Categories
மாநில செய்திகள்

அனைத்து பேராசிரியர்களும்…. இனி இப்படிதான் ஆடை அணியனும்….. உயர்கல்வித்துறை அறிவுறுத்தல்..!!

கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், உயர்கல்வி நிறுவன பதிவாளர்களுக்கு உயர் கல்வித் துறை கடிதம் எழுதி உள்ளது. அதில், கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் மேலங்கி (ஓவர் கோட்) அணிய வேண்டும். பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும். பேராசிரியர்கள் அனைவரும் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கியை அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களே போட்டிக்கு தயாரா….? Daily hunt வழங்கும் ரூ.5000, ரூ.25,000 பரிசு…. அரிய வாய்ப்பை நழுவ விடாதீங்க….!!!!

இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலைக் கல்வியை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மத்திய நிதியுதவி திட்டத்தின் பெயர் தான் ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்ஷா அபியான் (RMSA).  இது மார்ச் 2009 இல் தொடங்கப்பட்டது. அனைவருக்கும் திறமையான வளர்ச்சி, மேம்பாடு மற்றும் சம உரிமை ஆகியவற்றுக்கான நிலைமைகளை வழங்குவதற்காக 2009-2010 இலிருந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம்: நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலைக் கல்வியின் தரத்தை உயர்த்துவது மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை…. தமிழக அரசின் சூப்பர் திட்டம்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு அவர்கள் உயர் கல்வி முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் தங்கள் கல்லூரிகளின் முதல் ஆண்டில் விண்ணப்பிக்கலாம். தற்போது 2,3,4ஆம் ஆண்டு படித்து வரும் மாணவிகளும் ஏற்கனவே விண்ணப்பிக்க தவறு இருந்தால் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் […]

Categories
மாநில செய்திகள்

“தப்பு செஞ்சவங்க தப்பிக்கவே முடியாது”…. மாணவி பிரியா மரணத்தில் சிக்கப் போவது யார்…..? அமைச்சர் மா.சு அதிரடி….!!!!!

தமிழகத்தில் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்தில் யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, மாணவி பிரியாவுக்கு கால் அகற்றப்பட்டதில் 2 மருத்துவர்கள் கவனக்குறைவாக செயல்படுவது தெரிய வந்ததால் உடனடியாக அவர்கள் இருவரையும் இடமாற்றம் செய்தோம். அதன்படி ஒருவர் தூத்துக்குடிக்கும் மற்றொருவர் நெல்லைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு மாணவி பிரியாவின் […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவர் பணியிடங்கள்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு தேர்தலில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி காலை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தொடர்ந்த கன மழை பெய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.  இதன் காரணமாக தமிழகத்தில் வருகின்ற 20ஆம் தேதி முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“கலை பற்றி தெரியாதவங்களுக்கு கலை மாமணி விருது”…. 2 படத்தில் நடிச்சா உடனே கொடுத்திருவீங்களா….. கோர்ட் சரமாரி கேள்வி…..!!!!!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு இயல், இசை மற்றும் நாடக மன்றம் சார்பாக வருடம் தோறும் சிறந்த கலைஞர்களுக்கு கலை மாமணி விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இதில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு கலை வளர்மதி விருதும், 36 வயது முதல் 50 வயது […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவுக்கே தமிழ்நாடு தான் முன்னோடி!…. 15 மாதங்களில் புது தொழில்கள்!…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

பல துறைகளில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முன்னோடியாக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது பற்றி தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், தொழிற்சங்க இயக்கம் என்பது இங்கு தான் முதன்முதலாக உருவானது. பிரிட்டிஷார் அதிகப்படியான தொழிற்சாலைகளை இங்கு உருவாக்கினார்கள். அரசியல் உரிமையை மட்டுமல்ல, தொழிலாளர் உரிமையையும் தமிழ்நாடு கேட்டுப் போராடியது என்றார். மேலும் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தொழிலாளர் ஓய்வு இல்ல பராமரிப்புக்காக ரூபாய்.7.5 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: நாளைய தேர்வு ரத்து…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…..!!!!

நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் சற்று முன் அறிவித்துள்ளது. நாளை குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளதால் செமஸ்டர் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்படுவதாகவும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே குரூப் 1 தேர்வு காரணமாக பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னை பல்கலைக்கழகத்திலும் செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

உடனடி நடவடிக்கை…! ஆர்டர்லி முறையை ஒழிக்க ஐகோர்ட் உத்தரவு….!!!!

