Categories
மாநில செய்திகள்

இந்த பகுதிகளில் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்…? தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!!

மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட மின்சார ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு 11:40 மணி, 11:59 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் இன்று மற்றும் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதனையடுத்து மறு மார்க்கமாக தாம்பரம் – கடற்கரை இடையே இரவு 11:20 மணி, 11:40 மணிக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“இனி அரசு பள்ளி மாணவர்களும் சுலபமாக ஆங்கிலம் பேசுவர்”….. மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி சொன்ன சூப்பர் தகவல்…..!!!!!

சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, தனியார் பள்ளிகளை போன்று அரசு பள்ளிகளிலும் ஆங்கில மொழியை பயிற்றுவிப்பதற்கான பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் தற்போது மாணவர்களுக்காக ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இது மாணவர்கள் இடையே ஆங்கிலம் பேசும் திறனை ஊக்குவிக்கும். அதன் பிறகு மாநில வரலாறு மற்றும் கலாச்சாரம் போன்ற தலைப்புகளில் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கும் பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை சென்ட்ரலில் வேற லெவல் மாற்றம்…. இனி டிராபிக் பேச்சுக்கே இடமில்லை….. CUMTA போட்ட பக்கா பிளான்…!!!!!

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது தான் அதன் முதல் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழ மத்தின் தலைவராக பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான அறிவுரைகளை வழங்கியதோடு திட்டங்களை செயல்படுத்துமாறு கூறியுள்ளார். இந்நிலையில் சென்னை சென்ட்ரல் பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி சீரான போக்குவரத்தை அமைப்பதற்கு தற்போது சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையம், […]

Categories
மாநில செய்திகள்

வலுப்பெறும் இளைஞரணி…. உதயநிதி டீமில் 10 பேர்…. திமுகவில் இனி அதிரடி ஆக்சன் தான்…..!!!!!

திமுக கட்சியில் புதிய இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி செயலாளர்கள் குறித்த அறிவிப்பை பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள நிலையில், திமுக இளைஞர் அணியின் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். அதன் பிறகு கனிமொழி எம்பிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், மகளிர் அணி செயலாளர் பதவி ஹெலன் டேவிட்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. திமுக கட்சியின் இளைஞரணி செயலாளராக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சாமிநாதன் போன்றவர்கள் இருந்த நிலையில்  தற்போது உதயநிதி ஸ்டாலின் செயலாளராக இருக்கிறார். இதனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யா சிவா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த டெய்சி…. வெளியான தகவல்…!!!!

பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் திருச்சி சிவா, அக்கட்சியின் பெண் நிர்வாகியான டெய்ஸியை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ 2 நாட்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சி விவகாரங்கள் தொடர்பாக பாஜகவில் சூர்யா சிவாவுக்கும், டெய்சிக்கும் பிரச்சனை நிலவி வருகிறது. இந்நிலையில், டெய்சியை ஆபாச வார்த்தைகளால் சூர்யா சிவா வசைப்பாடிய ஆடியோ இணையயத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. ஆனால் பிரச்சனையை பேசி தீர்த்துவிட்டோம் என்று டெய்சி தெரிவித்துள்ளார். தம்பி போல்தான் சிவா என்றும் […]

Categories
மாநில செய்திகள்

மிஸ் பண்ணிடாதீங்க…. தேசிய சித்தா நிறுவனத்தில் வேலை…. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?…. முழு விவரம் இதோ….!!!!

