Categories
மாநில செய்திகள்

“இருப்பதை பறிப்பது தான் திராவிட மாடலா”…. திமுக மௌனம் காப்பது ஏன்….? முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை….!!!!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படியை 38 சதவீதம் வரை உயர்த்தி வணங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஓபிஎஸ் டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்தி கல்வியையும் ஒழுக்கத்தையும் போதிப்பவர்கள் ஆசிரியர்கள். இப்படி பொறுப்பு மிக்க பணியில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை…. எம்ய்ஸ் தலைவர் தலைமையில் ஜைக்கா குழுவினர் திடீர் ஆய்வு….!!!

தென் மாநிலங்களின் மருத்துவ தேவை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி பிரதமர் மோடி நேரில் கலந்து கொண்ட அடிக்கல் நாட்டினார். அந்த விழாவில் 15 மாதங்களில் பணிகள் நிறைவடையும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், மூன்று வருடங்களில் சுற்றுச்சுவர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான வகுப்பானது ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் தொடங்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

நாமக்கல் ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!

தெற்கு ரயில்வேயின சேலம் கோட்டம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், மைசூர்-மயிலாடுதுறை சிறப்பு ரயில் 18ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். மைசூரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 11:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3:30 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும். மறு மார்க்கத்தில் மயிலாடுதுறை-மைசூர் சிறப்பு ரயில் நவம்பர் 19ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் இயக்கப்படும். மயிலாடுதுறையில் சனிக்கிழமை மாலை 6:45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 12 மணிக்கு மைசூரை சென்றடையும். இந்த […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி பற்றி…. ஓபிஎஸ் விடுத்த முக்கிய கோரிக்கை….!!!!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கவேண்டும் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்த தேதியிலிருந்து அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதே தேதியில் இருந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை ஆகும். எனினும் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த ஒன்றரை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை…. நள்ளிரவே களத்தில் இறங்கிய மேயர் பிரியா…. நடந்தது என்ன…..???

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கன மழையால் ஒரு சில பகுதிகளின்‌ சாலைகளில், தெருக்களில் மழை நீர் தேங்கி நின்றாலும் சில இடங்களில் தண்ணீர்‌ஓடி செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் நேற்று நள்ளிரவை களத்திற்கு சென்றுவிட்டார். மழைநீர் தேங்கியுள்ள இடங்கள் அவற்றை விரைவாக வெளியேற்றப்படுவதற்கான நடவடிக்கை, மழை நீர் வடிகால் பணிகளின் செயல்பாடுகள் ஆகியவை ஆய்வு செய்தார். இது குறித்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு முக்கிய […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது…. வானிலை மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அத்துடன் ஒருசில மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது. நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மேலும் மோசமான […]

Categories
மாநில செய்திகள்

தமிழக நில அளவர், வரைவாளர் தேர்வர்களுக்கு…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நிலஅளவர், வரைவாளர் காலி பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவு சீட்டுகள் தயாராகி உள்ளது என்று அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தேர்வாணையம் கட்டுப்பாடு அலுவலர் கிரண் குராலா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சார்நிலைப் பணியில் அடங்கிய நில அளவர், வரைவாளர், தமிழக நகர் ஊரமைப்பு துறையில் அளவர் மற்றும் உதவி வரைவாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கை கடந்த ஜூலை 29ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை: அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட முக்கிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மழை நீர் வடிகால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் தேங்கியுள்ள நீரை மாநகராட்சி நிர்வாகத்தினர்கள் வெளியேற்றி வருகிறார்கள். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் – அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே….! உங்க ஏரியாவில் மழைநீர் தேங்கியுள்ளதா…? இதோ உதவி எண்கள் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மழை நீர் வடிகால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் தேங்கியுள்ள நீரை மாநகராட்சி நிர்வாகத்தினர்கள் வெளியேற்றி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் எங்காவது மழைநீர் தேங்கி இருந்தால் அது குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (01.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 01) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்யிலிருந்து, அக்டோபர் 31 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே! ஒரு சிறுவனை 8 நாய்கள் துரத்திய கொடூரம்…. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்…..!!!!!

