தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வளி மண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வழக்கத்தை விட அதிக அளவில் மழை பெய்கிறது. அதன் பிறகு கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கோடைகாலங்களில் கூட பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் அணைகள் மற்றும் நீர்நிலைகள் போன்றவைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டதோடு சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது. […]