சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்றதற்கான பெருமை காங்கிரசுக்கு மட்டும் சொந்தமானது இல்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுட்டிக்காட்டி இருக்கிறார். பள்ளிகளில் மாணவர்களுக்கு சுதந்திரப்போராட்டம் குறித்த பாடங்களில், அது காங்கிரஸ் இயக்கத்துடன் மட்டுமே தொடர்புடையது என போதிக்கக்கூடாது எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். காந்தி ஒரு சிறந்த தலைவர் என்பதில் சந்தேகம் கிடையாது. மேலும் சுதந்திரப் போராட்டத்தை பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிப்பது காங்கிரஸுடன் மட்டும் இருக்கக்கூடாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார். […]