அதிக கன மழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இந்த அறிவிப்பை வெளிட்டுள்ளார்,
அதிக கன மழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இந்த அறிவிப்பை வெளிட்டுள்ளார்,
இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (11.11.2022) மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுமுறை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரகுபதி, மொழி வெறியை ஏதாவது ஒரு வகையில் திணித்து, அதிலே இவர்களை சிக்கவைத்து, அதன் மூலமாக இந்த ஆட்சிக்கோ, அரசுக்கோ ஆபத்துகளை உருவாக்கி விட முடியும் என்று கனவு கண்டார்களேயானால், நிச்சயமாக அந்த கனவு பலிக்காது. கனவு கனவாகவே தான் போய்விடும். ஏனென்றால் நீங்கள் ஒன்றை நினைத்தால் அதைவிட பன்மடங்கு நினைக்கக்கூடிய ஆற்றலை இந்த தமிழ் சமுதாயத்தினுடைய தலைவராக விளங்கிக் கொண்டிருக்கின்ற தலைவர் தளபதி பெற்று […]
புதுச்சேரி மாநிலத்தில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் பிறகு காலியாக உள்ள அரசு உதவியாளர் பணியாளர் பணிகள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் காலி பணியிடங்கள் குறித்த சில தவறான பொய்யான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக அமைச்சு பணியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது, அரசு துறைகளில் கடந்த 10 வருடங்களாக […]
சமீபத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதில், திரைப்பட இயக்குனர் சந்திரசேகர் குறிப்பிட்டார்கள்.. சாமானிய ஒருவர் நாட்டினுடைய முதலமைச்சராவது அவ்வளவு எளிதல்ல என்று சொன்னார். உண்மையிலேயே அது அப்படித்தான். திரைப்படத்தில் எப்படி ஒரு முத்திரை பதிக்கிறாரோ, அதேபோல தான் அரசியலிலும் முத்திரை பதிக்க வேண்டும் என்று சொன்னால், எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துவிடாது, ஒரு சிலருக்கு தான் கிடைக்கும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. திரைத்துறைக்கும் எங்கள் இயக்கத்திற்கும் […]
மும்பையை தலைமை இடமாக கொண்டு ஆல் இந்தியா கேமிங் ஃபெடரேஷன் என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் பொதுச் செயலாளர் சுனில் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வெளிநாட்டில் வசிப்பவர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆன்லைன் விளையாட்டுகளை வழங்கக் கூடாது என்று நிபந்தனை இருக்கிறது. ஆன்லைன் விளையாட்டுகளின் தீமைகள் குறித்த எச்சரிக்கை அம்சங்களோடு தான் விளையாட்டுகள் வழங்கப்படுகிறது. அதோடு விளையாட்டு களில் அடிமையாவதை தடுப்பதற்கான சோதனைகளும் இருக்கிறது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு […]
