கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அடுத்த லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் எட்டு நாய்களுக்கு மேல் ஒன்று சேர்ந்து, ஒரு சிறுவனை விரட்டும் காட்சி காண்போரை பதைப்பதைக்க வைத்துள்ளது. இந்த வீடியோவானது இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் அருகில் இருந்தவர்கள் உதவியதால் அச்சிறுவன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் […]