ஆர்டர்லி முறை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உயர் அதிகாரிகளின் வீட்டில் சமைப்பதற்கும், துவைப்பதற்கும், அதிகாரிகளின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்படும் ஆர்டர்லி முறையை ஒழிக்க ஏற்கனவே பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவை அரசு முறையாக அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. ஆர்டர்லி முறையை பின்பற்றுவதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. ஆர்டர்ல்லியாக பணியாற்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இலவச மின்சாரத்திற்கு ஆதார் கட்டாயமா…? அமைச்சர் முக்கிய தகவல்

ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும் என்பது வதந்தி என அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.  மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது ஒருவர் ஒரு வீட்டிற்கு ஐந்து மின் இணைப்பு வைத்திருந்தாலும் ஒவ்வொரு மீட்டருக்கும் 100 யூனிக் மின்சாரம் இலவசம் என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். மின் இணைப்பு, எவ்வளவு பயன்பாடு உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்வதற்காக மட்டுமே ஆதார் எண் இணைக்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவுக்கு தமிழகம் தான் முன்மாதிரி மாநிலம்…. முதல்வர் ஸ்டாலின் பெருமித பேச்சு….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இன்றைக்கு நமது ஆட்சியின் இலக்காக அனைத்து துறையிலும் வளர்ச்சி என்பதை திராவிட மாடல் கோட்பாட்டாக கொண்டு உள்ளோம். அதற்கு அரசியல்-சமூகவியல் மட்டுமல்ல பொருளாதாரமும், தொழில் வளர்ச்சியும் உள்ளடங்கி இருக்கிறது. அதன்படி நூற்றாண்டு காணும் இந்த அமைப்பினை பாராட்டுவதை என்னுடைய கடமையாக நான் கருதுகிறேன். மேலும் இந்தியாவுக்கு பல்வேறு வகைகளில் தமிழ்நாடு தான் முன்மாதிரியான […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை மரணம்… முன் ஜாமீன் கோரிய மருத்துவர்கள்… வெளியான தகவல்….!!!!

சென்னை வியாசர்பாடி சேர்ந்த பிரியா தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு மூட்டு வலி காரணமாக பெரியார் நகர் மருத்துவமனில் கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு வலது கால் அகற்றப்பட்டது.‌ ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிர் இழப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவர்களின் அலட்சியமற்ற தவறான […]

Categories
மாநில செய்திகள்

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம்….. சரணடையுங்கள்…. 2 மருத்துவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்தது உயர் நீதிமன்றம்..!!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 2 மருத்துவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்தது உயர்நீதிமன்றம்.. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனையான மாணவி பிரியாவுக்கு கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தவறான முறையில் சென்றதன் காரணமாக கடந்த 15 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தரம் ஆகிய இரண்டு மருத்துவர்கள் மீது காவல்துறையினர் பணியின்போது கவனக்குறைவாக செயல்பட்டு மரணம் விளைவித்தல் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் வருமானம் எங்கே போனது?….. அமைச்சர் செந்தில் பாலாஜியை வம்புகிழுத்த பிடிஆர்….!!!!

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக ஆட்சிக்கு பிறகு தமிழகத்தின் நிதி சுமை மற்றும் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு மற்றும் வரி விதிப்புகளை குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். இது கடந்த ஆட்சி நிதி அமைச்சராக இருந்தவர்களை விமர்சிக்க செய்தது. அதன்பிறகு முதல்வர் மட்டுமே பேச வேண்டிய விஷயங்களை பிடிஆர் பேசுவதாகவும் அவர் மீது சொந்தக் கட்சியை அதிருப்தி எழுந்துள்ளது. அதனால் அவருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மதுரையில் நேற்று மாவட்ட கூட்டுறவு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…! உலக அளவில் 3ஆம் இடம்…. சத்தமின்றி சாதித்த சென்னை…!!!