இந்தியாவில் சமீப காலமாகவே பல மாநிலங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. சாலையில் செல்வோரை துரத்துவது, இரவு பணி முடிந்து செல்பவர்களை துரத்துவது, சிறுவர்களை கடிப்பது, பொதுமக்களை விரட்டி விரட்டி கடிப்பது போன்ற செயல்களில் தெரு நாய்கள் ஈடுபடுவதாக புகார்கள் வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில்  1.5 கோடி தெரு நாய் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திலும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்ததாக கூறப்படும் நிலையில் உச்சநீதிமன்றத்தில், வழக்கறிஞர் வி.கே.‌பிஜூ என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் தலைமையில் அதிமுக ஆட்சி…. புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு….. அடுத்தடுத்த அதிரடியால் கலக்கத்தில் இபிஎஸ்….!!!!!

அதிமுக கட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது. தற்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் முடிவை பொறுத்து தான் அதிமுக கட்சி யாருக்கு என்பது தெரிய வரும். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு….. 175 பேர் பாதிப்பு…. மீண்டும் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்?….!!!!!

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தொற்றினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் ஏற்பட்ட பொது முடக்கத்தினால் பலர் வேலையை இழந்து தவித்தனர். தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதால் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து இருந்தாலும், வைரஸ் தொற்று முழுமையாக நீங்கவில்லை. இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸின் உருமாறிய தொற்றான XBB வைரஸ் இந்தியாவில் பரவி வருவதாக சர்வதேச ஆராய்ச்சி அமைப்பான கிஷியாத் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றானது தமிழகம், குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, டெல்லி, […]

Categories
மாநில செய்திகள்

மக்களே இனி…. ரூ.2000 பில் வந்தால் மின்கட்டணம் முறையில் மாற்றம்?…. தமிழகத்தில் புதிய அதிரடி…..!!!!

தமிழகத்தில் மின்துறை அலுவலகத்தில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு ஐந்தாயிரம் ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக குறைப்பதற்கு தமிழ்நாடு மின்வாரியம் தற்போது முடிவு செய்துள்ளது.இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களிடம் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.அதில் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்துபவர்கள் ஆன்லைன் மூலமாகவும் இதர நுகர்வோர்கள் ஆன்லைன் மட்டும் இன்றி நேரடியாக மின்துறை அலுவலகங்களிலும் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை தற்போது உள்ளது. இந்நிலையில் மின்வாரிய அலுவலகங்களில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இது வேற லெவல்…. சர்வதேச தரத்திற்கு மாறும் எழும்பூர் ரயில் நிலையம்…. தெற்கு ரயில்வே அதிரடி….!!!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் கிட்டத்தட்ட 114 ஆண்டுகள் பழமையானது.இந்த ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுமார் 734.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பிக்கப்படும். அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் சர்வதேச தரத்தில் இருக்கும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.மேலும் புதுப்பிக்கப்படும் எழும்பூர் ரயில் நிலையம் எப்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழக மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக அதிக கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனைப் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஏடிஎம்மில் ஜெல் பசையை தடவி ரூ.28 லட்சம் அபேஸ்…. சென்னையில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை அண்ணா சாலையில் உள்ள காசினோ திரையரங்கம் எதிரே ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்காமலேயே பணம் குறைந்து வருவதைக் கண்டு அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்தில் கம்பியில் ஜெல் போன்ற பசையை தடவி இயந்திரத்திற்குள் விட்டு பணத்தை நூதன முறையில் திருடி உள்ளன. அதன் பிறகு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஏடிஎம் […]

Categories
மாநில செய்திகள்

டெட் தேர்வு…. இவர்கள் தேர்ச்சி பெற அவசியம் இல்லை…. கல்வித்துறை வெளியிட்ட புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

