Categories
மாநில செய்திகள்

அடுத்த இரண்டு மணி நேரத்தில்…. நான்கு மாவட்டங்களில்…. அலர்ட் மக்களே…!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த நிலையில்  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடி , மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாக உள்ள […]

Categories
மாநில செய்திகள்

MBBS, PDS  படிப்புகளுக்கு…. கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு…!!!!

MBBS, PDS  படிப்புகளுக்கு பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடந்தது. இந்த கலந்தாய்வில் 5647 MBBS இடங்களும், 1389 PDS இடங்களும் நிரம்பியுள்ளன. மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு மாணவ ,மாணவிகளுக்கு இடங்களை ஒதுக்கி ஆணை வழங்கப்பட்டது. முதல் சுற்று கலந்தாய்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்றே கடைசி நாள் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. எம்.எம்.சி., ஸ்டான்லி, கே.எம்.சி, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதேபோல், […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (07.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 07) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகலிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“சென்னை-மைசூரு”…. தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் கிளம்பியாச்சு….. செம ஹேப்பியில் பயணிகள்….!!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம் என்று சொல்லப்படும் வந்தே பாரத் ரயில் சேவையானது இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்களை சென்னையில் உள்ள ஐசிஎஃப்எல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை வருகிற 11-ம் தேதி சென்னையில் இருந்து மைசூர் வரை தொடங்குகிறது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இன்று காலை சென்னையில் இருந்து கிளம்பிய ரயில் இரவு மீண்டும் சென்னைக்கு திரும்பும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பால் விலை உயர்வு எதிரொலி….. திடீரென அதிகரித்த தேநீர் விலை….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள காபி மற்றும் டீ வர்த்தக சங்கத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சங்கத்தின் மாவட்ட நிர்வாகி மீனாட்சி சுந்தரேஸ் பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தின் ஆவின் பால் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆவின் நிறுவனம் ஒரு அரசு சேவை நிறுவனம். அதை தனியார் நிறுவனங்களோடு ஒப்பிட்டு விலையை உயர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நிலையில் பால் விலை அதிகரிக்கப்பட்டதால் இம்மாவட்டத்தில் காபி மற்றும் டீயின் விலையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பதவி மீது அதீத ஆசையா?”…. அரசின் கைக்கூலியாக இருக்காதீங்க…. பாத்து பேசுங்க…. தமிழிசைக்கு திமுக அமைச்சர் வார்னிங்…..!!!!!

தமிழக ஆளுநர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கூட்டணி கட்சிகள் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தமிழக அரசை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்து பேசியிருந்தார். இதனால் திமுக அரசின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் ஆளுநர்களே எரிமலையோடு விளையாடதீர்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. இதில் தமிழக அரசுக்கும் தமிழக ஆளுநருக்கும் இருக்கும் பிரச்சனையில் தமிழிசை அவரது பாணியில் மூக்கை, உடம்பை, வாலை நீட்டுவதை நிறுத்திக் கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளிகளுக்கு பறந்த திடீர் உத்தரவு”…. அதிரடி காட்டிய அமைச்சர் அன்பில்…. செம ஹேப்பியில் மாணவர்கள்….!!!!!

தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசு வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து விதமான முன்னேற்றத்தை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதோடு மீட்பு பணியிலும் ஈடுபட்டுள்ளது‌. அதன் பிறகு மழையின் காரணமாக நேற்று ஒரே நாளில் 3 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பகல் கனவு பலிக்காது”…. பொம்மை முதல்வரின் ஆட்சி விரைவில் வீழும்…. மெகா கூட்டணியில் வெற்றி….. EPS அதிரடி….!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொம்மைக்குட்டை மேட்டில் அதிமுக கட்சியின் 51-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தின் 31 வருடங்கள் ஆண்ட திமுக கட்சி பிளவுபட்டுவிட்டது என ஸ்டாலின் பேசி வருகிறார். அவர் எப்படியாவது அதிமுக கட்சியை முடக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை. அதிமுக கட்சியினர் மீது எத்தனை வழக்குகள் […]

Categories
மாநில செய்திகள்

நிம்மதியா உறங்கலாம்…! தமிழகத்தில் 2.5 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக….. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்…!!!