இன்றைய காலகட்டத்தில் சிசிடிவி கேமரா என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் குற்றங்கள் நடக்கும் போது அதை கண்டுபிடிப்பதற்கு சிசிடிவியில் உள்ள காட்சிகளை வைத்து தான் குற்றவாளிகள் மிக விரைவில் பிடிக்கப்படுகிறார். இதனால் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி பொருத்த போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உலக அளவில் அதிக சிசிடிவி கேமராக்களை கொண்ட நகரங்களில் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட நகரங்களின் பட்டியலில், உலகளவில் சென்னை 3ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் : டாக்டர்கள் 2 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்த ஐகோர்ட்..!!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முன் ஜாமின் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருத்துவர்கள் பால்ராம் சங்கர் சோமசுந்தருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. பெரியார் நகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பால்ராம் சங்கர் சோமசுந்தரின் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் கவன குறைவாக செயல்பட்டதாக இருவர்  மீது ஏற்கனவே காவல்துறை வழக்கு பதிவுசெய்திருந்தது. அவர்கள் இருவரும் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், சென்னை […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளே…! ரூ.1000 உதவித்தொகை பெற…. விண்ணப்பிக்க தவறி விட்டீர்களா….? இவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு…!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நடப்பு வருடத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் மேற்படிப்பு சென்றால் அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்த திட்டமானது புதுமைப்பெண் திட்டம் என்ற முறையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கல்லூரிகளில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்துள்ளார்கள். இதுவரை 2, 3 மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

Just now: மழையால் பள்ளிகளுக்கு அலர்ட்…. அமைச்சர் உத்தரவு…!!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மழைக்காலத்தில் கவனமுடன் இருக்குமாறு அனைத்து மின் நுகர்வோருக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது எனக் கூறிய அவர், அனைத்து பள்ளிகளிலும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Categories
மாநில செய்திகள்

ரசிகர்களுக்கு ஷாக்!… வாரிசு படத்திற்கு வந்த சிக்கல்!…. விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பிய சீமான்…..!!!!!

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என பைலிங்குவல் படமாக உருவாகி இருக்கிறது. பொங்கல் அன்று இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் அன்றைய தினம் ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. ஆகவே நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ADMK பொதுக்குழு கூட்டம்; டிடிவி தினகரனை சந்திப்பேன்; ஓபிஎஸ் அதிரடி பேட்டி ..!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வரவேற்றோம். ஆனால் அங்கு அரசியல் பேசவில்லை. மாவட்ட அளவில் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேசுவேன். உறுதியாக அதிமுக பொதுக்குழு கூட்டம், அறிவிக்கப்பட்டு, நடைபெறும். டிடிவி தினகரனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சந்திப்பேன் என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் : ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி …!!

அதிமுகவில் தொடர்ந்து நீடித்து வந்த உட்கட்சி பிரச்சனையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருவதால், ஓ. பன்னீர்செல்வம் நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று தொடர்ச்சியாக அதிமுக தொடர்பாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம்,  வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரன் சந்திப்பிபேன். விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம்  விரைவில் நடைபெறும். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னை பல்கலை -தமிழ் தேர்வு இரத்து …!!

சென்னை பல்கலைக்கழகம் இன்று மதியம் நடைபெற இருந்த தமிழ் தேர்வையும் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஏற்கனவே இன்று காலையில் நடைபெற இருந்த தேர்வு வினாத்தாள் குளறுபடியால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலே இன்று மதியம் நான்காவது செமஸ்டர்  தமிழ் பாடத்திற்கான அரியர் தேர்வுகள் நடைபெற இருந்தது.அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு வேறு தேதியில் நடத்தப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியீட்டுகிறது. இரண்டு தேர்வுக்குமான வினாத்தாள் என்பது மாறி இருக்கிறது.   மதியம் வரவேண்டிய வினாத்தாள் […]

Categories
மாநில செய்திகள்

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள் தலைமறைவு…? மக்கள் நல வாழ்வு துறை அமைச்சரின் தகவல்…!!!!!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த நிலையில் அவருக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து மாணவியின் தந்தை ரவிக்குமார் அளித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீஸ் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பணியிடை நீக்க உத்தரவு நகலை வழங்குவதற்காக சுகாதாரத் துறை அதிகாரிகள் மருத்துவர்கள் இல்லத்திற்கு சென்ற போது அங்கு இருவரும் தலை மறைவானது தெரியவந்துள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. இனி ரயிலில் செல்போனுக்கு வேலை இல்லை…. வெளியான மாஸ் திட்டம்….!!!!

ரயில் பயணம் என்றாலே ரம்மியமானது. அதிலும் தொலைதூரம் ரயில் பயணங்கள் என்றால் பலருக்கும் கொள்ளை பிரியம்.‌ ஆனால் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதும் இல்லாமல் நீண்ட தூரம் பயணிப்பது பலருக்கும் சலிப்பு தட்டிவிடும். சமீப காலமாக பலரும் செல்போன்களை பார்த்துக் கொண்டே ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்த சூழலை மாற்றி அமைக்க கூடிய வகையில் மதுரை ரயில்வே புத்தகத்துடன் ஒரு பயணம் என்ற புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புத்தக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் நவ., 20, 21, 22 ஆகிய 3 நாட்கள் கனமழை வெளுத்து வாங்கலாம்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!!

தமிழகத்தில் 20, 21, 22 ஆகிய 3 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நவம்பர் 20, 21, 22 ஆகிய மூன்று  தினங்களில் தமிழகத்தில் இருக்கக்கூடிய வட மாவட்ட மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ… மருத்துவர்களின் எச்சரிக்கை…!!!!!

சென்னையில் நாள்தோறும் மெட்ராஸ் ஐ பாதிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள்  மருத்துவமனையை நாடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். விழியையும், இமயையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ என கூறப்படுகிறது. இந்த பாதிப்பானது காற்று மூலமாகவும், மாசு மூலமாகவும் பரவுகிறது. அதுமட்டுமல்லாமல் மெட்ராஸ் ஐ பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்துவதாலும் மற்றவர்களுக்கு அந்த தொற்று நோய் ஏற்பட கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நோயின் அறிகுறிகளாக கண் எரிச்சல், விழிப்பகுதி […]

Categories
மாநில செய்திகள்

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சேலம் ரயில் நிலையத்தில் தற்போது பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை சேலம், நாமக்கல், கரூர் வழியாக இயங்கும் அனைத்து ரயில்களையும் ரத்து செய்யப்படுகிறது. இதனை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் அன்றைய தினம் விரைவு ரயில்கள் மாற்று பதில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் இயங்கும் தினசரி ரயில்கள் சென்னை சென்ட்ரல்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் வழியாக இயங்கும். அதனைப் போல […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே!…. தமிழகத்தில் வரும் 21, 22-ஆம் தேதிகளில்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

தமிழகத்தில் வருகிற 21, 22ஆம் தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையமானது தகவல் தெரிவித்து உள்ளது. வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழகத்தில் ஏராளமான மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்ற வாரம் வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக பல பகுதிகளில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் மேலும் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!…. பவானி டூ மேட்டூர்…. வேற லெவலில் மாறப்போகும் ஈரோடு….!!!

கொங்கு மண்டலத்தில் இடம்பெற்ற முக்கிய நகரம் ஈரோடு மாவட்டம். அங்கிருந்து அக்ரஹாரம், ஆர்என்.புதூர், லட்சுமி நகர், பவானி, அம்மாபேட்டை, மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் செல்ல மேட்டூர் மெயின் ரோடு பிரதான சாலையாக அமையும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழிதடத்தில் தினசரி நூற்றுக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கரம் மற்றும் கனரக வானங்கள் சென்று வருகிறது. இதனால் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக மாறி உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் ஈரோடு முதல் பெங்களூர் வரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரபு நாடுகள்போல…. பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்: ராமதாஸ்…!!!!!

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கொடூரமான முறையில் அரங்கேறி வருவதால் வெளியே செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது. இந்நிலையில் பாலியல் குற்றவாளிகளுக்கு அரபு நாடுகள்போல கடுமையான தண்டனைகள் […]

Categories
மாநில செய்திகள்

வீராங்கனை பிரியா மரணம்: 2 மருத்துவர்கள் மீது வழக்குபதிவு…. 2 பேர் தலைமறைவு….!!!

தேசிய அளவில் மகளிர் கால்பந்து போட்டிகளை விளையாடிய பிரியாவுக்கு காலில் தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு வலது கால் அகற்றப்பட்டு பின்னர் மரணமடைந்தார். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பிரியாவின் சாவுக்கு மருத்துவர்களே காரணம் என்னும் நிலையில் அலட்சியமாக இருந்து மரணம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் மருத்துவர்கள் பால்ராம் சுந்தர், சோமசுந்தரம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 மருத்துவர்கள் தலைமறைவாக இருப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

“ஜெ. ஜெயலலிதா மரணம்”….. விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற பரிந்துரை மனு…. கோர்ட்டின் உத்தரவு என்ன….?

தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு உடல் நலக் குறைவின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 75 நாட்களாக சிகிச்சையில் இருந்தார். அதன்பிறகு 75 நாட்களாக சிகிச்சையில் இருந்தும் ஜெயலலிதா மரணம் அடைந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் கடந்த 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்த குழு […]

Categories
மாநில செய்திகள்

“முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு”…. நளினி, முருகன் உட்பட 6 பேரின் விடுதலையை எதிர்த்து கோர்ட்டில் மத்திய அரசு மனு…..!!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு 31 வருடங்களாக சிறையில் இருந்தனர். கடந்த மே மாதம் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தலைவரா இருக்க அருகதை இல்ல”…. அடியாட்களை கூட்டிட்டு வந்து அடிக்காரு…. கே.எஸ் அழகிரியால் கொதிக்கும் காங்கிரஸ் தொண்டர்கள்….!!!!!

திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சந்திரசேகர். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 உறுப்பினர்களுடன் பாளையங்கோட்டையில் உள்ள கேடிசி நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ‌ ‌ திருநெல்வேலியில் 12 வட்டாரங் களுக்கு தேர்தல் நடத்தவில்லை. அதற்கு பதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி பணத்தை வாங்கிக்கொண்டு கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களை வட்டார தலைவராக நியமித்துள்ளார். இது தொடர்பாக முறையிட சென்ற காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை கடந்த 15-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

“ரூ. 510-க்கு டிக்கெட்”…. அரசு பேருந்தில் பயணம் செய்த அமைச்சர் பிடிஆர்…. நெகிழ்ச்சியில் மதுரை மக்கள்….!!!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள எல்லீஸ் நகர் மற்றும் தத்தனேரி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நீண்ட நாட்களாக புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த மக்களின் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், நேற்று புதிதாக அவ்வழித்தடத்தில் 2 பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த பேருந்துகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு அரசு பேருந்தில் பொதுமக்களுடன் சேர்ந்து அமைச்சர் பிடிஆர் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த 50 நிர்வாகிகளும் பயணம் செய்தனர். […]

Categories
மாநில செய்திகள்

எப்படி விமர்சிக்கலாம்….? அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அவதூறு பேச்சுக்கு தடை….. பாஜகவுக்கு செம ஆப்பு…. கோர்ட் அதிரடி….!!!!!

தமிழகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருக்கிறார். இவர் கடந்த 2011-15 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி, அன்னராஜ், தேவசகாயம், சகாயராஜன் மற்றும் பிரபு ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

இனி ஒரே டிக்கெட்டில் இவை அனைத்திலும்…. சென்னை முழுக்க சுற்றி வரலாம்…. தமிழக அரசு முடிவு….!!!

சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் நேற்று சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில்  நடைப்பெற்றது. அதில் ஒரே பயணச்சீட்டில் மாநகர பேருந்து, சென்னை மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்திலும் மக்கள் பயணிக்கும் வசதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இனி சென்னையில் ஒரே டிக்கெட்டில் மெட்ரோ, உள்ளூர் ரயில் மற்றும் பேருந்தில் பயணம் செய்யலாம் என்னும் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. அதன் படி எங்கு செல்ல வேண்டும் என்பதை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (18.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்…. வானிலை மையம் தகவல்…!!!

வங்கக்கடலில் அந்தமான் அருகே நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து தமிழகத்தை நெருங்க உள்ளது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வரும் 21ஆம் தேதி விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை குறிக்கும் விதமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்….! ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் விரைவில்…. மெட்ரோ நிர்வாகம் தகவல்…!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42 ரயில்கள் இரண்டு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 15 பெண்கள் உட்பட 180 டிரைவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்த பிறகு புதிதாக அமைய உள்ள […]

Categories
மாநில செய்திகள்

மெட்ராஸ் ஐ பாதிப்பு: மாணவர்களுக்கு கட்டாய விடுப்பு…. பள்ளிக்கல்வித்துறை…!!!

தமிழகத்தில் தற்போது மழை காலம் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு தொற்று நோய்களும் உருவாக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் கண் வலி தற்போது குழந்தைகள் மற்றும் சிறார்கள் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக நெல்லையில் சராசரியாக மருத்துவமனை ஒன்றுக்கு நூறு முதல் 120 பேர் வரை மெட்ராஸ் ஐ பாதிப்பால் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதால், மெட்ராஸ் ஐ பாதிப்புடன் வரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK கூட்டணி தொடரும்…! கண்டிப்பா BJPயை வீழ்த்தலாம்… செம ஹேப்பி மோடில் துரை வைகோ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, ஆளுநரைப் பொறுத்தவரை பல தடவை சொல்லியுள்ளேன். தமிழ்நாட்டின் ஆளுநராக, தமிழ்நாட்டினுடைய நலனுக்காக அவர் செயல்பட வேண்டும்.  ஆனால் அவர் பிஜேபி, ஆர்எஸ்எஸ்ஸின் ஊதுகுலதாக தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவர் அப்படி செயல்படுவதால் இப்படிப்பட்ட கருத்துக்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை நாம் புறந்தள்ள வேண்டும். கூட்டணி தொடரும். சமீபத்தில் கூட நான் சொல்லியிருந்தேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரைக்கும்,  மதவாத சக்திகளை பொறுத்த வரைக்கும் அதை எதிர்க்கின்ற இயக்கங்கள் தமிழ்நாடு மட்டும் அல்ல,  […]

