Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு…. மிதமான மழை நீடிக்கும்…. வானிலை ஆய்வு மையம் வெளிட்ட தகவல்….!!!!!

கேரள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை பெய்யக்கூடும். நவம்பர் 20-ஆம் தேதியில் திருவாரூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் அடுத்த 48 […]

Categories
மாநில செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேர் கைது…. இலங்கை கடற்படை அட்டூழியம்..!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து இன்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கடலுக்கு சென்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டி அடித்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு விசைப்படைகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், அந்த […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. இனி சென்னையில் இங்கதான் குடியரசு தின விழா நடைபெறும்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் குடியரசு தின விழா கொண்டாடப்படும் இடம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள கடற்கரை சாலையில்  காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்பாக ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில்  குடியரசு தின விழா நிகழ்வு நடத்தப்படும் காந்தி சிலை வளாகம் மிகவும் பாரம்பரியமானது. இதனையடுத்து  வெண்கலத்தாலான காந்தி சிலையை 1959-ஆம் ஆண்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

இனி நீங்கள் நடவடிக்கை எடுக்கக் கூடாது…. பாடலாசிரியர் சினேகன் மீது தொடரப்பட்ட வழக்கு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பாடலாசிரியர் சினேகன் மீது தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாடலாசிரியரான சினேகன் தன் பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பொதுமக்களிடமிருந்து பணம் வசூலித்து மோசடி செய்வதாக சினேகன் ஆகஸ்ட் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து ஜெயலஷ்மி சினேகன் தன் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி  இருப்பதாக கூறி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு…. தோட்டக்கலை துறை வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோட்டக்கலைத்துறை புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது 100% மானியத்தில் பழங்கள் மற்றும் காய்கறி தோட்டம் அமைத்து தரப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மாணவர்களிடையே பழங்கள், காய்கறிகள், மூலிகைச் செடி ஆகியவற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. ரத்து செய்யப்பட்ட 14 விமானங்கள்…. என்ன என்ன தெரியுமா?…. முழு விவரம் இதோ….!!!!

18-ஆம்  தேதி வரை விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதிலும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பேர் அந்தமான் தீவுக்கு சுற்றுலா செல்கின்றனர். இதனால் அந்தமானின் போர்ட் பிளேயர் விமான நிலையத்திற்கு  நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்து செல்லும். இந்நிலையில் விமான நிலையத்தின்  ஓடுதளத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்  காரணமாக விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களும் வருகின்ற 18-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் […]

Categories
மாநில செய்திகள்

“திராவிடம் ஒரு இனமே இல்லை”…. இதுதான் பண்டைய வரலாறு!….. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு….!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு நிகழ்ச்சியில் திராவிடம் ஒரு இனமே இல்லை என்று பேசியிருக்கிறார். ஆங்கிலேயர் காலத்துக்கு பிறகும் திராவிட இனம் என்று ஆங்கிலேயர் குறிப்பிட்டதை பின்பற்றுவது தவறானது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது “திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டது தவறு. விந்திய மலைக்கு தெற்கே இருப்பது பஞ்ச திராவிடபகுதி, வட பகுதி பஞ்ச ஆரியபகுதி என்பதே பண்டைய வரலாறு. வடபகுதியில் இருப்பவர் தெற்கே வருவதும் […]

Categories
மாநில செய்திகள்

“சிதம்பரம் கோயிலை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்படவில்லை”…. அமைச்சர் சேகர்பாபு ஸ்பீச்….!!!!

சிதம்பரம் கோவிலை கைப்பற்றும் நோக்கில் இந்துசமய அறநிலையத்துறை செயல்படவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது,  “சட்டத்திற்கு புறம்பாக சிதம்பரம் கோவில் நிர்வாகம் செயல்பட்டதை கண்டறியப்பட்டால் அறநிலையத் துறையின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிதம்பரம் நடராஜர் கோவில் பட்டா தொடர்பான வழக்கில் தீட்சிதர் தரப்பு சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டால் அரசு கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளும். அதுமட்டுமின்றி பழமையான இந்த திருக் கோவிலில் இருக்கிற, பாரம்பரிய மன்னர்களால் வழங்கப்பட்ட நகைகள், […]

Categories
மாநில செய்திகள்

சிதம்பரம் கோயிலை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்படவில்லை…. அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை…..!!!!