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக 14ம் தேதி வரை கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 9ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரக்கூடும் என்றும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும் என தெரிவித்துள்ளது. இவ்வாறு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மக்களின் பாதுகாப்புக்காக சென்னையில் தாழ்வான பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 14ம் தேதி வரை கனமழை அலர்ட்….!!!!

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக 14ம் தேதி வரை கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 9ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரக்கூடும் என்றும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும் என தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ஆசிரியர்களுக்கு பண்பாடு, கலாச்சாரம் குறித்து பயிற்சி…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் 1460 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழர் பண்பாடு குறித்து தொல்லியல் துறை மூலமாக பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் விதமாக அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து ஒவ்வொரு மாதமும் பல வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அவ்வகையில் ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் துறை மூலமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. தமிழக முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.இதனிடையே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழக மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் வருகின்ற ஒன்பது மற்றும் 10 ஆகிய தேதிகளில் வங்க கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு…. கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வில் ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து பூர்த்தியான இடங்களை பொறுத்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு இந்த வாரம் இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது கலந்தாய்வு இணைய வழியில் நடைபெற்ற நிலையில் 5,647 எம்பிபிஎஸ் இடங்களும், 1,389 பி டி எஸ் இடங்களும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு மாணவ மாணவிகளுக்கு இறுதி ஒதுக்கீடு ஆணை  வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து முதல் […]

Categories
மாநில செய்திகள்

இந்த வழித்தடங்களில் ரயில் சேவை மாற்றம்…. தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தென் மாவட்டங்களில் முக்கிய ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதாவது ரயில் பாதைகள் பராமரிப்பு பணி காரணமாக நவம்பர் 7ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை மதுரை மற்றும் செங்கோட்டை இடையே ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அதனைப் போலவே மதுரை மற்றும் விழுப்புரம் விரைவு ரயில் நவம்பர் 8,10,12, 28, 39 ஆகிய தேதிகளில் மதுரை மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்கோடு மற்றும் திருச்செந்தூர் இடையே […]

Categories
மாநில செய்திகள்

எல்.இ.டி பல்பை முழுங்கிய 1 1/2 வயது குழந்தை…. மருத்துவமனையில் அனுமதி…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

சென்னை கிழக்கு தாம்பரம் எம்இஎஸ் சாலையில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 1 ½ வயதில் பூவேந்திரன் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தகுழந்தை தவறுதலாக சிறியரக எல்.இ.டி பல்பை விழுங்கி விட்டது. இதன் காரணமாக குழந்தைக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சென்ற வெள்ளிக்கிழமை அனுமதித்தனர். அதன்பின் அந்த குழந்தைக்கு உடனே மருத்துவர்கள் சிகிச்சையளிக்க துவங்கினர். இது […]

Categories
மாநில செய்திகள்

மாணவி சத்யா கொலை வழக்கு…. குற்றவாளி மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. அதிரடியில் சிபிசிஐடி அதிகாரிகள் ….!!!!

மாணவி சத்யாவை கொலை செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா தெரு காவலர் குடியிருப்பில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் ராமலட்சுமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மகளான சத்யா கடந்த மாதம் 13-ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் முன்பு தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனை கேட்டு அதிர்ச்சடைந்த சத்யாவின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த […]

Categories
மாநில செய்திகள்

“பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த நடிகர்”… இதில் அரசியல் எதுவும் கிடையாது…? நடிகர் விஷால் விளக்கம்…!!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் சென்னை மாத்தூரில் இன்று 11  ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார். அத்துடன் 51 வகையான பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை மணமக்களுக்கு வழங்கியுள்ளார். இந்த நிலையில் மணமக்களுக்கு நடிகர் விஷால் தாலி எடுத்து கொடுத்துள்ளார். அதன் பின் 11 திருமண தம்பதிகளுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மாவட்டத்தில் டீ, காபி விலை உயர்வு… வர்த்தக சங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

மதுரை மாவட்டத்தில் டீ, காபி விலை உயர்வதாக வர்த்தக சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொதுவாக ஒரு கிளாஸ் டீ விலை பத்து ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்ந்திருப்பதால் நடுத்தர மக்களை கவலையடைய செய்திருக்கின்றது. மேலும் பால் விலை, டீத்தூள், காபித்தூள், சர்க்கரை போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஆவின் பால் விலை உயர்வு எதிரொலியாக […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. ஐஐடி.யில் படிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு…. பொய்யாமொழி வழங்கிய அமைச்சர்….!!!!

பிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆணைகளை வழங்கியுள்ளார். சென்னையில் உள்ள ஐஐடியில் கடந்த மாதம் பிஎஸ் தரவு அறிவியல் படிப்பு தொடங்கப்பட்டது. இந்த படிப்பில் சேர விரும்புபவர்கள் ஜேஇஇ  நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை. இந்நிலையில் 10-ஆம்  வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணிதத்துடன் தேர்ச்சி பெற்றவர்களும், 12-ஆம்  வகுப்பு முடித்தவர்களும், கல்லூரிகளில் ஏதேனும் இளநிலை படிப்பை படித்து வருபவர்கள் என அனைவரும் இந்த படிப்பில் சேரலாம் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் அமைதியை யாராலும் சீர்குலைக்க முடியாது…. அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல்….!!!!

அமைச்சர் பி.கே. சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சென்னையில் உள்ள பட்டாளம் உயர்நிலைப் பள்ளியில் நேற்று கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மழைக்கால சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதனையடுத்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளர். . அதில் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனையடுத்து நமது சென்னை மாநகரம் 100% இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. மேலும் வரும் ஒன்பதாம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

சினிமா போல் அரசியலில் வெற்றி பெற முடியாது…. எடப்பாடி பழனிச்சாமி அட்வைஸ்…!!!!

எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிமுக கட்சியில் இடைக்கால பொதுச் செயலாளராக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர்  கூறியதாவது. நான் திரைப்படம் பார்த்தே 25 ஆண்டுகளுக்கு மேல்  இருக்கும். இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை திரைத்துறையும் அரசியலும் ஒன்றாக கலந்துள்ளது. அதிலும் திரைத்துறைக்கும் அதிமுகவுக்கும் நெருங்கிய  தொடர்பு உள்ளது.ஏனென்றால் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் அரசியலிலும் சாதித்தார்கள். இல்லையில் திரைத்துறையில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… மின் இணைப்பு துண்டிப்பு “எஸ்எம்எஸ் மூலம் நவீன மோசடி”… காவல் ஆணையர் எச்சரிக்கை…!!!!!

சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த சில நாட்களாக மோசடி கும்பல் பல புதிய யுத்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர். அதேபோல் தற்போது பொதுமக்களின் கைபேசி எண்ணுக்கு அவர்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும் என்றும்,. சென்ற மாத கட்டணம் செலுத்தப்படவில்லை எனவும், உடனே மின்வாரிய அதிகாரியை கைப்பேசி அல்லது whatsapp மூலம் தொடர்பு கொள்ளுங்கள் […]

Categories
மாநில செய்திகள்

என்னப்பா பாக்குற!…. எனக்கும் கொஞ்சம் காட்டு!…. பாகனிடம் கொஞ்சும் கியூட் யானை….!!!!!

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 56 வயதான மங்களம் யானை தன் பாகன் செல்போன் பார்த்தால், அதனை தன்னிடம் காட்ட வேண்டும் என அடம்பிடிக்கும். இந்த யானையின் க்யூட்டான செயலை பார்க்க தனி கூட்டமே இருக்கிறது. அந்த யானையானது பாகனிடம் பேசுவது மற்றும் கொஞ்சும் காட்சிகளை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறதாம். கோயில் வளாகத்தில் யானைப் பாகனுடன் ஓடிபிடித்து விளையாடுவது, பாகன் மீது பாசத்துடன் சாய்ந்து கொஞ்சுவது ஆகியவற்றை காண்பதற்காகவே கோவிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அந்தம்மா முகத்துல முழிக்க பிடிக்கல”…. அதையெல்லாம் நீங்க பெருசு படுத்தாதீங்க…. மழுப்பலாக பேசிய அண்ணாமலை…!!!!

