நிகழும் சூரிய கிரகணத்தை தமிழகத்தில் மாலை 5:14 மணிக்கு காணலாம் என்று அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். தமிழகத்தில் சூரியன் மறையும் நேரத்தில் 8 சதவீத பகுதி மட்டுமே மறைந்து கிரகணமாக காட்சியளிக்கும். சென்னையில் சூரியன் மறையும் நேரத்தில் மாலை 5:14 முதல் 5.44 மணி வரை மட்டுமே கிரகணம் தென்படும். இந்த கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது. அதுமட்டுமின்றி உலக அளவில் மதியம் 2:19 முதல் மாலை 6:32 வரை நிகழும் என்று […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்… செல்போன் டிஸ்பிளேவில் இருந்த வாசகம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இச்சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேசா முபீனின் என்ற நபர் உயிரிழந்தார். இந்த சம்பவமானது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவையில் காரில் சிலிண்டர் வெடித்தது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என உளவுத்துறை தகவல் சந்தேகமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபீனின்  செல்போன் டிஸ்பிளேவில் “நான் இறந்ததாக செய்தி கிடைத்தால் […]

Categories

Tech |