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தலில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கண்ணதாசன் அவர்களுக்கு ரொம்ப நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். இவர்கள் சொன்ன இடத்தில் நான் ரொம்ப நெகிழ்ந்து விட்டேன். இனி அந்த வீட்டிற்கு ( நெல்லை கண்ணன் ) போகும்போது என் அப்பா உட்கார்ந்த நாற்காலி, அவர் இருந்த ஊஞ்சல் அதெல்லாம் வெறுமையாக இருக்கும் போது நமக்கு கஷ்டமாக இருக்கும். நானும் என் அப்பாவும், இருக்கின்ற படம் இருக்கிறது பாருங்க.. வாய்யா […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி பட்டி அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த வெள்ளைப்பவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு குடோன்களில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் ஐந்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ள சூழலில் ஒருவர் உடல் ஆங்காங்கே தலை, உடல் பகுதி, கால் பகுதி என தென்னந்தோப்பு பகுதிகளில் சிதறி கிடக்கின்றன. இதில் வடக்கம்பட்டியை சேர்ந்த அமாவாசி, வல்லரசு, […]
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவலுக்கு முன்பு இருந்தது போல வகுப்புகள் நேரடி முறையில் நடைபெறுகிறது. இந்நிலையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம் போல தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு பொது தேர்வு 2023 ஆம் […]
தமிழகத்தில் கடந்த வருடம் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வாரம் தோறும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொள்வதற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி வெற்றி பெற்ற மாணவர்களை கடந்த வருடம் டிசம்பர் மாதம் துபாய் அழைத்த செல்வதற்கு பள்ளி கல்வித்துறை திட்டமிட்டது. ஆனால் ஒமிக்ரான் வைரஸ் தொற்றின் பாதிப்பு […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, சில நேரத்தில் காவல்துறை கடுமையாக தான் இருக்கணும். பாரதிய ஜனதா கட்சி காவல்துறையினர் கடுமையாக்கும் போது கூட இருப்போம். காவல்துறை கடுமையாச்சுனா அதுக்கு ஒரு குரூப்… ஐயோ காவல்துறை ஏன் கடுமையா நடந்துக்கிறாங்க ? கடுமையா நடந்துக்க கூடாது அப்படின்னு… மனித உரிமை மீறல் என ஒரு குரூப் வருவாங்க. இந்த விஷயத்தில் காவல்துறை கடுமையாக இல்லை என்றால், நாளைக்கு நீங்களும், நாங்களும், சாமானிய பெண்கள் கூட […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் வீர தீர செயல்கள் புரிபவர்கள் மற்றும் திறமை, துணிவு கொண்டவர்களை பாராட்டும் விதமாக சுதந்திர தின விழாவின்போது கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து குடியரசு தின விழாவின்போதும் அவர்களுக்கு தமிழக அரசு அண்ணா பதக்கம் என்ற விருதை வழங்குகின்றது. அவ்வாயையில் நடப்பு ஆண்டிற்கான அண்ணா பதக்கம் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, இலவச மின் இணைப்புக்கு ஏறத்தாழ 21 வருடங்களாக பதிவு செய்து காத்திருந்த விவசாயிகள்.. இலவச மின் இணைப்பு கிடைக்குமா ? கிடைக்காதா ? என்ற நிலையிலிருந்தவர்களுக்கு ”அனைவருக்கும் கிடைக்கும்” என்று நம்பிக்கையை உருவாக்கி, அதை செயல்படுத்தி இருக்கக்கூடிய முதலமைச்சர் மாண்புமிகு தலைவர் அவர்கள். எனவே ஒரு மகத்தான திட்டம் ஒட்டுமொத்தமா விவசாயிகளுக்கு… எங்களுடைய மின்வாரிய அலுவலகத்தில் இருந்து இந்த 50,000 விவசாயிகளை தொடர்பு கொண்டு, உங்களுக்கான இலவச மின் […]
மதுரை திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பட்டாசு வெடித்ததில் அந்த கட்டிடமே சுக்கு சுக்காக சிதறியது.