சென்னையில் உள்ள மாத்தூர் பகுதியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். அதன் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் மேற்குவங்க ஆளுநர் இல. கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அண்ணாமலை மேற்குவங்க ஆளுநர் எனக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அதே விழாவில் மேற்குவங்க […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் புதிய உளவுத்துறை டிஎஸ்பியாக பிரபாகரன்…. 14 டிஎஸ்பிகள் அதிரடி பணியிட மாற்றம்….. டிஜிபி உத்தரவு….!!!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு 14 டிஎஸ்பிக்களை அதிரடியாக பணி மாற்றம் செய்துள்ளார். அதன்படி ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னரசு தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பகம் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். அதன் பிறகு ஈரோடு அதிரடி படை டிஎஸ்பி சுகுமார் கோவை மாநகர சிறப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆணையராகவும், கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனர் பார்த்திபன் சிங்காநல்லூர் சரக டிஎஸ்பி ஆகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பி சகாயஜோஸ் ஆலங்குளம் சரக டிஎஸ்பி ஆகவும், திருச்சி மாநகர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில் இதற்கு அனுமதிக்க வேண்டாம்….. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பாதுகாப்பாற்ற முறையில் இருக்கும் கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்து அறிவுரைகளும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளி கட்டிடங்களில் எங்கு தண்ணீர் வடிகிறது, ஊறிப்போன சுவர்கள் என அனைத்தையும் இடித்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம். அனைத்து பள்ளிகளிலும் உள்ள சுற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மாலை ஆர் எஸ் எஸ் பேரணி… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்….!!!!!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று மாலை ஆர் எஸ் எஸ் பேரணி நடைபெற இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் இன்று மாலை மூன்று மாவட்டங்களில் ஆர் எஸ் எஸ் பேரணிகள் நடைபெற இருக்கின்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறையின் உத்தரவுகளை எதிர்த்து ஆர் எஸ் எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50ற்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இன்று ஊர்வலத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

STEM திட்டம்…. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கு கல்விக்கு உதவும் வகையில் உதவித்தொகைகளை அரசு வழங்கி வருகிறது.அதே சமயம் அரசு பள்ளி மாணவர்களின் சிந்தனை மற்றும் அவர்களின் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களின் சிந்தனையை அறிவியலின் பக்கம் திருப்பி புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் உத்வேகத்தை வழங்கும் வகையில் STEM என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த ஒரு அறிவிப்பை தற்போது […]

Categories
மாநில செய்திகள்

“ஆளுநரை மாற்றுவது என்பது நடக்காத காரியம்”… அமைச்சர் எல்.முருகன் அதிரடி பேச்சு…!!!!

மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் 2 நாட்கள் பயணமாக புதுச்சேரிக்கு வந்துள்ளார். இதையடுத்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது “இந்திய அரசியல் சட்டப் படி தமிழக ஆளுநருக்கு கருத்து கூற உரிமை மற்றும் சுதந்திரம் இருக்கிறது. எனவே தி.மு.க அரசு நீட்டும் கோப்புகளில் கையெழுத்து போடும் கைப் பாவையாக ஆளுநர் இல்லை. இதனிடையில் கோப்புகளில் சந்தேகம் எழுந்தால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் குடிநீரின் தரம் எப்படி இருக்கிறது?….. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசும் பல தரப்பிலிருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. 8 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…..!!!!

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாக கூடும் என்பதால் இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில்  தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, கரூர், நெல்லை ஆகிய எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சமூக நீதி வேண்டாம் சகோதரத்துவம் வேண்டாம்”…. பேருந்தில் ஏறி மனுஸ்மிருதி நூலை வழங்கிய திருமா…. புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் ஒரு லட்சம் மனுஸ்மிருதி நூலை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த நூலை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளில் ஏறி மக்களுக்கு இலவசமாக திருமாவளவன் வழங்கினார். அதன்பிறகு எம்.பி. திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகு இந்துக்கள் மனுஸ்மிருதி நூலை தான் பின்பற்றி வருகிறார்கள். இந்த நூலை பற்றி இந்து சமுதாயத்தினரும் இந்து பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இலவசமாக வழங்குகிறோம். இந்த […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தமிழகத்தில் உள்ள முக்கிய பகுதிகள் வழியாக சிறப்பு ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா பகுதியில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த ரயில் சேலம், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் வழியாக செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு வாராந்திர சிறப்பு ரயிலானது நவம்பர் 21, 28 மற்றும் டிசம்பர் 5, 12, 19, 26 மற்றும் ஜனவரி 2, 9, 16 போன்ற தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று திமுக…. நாளை எந்த கட்சியோ?…. அமைச்சர் சேகர்பாபுவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை….!!!!