2010 ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு முன் வாரிய விளம்பரங்கள் வெளியிடப்பட்டு பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவசியம் இல்லை என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது . 2009 /2010 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ள அவர்களுக்கு தனியே பணி வரன்முறை செய்ய வேண்டியதில்லை. டெட்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பதவி உயர்வுக்கு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்மையில் உயர் நீதிமன்ற முத்தரவிட்டிருந்த நிலையில் இவ்வாறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இதிலிருந்தே தெரியவில்லையா”?…. திமுக தான் ஒரு கோமாளி…. பாஜக து.தலைவர் கடும் விமர்சனம்…..!!!!

பாஜக தலைவர் ஒரு அரசியல் கோமாளி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கட்சி தலைமைக்கு தெரியாமல் கோவையில் மாவட்ட நிர்வாகிகள் பந்த் அறிவிக்க முடியுமா?கட்சித் தலைவர் என்ன செய்ய வேண்டும்? கட்சி நிர்வாகிகளிடம் பேசி பந்தை ரத்து செய்ய வேண்டும் என சொல்லி இருக்க வேண்டும். ஒரு இயக்கத்தை வளர்ப்பதற்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஆனால் ஊடகங்கள் மூலம் வளர்க்க நினைப்பது என்பது மக்கள் ஏற்காத ஒரு நடைமுறை. நீதிமன்றத்தில் தனக்கும் பந்திற்கும் சம்பந்தமில்லை […]

Categories
மாநில செய்திகள்

இன்று(நவ…1) முதல் அமல்…. வாகனங்களுக்கு பேன்சி நம்பர்…. இரு மடங்காக உயர்ந்த கட்டணம்….. ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் வாகனங்களுக்கான பேன்சி நம்பர் என்ற ராசி எண்களை பெறுவதற்கு 8 லட்சம் ரூபாய் வரை கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. வாகனம் வாங்குவோருக்கு ஒதுக்கப்படும் பதிவு எண்ணுக்கு பதிலாக செல்வந்தர்கள்,தொழிலதிபர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் உள்ளிட்டோர் தங்களின் ராசிக்கு உகந்த எண்கள் அல்லது தங்களுக்கு பிடித்த மாணவர்களின் பிறந்தநாள் குறித்த எங்களை கேட்டு பெறுகிறார்கள். அதற்கு 40 ஆயிரம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த கட்டணத்தை இரு […]

Categories
மாநில செய்திகள்

Just In: மேலும் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…!!!

நவம்பர் 1 முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் இன்று மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.  அதன்படி கனமழை எதிரொலியால் புதிதாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் விடாமல் மழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

Big Alert: இன்று இந்த 15 மாவட்டங்களில் கனமழை…. உங்க ஊர் இருக்கானு செக்பண்ணிக்கோங்க…!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர்,புதுக்கோட்டை, திருச்சி. நாமக்கல், புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை: CM ஸ்டாலின் இன்று ஆலோசனை….!!!!

தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழையும் எனவும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து CM ஸ்டாலின் இன்று தலைமை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! மாதம் ரூ.1000 உதவித்தொகை வேண்டுமா…..? இன்று முதல் ஆரம்பம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நடப்பு வருடத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் மேற்படிப்பு சென்றால் அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்த திட்டமானது புதுமைப்பெண் திட்டம் என்ற முறையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கல்லூரிகளில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்துள்ளார்கள். இதுவரை 2, 3 மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டம்….? இதோ லிஸ்ட்….!!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலகl கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் இன்று மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் முதல் முறையாக இன்று(1.11.22)…. கிராமசபை கூட்டம் மட்டுமல்ல இதுவும்…. அரசு உத்தரவு….!!!!