RSSயை எதிர்க்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி அச்சிட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருமாவளவனுக்கு வேலை இல்லை என்று பார்க்கின்றேன். மனுஸ்மிருதி அப்படிங்கறது எதோ ஒரு காலகட்டத்தில், எங்கேயோ எழுதினாங்க. அதில் பாதி பொய்யை திரித்து இருக்கின்றார்கள்.அவுங்க அவுங்க எழுதி இருக்காங்க. எப்போதும் மனுஸ்மிருதியில் உள்ள கருத்துக்களை பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக் கொள்ளாது என்று சொன்ன பிறகு, அந்தந்த காலகட்டத்தில் சில […]
எல்லைப் பகுதியில் Digital Re-Survey செய்து, தமிழகத்திற்கு சொந்தமான கிராமங்களை ஆக்கிரமிக்க கேரளா அரசு முயற்சிப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு வாரமாக நடைபெறும் இந்த அத்துமீறலை திமுக அரசு தடுக்கவில்லை. ஆகவே இனியாவது ஸ்டாலின் அரசு விழித்துக் கொள்ளுமா?, இல்லை தம் கூட்டணி கட்சி ஆட்சி நடத்தும் கேரளாவிற்காக தமிழக நிலப்பகுதியை தூங்குவது போல நடித்து விட்டுக்கொடுக்கப் போகிறார்களா? என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். முன்னதாக மறுஅளவீடு செய்வதாக தமிழகத்திற்கு சொந்தமான நிலங்களை கேரள அரசு […]
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 11-ம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு அவருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக பாஜகவினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி அருகே சாணம்பட்டி பகுதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை புரிந்திருந்தார். அண்ணாமலையின் வருகையை முன்னிட்டு பாஜக கட்சியினர் ஒரு பேனர் வைத்திருந்தார்கள். அந்த பேனர் தற்போது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி கேலிக்குள்ளாகியுள்ளது. அதாவது அண்ணாமலையை வரவேற்பதற்காக […]
தமிழகத்தில் வருடம் தோறும் பருவமழை காலத்தின் போது மேட்டூர் அணையில் இருந்து உபநீர் திறந்து விடப்படும். இந்த உபரி நீரானது வீணாக கடலில் கலக்கிறது. இதனால் திறந்து விடப்படும் உபரி நீரை ராட்சஷ குழாய்கள் மூலம் சேலம் கிழக்கு பகுதியில் உள்ள பகுதிகளுக்கு திருப்பி விட்டால் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அதன்படி கெங்கவல்லி, பெத்தநாயக்கன் பாளையம், தலைவாசல், வாழப்பாடி மற்றும் ஆத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் […]
நாளை பிரதமர் மோடி தனி விமானத்தில் மதுரை வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் கடந்த 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் படித்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். மேலும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டத்தை பிரதமர் வழங்குகிறார். இதற்காக தனி விமானத்தில் நாளை மதுரை வருகிறார். இதனால் மதுரை விமான நிலையத்தில் நேற்று முதல் 5 அடுக்கு பாதுகாப்புகள் […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும் போது, நாங்கள் மக்களுக்கு விநியோகிக்கும் மநுஸ்மிருதி எனும் நூல், திராவிட இயக்கங்களால் உருவாக்கப்பட்டது, எழுதப்பட்டது அல்ல, பெரியார் இயக்கங்களால், அம்பேத்கர் இயக்கங்களால், இடதுசாரி இயக்கங்களால் மொழி பெயர்க்கப்பட்டவை அல்ல. நாங்கள் மூன்று புத்தகங்களை குறிப்பு எடுத்து, ஒப்பீடு செய்து பார்த்தோம். அந்த மூன்று புத்தகங்கள் ராமானுஜாச்சாரியார்… 1865 டிசம்பரில் எழுதிய மனுதர்ம சாஸ்திரம். ராமானுஜ ஆச்சாரியார் இடதுசாரி இயக்கத்தை சார்ந்தவர் அல்ல, கிறிஸ்தவர் அல்ல, முஸ்லிமல்ல, திராவிட இயக்கத்தை […]
திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சி மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என்பதால் சென்னை வானிலை மையம் “ரெட் அலர்ட்” விடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு. விழுப்புரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை மிக கனமழையும், இன்று சென்னை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று எச்சரித்துள்ளது.
கால்வாய்களில் குப்பைகளை கொட்ட கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் சில இடங்களில் தண்ணீர் தேங்கிது. அதிலும் குறிப்பாக ஓட்டேரி நல்லான் கால்வாயில் மழை நீர் செல்லாததால் கால்வாயை தூர்வார மாநகராட்சி முடிவு செய்வது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கால்வாயில் பொதுமக்கள் கொட்டிய குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறாதது தெரியவந்தது. இதனையடுத்து கூடுதல் தலைமை […]
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. கோவையில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் 23-ஆம் தேதி கார் வெடிப்பு நடந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த முபின் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முகமது அசாருதின், அப்சர்கான், முகமது தல்கா , முகமது ரியாஸ், முகமது நாவாஸ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு […]
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னையில் இன்று கனமழையும் 11 மற்றும் 12ம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 13ஆம் தேதி ஓரிரு பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று அநேக இடங்களிலும் 11,12,13ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நவம்பர் 12ஆம் தேதி நீலகிரி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட […]
தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தமிழக ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது இலவச வேஷ்டி, சேலை மற்றும் மளிகை பொருட்கள், பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பாக 21 மளிகை பொருட்களோடு ஒரு முழு கரும்பு மற்றும் இலவச வேஷ்டி, சேலை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பொருட்கள் அனைத்தும் தரம் அற்றதாக […]
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னையில் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தென்மேற்கு திசையில் உருவாகி இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது அடுத்து வரக்கூடிய அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும், 48 மணி நேரத்திற்குள் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகம் – புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை […]
திமுக சார்பில் திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக, இந்தி பேசினால் மட்டுமே எதிர்காலம் என்று பொய் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்தி பேசக்கூடிய மக்கள் தமிழகத்திற்கு அதிக அளவு வேலைக்கு வருகிறார்கள். அதிமுகவை குறை கூற போவதில்லை ஏனென்றால் பெரும்பாலான அதிமுகவினர் திமுகவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் எடப்பாடி பழனிச்சாமியும் வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் பதவி கொடுத்தவர்களை காட்டி கொடுத்த அவரை திமுக சேர்த்துக் கொள்ளாது. அதிமுக […]
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியிலுள்ள வானவில் நகரில் வசித்துவரும் தொழில்நுட்ப நிபுணர் உமாசங்கர் என்பவரின் மகள் வினிஷா எஸ்கேபி வனிதா இன்டர்நேஷனல் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். பருவநிலை பிரச்சினைகளுக்கு வருங்காலத் தலைமுறையினர் கூறும் புது தீர்வுகளை கண்டெடுக்க பருவநிலை விருது 2016ல் துவங்கப்பட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உடைய நடுவர் குழு சென்ற 2020ஆம் வருடம் விருது பெறுபவர்களை தேர்ந்தெடுத்தது, இவ்விருது பெறும் மாணவருக்கு டிப்ளமோ சான்றிதழ் பதக்கம் மற்றும் 8.5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கி […]
தமிழகத்தில் சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒருநாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்டு இருந்த மின்கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “2022-2023 வருடத்திற்கான திருத்தியமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10/09/2022 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின் அடிப்படையில் சிறு-குறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி இருப்பதால், ஒரு நாளின் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின் கட்டணத்தை (Peak Hour Charges) குறைக்குமாறு பல தொழில்நிறுவனங்கள் […]
காதலனை விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் காதலி சொன்ன பரபரப்பு வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் மூறியன்கரை பகுதியைச் சேர்ந்த ஷாரோராஜ்(23) என்பவரும், குமரி மாவட்டம் ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா(22) என்பவரும் காதலித்து வந்த நிலையில் கிரீஷ்மாவிற்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் நிச்சயம் நடைபெற்றுள்ளது. இதற்கிடையே கிரீஷ்மா, ஹாரோன்ராஜை வீட்டிற்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்தால் அவருடைய உடல் நலம் மோசம் அடைந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் […]
ஆன்லைனில் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. அக்டோபர் மூன்றாம் தேதி பிறப்பித்த இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, மும்பையை தலைமையிடமாக கொண்ட ஆல் இந்தியா கேம் பெடரசன் ஆப் என்று அமைப்புச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது. இந்த வழக்கு இன்றையதினம் பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இதேபோன்று தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. எனவே அதனுடன் சேர்த்து விசாரிப்பதாக வழக்கை […]
2023 ஆம் வருடம் பொங்கல் பரிசு தொடர்பாக தமிழக அரசு புதிய அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வேளாண்மைக்கு ஆதாரமாக உள்ள சூரிய பகவான், காளை,பசு மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் பொங்கல் வைத்து படையல் இட்டு வழிபடுகின்றனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்காங்க. பழனிச்சாமி உடைய திருவிளையாடலுக்காக கோவப்பட்டு திமுகவை ஆட்சியிலே கொண்டு வந்தோம். இப்போது பழனிச்சாமிக்கும் – ஸ்டாலினுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. ரெண்டு பேருமே ஆணவத்தோட உச்சத்தில இருக்காங்க. ஆட்சி, அதிகாரம் கையில் இருந்தா அவங்களோட பாடி லாங்குவேஜை வேற மாதிரி இருக்கு, மக்கள் அதை சரியான நேரத்தில் பாடம் புகட்டு வாங்க. சட்டமன்ற பொது தேர்தல் […]
வேலூர் தனியார் மருத்துவ கல்லூரி விடுதியில் ராங்கில் ஈடுபட்ட சீனியர் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. வேலூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவ கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததாக வீடியோ ஒன்று வெளியானதால் ராகிங்கில் ஈடுபட்ட ஏழு சீனியர் மாணவர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த சம்பவம் பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் முதற்கட்ட விசாரணைக்கு பின் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் கூறியுள்ளார். […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தேர்தல் நேரங்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்னெவெற்றால் ? பதிவு செய்து காத்திருக்கக்கூடிய விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற கூடிய வகையில், ஏறத்தாழ 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்து காத்திருந்தார்கள். இவர்களில் முதலாம் ஆண்டு ஒரு லட்சம் விவசாயிகளுக்கு நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த ஆண்டு 50,000 விவசாயிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, இணைப்பு வழங்குவதற்கான பணிகள் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, மதுரையில் கல்லூரி முன்பு மாணவர்கள் செய்த அராஜக வீடியோ காட்சியை பார்க்கும் பொழுது நமது சமுதாயம் எந்த அளவுக்கு கெட்டுப் போய் இருக்கு அப்படிங்கறது அந்த வீடியோ காட்சி பார்க்கும் போது தெரிகிறது. பயம் கிடையாது. துணிவாக ரோட்ல இருக்காங்க. காவல்துறையின் மீது எள்ளளவு கூட பயமில்லை. ஒரு பெண்ணை மிக தவறாக பொதுஇடத்தில் அத்தனைபேருக்கும் முன்னாடி அந்த கயவன், மாணவன் என்கின்ற போர்வையில் நடந்து கொள்கிறார்கள். […]
தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனுஸ்மிருதி நூல்களை பொதுமக்களுக்கு விலை இல்லாமல் விநியோகம் செய்தோம். மனுஸ்ருதியை 1927-ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ”தீ வைத்து” கொளுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தந்தை பெரியார் அவர்களும் குடியாத்தம் மாநாட்டில் ”மனுஸ்மிருதியை” கொளுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, அதை தொடர்ந்து திராவிட கழகத்தினர் ஆங்காங்கே மனுஸ்மிருதிகளை தொடர்ந்து பல ஆண்டுகளில் கொளுத்திருக்கிறார்கள். மனுஸ்மிருதி என்பது இந்து […]
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் கார் வெடித்து ஜமேஷா முகின் என்பவர் உயிரிழந்தார். அந்த வழக்கில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கை என் ஐ ஏ விசாரித்து வரும் நிலையில் கோவை கார் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழக முழுவதும் 45 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் ஐந்து இடங்களில் போலீஸ் ஆர் தீவிர சோதனை நடத்திவரும் நிலையில் […]
நாமக்கல்லில் இன்று (நவம்பர் 10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகலிலிருந்து, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி, பெயர் திருத்தம் போன்ற பல்வேறு பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். அந்த வகையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை சேர்க்கும் பணிகளும் நடைபெற்றது. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், ஒருங்கிணைந்த மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலும் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய […]
தமிழகத்தின் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட். இவர் கடந்த 2006-11 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தின் போது அரசுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 1989-ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஜாபர் தமிழக காவல்துறையில் சிபிசிஐடி டிஜிபி மற்றும் உளவுத்துறை ஐஜி என பல உயர் பதவிகளில் வகித்துள்ளார். இவர் உளவுத்துறை அதிகாரியாக இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி வீட்டு வசதி வாரியத்திடமிருந்து நில ஒதுக்கீடு பெற்றுள்ளார். அதன்படி சென்னையில் உள்ள திருவான்மியூரில் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 23-ஆம் தேதி கார் வெடி விபத்து நடந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீன் என்பவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அதன்பிறகு இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் கோவையில் நாச வேலைகளுக்கு ஜமேஷா தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஜமேஷாவின் கூட்டாளிகள் 6 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். தமிழகத்தில் தீபாவளி […]
தமிழகத்தில் கலந்த அக்டோபர் 31ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் கடந்த வாரங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வங்க கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இந்த தாலு பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதால் நவம்பர் 13ஆம் தேதி வரை மிக கனமழைக்கு […]
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பணங்கள் பூங்கா, வெங்கட்நாராயணா சாலை மற்றும் நந்தனம் பகுதிகளில் நவம்பர் 12ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சாலையில் தற்போது உள்ள ஒரு வழி பாதையில் இருந்து மாற்றப்பட்டு பனகல் பூங்காவில் இருந்து செல்லலாம். தணிகாசலம் சாலை சந்திப்பிலிருந்து பனகல் பூங்காவிற்கு செல்லும் வாகனங்கள் தணிகாசலம் சாலை வெங்கடாநாராயண சாலை வழியாக பனகல் பார்க் […]
தமிழகத்தில் தகுதியான நுகர்வோருக்கு பால் அட்டை வழங்க வேண்டும் என்று ஆவின் நிர்வாகத்திற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆவின் மூலமாக கொழுப்பு சத்து அடிப்படையில் பால் சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மற்றும் நீலம் ஆகிய வண்ணங்களில் தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதில் சிவப்பு நிற பால் பாக்கெட் 500 மி.லி 34 ரூபாய் வரையும், ஆரஞ்சு நிற பால் பாக்கெட் 30 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டது. இதுவே பால் அட்டைதாரர்களுக்கு 23 ரூபாய்க்கு வழக்கம் போல […]
தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களில் பயிலும் 2000 மாணவர்களை உத்திரப்பிரதேசத்தின் காசிக்கு மத்திய அரசு இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்காக பாரதிய பாஷா சமிதி என்ற குழுவை மத்திய கல்வி அமைச்சகம் உருவாக்கிய நிலையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் வாரணாசியில் உள்ள காசி நகருக்கும் தமிழ் சமூகத்திற்கும் பல நூற்றாண்டுகளாக உள்ள நெருங்கிய தொடர்பை மறு உருவம் செய்து அதனை கொண்டாடுவதற்கான நிகழ்ச்சிகளுக்கு இந்த குழு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல்கலைக்கழகங்களில் பயிலும் […]
இந்தியாவில் பொதுமக்களின் கஷ்டங்களை தெரிந்து கொண்டு அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி சிலர் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும், அதன் மூலம் உங்களுடைய கடனை எல்லாம் அடைத்து விடலாம் என்றும் கூறுவதால் மக்களும் அதை நம்பி வெளிநாட்டுக்கு வேலை செல்ல வேண்டும் என்று முடிவு செய்து விடுகின்றனர். ஆனால் வெளிநாட்டு வேலை சிலருக்கு நன்மையாக அமைந்தாலும், பலருக்கும் அது பாதகமாகவே அமைந்துவிடுகிறது. சமூகத்தில் […]
கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கோவையில் காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீட்டில் இந்த சோதனை நடந்து வருகிறது. கோட்டைமேடு, ரத்தினபுரி, உக்கடம் ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
தாராபுரம்: தாராபுரம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகள், வீராட்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், வண்ணாபட்டி, உப்பார்டேம், பஞ்சப்பட்டி, சின்னப்புத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் தடை செய்யப்படும். தாராபுரம் கோட்டம் செலாம்பாளையம் துணை மின்நிலைய பகுதியில் மாதாந்திரபராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் […]
முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை முதல்வர் அவர்கள் வழங்க இருக்கிறார். முதல்வர் வருகையை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று ஒரு நாள் மட்டும் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விதிகளை மீறி ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டால் சட்ட விதிகளின்படி காவல் துறையால் கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.