சென்னை மாத்தூரில் பாஜக சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கிய பிறகு  சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மதுரையில் கல்லூரி முன்னே ஒரு மாணவியின் பெற்றோர் அடிக்கப்பட்டுள்ளார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், மதுரையில் நடந்த வீடியோ காட்சி பார்க்கும் போது நமது சமுதாயம் எந்த அளவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

மழையில் நனையாதீங்க!… திடீரென செய்தியாளர்களிடம் அக்கறை காட்டிய பா.ஜ.க தலைவர்…. காரணம் என்ன?….!!!!!

தி.மு.க அரசு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என கடலூர் மாவட்டத்தில் சென்ற மாதம் 27ஆம் தேதி நடந்த போராட்டத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அவர் பேட்டியளித்தபோது, மரத்தின் மேல குரங்கு தாவுவது போன்று சுத்திச்சுத்தி வருவது ஏன்? என செய்தியாளர்களை அவமதிக்கும் வகையிலும், ஒருமையிலும் பேசினார். தி.மு.க மீது அண்ணாமலை தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், அவர்கள் தரப்பிலிருந்து அண்ணாமலைக்கு பதில் சொல்வது அமைச்சர்களும், செய்தித்தொடர்பாளர்களும்தான். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பாதுகாப்பாக இருங்க!, மழையில் நனையாதீங்க என […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடையில் இன்று முதல்…. 5 கிலோ அனல், 3 கிலோ தனல்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் சமையல் எரிவாயு பயன்பாட்டை கிராமப்புறங்களில் அதிகப்படுத்தக்கூடிய வகையில் ரேஷன் கடைகளில் குறைந்த எடை கொண்ட சிலிண்டர்கள் விற்பனை குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது நாடு முழுவதும் 5.32 கோடி ரேஷன் கடைகள் மூலம் படிப்படியாக விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டது. அதன்படி வெள்ளகோவில் சிவநாதபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையை தொடங்கி வைத்தார். இதற்கிடையில் வெள்ளகோவில் புதுவை […]

Categories
மாநில செய்திகள்

கும்பக்கர்ணன் போல் தூங்கியது ஏன்?…. சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி…!!!!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, அந்த குடியிருப்பில் தரைதளம் மற்றும் முதல் மாடியின் உரிமையாளர் விஜயபாஸ்கர் என்பர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 5000 சதுர அடி கட்டுமான மேற்கொள்ள திட்ட அனுமதி பெற்று விட்டு, 12,000 சதுர அடிக்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்தை‌சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விதிமுறைகளை கட்டுப்படுத்துவது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

நம்பர் 311 என்னாச்சு!…..‌ முதல்வர் ஸ்டாலின் முடிவு என்ன?…. அரசு பள்ளி ஆசிரியர்கள் திடீரென போட்ட பிளான்….!!!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில அளவிலான மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் தலைமை தாங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் சங்க வேறுபாடுகள் இன்றி போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக வேதனையிலும் வறுமையிலும் வாடி வருகின்றனர். எங்களின் ஒற்றை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரம்….. வலுவடையும் தாழ்வு பகுதி…. வெளியான புதிய எச்சரிக்கை….!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் வருகின்ற 9 ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைய சாதகமான நிலை உள்ளது. தாழ்வு பகுதி உருவானதில் இருந்து அடுத்து 48 மணி நேரத்தில் வலுவடைந்து வட மேற்கு திசையில் தமிழக, புதுச்சேரி கரையை நோக்கி நகர்ந்து வரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அடுத்த 3 மணி நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தயாரான மீட்ப படையினர்…. வெளியான தகவல்….!!!

வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியுள்ளது அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதற்கிடையில் வங்க கடலில் வருகின்ற 9 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.‌இதனையடுத்து தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையின் 2408 வீரர்கள், 5093 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது என்று தமிழக வருவாய் பேரிடர் மேலாண்மை ஆணையராகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கலாம்…. 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..!!