தேசிய சித்தா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சென்னையில் தேசிய சித்தா நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில்  உதவி பேராசிரியர், சுருக்குக்கெழுத்தாளர், கிளார்க் ஆகிய  குரூப் ஏ மற்றும்  சி காலிடங்களுக்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 1.பணி:professor சம்பளம் : 37,400 முதல் 67,000 வரை வழங்கப்படும். வயது: ஐம்பதுக்குள் இருக்க வேண்டும். தகுதி: சித்த மருத்துவ பிரிவில் முதுகலை பட்டம் பெற்று  10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். 2. பணி: […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவின் மெகா கூட்டணியா ? NDA-வை முடிவு பண்ணுனது யாரு ? எடப்பாடிகிட்ட கேட்க சொன்ன அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாங்க தெளிவா சொல்லிட்டு இருக்கோம்.  கோயம்புத்தூர் தற்கொலைப்படை தாக்குதலில் இருந்து பல விஷயங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆளுநரை சந்திக்கிறார் என்றால், நீங்க அவங்க கிட்ட கருத்து கேட்கணும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் வைக்கக்கூடிய வாதங்கள், கருத்துக்களை பொதுவெளியில் பத்திரிக்கை நண்பர்களிடம் வைக்கிறோம். ஆளுநரிடம் எப்ப போக முடியுமோ, அப்போது போய் ஆளுநரிடமே  நம்ம கருத்த சொல்றோம். அதனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு கேபிளில் இலவசமாக…. கால்பந்து ரசிகர்களுக்கு அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் ஓர் நற்செய்தி கொடுத்துள்ளார். ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து தொடரானது அதிர்ச்சி தோல்விகளையும், வரலாற்று வெற்றியையும் செதுக்கி கொண்டிருக்கிறது. தினம் தினம் சுவாரசியமான போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு கால்பந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி.தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வழியா முடிஞ்சு…. இன்னும் 4 நாட்களுக்கு இங்கெல்லாம் மழை பெய்யாது…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு  மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளது. இதனால் அடுத்த 4  நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும். இந்நிலையில்  வடக்கு அந்தமான் கடலோர பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

5 பைசா கூட வாங்கல..! உண்மைய பேசுன, கட்சியில் நீக்கிட்டாங்க: காயத்ரி ரகுராம் வேதனை

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், நான் உண்மையை பேசுனதுக்காக மட்டும் தான் நீக்கியுள்ளார், வேற எதுவுமே இல்லை. உண்மையை பேசி இருந்தேன். என்ன பத்தி ஒரு தனிப்பட்ட தாக்குதல் வரும்போது, பாஜக நிர்வாகி செல்வகுமார் என்பவர் அதற்கு லைக் செய்தார். இது முதல் தடவை இல்ல. இந்த மாதிரி பல தடவை அவருடைய சார்பில் எனக்கு நிறைய ட்ரோல்கள் வந்தது. மூன்றாவது தடவை இந்த மாதிரி வந்துட்டு இருக்குத்து. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மார்க் லிஸ்ட் அடிக்க ரூ 77 கோடி…! வசமாக சிக்கிய ADMK…. ஆதாரத்தோடு இறங்கிய காங்கிரஸ் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டில் மருந்து காலாவதியான மருந்தை வாங்கி இருக்கிறார்கள். நீங்கள் மருத்துவரிடம் போறீங்க… நம் குடும்பத்தை சார்ந்தவர்கள் மருத்துவரிடம் போகிறார்கள்… இந்த மருந்தை சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்கள்.. அந்த மருந்து உடல் நலத்தை,  நோயை குணப்படுத்துகின்ற மருந்தாக இருக்க வேண்டும்.  காலாவதியான மருந்து எப்படி சரியாகும் ? இது ஏற்கனவே பலமுறை நாங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறோம் எல்லாம் கடந்த ஆட்சியில்… நாங்கள் தனிநபரை குற்றம் சாட்டி சொல்ல வேண்டியது இல்லை. எங்களுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இபிஎஸ் ஒரு புளுகு மூட்டை”…. அவருக்கு பேச தகுதி இல்லை….. தங்கம் தென்னரசு கடும் சாடல்….!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து திமுக அரசின் மீது புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லாததால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் உளவுத்துறையின் தோல்வியை காண்பிக்கிறது. தமிழகத்தில் மருந்து பற்றாக்குறை நிகழ்வுகளோடு, மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணி என்ற பெயரில் கஜானாவை காலி செய்யும் பணியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK-யால் முடியல…! BJP முகத்திரையை கிழித்த DMK… அதிரடி காட்டும் ஸ்டாலின்… காலரை தூக்கிவிடும் உதயநிதி …!!

திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,திரு. மோடி அவர்களே நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது மாதிரி… இங்கு  நடந்து கொண்டிருப்பது நீங்கள் நினைப்பது போன்று திரு.எடப்பாடி பழனிச்சாமி ஆச்சியோ அல்லது ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி. நம்முடைய தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சி. இங்க இருந்து போய் காசியில் நடத்திக் கொண்டிருக்கிற தமிழ் சங்கம் அப்படின்னு… தமிழ்நாட்டுக்கு இதுவரைக்கும் என்ன […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகளில் ரூ.10 ,ரூ.20 நாணயம் வாங்க மறுத்தால்… போக்குவரத்து கழகம் எச்சரிக்கை…!!!!!

பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை கண்டக்டர்கள் வாங்க மறுப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததன் பேரில்  சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் நேற்று அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மாநகர பேருந்துகளில் பயணிகள் டிக்கெட் வாங்க ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வழங்கும் போது அவற்றை கண்டக்டர்கள் மறுக்காமல் ஏற்றுக் கொண்டு உரிய டிக்கெட்டுகளை வழங்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK ஆட்சியில் அரசு நிதி பல்லாயிரம் கோடி ரூபாய் வீணடிப்பு.. ஆதாரம் இருக்கு.. Selvaperunthagai..!

செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டில் மருந்து காலாவதியான மருந்தை வாங்கி இருக்கிறார்கள். நீங்கள் மருத்துவரிடம் போறீங்க… நம் குடும்பத்தை சார்ந்தவர்கள் மருத்துவரிடம் போகிறார்கள்… இந்த மருந்தை சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்கள்.. அந்த மருந்து உடல் நலத்தை,  நோயை குணப்படுத்துகின்ற மருந்தாக இருக்க வேண்டும்.  காலாவதியான மருந்து எப்படி சரியாகும் ? இது ஏற்கனவே பலமுறை நாங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறோம் எல்லாம் கடந்த ஆட்சியில்… நாங்கள் தனிநபரை குற்றம் சாட்டி சொல்ல வேண்டியது இல்லை. எங்களுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலை இல்லாத முண்டம் ADMK… OPS-யை சந்திப்பேன்: TTV அதிரடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாராளுமன்ற தேர்தலை நோக்கி தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதற்கான பணிகளில் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம். இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முத்திரை பதிக்கும். இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கின்ற பணியில் நாங்களும் அணிலைப் போல பணியை சிறப்பாக ஆற்றுவோம் என்ற நம்பிக்கையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தலை இல்லாத முண்டமாகஅதிமுக கட்சி இருக்கிறது. திரு.பன்னீர்செல்வம் ஒரு பக்கமும், திரு.பழனிச்சாமி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலைக்கு லைக் போட… BJP-ல் ஒரு டீம் இருக்கு…! வெகுண்டெழுந்த காயத்ரி ரகுராம் ..!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், மாநில தலைவராக எல்.முருகன் ஜி வரும் போது கூட அவருக்கு என்ன வேலையோ ? அதை நான் பண்ணி கொடுத்தேன். அதுக்கப்புறம் அண்ணாமலை ஜீ வந்தது பிறகு எனக்கான வேலையை  அப்புறமும் அதுக்கப்புறம் தொடர்ந்து நான் வேலைகள் செஞ்சிட்டு இருந்தேன். இல்லைனா எனக்கு மாநில போஸ்டிங் கொடுத்திருக்க மாட்டார் அவரு. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போடும் போஸ்ட்டுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை மசோதா : விளக்கம் கேட்டு ஆளுநர் ரவி தமிழக அரசுக்கு கடிதம்..!!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர்.என் ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.. அவசர சட்டத்திற்கு 6 மாதங்களும், சட்ட மசோதாவிற்கு 6 வாரத்திற்கும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிலையில், ஆன்லைன் […]

Categories
மாநில செய்திகள்

சென்ட்ரல் – மைசூர் வந்தே பாரத் ரயில்… 10 நாட்களில் அமோக வரவேற்பு….!!!!

சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையே கடந்த 12-ம் தேதி தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை புதன்கிழமை தவிர மீதமுள்ள வாரத்தில் 6 நாட்களும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய சொகுசு இருக்கைகள் போன்ற பல்வேறு வசதிகள் பயணிகளுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த ரயிலுக்கு பயணிகளிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ரயிலில் “எக்சிகியூட்டிவ்” சேர்கார் என்ற 2 வகுப்புகள் உள்ளது. இந்த ரயிலின் சேவை தொடங்கிய 10 நாட்களிலேயே பொதுமக்களிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்…. பாஜகவுக்கு சிம்ம சொப்பனம்…! கெத்தாக பேசிய உதயநிதி …!!

திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இங்கே அக்கா அருள்மொழி அவர்கள் இயக்க வரலாறையும்,  அண்ணன் ஜெயராஜ் அவர்கள் மாநில சுயாட்சி பற்றியும் எவ்வளவு சிறப்பாக உரையாற்றினார்கள். அதையெல்லாம் உள்வாங்கி, நீங்கள் ஒவ்வொருவரும் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்… எப்படி 2019 இல் மிகப்பெரிய வெற்றியை நீங்கள் எல்லாம் பெற்று தந்தீர்களோ… அதேபோல் அடுத்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் களப்பணி ஆற்றி, அவர்கள் சொன்ன விஷயங்கள் எல்லாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி கிட்ட ஆதாரம் இருக்கா…! கேஸ் போட சொன்ன அமைச்சர்… ADMKவுக்கு நெத்தியடி பதில்

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அரசின் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கு வகையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் தென்னரசு, நீங்கள் குற்றசாட்டை அவர் சொல்கிறார் என்றால்,  அதற்கு உரிய ஆதாரங்கள் அவரிடத்தில் இருந்தால் அவர் நீதிமன்றமே தாராளமாக அணுகலாம். நீதிமன்றத்தில் வழக்கு சந்திக்கலாம். நாட்டினுடைய வளர்ச்சியிலே உண்மையிலேயே இவர்களுக்கு அக்கறை இருக்கும் என்று சொன்னால்,  அவர்கள் அதற்கு ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் என்று எந்த காலத்திலும் வந்தால் அதை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம். […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலைக்கு 3,000 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்… போக்குவரத்து கழகத்தின் தீவிர ஏற்பாடு…!!!!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருநாள் ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இதனை பார்ப்பதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகின்றனர். ஆனால் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று காரணமாக கார்த்திகை தீப விழா  நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த வருடம் டிசம்பர் 6-ம் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து 7-ம் தேதி பௌர்ணமி ஆகும். 2 சிறப்பு தினங்களும் அடுத்தடுத்து வருவதால் திருவண்ணாமலைக்கு செல்வதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள்  திட்டமிட்டுள்ளனர். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டிலுள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் அதனைப் போலவே உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசார அடிப்படையில் பள்ளிகள் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவ்வபோது ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டிற்கான பணி நிரவல் கலந்தாய்வு வருகின்ற நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு […]

Categories
மாநில செய்திகள்

அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு…. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அரியர் வைத்திருந்தால் மீண்டும் தேர்வு எழுதுவதற்கு அவ்வப்போது சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் 2001-2002 ஆம் கல்வி ஆண்டு மூன்றாவது செமஸ்டர் முதல் தற்போது வரை அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை மாணவர்கள் பலரும் பயன்படுத்திக் கொண்டனர். இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது மீண்டும் அரியர் வைத்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் இனி போலி பில் போட முடியாது…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் பேரிடர் காலங்களில் ரேஷன் பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்படுகிறது. ஆனால் அப்போ போது ரேஷன் கடைகளில் பல முறை கேடுகள் ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அதிலும் குறிப்பாக ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொண்டு கள்ளச் சந்தையில் அதிக லாபத்திற்கு விற்பது மற்றும் அரிசி மூட்டைகளை மற்ற மாநிலங்களுக்கு கடத்திச் செல்வது […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: கமல்ஹாசன் அனுமதி…. உடல்நிலை குறித்து சற்றுமுன் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் நிலையில் மறுபக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே கமல்ஹாசன் காய்ச்சல் காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், […]

Categories
மாநில செய்திகள்

“பிராங்க் வீடியோ”… 5 youtube சேனல்கள் மீது புகார்… போலீசார் கடும் எச்சரிக்கை…!!!!!

பிராங்க் வீடியோக்கள் எடுக்கும் youtube சேனல்கள் மீது பொதுமக்கள் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் வசித்து வரும் ரோஹித் குமார் என்ற இளைஞர் மத்திய குற்ற பிரிவில் பிராங்க் வீடியோக்கள் வெளியிடும் 5 youtube சேனல்கள் மீது புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பிராங்க் வீடியோக்களை எடுக்கும் youtube சேனல்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் காலகட்டங்களில் பிராங்க் வீடியோவால் பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்களுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தை…. என்னைக்கு தெரியுமா?…. தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு…..!!!!

அரசு போக்குவரத்து தொழிலாளர் நலத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு போக்குவரத்து தொழிலாளர் நலத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அவர்கள்  வைத்துள்ள கோரிக்கை குறித்து அடுத்த மாதம் இரண்டாம் தேதி மதியம் 2.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும். எனவே இந்த பேச்சுவார்த்தையில் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வெற்றி “… ஊக்கதொகை எவ்வளவு…? முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு …!!!!

முதல்வர் ஸ்டாலின் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் போட்டி மற்றும் ஆசிய ஆக்கி போட்டியில் பதக்கங்களை வென்ற 10 வீரர்களுக்கும், குஜராத்தில் நடைபெற்ற 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்ற 180 வீராங்கனைகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகையை வழங்கியுள்ளார். இந்த விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற 190 வீரர்களுக்கு 4 கோடியே 85 லட்சம் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கு கடிதம்..!!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். சட்ட மசோதாவின் காலம் 27 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார். ஆளுநரின் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 19ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசூதா நிறைவேற்றப்பட்டது. ஆன்லைன் விளையாட்டு அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தந்த […]

Categories
மாநில செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. வாழ்வாதாரத்தை இழந்த மக்கள்…. உதவி தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!!!

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை  மாவட்ட ஆட்சியர் லலிதா வழங்கியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 11-ஆம் தேதி இடி மின்னலுடன் மிக கனமழை பெய்தது. இந்த மழையால்  குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 14-ஆம் தேதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: கமல் டிசார்ஜ் எப்போது ? – மருத்துவமனை விளக்கம் …!!

மக்கள் நீதி மையத் தலைவரும், நடிகருமான கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காய்ச்சல், சளி, இருமல், பிரச்சனை காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். நேற்றைய தினம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் கமல் டிசார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரமானது தெரிவித்திருக்கிறது.  இது தொடர்பாக மருத்துவமனையே  செய்தியை குறிப்பை  வெளியிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தூது அனுப்பிய சரவணன்…. பதிலுக்கு ஸ்டாலினின் வாழ்த்து மடல்…. திமுக-வில் இணைவாரா டாக்டர் சரவணன்?…..!!!!!

தி.மு.க-வில் எம்எல்ஏ-வாக இருந்தவர் டாக்டர் சரவணன். சென்ற சட்டப் பேரவைத் தேர்தலில் மதுரையில் இவர் போட்டியிட எண்ணி இருந்த தொகுதி திமுக-வின் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து கட்சியிலிருந்து வெளியேறி பாஜக-வில் இணைந்தார். இதையடுத்து டாக்டர் சரவணன் பாஜக சார்பில் களமிறங்கி தோல்வி அடைந்தார். எனினும் பாஜக-வில் தொடர்ந்து பயணப்பட்டு வந்தார். இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன் மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜக-வினர் காலணி வீசினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. […]

Categories
மாநில செய்திகள்

பொருட்கள் வழங்காமல்…. வழங்கியதாக SMS அனுப்பினால்…. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உத்தரவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இவ்வாறு மக்கள் வாங்கும் ரேஷன் பொருட்கள் வாங்கியவுடன் அவர்களுடைய செல்போன் எண்ணுக்கு ரேஷன் கடையில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படும்.  ஆனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாத பொருட்கள் வழங்கப்பட்டதாக SMS வருவதாக மக்கள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பொருட்கள் வழங்காமல் வழங்கியதாக குறுஞ்செய்தி அனுப்பினால், சம்பந்தப்பட்ட ரேஷன் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு – சுவாதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆணை..!!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதியை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. நாமக்கல் மாவட்டம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்டம் வன்கொடுமை சிறப்பு சிறப்பு நீதிமன்றமானது 10 பேரை  குற்றவாளியாக தீர்ப்பளித்ததோடு அனைவருக்கும் ஆயுள்  தண்டனை அளித்தும், சாகும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை இரத்து செய்யக்கோரி,  யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதே போல கோகுல்ராஜ் தயார் சித்ரா மற்றும் சிபிஐடி தரப்பில் இந்த வழக்கில் […]

Categories
மாநில செய்திகள்

யாரையும் விடப்போவதில்லை… பா.ஜ.கவில் அதிரடி நடவடிக்கை தொடரும்… அண்ணாமலை பேட்டி …!!!!!!

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர்  கூறியதாவது, பா.ஜ.கவின் லட்சுமண ரேகையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் விடப்போவதில்லை. மேலும் கட்சியில் களை எடுக்கும் நடவடிக்கை தற்போது தொடங்கி ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. ஆனால் இனிவரும் காலங்களில் களையெடுப்பது உறுதி. பா.ஜ.கவில் மேலும் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும் எனவும் பாஜக நாகரிகமான அரசியல் செய்து வருகிறது. மேலும் காயத்ரி ரகுராம் விவகாரத்தில் நான் கருத்து கூற விரும்பவில்லை. தவறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எச்.ராஜா அண்ணா கிட்ட கேளுங்க…! அண்ணாமலை போன் காலில்…. FINE சொல்லி அசால்ட் கொடுத்த காயத்ரி ரகுராம் ..!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், என்னை பொறுத்த வரைக்கும் அண்ணாமலை ஜீ என்னைக்கு ஊருக்கு வந்தாருன்னு தெரியல. காலையில் தான் வந்தாரு. வந்த உடனே காலையில் போன்ல வந்து,  சொன்ன ஒரே ஒரு விஷயம். நீங்க சஸ்பெண்ட் பண்ணபடுறீங்க என சொன்னாங்க. அப்போது நான் ஓகே பைன் என்று என்ன காரணம் அப்படின்னு கேட்கும் போது ? என்னை பதில் சொல்லவே விடல. இல்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

350 ரூபாய் பேனருக்கு 7900 பில் ? DMK மீது பரபரப்பு புகார்… அதிரடி காட்டிய எடப்பாடி …!!

ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி அமைப்பில் முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள பணிகள் எல்லாம் விளம்பரப் படுத்துகிறார்கள். அந்த விளம்பரம் படுத்துகின்ற பேனர் விலை 350 ரூபாய், அதற்கு வந்து 7906 ரூபாய் பில் போட்டுள்ளார்கள். விளம்பர பேனருடைய தோராய மதிப்பு 350 ரூபாய் இருக்கும். ஆனால் 7906 உள்ளாட்சியில் இருந்து அரசு உத்தரவு போட்டு, ஒரே கம்பெனிக்கு  கொடுத்து இருக்கிறார்கள். இது தமிழ்நாடு முழுவதும் இவ்வளவு பெரிய மெகா ஊழல் நடந்திருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமரை தேர்தெடுப்போம்: அணிலை போல செயல்படுவோம்: டிடிவி அதிரடி முடிவு …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாராளுமன்ற தேர்தலை நோக்கி தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதற்கான பணிகளில் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம். இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முத்திரை பதிக்கும். இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கின்ற பணியில் நாங்களும் அணிலைப் போல பணியை சிறப்பாக ஆற்றுவோம் என்ற நம்பிக்கையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தலை இல்லாத முண்டமாகஅதிமுக கட்சி இருக்கிறது. திரு.பன்னீர்செல்வம் ஒரு பக்கமும், திரு.பழனிச்சாமி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூபாய் 1 கோடி கொடுங்க..! விசிக போராட முடிவு .. திருமா அதிரடி அறிவிப்பு …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,  NLC சுரங்கம் 1, சுரங்கம் 2 ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கான விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.ஏறத்தாழ 2௦க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் NLC நிர்வாகம், கடந்த காலத்திலேயே நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றி இருக்கிறது. அவர்கள் வாக்குறுதி அளித்தபடி இழப்பீடும் வழங்கவில்லை, […]

Categories
டெக்னாலஜி மாநில செய்திகள்

#BREAKING: 50ஜிபி இலவச டேட்டா – பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை…!!

வாட்ஸ் அப்பில் சமீப காலமாக செல்போன்களில் 50 gb டேட்டா இலவசம் என்று குறுந்தகல்கள் வருவதை பார்த்திருக்கிறோம்.  அது போல இலவச டேட்டா என்று வரும் தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். இலவச டேட்டா என வரும் மெசேஜில் உள்ள லிங்கை அழுத்தினால் மொபைல் போன் ஹேக் ஆகிவிடும். அமேசான் உள்ளிட்ட எந்த நிறுவனமும் இலவச டேட்டாவை வழங்கவில்லை எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்…. சற்றுமுன் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும் எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ஆம் தேதி கே எஸ் அழகிரி மற்றும் ரூபி மனோகரன் தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் ரூபி மனோகரனை நீக்க வேண்டும் என 64 மாவட்ட தலைவர்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து அவர்களின் கோரிக்கையை ஏற்று ரூபி மனோகரன் தற்போது கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்து நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!!…. அடுத்த 3 மணி நேரத்தில் “இந்த 13 மாவட்டங்களில் மட்டும் மழை பெய்யும்”…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வடகிழக்கு பருவமழை  தற்போது தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாநிலங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை ஆகிய 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது – வானிலை ஆய்வு மையம்..!!

வட தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் காற்றழுத்த தாழ்வுமண்டலம் என்பது இன்று காலை வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சியாக வலுவிழந்ததை அடுத்து தமிழ்நாட்டிற்கு மழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று காலை வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ் பகுதி என்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாராட்ட சொன்ன உதயநிதி…! ஐடியா கொடுத்த ஸ்டாலின்… பக்கா பிளான் போட்ட DMK இளைஞரணி ..!!

திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைவரிடத்திலே நான் சொன்னேன். காஞ்சிபுரத்திற்கு போகிறேன். அன்பரசன் அண்ணன் மாவட்டத்திலே பயிற்சி பாசறை கூட்டம் நடக்குது. தலைவர் ஆரம்ப நாள் முதலே இதனை உன்னிப்பாக கணித்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இன்னும் பெருமையா சொல்லனும்னா…  கழகத்தோட இதயமாம் பொதுக்குழுவுல,  இந்த பயிற்சி பாசறை பற்றி பேசி,  இதற்காக இளைஞர் அணியை தனியாக பாராட்டினார். இது எவ்வளவு பெரிய பெருமை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: காயத்திரி ரகுராமிடம் போனில் சீறிய அண்ணாமலை …!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், என்னை பொறுத்த வரைக்கும் அண்ணாமலை ஜீ என்னைக்கு ஊருக்கு வந்தாருன்னு தெரியல. காலையில் தான் வந்தாரு. வந்த உடனே காலையில் போன்ல வந்து,  சொன்ன ஒரே ஒரு விஷயம். நீங்க சஸ்பெண்ட் பண்ணபடுறீங்க என சொன்னாங்க. அப்போது நான் ஓகே பைன் என்று என்ன காரணம் அப்படின்னு கேட்கும் போது ? என்னை பதில் சொல்லவே விடல. இல்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : காங்கிரஸ் கட்சியின் பதவியிலிருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்..!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் பதவியை வகித்து வருகிறார் எம்எல்ஏ ரூபி மனோகரன். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து ரூபி மனோகரன் எம்எல்ஏ தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார் என ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர் ராமசாமி தெரிவித்துள்ளார். சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல்  விவகாரத்தில் ரூபி மனோகரன் மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ரூபி மனோகரன் முறையாக பதில் அளிக்கும் வரை அவரை தற்காலிகமாக நீக்கி வைக்க குழு முடிவு செய்துள்ளது […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கணும்!…. அரசு வழக்கறிஞர் பரபரப்பு புகார்….!!!!

மறைந்த தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மற்றும் தற்போதைய தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் போன்றோரை பற்றி இழிவாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்த போது பொதுக் கூட்டத்தில் பேசிய வீடியோவுடன் இணைத்து கட்டெறும்பு பிஜேபி என்ற டுவிட்டர் கணக்கு பரப்பி வந்துள்ளது. இப்பதிவை கண்டு கடுப்பான திமுக-வினர் காவல் நிலையத்தில் புகாரளித்து வருகின்றனர். இதுகுறித்து சென்னை அசோக் நகர் சைபர் கிரைம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் […]

Categories
மாநில செய்திகள்

ஆதாரத்துடன் நிரூபித்து காட்டுவேன்!…. இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…. பதிலடி கொடுத்த அமைச்சர்…..!!!!!

தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பல அரசு திட்டங்கள் பற்றியும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து கடையநல்லூர் அருகிலுள்ள நயினாகரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சமத்துவபுரத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். அத்துடன் அங்குள்ள சமுதாய நலக்கூடம் மற்றும் அப்பகுதியில் வசித்துவரும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது “இபிஎஸ்-ன் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க இருப்பதாக […]

Categories
Uncategorized சற்றுமுன் சினிமா மாநில செய்திகள்

வாரிசு படக்குழுவுக்கு நோட்டீஸ் – ரசிகர்கள் கடும் அதிர்ச்சி …!!

வாரிசு படப்பிடிப்பில் அனுமதி இன்றி விலங்குகளை பயன்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வாரிசு படக்குழு பதில் கூற விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.  வாரிசு படத்துக்கு தொடர்ச்சியாக சிக்கல் வந்து கொண்டிருக்கிறது. முன்னதாக தமிழைப் பொறுத்த வரைக்கும் பொங்கல் பண்டிகையை தினத்தன்று வாரிசு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்படுகிறது. அதே தினத்தில் தெலுங்கிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அங்கு இருக்கக்கூடிய தயாரிப்பாளர் சங்கம் பொங்கல் அன்று அந்த படத்தை வெளியிடுவதற்கு தடை […]

Categories

Tech |