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக  இன்று(1.11.22) தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Heavy Rain: இன்று(1.11.22) இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலகl கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(1.11.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று(1.11.22) கன மழை பெய்யும் என […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று(1.11.22) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு (நவம்பர் 1ஆம் தேதி) இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தோடு குமரி மாவட்டம் இணைந்த தினத்தை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக வருகிற 12-ம் தேதி அன்று குமரி மாவட்டத்தில் அரசு வேலை […]

Categories
மாநில செய்திகள்

கனமழை..! 4 மாவட்டங்களில் இன்று (01.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் இன்று (01.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை முதல் கனமழைக்கு […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….? திடீர் அறிவிப்பு….!!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலகl கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை கன மழை பெய்யும் என […]

Categories
மாநில செய்திகள்

“10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு”…. இந்திய உணவு துறையில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

இந்திய உணவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய உணவு துறையில் காலியாக உள்ள எம்டிஎஸ் போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு  ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மத்திய அரசு வேலைக்காக காத்திருக்கும் வாலிபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெறலாம். 1. பணி: security assistant/ executive – 1521 சம்பளம்: 21,700-69,100 வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும். 2. பணி: multi Tasking/ General -150 […]

Categories
மாநில செய்திகள்

“கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது குற்றம்”… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!!

கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என சென்னை உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை கூறியுள்ளது. நன்கொடைகளுக்கு வருமான வரித்துறை விதிக்கும் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சபிக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இதனை அடுத்து இந்த வழக்கில் பேசிய நீதிபதிகள் கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மாநில அரசுகளின் […]

Categories
மாநில செய்திகள்

சுதந்திரமாக விசாரணை செய்ய வேண்டும்…. ராம்குமார் தந்தைக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு…. மனித உரிமை ஆணையம் உத்தரவு….!!!!

ராம்குமார் வழக்கை சுதந்திரமாக விசாரணை செய்ய வேண்டும் என மாநில  மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராம்குமார் என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்  மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தனது மகன்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை புகார் அளித்தார். […]

Categories
மாநில செய்திகள்

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் ஐந்து பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபி சிஐடி ஏடிஜிபியாக அபய் குமார் சிங் மாற்றப்பட்டுள்ளார். இதனை அடுத்து சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாக சஞ்சய் குமார் ஆயுதப்படை ஐஜியாக ராதிகா போன்றோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஏபிஜிபி வெங்கட்ராமன் காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவை கூடுதலாக […]

Categories
மாநில செய்திகள்

மாநகராட்சி கூட்டம்: திமுக கவுன்சிலருக்கு எச்சரிக்கை விடுத்த மேயர்…. பரபரப்பு….!!!

ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டமானது இன்று மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநகராட்சி 8வது வார்டு உறுப்பினர் திமுக-வை சேர்ந்த ஆதி ஸ்ரீதர், தன் வார்டில் சென்ற 6 மாதமாக எந்த பணிகளும் நடைபெறவில்லை எனவும் இதுகுறித்து பல முறை மனு அளித்தும் தனது வார்டு புறக்கணிக்கப்படுவதாகவும், மற்ற வார்டுகளில் பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். அத்துடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு எந்த மதிப்புமில்லை எனக் கூறிய ஆதி ஸ்ரீதர், பல குறைபாடுகளை சுட்டிக் காட்டிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது வட இலங்கை கடற்கரையை ஒட்டி இருக்கின்ற தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 31.10.2022 கடலோர தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேகமான இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் […]

Categories
மாநில செய்திகள்

நான் தப்பு பண்ணல!… சாரி கேட்க முடியாது!…. அடாவடியாக பேசிய பா.ஜ.க தலைவர்…..!!!!

கடலூரில் சில நாட்களுக்கு முன் பா.ஜ.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்களிடம் “குரங்குகளைபபோல் ஏன் எங்கு சென்றாலும் தாவித்தாவி வருகிறீர்கள்” என பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அத்துடன் அவரை புறக்கணிக்க வேண்டும் என சமூகவலைதளங்களிலும் பலர் கூறினர். இந்த நிலையில் கோவை கார் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகிலுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குச் சென்ற பா.ஜ.க மாநிலத் […]

Categories
மாநில செய்திகள்

வேற லெவல் அறிவிப்பு!!… இனி தமிழ் மொழியிலேயே MBBS படிக்கலாம்…. அமைச்சர் தகவல்….!!!!