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்காலில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மாணவிக்கு மஞ்சள் கயிறு கட்டிய பள்ளி மாணவன் வழக்கு: குழந்தைகள் நலக்குழுவினருக்கு ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

கடலூர் சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு சகமாணவர் ஒருவர் மஞ்சள் கயிற்றை கட்டுவது போன்ற காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகியது. சென்ற செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள், 12 தினங்களுக்கு பின் சமூகவலைதளத்தில் வெளியானது. இதனையடுத்து அக்..10ஆம் தேதி இதுகுறித்து அந்த மாணவனுக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோன்று மாவட்ட குழந்தைகள் நலக் குழு, 16 வயது மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்தது. இதற்கிடையில் தன் மகளை குழந்தைகள் நலக்குழுவினர் எதற்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அச்சச்சோ! எல்லாமே போச்சே….. உறவினர்கள் செஞ்ச துரோகம்….. கை மீறி போன முக்கிய சொத்து…… கவலையில் சசிகலா….!!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் உள்ள பிரபலமான சத்யம் சினிமாஸ் நிறுவனத்தை சசிகலா 1000 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு அம்மா ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்த இளவரசி, சசிகலா உள்ளிட்ட பலர் அதிமுக ஆட்சிக்காலத்தின் போது பல்வேறு சொத்துக்களை வளைத்து போட்டதாக புகார்கள் எழுந்தது. இருப்பினும் அந்த சமயத்தில் அதிமுக ஆட்சி நடந்து கொண்டிருந்ததால் பெரிதாக கண்டு கொள்ளப் படவில்லை. அதன் […]

Categories
மாநில செய்திகள்

பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனையா…..? தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம்….!!!!

சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பிரதாப் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 1996-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையின்படி தமிழகத்தில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுவை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். அதோடு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் தொழிலில் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

“52 டோல்கேட் ஊழியர்கள் பணிநீக்கம்”…. மீண்டும் வேலையில் சேர வாய்ப்பு?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

இந்தியா ஒன்றிய துணை அமைச்சர் வி.கே சிங்கிடம் எம்.பி திருமாவளவன் மற்றும் எம்பி ரவிக்குமார் ஆகியோர் தனித்தனியே கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதன் பிறகு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 27 திட்டங்கள் ஆக பிரிக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அவுட்சோர்ஸ்  முறையில் டோல் பிளாசாக்களை துணை ஒப்பந்தம் செய்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடும் ஊழல்”….. பாஜகவில் இணையும் முக்கிய புள்ளிகள்…. எடப்பாடிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் ஓபிஎஸ் தரப்பு….!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் வைத்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியில் அம்மா ஜெயலலிதாவை தவிர யாராலும் பொதுச் செயலாளர் பதவிக்கு வர முடியாது. எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டமானது தற்போது தண்ணீரில் மிதக்கிறது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எடப்பாடி மற்றும் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் சொல்லிக் கொள்ள முடியாத […]

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழகத்தை தாக்க வரும் புயல்…. கனமழை தொடரும்….!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் 9-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய சாதகமான சூழல் உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி 48 மணிநேரத்தில் வலுவடைந்து, தமிழகம், புதுச்சேரி கரையை நோக்கி நகரும். இதனால் தமிழகத்தில் கனமழை தொடரும். மேலும், குறைந்த […]

Categories
மாநில செய்திகள்

“ஜெ. ஜெயலலிதாவின் குடும்பத்திற்கு புதிய வாரிசு”…. வாடகை தாய் முறையில் குழந்தை பிறந்ததா….? தீபா குழந்தையால் திடீர் சர்ச்சை….!!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. இவருடைய கணவர் மாதவன். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆன நிலையில், குழந்தைகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தீபா மற்றும் மாதவன் தம்பதிக்கு தற்போது சென்னையில் உள்ள வேளச்சேரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு வாடகை தாய் முறையில் குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செய்தியாளர்கள் தீபாவை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அப்போது தீபா கூறியதாவது, […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்…! தமிழக அரசு பள்ளியில் படித்த….. 87 மாணவர்கள் ஐஐடியில் படிக்க தேர்வு….!!!

சென்னை ஐஐடியில் தமிழக அரசு பள்ளி மாணவர்களை அதிகளவு சேர்க்கும் விதமாக தமிழக அரசோடு இணைந்து அனைவருக்கும் ஐஐடி என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள 58 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 192 மாணவர்களை கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்கள் போட்டி தேர்வுகளை சந்திக்க அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், அரசு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (06.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 06) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகலிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |