Categories
மாநில செய்திகள்

“உடல் ரீதியாக, மனரீதியாக துன்புறுத்தக்கூடாது”…. குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் அன்பில் அதிரடி ட்வீட்….!!!!!

தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பின் மகேஷ் பொய்யாமொழி இருக்கிறார். இவர் சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, குழந்தைகளை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களின் கல்விக்கு உதவ வேண்டியது நம்முடைய கடமை. எந்தக் குழந்தையும் உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ துன்புறுத்தப்படாமல் பாதுகாப்போம். அதன் பிறகு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் அனைத்து குழந்தைகளுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“மீண்டும் சூடு பிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு”…. 12 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை….‌ கோர்ட் அதிரடி…!!!!

அமைச்சர் கே.என் நேருவின் தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இவருடைய உடல் கல்லணை செல்லும் பகுதியில் உள்ள பொன்னி டெல்டா என்ற பகுதியில் கைப்பற்றப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக 12 தனி படைகள் அமைத்தும், சிபிஐக்கு வழக்கை மாற்றியும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை. ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேர் சந்தேகத்திற்கு இடமாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு […]

Categories
மாநில செய்திகள்

பயிர் காப்பீடு…. விவசாயிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் எதிரொளியாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. வெறும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தொடர் கன மழை காரணமாக விவசாயம் செய்துள்ள பயிர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“எல்லாமே முறைப்படி தான் நடந்தது”…. ஓபிஎஸ் கிட்ட முன்னாடியே சொல்லியாச்சு…. சுப்ரீம் கோர்ட்டில் இபிஎஸ் பதில் மனு….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக செயல்பட்டு தலைமையை கைப்பற்றுவதற்காக கடுமையாக மோதி கொள்கிறார்கள். கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதிவுகளிலிருந்தும் நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இது தொடர்பாக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் உச்சநீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC: ஹால் டிக்கெட்டை கிழித்து எறிந்த தேர்வாளர்கள்…. பெரும் பரபரப்பு….!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது பல்வேறு போட்டி தேர்வுகளும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி சார்பாக குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று குரூப்-1 தேர்வு எழுத தாமதமாக வந்தவர்கள், தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி…. என்னாச்சி அவருக்கு….? வெளியான தகவல்….!!!

அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் பொருளாளராகவும் இருந்து வரும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீரென்று நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவருடைய குடும்பத்தினர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் அவரை பரிசோதனை மேற்கொண்டதில் இருதயத்தில் அடைப்பு இருப்பதை கண்டறியப்பட்டது. தற்போது திண்டுக்கல் சீனிவாசன் நலமுடன் இருப்பதாகவும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 3 நாட்களுக்கு கன மழை…. தமிழக அரசு போட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நாளை தமிழகத்தில் கனமழையும், நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதனை அடுத்து மழையை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப்-1 தேர்வை இத்தனை பேர் எழுதவில்லையா….? வெளியான தகவல்…!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது பல்வேறு போட்டி தேர்வுகளும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி சார்பாக குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற குரூப்-1 தேர்வில் 40% பேர் பங்கேற்கவில்லை […]

Categories
மாநில செய்திகள்

அப்போ மாதம் 1000 கிடையாதா…? பெரும் ஏமாற்றத்தில் குடும்பத்தலைவிகள்…..!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி விமர்சையாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அரசு சார்பாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. சென்ற வருடம் போல இல்லாமல் இந்த வருடம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் சென்ற வருடம் வழங்கப்பட்ட 21 பொருட்களின் தரம் குறைவாக இருந்ததாக புகார் எழுந்ததையடுத்து ரொக்க பரிசு […]

Categories
மாநில செய்திகள்

10 ஆண்டுகளுக்கு பிறகு…. பொங்கலுக்கு புது டிசைனில்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு Good News….!!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி விமர்சையாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அரசு சார்பாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தமிழக அரசு வேஷ்டி, சேலைகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் இலவச வேஸ்டி, சேலைகள் உற்பத்திக்கு முதல் தவணையாக 243.96 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிக்கப்பட்டு வரும் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த ராபர்ட் பயாஸு க்கு உடல்நல குறைவு..!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த ராபர்ட் பயாஸு க்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. திருச்சியில் சிறப்பு முகாமில் தங்கி இருந்த பயாஸு க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் ராபர்ட் பயஸ். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வந்த ராபர்ட் பயஸ் உட்பட 6 பேரை  கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உச்ச […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு விவகாரம் : கட்சி நலனை கருதியே ஒற்றை தலைமை….. சுப்ரீம் கோர்ட்டில் ஈபிஎஸ் பதில் மனு..!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு எதிராக ஈபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது ஓபிஎஸ் மனு குறித்து எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஈபிஎஸ் […]

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழகத்தை நோக்கி வரும் புதிய ஆபத்து…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது வங்கு கடலில்உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றால் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக மற்றும் புதுவை, ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனால் நாளை தமிழக கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பொங்கல் பரிசு குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குஷியோ குஷி…! ஒரு வாரம் இலவசமாக பார்க்கலாம்…. மதுரை மக்களுக்கு வந்தது குட் நியூஸ்….!!!

உலக பாரம்பரிய வாரம் இன்று  நவம்பர் 19 முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இத்தினம் மக்களிடையே தங்களது சமூக கலாசார பாரம்பரியத்தைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது மேலும் பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களை பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் தூண்டுகிறது. இந்நிலையில் சென்னை, மாமல்லபுரத்தில் உள்ள சின்னங்களை பார்வையிட  இன்று(நவம்பர் 19) சுற்றுலா பயணிகளுக்கு இலவசம் என புராதன தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதேபோல மதுரையின் பிரசித்தி பெற்ற […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! இனி படிக்கும்போதே வேலை…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்கள் படிக்கும்போதே பயிற்சி பெற 6 தனியார் தொழிற்சாலை நிறுவனங்களுடன்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், CM தொடங்கி வைத்த நான் முதல்வர் திட்டத்தின் நோக்கமே, படிக்கும் போது மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுதான் என்று கூறினார். அதன் முன்னெடுப்பாக தான் தற்போது ஆறு தனியார் தொழிற்சாலை நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு கல்லூரியில் உதவி கவுரவ விரிவுரை யாளராக பணிபுரிந்து வந்தாலும் கட்டாயம் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (19.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசம் நீட்டிப்பு….. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!!

தமிழக விவசாயிகளுக்கு சம்பா பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 21-ம் தேதி வரை காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேளாண்மை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பருவமழையின் பாதிப்பினால் பயிர்களை காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி அனுப்பினார். இந்த கோரிக்கையை தற்போது மத்திய அரசு ஏற்று கால அவகாசத்தை நவம்பர் 21-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரம்…. எவ்வளவு மானியம் வழங்கப்படும் தெரியுமா….? இதோ முழு விபரம்…..!!!!!

தமிழக அரசு விவசாயிகள் மத்தியில் வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்தை பிரபலப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தனிப்பட்ட விவசாயிகள் இயந்திரம் வாங்குதல், இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபட வைக்க, பதிவு செய்த விவசாய‌ சங்கங்கள், தொழில் முனைவோர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் போன்றவற்றின் மூலம் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வேளாண் இயந்திர மையம் நிறுவுதல் போன்றவற்றிற்கு நடப்பு நிதியாண்டில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி 150 கோடி நிதி […]

Categories
மாநில செய்திகள்

“திமுகவும், அதிமுகவும் அண்ணன்-தம்பி”…. அமைச்சர் நேரு ஏன் அப்படி சொன்னார் தெரியுமா….? துரை வைகோ விளக்கம்….!!!!

மதிமுக கட்சியின் மாநில பொறியாளர் அணியின் முன்னாள் செயலாளர் மறைந்த ER. சேக் முகமது. இவருடைய மனைவியும், கழக மாநில செயலாளருமான மருத்துவர் ரொகையாவின் தாயார் பாத்திமா பீபி. இவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு திருச்சியில் உள்ள ரொக்கையாவின் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மதிமுக கட்சியைச் சேர்ந்த மாநில கழக நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வுக்குப் பிறகு துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பால் பொருட்கள் தடையின்றி கிடைக்க…. அமைச்சர் நாசர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வந்தது. அதே சமயம் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே இனிவரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே!… இதுக்கு ஒரு முடிவே இல்லையா…. வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் மாடுகள் மோதல்…..!!!!!

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அடுத்த வருடத்திற்குள் 75 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி ஒவ்வொரு பகுதிகளிலும் வந்தே பாரத் ரயில் சேவையானது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 6-ம் தேதி குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது 4 நாடுகள் மோதியதில் மாடுகள் பலியானது. இந்த விபத்தில் ரயிலின் முன்பக்கத்தில் லேசான சேதம் ஏற்பட்டது. இதே ரயிலில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி வகுப்புகள்….. 50% இட ஒதுக்கீட்டு நிறுத்தம்….. கோர்ட் உத்தரவு….!!!!!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஸ்பெஷாலிட்டி வகுப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த அரசாணையானது கடந்த 2020-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது தமிழக அரசு 2021-22 ஆம் கல்வி ஆண்டுகளில் 50% இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்துவதற்கு கோர்ட் அனுமதி கொடுத்தது. தற்போது 2022-23 ஆம் ஆண்டில் மொத்தம் உள்ள 100 சதவீத இடங்களுக்கும் தமிழக அரசு கலந்தாய்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தொடர்ந்த கன மழை பெய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.  இதன் காரணமாக தமிழகத்தில் வருகின்ற 20ஆம் தேதி முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு எதற்கு தெரியுமா?…. தமிழக மக்களுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதில் பாதிப்பு எதுவும் ஏற்படாது எனவும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தற்போது தமிழக முழுவதும் மின் இணைப்பு என்னுடன் ஆதார் இணைக்கும் பணி தொடங்கியுள்ளது. மின் நுகர்வோர்களின் பதிவு செய்த மொபைல் போன் எங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் இந்த செய்தி அனுப்பப்படும். ஒருவர் ஐந்து இணைப்பு, மூன்று இணைப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காவல்,சிறை மற்றும் தீயணைப்புத் துறையில் இரண்டாம் நிலை காவலராக சேர்வதற்கான எழுத்து தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைக்கு இரண்டாம் நிலை காவலர்களாக 3552 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எதற்காக நவம்பர் 27ஆம் தேதி தமிழ் மொழி தகுதி மற்றும் முதன்மை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இரண்டு தேர்வுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்படும். இந்த தேர்வுக்கான ஹால் […]

Categories
மாநில செய்திகள்

இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் வெளியீடு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு பொது கவுன்சிலிங் கடந்த வாரம் நடந்து முடிந்த நிலையில் அதில் தகுதி பெற்றவர்களுக்கான கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் ஏதாவது ஆட்சியபனை இருந்தால் அதில் உள்ள குறைகளை தீர்க்க இன்று மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை துணை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. உயர்கல்வித்துறை திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் உயர்கல்வித்துறை சார்பாக கல்லூரி கல்வி இயக்ககம்,தொழில்நுட்ப கல்வி இயக்கங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவன பதிவாளர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் மேலங்கி அணிய வேண்டும். பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை தான் அணிய வேண்டும். அதேசமயம் கல்லூரி பேராசிரியர்கள் இனி தங்களுடைய உடல் அமைப்பை வெளியில் காட்டாதபடி மேலங்கியை அடைந்திட வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் உயர்கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

திமுக அமைச்சர்களிடையே வெடித்த மோதல்…. புதிய பரபரப்பு…!!!!!

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று நேற்றைய தினம் நிதி அமைச்சர் பி டி ஆர் கூறி இருந்தார். கூட்டுறவு சங்கங்கள் முழுமையாக கணினி மயமாக்கப்படாமல் இருப்பதால் பல பிழைகள், தவறுகள் நடைபெறுகின்றன. நடமாடும் ரேசன் கடைகள் உரிய நேரத்திற்கு செல்வதில்லை என புகார்கள் வருகின்றது. நிதி அமைச்சராக கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்கான செயல்பாடுகள் தனக்கு திருப்திகரமாக இல்லை என பி டி ஆர் கூறி இருந்தார். இந்நிலையில் இது பற்றி பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும் அழிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் ரேஷன் கடை ஊழியர்கள் அரசு வழங்கும் சிறப்பு திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்கு வழங்கும் போது கூடுதல் நேரம் பணியாற்றுவது போன்ற முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்கள். இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய […]

Categories
மாநில செய்திகள்

இந்த தேர்வர்கள் கவனத்திற்கு…! TNPSC புதிய தேர்வு தேதி அறிவிப்பு….!!!!!

காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இப்பணியிடங்களுக்கு டிச.17ம் தேதிக்குள்  ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள டிச.22ம் தேதி முதல் 24ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். 2023 மார்ச் 15ம் தேதி காலை, மதியம் என இருவேளைகளிலும் கால்நடை மருத்துவர்களுக்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பொறியியல் படிப்புகளுக்கான…. துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு…!!!!

பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை., யின் கீழ் உள்ள 446 கல்லூரிகளில் மொத்தம் ஒதுக்கப்பட்ட 1,93,571 இடங்களில், 85,023 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவற்றை நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்ட் 20 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 93 ஆயிரத்து 571 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. அதில் 85,023 இடங்களில் மட்டுமே மாணவர்கள் கல்லூரிகளில் சென்று சேர்ந்துள்ளார்கள். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

மகளிருக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகள்…. நாளையே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அரசு போட்டி தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழக அரசு கல்லூரி கல்வி இயக்ககம் இணைந்து மகளிர் காண ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகளை வருடம் தோறும் நடத்தி வருகின்றது. இந்த வருடத்திற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் ராணி மேரி மற்றும் ஸ்ரீ மீனாட்சி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே கவலையில்லை…! அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த வசதி…. அமைச்சர் புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் கைரேகை பதியும் பொழுது கோளாறுகள் ஏற்படுவதால் மின்னணு பதிவேடுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், கருவிழி அடையாளம் மூலம் பொருட்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(19.11.22) எங்கெல்லாம் மின்தடை….? மக்களே தெரிஞ்சுக்கோங்க…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (19.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கடலூர் மாவட்டம் பெண்ணாடம் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெண்ணாடம், பெண்ணாடம் கடைவீதி, மருத்துவமனை, பட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு, காமராஜர் நகர், சோழ நகர், தாதங்குட்டை, சுமைதாங்கி, எல்லையம்மன் கோவில் தெரு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(19.11.22) ஒருநாள் மட்டும் இதற்கு இலவசம்….. சூப்பர் அறிவிப்பு….. மறக்காம போங்க…!!!!

உலக பாரம்பரிய வாரம் இன்று  நவம்பர் 19 முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இத்தினம் மக்களிடையே தங்களது சமூக கலாசார பாரம்பரியத்தைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது மேலும் பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களை பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் தூண்டுகிறது. இந்நிலையில் சென்னை, மாமல்லபுரத்தில் உள்ள சின்னங்களை பார்வையிட  இன்று(நவம்பர் 19) சுற்றுலா பயணிகளுக்கு இலவசம் என புராதன தொல்லியல் துறை அறிவித்துள்ளது. உலக பாரம்பரிய வார விழாவை […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Local Holiday: டிசம்பர் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….? அதிரடி அறிவிப்பு….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்கா கந்தூரி விழாவானது வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளோடு தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். பக்த கோடிகள் உள்ளூர்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் திருவாரூரில் முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு டிசம்பர் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையை ஈடு செய்ய டிசம்பர் 10ம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு அன்று விடுமுறை…. இன்று(நவம்பர் 19) வேலை நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் இன்று 19ஆம் தேதி சனிக்கிழமை அன்று செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்டோபர் 24ஆம் தேதி விடுமுறையோடு மறுநாள் அக்டோபர் 25ஆம் தேதி கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 19ஆம் தேதியான இன்று பள்ளி கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று குரூப்-1 தேர்வு…. தேர்வு மையத்திற்கு இதெல்லாம் கொண்டு செல்ல தடை…. முக்கிய அறிவிப்பு….!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது பல்வேறு போட்டி தேர்வுகளும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி சார்பாக குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 1 தேர்வர்களின் கவனத்திற்கு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

குரூப் 1 தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 1 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு முதல் நிலை முதன்மை நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றார்கள். அந்த வகையில் முதல் நிலை தேர்விற்கு 3 லட்சத்து  16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பிருந்த நிலையில் கடந்த மாதம் 30ஆம் தேதி  தேர்வு நடைபெறுவதாக […]

Categories
மாநில செய்திகள்

வீரப்பன் கொலை வழக்கு.. “எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை”… விடுதலையானவர்கள் பேட்டி…!!!!!

வீரப்பன் கொலை வழக்கில் கைதாகி 30 வருடங்களுக்கும் மேலாக ஆண்டியப்பனும் மற்றும் பெருமாளும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தமிழக அரசு முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு இருவரையும்  விடுதலை செய்துள்ளது. இதனையடுத்து  ஈரோடு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் சந்தன கடத்தல் வீரப்பனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளனர். மேலும்  விடுதலை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி எனவும்  தண்டனை காலம் முடிந்து எங்களைப் போல் சிறைகளில் தவித்து வருபவர்களை […]

Categories
மாநில செய்திகள்

“விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது”…? மதுரை ஐகோர்ட் நிதிபதிகள் வேதனை…!!!!!

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதால் விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது என மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இயல், இசை, நாடக மன்றம் முறையாக செயல்படுவதில்லை எனவும் இதே போன்ற நிலை நீடித்தால் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தை கலைக்க நேரிடும் என கூறியுள்ளனர். மதுரை  ஐகோர்ட் நீதிபதிகள்  கடந்த 2019 – 2020 -ஆம் வருடம் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்ப பெறக்கூடிய வழக்கில் தங்களது […]

Categories
மாநில செய்திகள்

“விவசாயிகள் கவனத்திற்கு”…. இனி நீங்களே உங்கள் பொருளின் விலையை பார்த்துக் கொள்ளலாம்….. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு வேளாண்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் கோவையில் விதை சான்று மற்றும் இயற்கை வேளாண்மைக்கான சான்று இயக்கம் இயங்கி வந்தது. அது தற்போது மாற்றப்பட்டு சென்னையில் உள்ள திண்டிவனத்தில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இயற்கை  விவசாயிகள் தங்களது விலைப் பொருட்களின் உண்மையான தரத்தை தெரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த இயக்கத்திற்கான மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!!…. விமான நிலையத்திற்கு திடீரென வந்த மெயில்…. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்….!!!!

வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னையில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தினம் தோறும் ஏராளமான பயணிகள் தமிழ்நாடு மட்டும் இல்லாமல்  வெளி நாடுகளுக்கும் செல்கின்றனர். இந்த நிலையில் இன்று  அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விமான நிலையம் முழுவதும் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் வந்த தகவல் பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. தமிழகத்தில் இவர்களுக்கெல்லாம் இலவச சுற்றுலா…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்து சமய அறநிலை துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு தமிழகத்தில் வசித்து வரும் மூத்த குடிமக்களை ராமேஸ்வரம் முதல்  காசி விஸ்வநாதர் கோவில் வரை ஆன்மீக பயணம் இலவசமாக அழைத்து செல்வதாக அறிவித்திருந்தது. இதுகுறித்து இன்று  இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன் சுற்றறிக்கை ஒன்றை  அனுப்பியுள்ளார். அதில் இந்து சமய அறநிலைத் துறையின்  20 இணை இயக்குனர் மண்டலங்களிலிருந்து தலா 10 பேர் என மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. ஐஐடியில் வந்த புதிய வேலைவாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

ஐஐடி அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள ஐஐடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  hardware engineer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் 6 காலியிடங்கள் உள்ளது. இதனை  விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பொறியியல் துறையில் EEE,ECE,E&I பிரிவில் பி.டெக் முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் WWW.iitm.ac.in எந்த இணையதளத்தின் மூலமாக தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதனையடுத்து நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

92 காலி பணியிடங்கள்…. தமிழக முழுவதும் நாளை குரூப் 1 முதல் நிலை தேர்வு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. நடப்பு ஆண்டில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி சார்பாக குரூப்-1 முதல் நிலை தேர்வு நாளை நடைபெற உள்ளது. இதற்காக தமிழக முழுவதும் 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் சுமார் 3, […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: அனைத்து கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு…. உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பேராசிரியர்கள் தங்கள் உடல் அமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கி அணிய வேண்டும் என்ற புதிய ஆடை கட்டுப்பாட்டை விதித்து உயர்கல்வித்துறை பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி அதாவது ஓவர் கோட் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து கல்லூரிகளும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும் அழிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் ரேஷன் கடை ஊழியர்கள் அரசு வழங்கும் சிறப்பு திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்கு வழங்கும் போது கூடுதல் நேரம் பணியாற்றுவது போன்ற முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்கள். இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய […]

Categories
மாநில செய்திகள்

“தேர்தலில் கூட்டணி உறுதி‌தான்”….. ஓபிஎஸ்-இபிஎஸ் இணைப்பில் பாஜக விரும்புவது‌ என்ன?…. நயினார் நாகேந்திரன் பேட்டி..!!!!

கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனாரின் 86-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள வ.உ சிதம்பரனாரின் மணிமண்டபத்தில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு நெல்லை மாவட்ட பாஜக சட்டமன்ற  உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் அனைத்தும் நடைபெற்று வரும் நிலையில் பாஜக-அதிமுக கூட்டணி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தேர்தலை […]

Categories

Tech |