 தமிழ் வழியில் மருத்துவ படிப்பு தொடங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நவீன மருந்து உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டது. இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அதன் பின்னர் ஸ்டாலின் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்திற்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய  அவர் கூறியதாவது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. நம்பர் 1-ஆம் தேதி முதல் இது கட்டாயம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

 நாளை முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2019-முதல் 2021-ஆம் ஆண்டு வரை 3 ஆயிரத்தி 410  சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 82 பேர் இருசக்கர வாகன விபத்தில்  உயிரிழந்துள்ளனர். அவர்களில் 63 பேர் தலையில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துள்ளனர். மேலும் காவல் அதிகாரிகள், காவலர்கள், ஊர் காவல் படையினர் என அனைவரும் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

“பாஜகவினர் சின்ன விஷயத்தை கூட பெரிதாக்கி காட்டுகிறார்கள்”…? அமைச்சர் கே என் நேரு பேட்டி…!!!!!

திருச்சியில் உள்ள தமிழ்நாடு பேப்பர் மில்லில் அமைச்சர் கே என் நேரு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இந்த சூழலில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கூறிய போது, வெட்கத்தை விட்டு கூறுகிறேன். மத்திய அரசுக்கு தமிழக அதிகாரிகள் பயப்படுகிறார்கள் பிளவு பட்டு கிடக்கும் அதிமுகவை சேரவிடாமல் தடுத்து எதிர்க்கட்சியாக வருவதற்கு பாஜக முயற்சித்து வருகின்றது. இந்த நிலையில் அதிமுகவினரும் திமுகவினரும் அண்ணன் தம்பி மாதிரி பாஜகவினர் சின்ன விஷயத்தை கூட ஊதி பெரிதாக்கி காட்டுகின்றார்கள். அதனால் அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு பள்ளி படிப்பு உதவித்தொகை….. இன்றே(31.10.22) கடைசி நாள்…. மாணவர்களே உடனே போங்க….!!!!

மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவிப்பு. நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி சேர்ந்துள்ள மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கு வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் (இன்று) விண்ணப்பிக்க வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்தது. இந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரி”… மத்திய அரசுக்கு கோரிக்கை… அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்..!!!!!

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 லட்சம் மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்துள்ளார். மேலும் ஸ்டான்லி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்திற்கான இணையதள முகவரி அமைச்சர் திறந்து வைத்துள்ளார். இந்த நிலையில் இந்தியில் மருத்துவம் கற்றுக் கொடுப்பது போன்று தமிழிலும் கற்றுக் கொடுக்கப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு பதில் அளித்து பேசிய அவர் தமிழில் மருத்துவம்  […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசை தொந்தரவு செய்வது பாஜகவின் நோக்கம் அல்ல”…? பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி…!!!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது தமிழக அரசை தொந்தரவு செய்வது பாஜகவின் நோக்கம் அல்ல மாநில அரசிற்கு அழுத்தம் கொடுப்பது இன்னும் சிறப்பாக கடமையை செய்வதற்காக தான். கூடுதல் தாக்குதல் நடக்காமல் போலீஸ் நடவடிக்கை எடுத்தது முன்கூட்டியே மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் தவறுகள் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டிய கடமை காவல்துறைக்கு இருக்கிறது. அதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும்….. பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுங்க…. வலுக்கும் எதிர்ப்பு….!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று தேசிய முன்னேற்ற கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தேசிய முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஜி. ஜி சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடிய வருகிறார்கள். இதில் நேற்று வெளியேறிய அசல் கோளாறு குவின்ஸியின் கையைப் பிடித்துக் கொண்டு செய்த செயலால் வீடியோவில் சிக்கினார். அதுமட்டுமின்றி மைனா நந்தினி, ஜனனி ஆகியோரையும் […]

Categories
மாநில செய்திகள்

“மின் கட்டணம் செலுத்தும் நடைமுறைகளில் மாற்றம்”…? மின்சார வாரியம் வெளியிட்ட அதிரடி முடிவு…!!!!!