Categories
மாநில செய்திகள்

இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்…. மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் அக்டோபர் 19 முதல் 29 வரை நடைபெற்றது. அரசு பள்ளி மாணவர்களுக்கான ஏழு புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டில் 565 இடங்கள் நிரப்பப்பட்டன. முதற்கட்ட கவுன்சிலிங் இட ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர். இந்நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது. முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…. செக் பண்ணிக்கோங்க….!!!!!

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் சாலை (ஒரு பகுதி), நாராயணகுரு சாலை, சாய்பாபா கோயில், மனையியல் கல்லூரி, வனக் கல்லூரி, முருகன் மில்ஸ், பாரதி பூங்கா, ராஜா அண்ணாமலை சாலை, சென்ட்ரல் திரையரங்கம், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விட்டுறாதீங்க பயம் வரணும்..! C.M ஸ்டாலின் தொகுதியில்… ரொம்ப முக்கியமான கேஸ்…! கையில் எடுத்த அண்ணாமலை .!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய மருத்துவத்துறை அமைச்சர் அண்ணன் மா. சுப்பிரமணியம் அவர்கள் இரண்டு முறை இதைப்பத்தி பத்திரிகை நண்பர்களுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். ஃபர்ஸ்ட் பேட்டியில் என்ன சொன்னார்னா ? அவங்க சிகிச்சையில் இருக்கும்போது குளறுபடி நடந்த உடன்,  பிரியா அவர்கள் இறப்பதற்கு முன்பு எந்த பிரச்சினையும் இல்லை. நல்லா இருக்காங்க. அரசு மருத்துவமனை தன்னுடைய கடமையை செய்திருக்குன்னு சொன்னாரு  மருத்துவத்துறை அமைச்சர் திரு மா.சுப்ரமணியம் அவர்கள். பிரியா அவர்கள் இறந்த […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தொடர்ந்த கன மழை பெய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகின்ற 20ஆம் தேதி முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலை இல்லாதா முண்டம்…! எடப்பாடி கூட போகவே மாட்டேன்.. டிடிவி சுளீர் பதில் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நான் சொன்னதை நீங்க திரும்ப பார்த்தீங்கன்னா தெரியும். அம்மாவின் தொண்டர்கள் எங்கு இருந்தாலும், அவர்கள் ஓர் அணியில் திரண்டு திமுக அணியை எதிர்க்க வேண்டும்,  திமுக அணியை வீழ்த்த வேண்டும் என்று சொன்னேன். இப்படி  சொல்றப்ப எடப்பாடி சொன்ன ”மெகா கூட்டணி” அப்படின்னு சொல்றவங்க, அடுத்தவங்கள தரம் தாழ்த்தி பேசுறவங்க,  இவங்க எல்லாம் ஒன்னு புரிஞ்சுக்கணும்… திமுகவை வீழ்த்தனும்னா அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஒன்னா […]

Categories
மாநில செய்திகள்

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தேயிலை தோட்ட கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் பயனாளர் பங்களிப்பு தொகையான 13 கோடியே 46 லட்சம் ரூபாயை தமிழக அரசே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். செயலைத் தோட்ட கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளை காலி செய்யாமல் உள்ள நிலையில் ஓய்வு பெற்றவர்களுக்கு 67 தொழிலாளர் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தேயிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மகளிருக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகள்…. நவம்பர் 20 குள் விண்ணப்பிக்கலாம்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அரசு போட்டி தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழக அரசு கல்லூரி கல்வி இயக்ககம் இணைந்து மகளிர் காண ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகளை வருடம் தோறும் நடத்தி வருகின்றது. இந்த வருடத்திற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் ராணி மேரி மற்றும் ஸ்ரீ மீனாட்சி […]

Categories

Tech |