சிதம்பரம் கோவிலை கைப்பற்றும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை செயல்படவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சட்டத்திற்கு புறம்பாக சிதம்பரம் கோவில் நிர்வாகம் செயல்பட்டதை கண்டறியப்பட்டால் அறநிலையத்துறையின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் நடராஜர் கோவில் பட்டா தொடர்பான வழக்கில் தீட்சதர் தரப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டால் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

“அவர் சொன்னார் – இவர் சொன்னார் என்று சொல்ல வேண்டாம்” …. முதல்வர் ஸ்டாலின்….!!!!

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 16ம் தேதி நாடு முழுவதும் தேசிய பத்திரிகையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவ்வகையில் தமிழக முதல்வரான ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ட்விட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். இந்த பதிவில், அவர் சொன்னார் – இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்கு சொல்வதே இதழியலின் அறம்! அறம் சார்ந்து செயல்படும் இதழியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

4000 கல்லூரி பேராசிரியர் பணியிடங்கள்…. விரைவில் டிஆர்பி தேர்வு…. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் முதல் தாள் அதாவது இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் அடுத்ததாக இரண்டாம் தாள் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நான்காயிரம் கல்லூரி பேராசிரியர்களை தேர்வு செய்ய விரைவில் டிஆர்பி தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்…. சென்னையில் போலீஸ் காருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்….!!!!

தமிழகத்தில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் சில அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய அபராதம் தொடர்பான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அவ்வகையில் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. சாலை விபத்துக்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. அதனால் விபத்துக்களை குறைக்கும் நோக்கத்தில் தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.போக்குவரத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் எம்.எல்.ஏ?….. காங்கிரஸ் தலைமை திடீர் முடிவு….!!!

நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனை கட்சியிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு ரூபி மனோகரணே காரணம்.அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்படுவார் என புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்…. இறந்தவர்களின் குடும்பத்திற்கு கூடுதல் நிதி…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…..!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவரும் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக் கோரி சென்ற 2018 ஆம் வருடம் தூத்துக்குடி சாத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, பல சமூகஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் தான் மக்கள் போராட்ட முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. அதன்பின் காவல்துறை போராட்டத்தை கைவிட பல முறை எச்சரித்தும், பொதுமக்கள் கேட்காததால் அங்கு துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. அவ்வாறு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு முடிவுகள்…. ஒளிவு மறைவால் திடீர் சந்தேகம்….. திமுக அரசிடம் ஓபிஎஸ் சரமாரி கேள்வி….!!!!

அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் தேர்வு முடிவுகளில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் தமிழகத்தில் காலியாக இருக்கும் அரசு பணியிடங்கள் மற்றும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப  நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை 10 விழுக்காடு பணியிடங்களை கூட நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு அரசு தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

பிரியா மரணமடைந்தது எப்படி?…. “6 வாரத்திற்குள் பதில் வேண்டும்”…. மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு..!!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக 6 வாரங்களுக்குள் சுகாதாரத்துறை செயலாளர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கால்பந்து வீராங்கனையான சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரியாவின் உடைய மரணமானது பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த வருத்தத்தையும், அந்த மரணத்திற்குரிய கேள்வியையும் எழுப்பியிருந்தது. இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணைய தலைவர் எஸ் பாஸ்கரன் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் தமிழ்நாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தீர்மானம் நிறைவேற்றம்: தமிழக MLA நீக்கம் – செம ஷாக்கில் DMK கூட்டணி …!!

சென்னையில் நேற்று காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு  ரூபி மனோகரன் காரணம் எனக் கூறிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்எல்ஏ ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. ரூபி மனோகரன் கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேறியது. நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய தீர்மானம் நிறைவேற்றபட்டது. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியமில்லை: எடப்பாடி அதிரடி பேட்டி

செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னைக்கு வரும்போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அண்ணா திமுக என்பது தமிழகத்தில் பிரதான ஒரு எதிர்க்கட்சியாக இன்னைக்கு இருக்கிறது. 37 ஆண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்தது. பாரதி ஜனதா கட்சி ஒரு தேசிய கட்சி. அமித் ஷா, பாரத பிரதமர் சென்னைக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு வந்தாலும் எப்ப பார்த்தாலும், எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்”…. எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளில் திடீர் டுவிஸ்ட்….. நீதிமன்றத்தின் புதிய உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து அவசர சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையைச் சேர்ந்த அகில இந்திய விளையாட்டுக் கூட்டமைப்பு உள்ளிட்ட சில நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது அவசர சடை சட்டம் இயற்றப்பட்ட நிலையில், அந்தச் சட்டம் அமலுக்கு வரும் தேதி குறிப்பிடப்படவில்லை என்பதால் வழக்கு தொடர எந்தவித காரணமும் இல்லை என்று அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கௌரவ ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வா…? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!

தமிழக அரசு மாணவர்களுடைய கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறது. அதன் முதற்கட்டமாக மாணவர்களுடைய அறிவை வளர்க்க கற்பிக்கும் ஆசிரியர்கள் சிறப்பானவர்களாகவும், தரமான கல்வி அறிவை பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் முதல் கல்லூரி பேராசிரியர் வரை அனைவருக்கும் தகுதி தேர்வு பிரிவு வாரியாக நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ ஆசிரியர்கள் நியமனம் குறித்த கேள்விக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, கலை அறிவியல் […]

Categories
மாநில செய்திகள்

CMRL புதிய மாற்றம்….. தி. நகர் பகுதியில் திடீர் ஆபத்து…. மின்னல் வேக பயணத்தால் உயிர் பயத்தில் பாதசாரிகள்……!!!!!

சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன் பிறகு 118.9 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மெட்ரோ ரயில் திட்டமானது தற்போது 3 வழித்தடங்களில் அமைக்கப் பட்டு வருகிறது. இந்தப் பணிகள் 2026-ம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், 63,246 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தி.நகர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

காருக்கு பெட்ரோல் போட சொன்னா இப்படி பண்ணி வச்சிருக்காங்க?… ஷாக்கான ஓட்டுநர்…. கோவையில் பரபரப்பு….!!!!

கோவை சித்தா புதூர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது கார் கால் டாக்ஸி அப்பகுதிகளில் ஓடி வருகிறது. அந்த கார் ஓட்டுநராக ரமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை ஆவாரம்பாளையம் பகுதியிலுள்ள கோகோ cbe city எனும் பங்கில் 39.90 லிட்டர் பெட்ரோலை ரூ. 4,119-க்கு போட்டுள்ளார். இதையடுத்து ஆவாரம்பாளையம் பகுதியில் செல்லும் போது இந்த கார் பாதி வழியில் நின்றுள்ளது. இதனால் அங்கு இருந்த மெக்கானிக்கை அழைத்து காரை சோதித்த போது […]

Categories
மாநில செய்திகள்

எடப்பாடி ஆட்சியில் ஆயிரம் கோடி செலவு செய்து என்னாச்சு?…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி பேச்சு….!!!!

சென்னை தண்டையார் பேட்டை மண்டல அலுவலகத்தில் வட கிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட நீர்நிலைப் பகுதிகளை சேர்ந்த 10ஆயிரம் குடும்பங்களுக்கு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சியை இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி போன்றோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசியதாவது, சென்ற 2016ம் வருடம் தேர்தல் பரப்புரையில் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆயிரம் கோடி செலவு செய்து மழைநீர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..!!

 கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழ்நாடு சுகாதாரம், குடும்ப நலத்துறை செயலர் 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அறிக்கை சமர்ப்பிக்க தவறினால் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு பொங்கலுக்கு வேஷ்டி, சேலை, ரொக்கபரிசு….. படு ஜோராக தயாராகும் ரேஷன் கடைகள்….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி விமர்சையாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அரசு சார்பாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தமிழக அரசு வேஷ்டி, சேலைகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் இலவச வேஸ்டி, சேலைகள் உற்பத்திக்கு முதல் தவணையாக 243.96 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிக்கப்பட்டு வரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில்களில்…. திருப்பணி நடந்தாலும் “இதற்கு அனுமதி”…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பந்தமான கணக்கு வழக்குககளை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோவில் தீட்சிதர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். ஆனால் கோவில் தீட்சிதர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். அதோடு நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறை நடவடிக்கைக்கு உட்படுத்த சட்டத்தில் இடம் இல்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதவர்களால் உருவாக்கப்பட்டது அல்ல என்றும் […]

Categories
மாநில செய்திகள்

“நிலத்தை பறிப்பது வயிற்றில் அடிப்பதற்கு சமம்”…. கடும் கண்டனத்தை தெரிவித்த ஓபிஎஸ்….!!!!

தமிழகத்தில் திமுக அரசின் தோட்ட தொழிலாளர் விரோத கொள்கைக்கு அதிமுகவின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆயிரகணக்கான தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் டான்டீ நிறுவனத்தின் நிலத்தை பறித்து அந்த பகுதி இயற்கை வனமாக மாற்றப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இது தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமம். ஒரு வேளை அந்த பகுதி இயற்கை வனமாக மாற்றப்பட வேண்டும் என்று நினைத்தால் அங்குள்ள தொழிலாளர்களை வைத்து அங்கு இயற்கை வனமாக […]

Categories
மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்…. 2 மருத்துவர்கள் தலைமறைவு…. வெளியான தகவல்….!!!

சென்னை வியாசர்பாடி சேர்ந்த பிரியா தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு மூட்டு வலி காரணமாக பெரியார் நகர் மருத்துவமனையில் கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்து […]

Categories
மாநில செய்திகள்

GOOD NEWS: 16,000 பேருக்கு வேலை…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் ஏற்கனவே பெகட்ரான், விஸ் ட்ரான், பாக்சான் நிறுவனங்கள் ஐபோன்களை தயாரித்து வருகிறது. உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலை சீனாவில் இயங்கி வந்த நிலையில் தற்போது மூடப்படுவதால் இந்தியாவில் புதிய ஆலை தொடங்கப்படுகிறது. 60 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் வேலை செய்யும் விதமாக பிரம்மாண்ட தொழிற்சாலை டாடா குழுமம் அமைகிறது. தமிழகத்தில் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏற்கனவே ஐபோன் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்படுவதாக தொழில்துறை […]

Categories
மாநில செய்திகள்

ரூ 1000 போதாது..! குடும்ப அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் வழங்க வேண்டும்…. வலியுறுத்தும் ஈபிஎஸ்.!!

மழையால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு ரூ 3,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.. மயிலாடுதுறையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மழை வெள்ளத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத் […]

Categories
மாநில செய்திகள்

“குஜராத் சம்பவத்தை போன்று விதி என்று ஒதுங்கவில்லை”…. தவறை ஒத்துக் கொண்டு சரி செய்கிறோம்…. அமைச்சர் மா.சு அதிரடி…..!!!!!

சென்னையில் உள்ள கோட்டூர்புரம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொசுவலைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் அடைந்தது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கு பதியப்பட்ட பிறகுதான் உடற்கூறாய்வு நடந்தது. மாணவி பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள் கவனக் குறைவாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் தலை மறைவாக இருப்பதால் அவர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி […]

Categories
மாநில செய்திகள்

அடிதடி!…. கட்டையால் மூக்கு உடைய தாக்கிக் கொண்ட நிர்வாகிகள்… ரணகளமான காங்கிரஸ் அலுவலகம்… பெரும் பரபரப்பு…..!!!!

சென்னையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சத்யபவனில் இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியை சந்தித்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுப்பதற்காக சிலர் வந்துள்ளனர். அப்போது ஜெயக்குமாருக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்தனர். இதனால் கட்சி அலுவலகத்தில் திடீரென மோதல் வெடித்தது.‌ இந்த மோதலில் பலருக்கும் அடி உதை என விழுந்ததால் பலரது மூக்குகள் உடைந்து ரத்தம் வழிந்தது. அதோடு கட்டையாலும் தாக்கிக்கொண்டனர். இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க உத்தரவு – ஐகோர்ட் அதிரடி.!!

பறக்கும் படைகளை அமைக்க தமிழக மருத்துவத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு, மருத்துவர்கள் வருகையை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செவிலியர்கள் வருகை, நோயாளிகளுக்கான சிகிச்சையையும் பறக்கும் படைகள் கண்காணிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் சோதனை நடத்த மண்டல, மாவட்ட அளவில் பறக்கும் படைகளை அமைக்க வேண்டும். பறக்கும் படைகள் முறையாக செயல்படுகிறதா என்பதை மருத்துவத்துறை கண்காணிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் மருந்துகள் காலாவதி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று முதல் 19ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யலாம்..!!

தமிழகத்தில் இன்று முதல் 19ஆம் தேதி வரை மிதமான மழையும், 20 ஆம் தேதி கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 18 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை….. தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் வாபஸ்..!!

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்த தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் வாபஸ் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது. இதனை ரத்து செய்ய கோரி மும்பையை சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் இன்றைய தினம் பொறுப்பு தலைமை நீதிபதி  ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுதான் திராவிட மாடலா…? மின் கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது… ஆர்ப்பாட்டத்தில் குஷ்பூ அதிரடி பேச்சு…!!!!!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு போன்றவற்றை கண்டித்தும் உடனடியாக அவற்றை வாபஸ் பெற அரசை வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் பா.ஜனதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மொத்தம் 1,100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டுள்ளார்.  சென்னையில் 66 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  அடையாறு தொலைதொடர்பு அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் சத்யராஜ் தலைமை தாங்கியுள்ளார். மாநில […]

Categories
மாநில செய்திகள்

பயணிகளிடம் ஒழுங்கீனமா? கவனமா நடந்துக்கங்க …. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை தவிர்ப்பதற்கு போக்குவரத்து துறை மேலாண் இயக்குனர் அனைத்து மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், தமிழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின்போது பயணிகளிடம் மரியாதையுடனும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். பேருந்தின் பழுதுகளை சரி செய்து சரியான நேரப்படி நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்று இறக்கிச் செல்ல வேண்டும். […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மேலும் ரூ. 5 லட்சம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை நிரந்தரமாக மூட கோரி போராட்டமானது நடைபெற்றது. 100 நாட்களாக நடைபெற்ற இந்தப் போராட்டம், நூறாவது நாளின் போது (மே 22ஆம் தேதி) பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்ற நிலையில், அங்கு கலவரம் ஏற்பட்டதையடுத்து  போலீசார் துப்பாக்கி […]

Categories
கன்னியாகுமாரி கோயம்புத்தூர் திருநெல்வேலி தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடுத்த ஒரு மணி நேரத்தில்…. இந்த 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!!!

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும், இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மறுதினம் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மிக கனமழை தேதி அறிவிப்பு….!!!!

வங்கக் கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையால் வரும் 20ஆம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. இது புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளதால் தீவிரமாக கண்காணிக்கப் படுகிறது. இது மெல்ல மேற்கு நோக்கி நகர்ந்து 20ஆம் தேதி தமிழகத்திற்கு மிக கனமழையை கொண்டுவர உள்ளது.

Categories
மாநில செய்திகள்

“சாப்பாட்டுக்காக கடை கடையா அலைஞ்சேன்”….. அதுக்காக நான் அவ்வளவு கஷ்டப்பட்டேன்….. அண்ணாமலையின் நெகிழ்ச்சி பேச்சு….!!!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நீங்களும் ஐபிஎஸ் ஆகலாம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ‌ இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் கரூரில் விவசாய குடும்பத்தில் பிறந்து இன்ஜினியரிங் படிப்பை முடித்தேன். நான் படிப்பை முடித்தவுடன் என்னுடைய குடும்பத்தினர் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் என்னுடைய படிப்புக்கும் நான் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாதது போன்று தோன்றியதால் நான் […]

Categories
மாநில செய்திகள்

அடடே!… இது நல்லா இருக்கே…. ஒருநாள் தலைமை ஆசிரியராக 12-ம் வகுப்பு மாணவன்….. அரசு பள்ளியில் நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் ஒரு மாணவரை ஒருநாள் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாணவர் ஒருவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் தருண் ஆனந்த் என்ற மாணவர் ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமிக்கப் பட்டார். இந்த மாணவருக்கு தலைமை ஆசிரியர் செய்ய வேண்டிய பணிகள் குறித்த […]

Categories
மாநில செய்திகள்

இது வேற லெவல்!…. ரூ.‌ 300 கோடி நிதியில் கோவை ரயில் நிலையத்துக்கு வரப்போகும் மாற்றங்கள்….. புதிய அதிரடி…!!!!

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசனை டெல்லியில் நேரில் சந்தித்து ஒரு கடிதம் கொடுத்துள்ளார்‌. அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கோயம்புத்தூர் மக்களின் தெற்கு ரயில்வே தொடர்பான பல்வேறு விதமான கோரிக்கைகளை உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்‌. அதாவது ரயில் நிலையங்கள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தையும் உலக தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகம் ஒரு சிறந்த கால்பந்து வீராங்கனையை இழந்து விட்டது”…. நடிகர் நாஞ்சில் விஜயன் இரங்கல்…..!!!!!

கால் பந்து வீராங்கனை பிரியா இறப்பு ஈடுசெய்ய முடியாதது என கூறியிருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இவ்விவகாரத்தில் கவனக்குறைவாக நடந்து கொண்டதாக புகாரின் படி 2 மருத்துவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் தெரிவித்தார். சென்னை வியாசா்பாடியை சோ்ந்த ரவிக்குமாரின் மகள் பிரியா (17). இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் விளையாட்டுப்பிரிவில் பயின்று வந்தார். அத்துடன் இவர் மாநில கால் பந்து விளையாட்டில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரியா இறப்பு பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு…. பலே அறிவிப்பு வெளியிட்ட போக்குவரத்து கழகம்….!!!!

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனவர்களின் ஒழுங்கினங்களால் வருவாய் இழப்பு மற்றும் அவ பெயர் ஏற்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அலட்சியமாக நடந்து கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பேருந்து நிறுத்தம் வருவதற்கு முன்பாகவே பயணிகளை இறக்கி விடக்கூடாது,  பயணிகள் பேருந்துக்காக நிற்கும்போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு பயணி நின்றாலும் கூட பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். டிரைவர் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக கடந்த வாரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் இன்னும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே […]

Categories
மாநில செய்திகள்

அடடே அசத்தல்…! இனி திருப்பதி போல திருவண்ணாமலை மாற்றப்படும்…. அமைச்சர் சூப்பர் தகவல்….!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நடப்பு ஆண்டு திருவண்ணாமலையில் நடக்கும் தீப திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்கள் மிகவும் குறைவாக உள்ளன. எனவே குறைந்தபட்சம் 100 மருத்துவ முகாம்களை அன்றைய தினத்தில் அமைக்க வேண்டும். மேலும் மெகா திட்டம் ஒன்றை தயாரித்து திருப்பதியை போல திருவண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அமைச்சர் ஏ.வ வேலு அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்பு எண்ணுடன் ‘ஆதார்’ இணைப்பு…. தமிழக மக்களுக்கு மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இலவசம் மற்றும் மானியத் திட்டங்களின் கீழ் வரும் நுகர்வோரின் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழ்நாடு மின்வாரியம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மின்வாரியம் சார்பாக அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை இலவசமாகவும் 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் விவசாயம் மட்டும் குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இலவச மற்றும் மானிய மின்சாரத்தில் முறைகேட்டை தடுப்பதற்கு மின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பட்டியலின மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு செம அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் அவர்கள் ஆற்றி வரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் வருடம் தோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கிய தமிழக அரசு கௌரவித்து வருகின்றது. 2022 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெறுவதற்கு விருப்பமுள்ளவர்கள் www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகம் சென்னை 5 அல்லது சம்பந்தப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் போலீசாருக்கு பறந்த திடீர் உத்தரவு….. டிஜிபி சைலேந்திரபாபு புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் ராகிங் சம்பவம் தொடர்பான புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகள் மீது திருப்தி அடையாத பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கல்வி நிறுவனங்களில் ராகிங் தொடர்பான கண்காணிப்பு பிரிவு கட்டாயம் இருக்க வேண்டும். விடுதி கண்காணிப்பாளர் அனைத்து நேரங்களிலும் அணுகக் கூடிய நிலையில் இருக்க வேண்டும். கல்வி நிறுவன பொறுப்பாளர்கள், ஆசிரிய […]

Categories

Tech |