மின் துறை அலுவலகங்களில் நேரடியாக கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு 5 ஆயிரத்தில் இருந்து 2000 ரூபாயாக குறைப்பதாக மின்சார வாரியம் அதிரடி முடிவு எடுத்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களிடமிருந்து மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் 5000 க்கு மேல் மின்கட்டணம் செலுத்தக்கூடிய நுகர்வோர்கள் ஆன்லைன் வழியாகவும் இதர நுகர்வோர்கள் ஆன்லைன் மட்டுமல்லாமல் நேரடி மின்துறை அலுவலகங்களிலும் மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் […]

Categories
மாநில செய்திகள்

டிடிவிக்கும் தோணல…. இபிஎஸ்ஸும் செய்யல….. தேவர் ஜெயந்தியில் ஸ்கோர் செய்த ஓபிஎஸ்….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115 வது ஜெயந்தி விழா நடைபெற்றது. பசும்பொன்னின் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அதிமுக சார்பில் தங்க கவசம் அணிவித்து சிறப்பிப்பது 2014 ஆம் ஆண்டு முதல் வழக்கத்தில் இருந்து வருகிறது. 2014-16 ஆம் ஆண்டு வரை கட்சியின் பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் வங்கி லாக்கரியில் வைத்து பாதுகாக்கப்படும் தங்க கவசத்தை தேவர் ஜெயந்தி நாளில் பெற்று அதனை அவரை சிலைக்கு சாட்சி அறிய வாய்ப்பை பெற்றிருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு….. கோர்ட்டின் கிடுக்குப்பிடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் தற்போது மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடியில் செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய நண்பர்கள் ஆன தேவ சகாயம், அன்னராஜ், சகாய ராஜன், பிரபு ஆகியோர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

“கோவைக்கு பெரிய பூட்டு வைக்கும் அண்ணாமலை”…. பகீர் கிளப்பிய ராஜீவ் காந்தி….!!!!

கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து விவகாரம் அடுத்தடுத்த சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. கைது, விசாரணை, தடயங்கள் சேகரிப்பு, என்.ஐ.ஏ விசாரணை என பரபரப்பை கூட்டி வருகிறது. இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இதற்கு திமுகவின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி கடமையாக விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராஜீவ்காந்தி, அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. அரசியல் பிழைப்பிற்காக […]

Categories
மாநில செய்திகள்

“வடகிழக்கு பருவமழை”…. தமிழகத்தில் அனைத்து பாதுகாப்புகளும் தயார்…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கான திட்ட மதிப்பீடு 11.33 கோடி ஆகும். இதே நாளில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் புதிதாக மகப்பேறு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இதற்கான திட்ட மதிப்பீடு 6.89 கோடி ஆகும். இந்த 2 நிகழ்ச்சிகளிலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ்-ஓ.பி.எஸ் மாதிரி மட்டும் வாழாதீங்க…. மணமக்களுக்கு திடீரென அட்வைஸ் சொன்ன உதயநிதி ஸ்டாலின்….. வைரல்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கு மாவட்டச் செயலாளர் உதயசூரியன் எம்எல்ஏ இல்லத்திருமணம் விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, அ.தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்கும்போது, சட்டசபையில் தி.மு.க-வை யாராவது விமர்சித்து பேசினால் முதல் குரலாக உதயசூரியனின் குரல் இருக்கும். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, உதயசூரியனுக்கு திருமணம் நடத்திவைத்தார். இப்போது அவருடைய மகன் பர்னாலாவுக்கு திருமணம் நடத்திவைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். சென்ற 1990ஆம் வருடம் அப்போதைய ஜனாதிபதி வெங்கட்ராமன், கவர்னர் […]

Categories

Tech |